Monday, November 9, 2009

திருடன் ஜோக்ஸ்

வீட்டுக்காரர்: ஏம்பாவாரம் ஒரு தடவையாவது வந்து போப்பா என் மனைவி பயந்து நடுங்கறத பார்க்கனும்
திருடன்: ??????

***

எம்.எல்.ஏ: ஏம்பா..மந்திரிங்க வீட்டையெல்லாம் விட்டுட்டு என் வீட்ல திருடவந்திருக்கியே ?
திருடன்: ??????

***

கணவன்: நம்மளை டின் கட்டிட்டு திருடிட்டு போற திருடன் கிட்டே என்னடி பேச்சு
மனைவி: உங்கம்மா ஊர்ல இருக்கிறப்ப ஒரு நடை வந்துபோகச்சொன்னேன்

***

எஸ்.ஐ: திருடனை எப்படி மயக்கம் போட்டு விழ வச்சிங்க‌
டாக்டர்: நான் உயிரை காப்பாத்தற டாக்டருப்பான்னேன் அவ்ளதான்

***
லாயர்: நான் ஒரு லாயர் என் வீட்லயா திருடறே ..உன் மேல கேச போட்டு
திருடன்: அதுக்கு முதல்ல நல்ல லாயரா பாரு

***
எஸ்.ஐ: என் வீட்ல புகுந்து ஒருத்தன் திருடிட்டு போறதா அவனை புடிச்சு
ஏட்டு: எப்படியாவது மாமூல் வாங்கிரலாம் சார்

***
நகைக்கடைக்காரர்: ஏண்டா உனக்கு என்னா தில் இருந்தா என் கடைல திருடின நகைய என் கடைலயே கொண்டு வந்து விற்பே
திருடன்: உங்க கடை சீலை பார்த்து எவனும் வாங்க மாட்டேங்கிறான்

***

கணவன் மனைவியிடம்: இந்த திருடன் ரஜினி ரசிகன்னு நினைக்கிறேன்
திருடன்: அட..எபிடி கரெக்டா சொல்றிங்க (ரஜினி ஸ்டைலில்)
கணவன்: சிங்கிளா வந்திருக்கியே

***
திருடன் 1: எழுத்தாளர் வீட்ல திருடப்போனது தப்பா போச்சு
திருடன்2: பத்திரிக்கைகள்ள இருந்து திரும்பிவந்த கதைகள் தான் கிடைச்சது

***
திருடன் 1: வர வர தொழில் டல்லடிக்குது பேசாம அரசியல்ல குதிக்கலாம்னு இருக்கேன்
திருடன்2: ??????????

***
நீதிபதி: பேங்க்ல இருந்து திருடின பணத்தை பேங்க்லயே டிப்பாசிட் பண்ணியிருக்கே மறு நாளே வித் ட்ரா பண்ணியிருக்கே
திருடன்: பணம் போட அது பாதுகாப்பான இடமில்லேனு கொஞ்சம்லேட்டா ஸ்பார்க் ஆச்சு எஜமான்

***

எஸ்.ஐ: ஏன்யா இவரோட லூனாவை திருடினே
திருடன்: எனக்கு கீர் வண்டி ஓட்டத்தெரியாதே

****

நிருபர்1: எடிட்டர் ஏன் சப் எடிட்டரை போட்டு இந்த அடி அடிக்கிறார்
நிருபர்2: அந்தரங்கம் தொடர்ல ஆசிரியரோட அந்தரங்கத்தை எழுதிவிட்டாராம்


***

அரசியல் ஜோக்ஸ்

அவன்: மன்மோகன் சிங் தவறி விழுந்தா ?
இவன்: 'மண்'மோகன் சிங்

***

4 comments:

  1. நல்லாத்தான் எழுதறீங்க. கொஞ்சம் படிக்க செரமாயிருந்தது ஆரம்பத்தில.இப்பப் பரவாயில்லை.

    நமக்கு ஒரு சந்தேகம். இலங்கை தமிழர்களுக்கு விடிவு கிடைக்குமா ?

    மேற்படி கேள்விகளூக்கு நெறயா ஜோசியருங்க கழண்டுட்டாங்க . நீங்க எப்படி ?

    ReplyDelete
  2. வாய்ப்பாடி குமார் அவர்களே,
    இலங்கை தமிழர்களுக்கு விடிவு கிடைக்குமா என்ற கேள்விக்கு சோதிடத்தில் பதிலை தேடுவது கோழைத்தனம். ஏற்கெனவே நான் சொன்னேன் எல்லாரும் ராஜபக்ஸே படத்தை ஏ4 சைஸ்ல பிரிண்ட் எடுத்துவச்சுக்கங்க அப்புறமா சொல்றேனு.. நிறைய பேர் கூட தேவையில்லை. ஓரளவு கான்சன்ட்ரேட் பண்ணக்கூடிய 1000 பேர் இருந்தால் போதும்.

    நிற்க உங்கள் கேள்விக்கு பதில் தர இலங்கை தனி நாடாக அறிவிக்கப்பட்ட தேதி,மாதம்,வருடம் , நேரம் தேவை. கொடுத்தால் நான் முயற்சி செய்கிறேன்பாராட்டுக்கு நன்றி. அதென்ன ஆரம்பத்துல செரமமா இருந்ததுங்கறிங்க.. ஒரு வேளை சமீபத்துல பேச்சுதமிழ் அதிகமானதாலயோ ?

    ReplyDelete
  3. ஆம் அப்படித்தான். பேச்சுத்தமிழ் வரவே படிக்கவும் சற்று எளிதாய் உள்ளது.

    மற்றபடி இலங்கை தனி நாடாக அறிவிக்கப்பட்ட தேதி,மாதம்,வருடம் , நேரம் நமக்கு தெரியவில்லை. முயற்சி செய்கிறேன் முடிந்தால் தருகிறேன்.

    ReplyDelete
  4. நன்றி வாய்ப்பாடி குமார் அவர்களே,
    நானும் முயல்கிறேன்.. சாரி ட்ரை பண்றேன் (என்ன சரியா பேச்சு தமிழ்)

    ReplyDelete