ஜெயலலிதாவுக்கு ஜாதகம் சொன்னேன்?ஆம். கூரியரில் சொன்னேன். நான் சொன்னது நடந்தது. அதற்கு ராமர் கோவில் சுண்டல் மாதிரி ஒரு தேங்க்ஸ் கார்டும் அம்மையாரின் விலாசத்திலிருந்து வரப்பெற்றேன். என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்திற்கு பெரிய மனிதர்களின் ஆதரவை திரட்ட பார்ப்பனர்கள் பாணியில் என் ஜோதிட ஞானத்தை பயன் படுத்துவது வழக்கம். ஆனால் பப்பு வேகவில்லை.
நான் கூரியரில் சொன்ன ஜோதிடம் பலித்த கதையை சரித்திர நாயகி இதழுக்கு எழுதினேன். அதன் ஆசிரியர் வழக்கு விஷயம் என்னவாகும் என்று கணிக்கச்சொன்னார். கணித்து எழுதி கொடுத்தேன் . அது பிரசுரமுமானது. நான் எழுதியது நடக்கவும் நடந்தது. அம்மையார் பணிக்கரை நம்பினாரே தவிர " பால ஜோதிஷ்ய வ்ருத்த வைத்ய்" ( கிழவனான வைத்தியனை தேடு அவனுக்கு அனுபவமிருக்கும், இளமையான ஜோதிடனை தேடு அவனுக்கு துணிச்சலிருக்கும் )என்ற சுலோகத்தை பின்பற்றவில்லை.
சந்திரபாபு மீதான கொலை முயற்சியை முன் கூட்டி கணித்து என் ஆதர்ஸ புருஷரின் மகளும்,பாபுவின் மனைவியுமான புவனேஸ்வரிக்கு கூரியர் மூலம் தெரிவித்தேன். கலைஞர் தலைமையில் மைனாரிட்டி அரசு அமையும்,ராமதாஸ் கலைஞரை தலையால் தண்ணி குடிக்க வைப்பார் என்று தினகரனுக்கு எழுதினேன். பிரசுரம் தான் ஆகவில்லை. இன்று என் கணிப்பு நிஜமாகிவிட்டதை யார் மறுக்க முடியும்.
ஆந்திர மானில அ.இ.அ.தி.மு.க அமைப்பாளர் திரு.பக்கரின் கடிதத்தோடு லாயிட்ஸ் ரோடு அ.தி.மு.க. அலுவலகத்துக்கும் போனேன். கைப்பணம் செலவழிந்ததுதான் மிச்சம். அங்கிருந்தவர்கள் அழுத பிள்ளைக்கு வா.பழம் (கெட்ட வார்த்தை இல்லிங்க) கொடுத்தது போல் பேசினார்கள். எல்லாத்தயும் எழுதி கொடுங்க அம்மா கூப்பிடுவாங்க..சால்வை போடுவாங்க,பணம் கொடுப்பங்க என்றெல்லாம் சொன்னார்கள். அம்மா தலையில் துண்டு தான் போட்டார்கள். சரி ஒழியட்டும்..
இனி அம்மா எதிர்காலம் எப்படி? :
அம்மா ஜாதகம்:மிதுன லக்கினம் , மக நட்சத்திரம்,சிம்ம ராசி,இரண்டில் சனி,மூன்றில் சந்திரன்,செவ்வாய்,5ல் கேது, 7ல்குரு,9ல்சூரியன்,புதன், பத்தில் சுக்கிரன்,பதினொன்றில் ராகு.
முதலில் நடந்த கதை
தன,வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானத்தில் லக்னத்துக்கு 8,9க்கு அதிபதியான சனி இருப்பதால் குடும்பம் என்பது பணால் ஆகிவிட்டது அதே நேரம் விபரீத தன யோகமும் ஏற்பட்டது. வேலைக்கார பட்டாளம் ஒன்றும் உடனிருக்கிறது.(வேலைக்காரர்களுக்கு சனி காரகன்).வாக்கும் அவ்வப்போது எல்லை மீறிவிடுகிறது..(நான் பாப்ப்பாத்தி தான் )
சோதர,தைரிய ஸ்தானமான மூன்றில், வாக்கு ஸ்தானாதிபதியான சந்திரன் இருந்து கொண்டு அவ்வப்போது தைரியம், அவ்வப்போது கோழைத்தனத்தை கொடுக்கிறார். உடன் பிறவா சகோதிரியான சசிகலாவுடனான தொடர்பும் ஏற்ற இறக்கத்துடன் தான் தொடர்கிறது.செவ்வாய் 6,11 க்கு அதிபதி ,சந்திரன் 2க்கு அதிபதி. இவர்களின் சேர்க்கை காரணமாகவே அம்மையார் நுணலும் தன் வாயால் கெடும் என்று பேசிவிடுகிறார். எதிரிகளை வலிய தேடிக் கொள்கிறார்.
5ல் உள்ள கேது, தனித்து நின்ற குரு அம்மையாருக்கு கெட்ட பெயரை தருவதில் நீயா நானா என்று போட்டியிடுகின்றனர். குரு 7 ல் உள்ளார். 7 என்பது கணவனை காட்டுமிடம். குரு தான் நின்ற இடத்தை நசிக்கச் செய்வார் என்பது எளிய விதி. இவர் 7,10 இடங்களுக்கு ஆதிபத்தியம் பெற்றதால் தான் அம்மையாருக்கு கோயில் குளங்கள் மீது அதீத ஈடுபாடு ஏற்பட்டு அவப்பெயரும் ஏற்பட்டது. தனித்து நின்ற குருவால் தான் குருவின் வாகனமான யானைகள் விஷயத்திலும் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது
லக்னாதிபதியான புதன் (4க்கு அதிபதியும் இவரே/ 4 என்றால் தாய்,வீடு,வாகனம்) 9ஆமிடத்தில் 3க்கு அதிபதியான சூரியனுடன் சேர்ந்துள்ளார். இதனால்தான் அடிக்கடி முகாம் மாற்றும் பழக்கம் உள்ளது. 1+3= அலைச்சல் தான். 3 என்பது தைரியத்தை காட்டுமிடம். இதன் ஆதிபத்தியம் சூரியனுக்கு கிடைத்திருப்பதால் தான் இவரது தன்னம்பிக்கை ஓவராகி அகங்காரமாக காட்சி அளிக்கிறது.
ஒன்பது என்பது வாழ்வில் வழிகாட்டியாக அமையும் குருவைக் காட்டுமிடம். லக்கினாதிபதி புதன் இங்கு அமர்ந்ததால் இவரது அரசியல் குருவான எம்.ஜி.ஆர் வழியில் அதிகாரம் கிடைத்தது. 5,12க்கு அதிபதியான சுக்கிரன் 10ல் உச்சம் பெற்றதைத்தான் எல்லா ஜோதிடர்களும் புகழ்ந்து பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை சுக்கிரன் கேந்திரம் பெற்றதால் தான் அம்மையார் இன்று தனிமரமாக நிற்கிறார்.
ஆடம்பரம்,படாடோபம்,கிலோ கணக்கில் வெள்ளி இதற்கெல்லாம் இந்த சுக்கிரன் தான் தூண்டி விட்டார். சுக்கிரன் கிருக காரகன்,வாகன காரகன். அம்மையாருக்கு சுக்கிரன் யோகம் தருவதாயிருந்தால் ஏன் அவருக்கு வீடு,வாகனம் தொடர்பாகவே தொல்லைகள் வருகின்றன. விளக்குவார்களா ஜோதிடர்கள்?11ல் உள்ள ராகு சட்டத்திற்கு புறம்பானவர்களின் உறவை தருகிறார். லாபத்தையும், 5ல் உள்ள கேதுவை தான் பார்ப்பதால் அவப்பெயர் அவமானங்களையும் தருகிறார்.
ராகு தசையில் சுக்கிர புக்தி
அம்மாவுக்கு தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடை பெறுகிறது. 1994/8/21 அன்று துவங்கிய. ராகு தசையின் முதல் பாதி 21/8/2003 ல் முடிந்துவிட்டது. 6,11 க்கு அதிபதியான செவ்வாயின் வீட்டில் ராகு (11ல்) நின்றுள்ளார். முதல் 9 வருடங்கள் ஓரளவு நல்ல பலனை கொடுத்துவிட்ட ராகு தன் இரண்டாம் பாதியில் எந்த அளவு பலன் கொடுப்பார் என்பது ஆராய்ச்சிக்குரிய கேள்வியாகும்.. சுக்கிரன் மிதுன லக்கினத்துக்கு யோககாரகன். இவர் கோண ஸ்தானங்களில் இருந்தால் தான் நல்லது. அம்மையாரின் ஜாதகத்தில் இவர் கேந்திரம் பெற்றுள்ளார். இவர் சுப பலன் களை தருவதாயின் அவருக்கு காலாகாலத்தில் திருமணமாகியிருக்கும்,
மகாலட்சுமி போன்ற மகள் உறுதுணையாக இருந்திருப்பார். வீடுகள் ரெயிடுக்குள்ளாவது,கொடைக்கானல் குற்றச்சாட்டுக்கள், வெளிநாட்டுக் கார் அன்பளிப்பு போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது. எனவேதான் அடித்து சொல்கிறேன்.
2006 மார்ச்,9 ஆம் தேதி ஆரம்பமான சுக்கிர புக்தி 2009 மார்ச் 9 ஆம் தேதி வரை நடக்கும். மற்ற ஜோதிடர்கள் கூறுவது போல் சுக்கிரன் யோகத்தை தருவதாயிருந்தாலும் 2009 மார்ச்சுக்குள் தேர்தல் வந்தால் தானே முதல்வராகமுடியும். கலைஞர் ஸ்டாலினை முன்னிலைப் படுத்திவருவதற்கு கட்சி,தொண்டர்கள்,பத்திரிக்கைகள் தரப்பிலிருந்து எதிர்ப்பு ஏதுமில்லை. மேலும் ஸ்டாலினுக்கு பட்டம் கட்டுவதில் ஏனிந்த தாமதம் என்ற கேள்வி தான் எழுந்து வருகிறது. எனவே அம்மாவுக்கு நிராசை தான் மிஞ்சப் போகிறது.
கோச்சாரப்படி
சிம்மத்துக்கு 4ல் உள்ள குரு கொடைக்கானல் குடைச்சலை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஜன்மத்தில் வந்த சனி அங்குள்ள கேதுவுடன் சேர்ந்து மூன்றாவது அணியிலிருந்து பிரித்துவிட்டார். 2007 நவம்பர் 11 க்கு 5ல் வரவிருக்கும் குரு ஜன்ம சனி,ஜன்ம கேதுவை மீறி என்ன செய்துவிட முடியும்.அம்மையாருக்கு இப்போதுள்ள ஒரே ஆறுதல் மிதுனத்தில் ஸ்தம்பித்துள்ள செவ்வாய்தான். (இது ராசிக்கு 11 ஆமிடம்.செவ்வாய் இங்கு 2008 ஏப்ரல் வரை தங்குகிறார்) ராசிக்கு 11 ல் ஸ்தம்பித்துள்ள செவ்வாய் பலத்தில் ஏதேனும் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்க முடியும் அவ்வளவு தான்.
எது எப்படியானாலும் அம்மையார் //www.nilacharal.com//ல் வெளிவந்து கொண்டிருக்கும் எனது ஆய்வு தொடரை படித்து உரிய பரிகாரங்கள் செய்து கொண்டால், எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 அமல் படுத்தப்படவேண்டும் என்று குரல் கொடுத்தால் நாட்டில் உள்ள 40 கோடி ஏழைமக்கள், 10 கோடி வேலையற்ற வாலிபர்கள், 70 கோடி விவசாயிகள் அம்மையாரை பிரதமராகவே ஆக்கிவிடுவார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஜோதிடப்படி சனி எந்த ராசியில் இருந்தாலும் 4 ராசியினருக்கு அனுகூல பலன் களை தருவார். அம்மையார் என் திட்டத்துக்கு குரல் கொடுத்தால் ஜனத்தொகையில் 12ல் 4 பாகம் மக்களின் கிரகபலன் கள் அம்மாவுக்கு கை கொடுக்கும். இது உறுதி
பழசு மாதிரி இருக்கே! மீள் பதிவா?
ReplyDeleteஇப்ப தேதி அக்டோபர் 2009!
சிம்ம ராசியிலிருந்த சனி பகவன் கன்னி ராசிக்கு மாறிட்டார்!
குரு இப்போ மகர ராசியில இருக்காரு! அவரும் டிசம்பர்க்கு மேல கும்பராசிக்கு போயிடுவாரு!
இது ஈமெயில் ஃபாலோ அப்க்காக!
ReplyDeleteமுதலில் உமது ஜாதகத்தை நீங்கள் கணித்தாலே உமது ஆப்பரேஷன் இந்தியா அமுல்படுத்தபடுமா அல்லது நீர் புகழ் பெற முடியுமா எனத் தெரிந்துவிடுமே???
ReplyDeleteநாமக்கல் சிபி அவர்களே !
ReplyDeleteஅடி ஆத்தி தமிழ் பதிவர் உலகத்துல ஷெர்லாக் ஹோம்ஸுங்கள்ளாம் இருக்கறாப்ல இருக்கே ! அது மட்டுமில்லேப்பா பீட்டர் விடால் எல்லாம் கூட இருக்காங்க !
இனிமே ரொம்ப உசாரா போடனும்பா பதிவை (அதுலயும் மீள் பதிவை போடறப்ப) அது வந்து அண்ணாச்சி சனி 26 ஆம் தேதியே பெயர்ந்தாச்சு. இங்கே நாம போட நினைச்ச புஸ்தகம் மட்டும் இன்னைக்கு வரை பெயரலை .அந்த டென்ஷன்ல வேற விதியில்லாம ஹி ஹி !
இருந்தாலும் என்ன ? உங்களுக்கு இது புதுசுதானே !
நந்த வனத்தான் அவர்களே !
ReplyDeleteஉங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா 1989ல தான் ஜாதக ஆராய்ச்சில இறங்கினேன். நம்ம ஜாதகம் யோக ஜாதகம்னு தெரிஞ்சதாலதான் ஜா.ஆராய்ச்சியையே தொடர்ந்தேன். கவிஞர் சொன்னாரே "உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்"னு அப்படி என்னை நான் அறிந்தவன். என்னை என் லட்சியத்தை ஜோதிடம் அங்கீகரித்ததால் தான் ஜோதிடம் சரினு நம்பினேன். வேணம்னா சொல்லுங்க .. நம்ம ஜாதக விசேஷங்களை ஒரு பதிவாவே போடுவம்
ஏன் எல்லாப் பின்னூட்டங்களும் இரண்டு முறை வருகின்றன?
ReplyDelete(அல்லது) நான் ஏதாச்சும் குடிச்சிருக்கேனா? (இன்னிக்கு காந்தி ஜெயந்தின்னு கடை கூட இல்லையே)
நந்தவனத்தான் அவர்களே !
ReplyDeleteஎனது ஜாதக விவரம் :
ஜனனம்: 7.8.67 (இதுதான் என்னோட ஐடி/ இன்கம் டேக்ஸ் இல்லிங்கனா)
நேரம்: காலை 6.10
லக்னம்: கடகம்
நட்சத்திரம்: மகம்
ராசி: சிம்மம்
கடகத்தில் குரு , சூரியன் ,புதன்
சிம்மத்தில் : சந்திரன் ,சுக்கிரன்
துலாவில்: செவ்வாய்,கேது ,
மீனத்தில் : சனி (வ)
மேஷத்தில்: ராகு
நடப்பு : செவ்வாய் திசை
ஹம்ச யோகா, புத ஆதித்ய யோகா, விபரீத ராஜா யோகா போன்ற பல யோகங்கள் உள்ளது. கேது சாரம் பெற்ற ராகு திசையில் மிக பெரிய வெற்றிகளை சந்திப்பீர்கள்.
ReplyDeleteகவிதைகள் அவர்களே !
ReplyDeleteதங்கள் கணிப்புக்கு நன்றி. மேலும் சூரியன் சந்திரன் அருகருகி அமைந்து சிவசக்தி யோகம், 10 க்கு அதிபதி 4 ல் நின்று 4 க்கு அதிபதி 2 ல் நின்று நிக்ஷேப யோகம், குரு கடகத்தில் உச்சம் பெற்றதால் திரிகூட யோகம் ஏற்பட்டிருப்பதையும் கவனியுங்கள். பாவ சக்கரத்தில் குரு சந்திரன் கடகத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராசிச்சக்கரத்தில் சந்திரனுக்கு விரயத்தில் குரு நின்றதால் சகட யோகம் ஏற்பட்டு நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. விழுந்து விழுந்து தான் எழுகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் புதிய உயரங்களை காண்கிறேன்.
\\உடன் பிறவா சகோதிரியான சசிகலாவுடனான தொடர்பும் ஏற்ற இறக்கத்துடன் தான் தொடர்கிறது.//
ReplyDeleteநீங்க சொல்லறது எது நடக்குமோ நடக்காதோ அனால் இது தினம் தினம் நடக்குது......
நன்றி கலாட்டா பையன் அவர்களே !
ReplyDeleteமுருகேசன், எனக்கு ஜோதிடத்திலெல்லாம் அந்த அளவிற்கு நம்பிக்கை இல்லை. ஆனால் உங்கள் சரளமான எழுத்து நடை என்னை வாசிக்கத் துண்டியது. எழுத்தும் அதை சொல்லிய பாங்கும் நன்று.
ReplyDeleteஅன்புடன்
தோழன் மபா.
தோழன் மபா அவர்களே !
ReplyDeleteநன்றி. தங்களை கவர்ந்தது வெறுமனே என் எழுத்து நடை மட்டுமே என்று தாங்கள் கூறுவது தங்கள் தாராள மனப்பான்மையை காட்டுகிறது. நான் கூறுகிறேன் ஜோதிடத்தில் உள்ள சாரம் தங்களை கவர்ந்துள்ளது.