Saturday, November 14, 2009

சாதிகள் உண்டு சாதிக்கொரு புத்தி உண்டு

ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபடும்போது ஆணின் உடலிலிருந்து வீரியம் வெளிப்படும்போது அதனுடன் ஆணின் உடலிலிருந்து ஒரு ஒளி (ஓஜஸ்) அதனுடன் கலக்கிறதாம். அந்த ஒளி தலையிலிருந்து புறப்பட்டால் பிராமண குணங்களுடனும் (ஆள் காட்டி குணங்களுடன் அல்ல) தோளில் இருந்து புறப்பட்டால் சத்ரிய குணங்களுடன், வயிற்றிலிருந்து புறப்பட்டால் வைசிய குணங்களுடன், காலில் இருந்து புறப்பட்டால் சூத்திர குணங்களுடன் குழந்தை பிறக்கும் என்று எங்கோ படித்தேன். ஒரே தந்தைக்கு நான்கு விதமான குணங்கள் கொண்ட குழந்தைகள் பிறக்க இதுவே காரணம். அவ்வை லட்சியவாதி "இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்னு சொல்லி விட்டுட்டாங்க. நான் விசயத்தை கொஞ்சம் பிராக்டிக்கலா அணுக நினைக்கிறேன்.

சாதி என்பது ஒரு குழுவை குறிக்கிறது. ஒரே குழுவுக்குள் திருமண‌ங்கள் நடப்பதால் ஒரே விதமான ஜீன்கள்( குணங்கள்) கொண்ட குழந்தைகள் பிறக்கின்றன. ஏதோ பெரியார் போன்ற பகுத்தறிவு வாதிகள் காரணமாய் கலப்பு திருமணங்கள் பெருகியதில் இந்த இம்சை குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். யாரேனும் இது குறித்து விருப்பு வெறுப்பற்ற சர்வே ஒன்று நடத்தலாம். என்னைக்கேட்டால் ஒரே சாதிக்குள்/ அடச்சே ஒரே மதத்துக்குள் திருமணங்கள் தடை செய்யப்படவேண்டும். தாளி.. கேவலம் பசுமாடு போடற குட்டி உயர்சாதியா இருக்கணும்னு பசுவை இஸ்துக்கினு போய் பணம் கட்டி ஏற விட்டு கூட்டி வர்ரிங்கல்ல. நாளைய சமுதாயம் பவர் ஃபுல்லா இருக்கனூம்னா தயவு செய்து மதம் கடந்த திருமணங்களை நடக்க விடுங்கள்.

அப்புறம் முகத்தை பார்த்து சாதி சொல்றேன், சாதிய வச்சு புத்திய சொல்லிர்ரேன் என்று ஜல்லியடிக்கும் என்னை போன்றவர்கள் மேல/கீழ பொத்திக்கிருவம்ல.

அதுக்காக சாதிசங்கம் , சாதி கட்சியை நான் எதிர்க்கமாட்டேன். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.முதல்ல உன் சாதிக்காரனோட ஒன்று படு. எவனோ கரை வேட்டிக்கட்டினவன் நாலு பேரு வாழ உன்னை போல சோத்துக்கு அல்லாடற இன்னொரு சாதிக்காரனை வெட்டாதே. சாதி சங்கங்கறது எத்தனையோ வகைல தன் சாதி முன்னேற்றத்துக்கு பயன்படலாம்.

வெறுமனே இட ஒதுக்கீடு கேட்டு அலம்பல் பண்றதால பிரயோஜனமில்லை. முன்னேறிய ஒரு ஆசாமி நாலு ஆசாமிக்கு கைட்பண்ணா போதும். (அய்யருங்களை பார்த்து கத்துக்கங்கண்ணா)
அஞ்சு வருசத்துல சாதியே முன்னேறிடும்.

சாதி சங்கங்கள் வைங்கனு சொல்லமாட்டேன். ஏற்கெனவே வச்சிருந்தா அதை எப்படி பயன்படுத்தலாம்னுதான் சொல்றேன். எல்லாரையும் படிக்க வைங்க., படித்த இளைஞர்களை கொண்டு ஃப்ரீ கோச்சிங் தரலாம். கம்ப்யுட்டர் பயிற்சி தரலாம். ஜிம் வைக்கலாம். வருசம் ஒருதரம் டூர் போகலாம். மாசம் ஒரு தரம் பிக்னிக் போலாம். பத்திரிக்கை நடத்தலாம். ஒரு வெப்சைட் வைக்கலாம்.

மனுசனுக்கு காலைல இருந்துராத்திரி வரை, பிறந்ததுல இருந்து சாகற வரை பிரச்சினைதான். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவலாம். இதுக்கு அதே சாதில இருக்கிற இன்டெலக்சுவல்ஸை உபயோகிக்கலாம். இலவச /அல்லது நாமினல் ஃபீயுடன் மேட்ரிமோனி நடத்தலாம். நல்லா படிக்கிற (ஏழை) பசங்களுக்கு ஸ்காலர்ஷிப் தரலாம். வசதியான பசங்களை உற்சாகப்படுத்தலாம். அரசு திட்டங்களில் பலன் பெற உதவலாம். எத்தனையோ செய்யலாம்.

அரசுவேலைய நம்பி வாழறவன் எத்தனை சதம். விவசாயத்தை நம்பி வாழறவன் எத்தனை சதம் ? யோசிச்சு பாருங்க. இட ஒதுக்கீடு கேட்டா விவசாய நிலத்தில ஒதுக்கீடு கேட்கனும் அதை விட்டுட்டு நாலணா அரசு வேலைக்கு அலை பாயறது கேணத்தனம். வெத்து அரசியல் . ஒரு சாதி சங்கம் நினைச்சா நிதி திரட்டி கூட்டுறவு பண்ணை விவசாயம், விவசாயம் சார் தொழிலகங்கள் நடத்தலாம். ஃபேக்டரி வைக்கலாம்.

எல்லா சங்கதியும் ஒளிவு மறைவில்லாம ஜன நாயகபூர்வமா நடக்க ஆன்லைன் உதவும். அதை விட்டுட்டு சாதியே இல்லைனு கண்ணை மூடிக்கிறதும் தப்பு. சாதிக்காக கண்ண மூடிக்கிட்டு எகிர்ரதும் தப்பு.

நான் முதலியார்..இன்னொரு முதலியார் வந்து கத்தில குத்தமாட்டான்னு என்னா கியாரண்டி? இல்லே குத்தினாலும் கத்தி உள்ள இறங்காதா.. என்னத்த சாதி..

அவாளை பாருங்க ! பஞ்ச கச்சம்கட்டினாலும் சரி, ஜீன் போட்டாலும் சரி,ஐ.ஏ.எஸ் ஆனாலும் சரி ஹோம்கார்ட் ஆனாலும் சரி . தன் இனத்தை எப்படியெல்லாம் தூக்கிவிடறாங்க. நாம ஏன் அப்படி செய்யகூடாது.

ஏற்கெனவே சொல்லியிருக்கேன். எம்.எல்.ஏ என்னவோ தலித்துதான் செக்ரட்ரி ? அய்யரு..

உங்கள்ள வசதி வந்ததும் ஆடிட்டர் வேணம்னா அய்யரை தேடறிங்க
திருட்டு கணக்கு கரெக்டா எழுதுவான்னு. ஏன் இப்படி ?

4 comments:

  1. //ஒரே குழுவுக்குள் திருமண‌ங்கள் நடப்பதால் ஒரே விதமான ஜீன்கள்( குணங்கள்) கொண்ட குழந்தைகள் பிறக்கின்றன.ஒரே குழுவுக்குள் திருமண‌ங்கள் நடப்பதால் ஒரே விதமான ஜீன்கள்( குணங்கள்) கொண்ட குழந்தைகள் பிறக்கின்றன.
    //
    தலைவரே ஜீன்களுக்கும் குணத்துக்கும் எந்த தொடர்புமில்லை,ஜீனுக்கும் நோய்களுக்கும் உடல்வாகுக்கும் நிறத்துக்கும் தான் தொடர்பு, இவைகள் எல்லாம் உடல் சார்ந்து வருபவை, குணம் என்பது மனம் சார்ந்தது, சூழலினால் வருவது, புறதாக்கங்களினால் வருவது... எனவே சாதிக்கொரு குணமுண்டு என்பது பிறப்பினால் வருவதல்ல சூழலால் புறக்காரணிகளால் ஏற்படும் பாதிப்பு....

    இதைத்தவிர பதிவில் உள்ள மற்ற அனைத்தையும் ஏற்கிறேன்

    ReplyDelete
  2. ஜோ அமலன் ராயன் பர்னாண்டோNovember 14, 2009 at 7:54 AM

    Kuzhai!

    I disagree.

    There are two theories to the question, and both are correct in their own way:

    1. By genes.
    2. By environment.

    In psychology, it is called Nature vs Nurture.

    Nature is the genetical make up.
    Nurture is the environmental circumstances.

    You can understand it, if you are a teacher in an LKG or UKG teaching tiny tots. Natural character traits of children are full display there.

    Basic nature comes from genes: whether one is curious; or active; or docile. Whether one is interested in mathematics or philosophical inclination; or interested in arts and humanities; - all decided by genes.

    Only on that, if you build your career or your life, you will get full satisfaction.

    Environment cant create a new character. It will play only a facilitating factor.

    Finally, nature is supreme.

    ReplyDelete
  3. குழலி அவர்களே ! ஜோ அமலன் ராயன் ஃபெர்ணான்டோ அவர்களே !

    நம் மூவரின் கருத்தும் சரியானதே !( ஆனால் இதில் உள்ள சிறு விதிவிலக்கை விளக்க முயன்றுள்ளேன்)

    குழலி அவர்களே,
    எங்கே த‌வறான செய்தி பரவிவிடுமோ என்ற பதற்றத்தில் அக்கறையுடன் போட்ட மறுமொழிக்கு நன்றி. சாலமன் பாப்பைய்யா ஸ்டைலில் சொன்னால் குணங்களுக்கு காரணம் ஜீன்களா ? வளர்ப்பு சூழலா? என்பதே பஞ்சாயத்து.
    நான் படித்தறிந்தவற்றை அப்படியே நம்பும் சாதியில்லை. (த பர்ரா மறுபடி சாதி) அவற்றை எனக்குள்ள சர்க்கிளில் அப்ளை செய்து மார்க்கு போட்டு அப்புறம்தான் நம்ம டேட்டா பேஸ்ல சேர்ப்பேன். தாயை போல் பிள்ளை, நூலைப்போல் சேலை , புலிக்கு பிறந்தது பூனையாகுமா இத்யாதி பழமொழிகளை முன் வைக்க விரும்பவில்லை. காரணம் வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை ரோகி இத்யாதி பழமொழிகளை நீங்கள் முன் வைப்பீர்கள். இங்கு எந்த கருத்துமே 100 சதம் உண்மையுமல்ல/ அவை 100 வருடங்களுக்கு உண்மையாகவே இருக்குமென்ற நம்பிக்கையுமில்லை.

    நான் படித்தது + அனுபவத்தில் அப்ளை செய்து ஒப்புவது:
    உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இவை ஒவ்வொரு ரசாயனத்தை சுரந்து ரத்தத்தில் கலக்கின்றன.
    இவை சுரந்து கலக்கும் ரசாயனங்களுக்கும் கோழைத்தனம், வீரம், சுய நலம், தியாகம் இத்யாதி குணங்களுக்கும் தொடர்பு உள்ளது. உதாரணமாக நாம் ஒரு விசயத்தை ஒரு ஸ்டேஜில் விட்டுவிட்டு அடுத்த விசயத்தை யோசிக்க ஆரம்பித்து விடுகிறோம். ஆனால் சிலர் அதே விசயத்தை வருடக்கணக்கில் யோசித்து பைத்தியமே ஆகிவிடுகின்றனர்.

    உ.ம் நம்மை பார்த்து (?) ஒருவன் காறித்துப்புவது . இதற்கு காரணம் குறிப்பிட்ட ரசாயனம் அவன் உடலில் குறைவாய் இருப்பதே. இதை டாக்டர்கள் வெளியிலிருந்து இஞ்செக்ஷன் மூலம் தருகிறார்கள். வியாதி கட்டுப்படுகிறது.

    "சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி " மூலம், ரத்தக்கொதிப்பு, இத்யாதி மனிதனின் குணத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுவதை மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்த வியாதிகளுக்கு மூலம் (பைல்ஸ் இல்லிங்க) ஜீன் களில் உள்ளன.

    மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போதலாமஸ். இதன் கட்டளைப்படி இதர சுரப்பிகள் வேலை செய்கின்றன.(ரசாயனங்களை சுரக்கின்றன) ரசாயனங்களுக்கேற்ற குணம் ஏற்படுகிறது.

    மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளை,அவற்றின் சுரப்புகளை யெல்லாம் கட்டுப்படுத்தும் தலைவனான ஹைப்போதலாமசை கட்டுப்படுத்துவது எது தெரியுமா? நமது எண்ணம் .

    இதைத்தான் நமது முன்னோர் எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வு என்று கூறியுள்ளனர் போலும். நீங்கள் கூறும் வளர்ப்பு சூழல் மேற்படி குழந்தையின் (விதையொத்த) அடிப்படை எண்ணத்தை மாற்றியதென்றால் ஜீன் எல்லாம் உடலை பாதிப்பதோடு நின்று விடும். காந்தி தாத்தா கூட " ஃபைண்ட் எ வில். வில் ஃபைண்ட்ஸ் தி வே என்றார்.

    வானத்தில் பறப்பதற்கு முன் விமானம் ரைட் சகோதரர்களின் எண்ணத்தில் தான் பறந்தது. அந்த எண்ணம் வலுவானதாக இருக்கவே ஆகாயத்திலும் பறக்க முடிந்தது.

    தாங்கள் கூறிய கருத்தாகட்டும், எனது பதிவிலான கருத்துகள் ஆகட்டும்,
    ஃபெர்ணான்டோ அவர்கள் தம் மறுமொழியில் கூறியுள்ள கருத்துக்கள் ஆகட்டும் சரியானவையே . ஆனால் இவை உண்மையாவதை சாதாரணர்கள் வாழ்வில் ம‌ட்டுமே நாம் காணமுடியும்.

    வாழ்வை வெறுமனே ஜீன் கள், வளர்ப்பு சூழல் மட்டுமல்ல பல்வேறு அம்சங்கள் நிர்ணயிக்கின்றன.

    ஆனால் 00.01 சதவீதம் மனிதர்கள் வாழ்வில் பார்க்கும்போது இந்த கருத்துக்கள்/விதிகள் எல்லாம் நான்கு கால்களையும் தூக்கிவிடுகின்றன. இதற்கு காரணம் நாளமில்லா சுரப்பிகளை கட்டுப்படுத்தும் ஹைப்போதலாமசை கட்டுப்படுத்தக்கூடிய விதை கருத்து அவர்களில் புதைந்திருந்ததாக இருக்கலாம். வெளியிலிருந்து விதைக்க பட்டதாய் இருக்கலாம். அது செழித்து வளர ஆகாய வெளியின் அகண்ட பாத்திரத்து அமுதம் உதவியிருக்கலாம்.

    மற்றபடி 99.09 சதவீதம் கேஸ்களில் நாம் மூவர் கூறிய கருத்துக்கள் 100 சதம் கரெக்டுதான். ஜூட் !

    ReplyDelete
  4. //அவாளை பாருங்க ! பஞ்ச கச்சம்கட்டினாலும் சரி, ஜீன் போட்டாலும் சரி,ஐ.ஏ.எஸ் ஆனாலும் சரி ஹோம்கார்ட் ஆனாலும் சரி . தன் இனத்தை எப்படியெல்லாம் தூக்கிவிடறாங்க. நாம ஏன் அப்படி செய்யகூடாது.//

    ஹ ..ஹ ..சரியாக சொன்னேள் ....அவாள் அவாள் தான் .....வால் கோமணம் கட்டி நமக்கு நாமாம் சாத்தும் அவாளை நல்லா சாத்துறேள்..........

    ReplyDelete