Tuesday, December 14, 2010

பாலகுமாரன் சிந்தனைகள் : ஒரு அலசல்

அரசியல்ல கலைஞர்,எம்.ஜி.ஆருக்கு மாத்தி மாத்தி சால்ரா போட்டாப்ல, சினிமாவுலயும் சால்ரா போட்டு "பொழப்ப" நடத்தலாம்னு பார்த்து சங்கர் கண்ணாலத்துக்கு சாம்பார் பக்கெட்டெல்லாம் கூட தூக்கிப்பார்த்துட்டு வேலைக்காகாம பையனை விட்டு என்னென்னவோ தகிடுதத்தம் பண்ணி பார்த்துக்கிட்டிருக்காரு.

என்னை பொறுத்தவரை எழுத்தாளன் என்பவனே ஒரு கையாலாகாத கேஸ். அதிலயும் காதல், குடும்பம்னு குண்டு சட்டியில குதிரை ஓட்டறவன், சரித்திரம், சமூசான்னு போறவன், சமூக வாழ்வு வாழாதவன், அரசியலை அவதானிச்சு தன் கருத்துக்களை வெளியிடாதவன்,  தனக்குனு ஒரு லட்சியம் இல்லாம, அந்த லட்சியத்துக்காக எதிர் நீச்சல் போடாதவன்லாம் டேமேஜ் பார்ட்டி.ஸ்க்ராப். தள்ளு கேஸு.

அதுலயும் பாலாவை பத்தி சொல்லவே தேவையில்லை. பாவம் அவருக்குன்னு சைட் எல்லாம் வச்சு பார்த்தாய்ங்க , தாளி சுஜாதாவோட சைட்டே பேர் சொல்லலை.இதுல பா.குமாரன் எல்லாம் எங்கே.

ஒரு காலத்துல அப்போ அரும்பு மீசையா இருந்த பார்ட்டிகளுக்காக லவ் ஸ்டோரி எழுதி வவுத்தை ரொப்பிக்கினு கடந்து வயசாக வயசாக ( அவரோட ரீடருக்கும் தேன்) இப்போ .. ..........(கெட்ட வார்த்தையில்லிங்கண்ணா தொப்புள் தேன்) வரை தாடி வளர்த்துக்கிட்டு சரித்திரம்,புராணம்னு சல்லியடிச்சிகிட்டிருக்காப்ல.

சைட்டு தேன் புட்டுக்குச்சு. ப்ளாகாச்சும் வச்சு பார்ப்போம்னு சனம் வச்சாப்ல இருக்கு. பாலகுமாரன் சிந்தனைகள்ங்கற பேர்ல வச்சிருக்காய்ங்க.  வச்சதுதான் வச்சாய்ங்க. அவரோட ஆரம்ப கால எழுத்துக்களை அப்படியே வலையேத்தியிருந்தாலும் பரவாயில்லை.

பழைய நினைப்புடா பேராண்டினு என்னாட்டம் கிழவாடிங்க அப்படி இப்படி மேய்ஞ்சிருப்போம். ஆனால் பாருங்க சிந்தனைகளாம். அவாளோட எழுத்தை சூத்திரன் விலை கொடுத்து வாங்கி படிக்க பாம்லெட் போட்ட கதைதேன்.

தெலுங்குல வேமன சதகம் ஒன்னிருக்கு."எலுக்க தோலு தெச்சி ஏடாதி உத்திக்கினா  நலுப்பு நலுப்பேகானி தெலுப்பு காது"

அதாவது எலித்தோலை கொண்டுவந்து ஒரு வருசம் துவைச்சாலும் அது கருப்புதேன். வெளுப்பாகாதுனு அர்த்தம்.

பா.குமாரன் இளமையில தானேதோ யூஸ்லெஸ் ஃபெலோவா இருந்ததாவும் கால கிரமத்துல மோல்ட் ஆயிட்டதாவும் சொல்லிக்கிறது வழக்கம்.

தாளி பூனைக்கு வயசானா புலியாயிருமா? ஒரு ம..ரும் கிடையாது. ஒரு சாம்பிளுக்கு அவரோட சிந்தனைகளை சீந்தி சிக்கெடுக்கிறேன். இத இதோட விட்டுட்டா ஓகே. அவரோட சீட,பக்த, ரசிக கோடிகள் ஆ ஊன்னா மொத்த குப்பையையும் கொட்டி நாறடிச்சுர்ரதா இருக்கேன்.


//மிதமிஞ்சிய அதிகாரம் கொடுக்கிற குழப்பம் போல, உலகத்தின் கேடான விஷயம் எதுவுமில்லை. -என்னுயிர்த்தோழி.//

இதை அவரு தன் கோணத்துல ,தன்னை பத்தி எழுதிக்கிட்டாப்ல இருக்கு.  பாவம்! இன்னைக்கு தாத்தா கூப்டு நீதான் எம்.எல்.சினு இளிச்சுட்டு ஓட கூடிய பார்ட்டி இது ஏதோ நரி " சீ சீ இந்த பழம் புளிக்கும்னுச்சாமே அதான் இது.

//மரண பயத்தை புறக்கணித்தவனுக்கு நாத்திகம் ஞான மார்க்கம். மரண பயத்தை ஏற்றுக்கொள்பவனுக்கு ஆத்திகம் நல்ல வழிகாட்டி. -என்னுயிர்த்தோழி.//

ஆத்திகன் நாத்திகங்கற க்ளாசிஃபிகேஷன் எல்லாம் இல்லை ராசா. சனம் மரணத்தை சிந்திச்சிருந்தா இந்த நாடு எங்கனயோ போயிருக்கும். சனத்துக்கு மரணத்தோட நிழல்களோடதான் டீலிங்கே. அதை புறக்கணிச்சவன் ஏழையாவே இருந்துர்ரான். அந்த நிழல்களுக்கு பயந்தவன் சம்பாரிக்க பார்க்கிறான். இதுல ஆத்திகம் நாத்திகம் எங்க வருது?

//அறிவின் ஆதிக்கத்தில் ஆணவம் கிளரும்.//

அடங்கொய்யால.. பா.கு தன் அறிவை பத்தி சொல்லிக்கிட்ட போல கீது உண்மையான அறிவே தான் எத்தனாம் பெரிய முட்டாள்னு தெரிஞ்சிக்கிடறதுதான்.

//ஆணவத்தின் அலட்டலில் அன்பு அழியும்.//

கலைஞரோட ஆணவத்தின் அலட்டலால் அன்பு அழிஞ்சு போச்சா என்ன? புள்ளை,குட்டி,பேரன்,பேத்தி,கொள்ளு பேரன் ,கொ.பேத்தினு விரிஞ்சிக்கிட்டே போவுது


//அறிவு வளர வளர அன்பின் மதிப்பு குறைவதும்//
இது உண்மையா இருந்திருந்தா தாத்தா எப்பவோ குடும்பம் கழகமில்லை. கழகம் தான் குடும்பம்னு ரியலைஸ் ஆகியிருப்பாரே


//அன்பு உள்ள இடத்தில் அறிவற்று இருப்பதும்//

த பார்ரா.. இந்த க்ளோபலைசேஷன், லிபரலைசேஷன், ப்ரைவைட்டைசேஷன் எல்லா இழவையும் மீறி ஏதோ சிலராச்சும் அன்புகாட்டிக்கிட்டிருக்காய்ங்க. அவிகளையும் முட்டாள் பட்டம் கொடுத்து நோகடிக்கிறாப்ல கீதே

//அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். -என்னுயிர்த்தோழி.//

அவர் அவர் "அனுபவத்துல" இந்த ம..ரைத்தான் தெரிஞ்சிக்கிட்டாப்ல இருக்கு


//நாத்திகமும் இல்லாமல், ஆத்திகமும் இல்லாமல் இருப்பவன்//

இவனைதான் ஞானிங்கறாய்ங்க. புத்தர் கூட உண்மை அங்கன இங்கன இல்லை மத்தில இருக்குன்னாரு. ஆனால் நம்ம பா.கு இன்னா சொல்றாரு பாருங்க

//நாத்திகமும் இல்லாமல், ஆத்திகமும் இல்லாமல் இருப்பவன் வெறும் மரண பயத்தோடே வாழ்கிறான்//

தோடா..

//உலகில் ஆயுத வலிமையும், அதிகார வலிமையும், பண வலிமையும், படை வலிமையும் உடையவர்கள் இப்படி இரண்டுங்கெட்டானாகவே இருப்பார்கள். -என்னுயிர்த்தோழி.//

இந்தியா கூட ஒள்ளார ஓழிங்க சதிகளையெல்லாம் மீறி வல்லரசாயிருச்சு.. வலிமையான நாடாயிருச்சுனு பேசிக்கிறாய்ங்க.. அப்போ பணம் வச்சிருக்கிறவன், படை வச்சிருக்கிறவன்லாம் ரெண்டும் கெட்டான்னா இந்த இழவுக்கெல்லாம் ட்ரை பண்ணி ஃபெயில் ஆயிட்ட பா.கு மட்டும் பர்ஃபெக்டா?


இதுவே போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?


________________

4 comments:

  1. நல்ல ஹாஸ்யம் :)

    ReplyDelete
  2. //அதுலயும் பாலாவை பத்தி சொல்லவே தேவையில்லை. பாவம் அவருக்குன்னு சைட் எல்லாம் வச்சு பார்த்தாய்ங்க , தாளி சுஜாதாவோட சைட்டே பேர் சொல்லலை.இதுல பா.குமாரன் எல்லாம் எங்கே.//

    என்னண்ணே போட்டு பொளந்து கட்டுறீங்க!!!

    ReplyDelete
  3. //Your comment has been saved and will be visible after blog owner approval//

    இது எதுக்குன்னே எடஞ்சலா.

    ReplyDelete
  4. //இதுவே போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?//

    யாருக்கிட கேக்குறீங்கன்னே?

    ReplyDelete