நாட்ல இழந்த சக்தி லாட்ஜு வைத்தியருங்களுக்கு குறைவே இல்லை. அவிக விசயத்துல இப்ப முன்னேற்றம் என்னடான்னா டி.வி.ல வராக. அரசியல் பின்னணி வச்சுக்கிட்டு பணம் பறிக்கிறதோட , பணத்தை திருப்பி கேட்டா டாக்ஸில ஆளனுப்பராகளாம். இது ஒரு பக்கம்னா ஏறக்குறைய எல்லா பத்திரிக்கைலயும் இவுக விளம்பரம் வருது . அதே பத்திரிக்கைல அப்புறம் அவிக ஊரை ஏமாத்தின கதையும் வருது. இன்னொரு பக்கம் பார்த்தா டஜன் கணக்குல இன்ஃபெர்ட்டிலிட்டி சென்டர்ஸ், அரை செஞ்சுரி அளவுக்கு பிரபல செக்ஸாலஜிஸ்டு. "எழுப்பி விட " மருந்து தயாரிச்சா சூப்பர் சக்ஸஸ். மகளிர் காவல் நிலையம், ஃபேமிலி கோர்ட்டெல்லாம் ஹவுஸ் ஃபுல். அதே சமயத்துல பொருந்தா காதல், முறை தவறிய உறவு, கள்ளக்காதல், விபச்சார ராக்கெட் , நடிகைங்க கூட இதுல இருக்கிறதா தகவல். என்னதான் நடக்குது. ஏன் நடக்குது ?
எல்லாத்துக்கும் ஒரே காரணம் மனுஷன் இயற்கைய விட்டு விலகிட்டான். மேற்படி கேஸுகள்ள நூத்துக்கு 90 கேஸு இயற்கைக்கு திரும்பி வந்தாலே விளக்குகம்பம் ரேஞ்ச்சுக்கு நிக்கும். ஆனால் என்ன நடக்குது ? ஏன் இப்படினு இந்த பதிவுல கொஞ்சம் ஆழமாவே பார்ப்போம்
சரி கடந்த பதிவுல சொன்ன மாதிரி சூரிய உதயத்துல வேலைய ஆரம்பிச்சு சூரிய அஸ்தமனத்துக்கப்புறம் கூட்ல வந்து அடங்கிட்டம், பவர் இல்லே,டி,வி,இல்லே, செல் கவரேஜ் இல்லைன்னா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணிங்களா? சாலை விபத்து பாதியா குறையும், போக்குவரத்து நெரிசல் குறைஞ்சு ஏர் பொல்யூஷன் குறைஞ்சு ,மழை அளவே சாஸ்தியானாலும் ஆயிரும். இன்னம் என்ன 100 நாள்ள சுபிட்சம் தானே . தாளி ! சூரியன் மறைஞ்ச உடனே மனித உடல் ஆட்டோமெட்டிக்கா ஸ்லீப் மோடுக்கு போயிரனும் அதான் இயற்கை. ஆனால் பழக்க தோஷத்தால அந்த உயிர் கடியாரம் டிஸ்டர்ப் ஆயிருச்சு. இதனால மனிதனுக்குள்ள என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுருச்சோ தெரிஞ்சுக்கனும்னா ஒரு ஆராய்ச்சி செய்யலாம்.
ஒரு 200 பேரை பிக் அப் செய்து அதுல 100 பேரை 6 ஏம் டு 6 பிஎம் மட்டும் வேலை செய்யவச்சு அடுத்த 100 பேரை இன்னைக்கி இருக்கிற நடைமுறைப்படி காலை 10 முதல் இரவு 12 வரை வேலை செய்யவச்சு ரெண்டு க்ரூப்போட ப்ளட்,யூரின்,மோஷன்,பி.பி, இப்படி சகலத்தையும் சோதனை செய்து சோதனை முடிவை பதிவு பண்ணிட்டு வரனும். ரெண்டு க்ரூப்போட பரிசோதனை முடிவையும் மேச் பண்ணி பார்த்தாலே விசயம் தெரிஞ்சுரும்.
யாரோ ஒரு மேதை மனித உடலின் தலையாய வேலை மூளைய தாங்கி செல்வதேன்னாராம். நான் சொல்றேன் மனித உடல் செய்ய வேண்டிய இன்னொரு தலை யாய வேலை மனித மூளையில் பொதிந்துள்ள மேதைமையை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் உயிரணுக்கள் மற்றும் அண்டங்களை பாதுகாப்பதே.
மனிதனின் இயற்கைக்கு மாறான செயல்பாடுகள் அவன்/அவள் தன் உடலில் தாங்கியிருக்கும் உயிரணுக்கள் மற்றும் அண்டங்களை கூட பாதிக்கவல்லது .
நைட் ட்யூட்டி பண்றவுகளை விஜாரிச்சு பாருங்க. நாம ராத்திரில தூங்கற 1மணி நேர தூக்கத்தை பேலன்ஸ் பண்ணனும்னா பகல்ல நாலு மணி நேரம் தூங்கியாகனும். ஏதோ ஆஸ்பத்திரி, காவல் நிலையம் இத்யாதின்னா பரவாயில்லை. வேலை வெட்டியில்லாத வெட்டிப்பயலுக கூட ராத்திரி 12 மணிவரைக்கும் முட்ட குடிச்சு, குட்டி களோட ரேஷ் ட்ரைவிங் பண்ணிக்கிட்டு செல் ஃபோன் பேசிக்கிட்டு தான் போவம்னா என்னாகும்.. அதான் இப்ப நடக்குது.
நாட்டில் நடக்கிற எல்லா நடவடிக்கையையும் ப்ரொடக்டிவ் ,அன் ப்ரொடக்டிவ்னு ரெண்டா பிரிக்கலாம். நான் என்ன சொல்றேன் மக்களுக்கோ, நாட்டுக்கோ லாபம் தர்ர செயல்பாடுகளை தடை செய்ய சொல்லல்லே. மக்களுக்கு, நாட்டுக்கு நஷ்டம் தர்ர வேலைகள் லட்சமிருக்கு. கு.பட்சம் அதுகளையாவது 6 பி.எம் டு 6 ஏ.எம் தடை செய்யலாமில்லயா?
சரி இப்போ வேற கோணத்துல இந்த பதிவை ஆரம்பிப்போம். காலைல எந்திரிக்கிறம். ( நேற்று மூனு மணிக்கு சோறு, மாலை பானி பூரி , மாட்டு சாணம் ராத்திரி 10 மணிக்கு சாப்பிட்டு 12 வரை பாடாவதி டிவிய பார்த்து - செய்ற கெப்பாசிட்டிதான் போயிருச்சே பார்க்கிறதுதான் வேலை இப்போ- 1 மணிக்கோ ரெண்டு மணிக்கோ தூங்கி 9 மணிக்கு எந்த்ரிச்சிட்டா அது கின்னஸ் ரிக்கார்டு)
எந்திரிச்சதும் ஊத்தபல்ல விளக்காம கூட ஒரு பெட் காபி. உடனே ஒரு சிகரட். அதிர்ஷ்ட சாலிகளுக்கு உடனே வயித்த கலக்கும். பாவிகளுக்கு ? ஊஹூம்..சரி நாளைக்கு பார்த்துக்கலாம்னு குளிச்சு ( அதாங்க உடம்பை நனைச்சு) டென்டக்ஸ் ஜட்டி போட்டு அதைவிட டைட்டா பேண்டை போட்டு சட்டைய இன்பண்ணி (விரை நசுங்கி வீங்கி எத்தனை பேரு டாக்டரை பார்க்கிறாங்க தெரியுமா ?) ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்ணிக்கிட்டு ஓடனும்.இல்லை பஸ்ஸை பிடிக்கனும்.
தாளி பொழப்பா இது ? நாம் தின்ற பொருள் வாய்ல அரை நொடி கூட தங்கறதில்ல. அதுக்கே அதுல இருக்கிற காரத்துக்கு நீலப்படம் மாதிரி உஸ் ஆன்னு சவுண்டு விட்டு தவிக்கிறோம். ஆனால் அந்த தீனி இரைப்பைல 8 மணீ நேரம் தங்கனுமே.
இரைப்பை என்ன ஸ்டீலாலயா வேஞ்சிருக்கு ? சரி ஓஞ்சு போவுது உள்ளாற தள்ளிட்டம். அது செரிக்கவாவது டைம் கொடுத்தா தானே அது செரிச்சு வெளிய தள்ளும். எங்க டைம் கொடுக்கிறோம் . டீ,காஃபி,ஸ்னாக்ஸ்
இதனால் பாதி செரிக்கப்பட்ட உணவு அழுக ஆரம்பிக்குது . கேஸ் ஃபார்ம் ஆகுது.
மனுஷனுக்கு இத்தனை ரோகம் வர ஆரம்பிச்சதே அவன் சமைச்சு சாப்பிட ஆரம்பிச்சப்புறம்தானு கைல எச்சி உமிஞ்சி சொல்லலாம். தீனி கிடைக்காம செத்தவனை விட அதி தீனியால செத்தவன் தான் சாஸ்தி. நான் 12 நாள் உண்ணாவிரதமிருந்தேன். முதல் நாள் என்னடா இது பசி வயித்த கிள்ளுது விசயம் தெரியாம மாட்டிக்கிட்டமானு பயந்தது நிஜம். ஃபுல் கூலிங்ல இருக்கிற வாட்டர் பேக்கட் ஒன்னு வாங்கிட்டு வரச்சொல்லி அதை வயித்துல வச்சி கட்டிட்டேன். ( வயித்துல ஈரத்துணி போட்டுக்கிட்டிருக்கிறதுன்னா என்னனு அன்னைக்கி தான் புரிஞ்சது.
அப்புறம் நாலு நாளைக்கு ஒன்னும் பிரச்சினையில்லே. ஐந்தாவது நாள் ஒரு பசி வந்தது பாருங்க.. உசிலை மணிய கூட கடிச்சே சாப்டரலாம் போல ஒரு பசி. அன்னைக்கு ஃபுல் கூலிங்ல ஏறக்குறைய ஐஸ் கட்டியாவே மாறிட்ட வாட்டர் பேக்கட் ஒன்னு வாங்கி இடுப்புல கட்டிட்டேன். தீர்ந்தது பிரச்சினை. 12 ஆம் நாள் எஸ்பி எஸ்.ஐ ய அனுப்பி அவர் என் தாவங்கட்டைய பிடிச்சு கெஞ்சோ கெஞ்சுனு கெஞ்சன பிறகு தான் லெமன் ஜூஸ் சாப்பிட்டேன்.
இதையெல்லாம் சொல்ல காரணம் தீனிங்கறது பெரிய விசயமே கிடையாது. அதுலயும் நமக்குள்ள 90 சதவீதம் பேர் உடலுழைப்பு இல்லாத பார்ட்டிங்கதான். நாமல்லாம் 24 நாள் தின்னாம இருந்தாலும் ஒன்னும் ஆகாது.
தெலிங்கானா வேணம்னு உ.விரதமிருந்த கே.சி.ஆர் டோட்டல் பேரண்டல் ந்யூட்ரிஷன் என்ற லிக்விடை தினசரி ஏத்திக்கிட்டு நவம்பர் 29 முதல் டிசம்பர் 9 வரை படம் காட்டினதுக்கே சோனியாவுக்கு வினோலாக்ஸ் போட்ட மாதிரி வயிறு கலங்கிருச்சு . மேற்படி டி.பி.என் ஏத்திக்கிட்டு 80 வர்சம் உ.வி இருக்கலாமாம்.
நொறுங்கதின்னா நூறு வயசுனு சொல்வாங்க. ஏண்டானா ஜீரண ப்ராஸஸ் வாய்லயே ஆரம்பிக்குது.ஆரம்பிக்கனும் அப்போ குடலுக்கு,இரைப்பைக்கெல்லாம் வேலை பளு குறையுது. அப்படியில்லாம மலைப்பாம்பு மாதிரி உணவை விழுங்கினா என்னாகும்?
மலை பாம்பாவது ஒருதடவை இரையை விழுங்கிட்டா மாசக்கணக்குல தியானம் பண்ற சாமியார் மாதிரி அசையாம கிடக்கும். நாம அப்படியா ? இதுல பிணத்தை தேடறபார்ட்டிங்கள பத்தி சொல்லவே தேவையில்ல. நம்ம உடம்புல ரெண்டு டிவிஷன் இருக்கு. ஒன்னு இனப்பெருக்கம் தொடர்பானது. ரெண்டு ஜீரணம் தொடர்பானது. ஒன்னு வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்யாது.
ஒருத்தன் ஒரு வேலைய ஸ்டார்ட் பண்ணும்போதே கொஞ்சம் இருப்பா கொஞ்சம் இருப்பானு அவனை மடக்கி வச்சா அவன் என்ன பண்றான். ஆரம்பிக்கவே மாட்டான். இதையேதான் ஜீரண மண்டலம் செய்யுது.
காலைல எந்திரிச்சதும் கல கலனு வயிறு கலங்கி சுத்தமா போயிட்டவனுக்கு 24 மணி நேரத்துக்கு "அந்த" அவசியமே வராது. போகாதவனுக்கு குசு வருதா வெளிக்கி வருதான்னே தெரியாது.
செக்ஸும் அதே கதைதான். ஒழுங்கா அதை செய்து முடிச்சுட்டவனுக்கு வாரம் பத்து நாளைக்கு அந்த எண்ணமே வராது. செய்யாதவனுக்கு? (என் ஃப்ரெண்டு ஒருத்தன் இருக்கான் அவனுக்கு தமிழ் சினிமால அம்மா கேரக்டர் பண்றவளுகளை நினைச்சாதான் சுய இன்பத்துக்கு கூட விரைக்குதாம்) கண்ட நேரத்துல அந்த எண்ணம் வரும். ஜீரணம் தடங்கலாகும்.
தன் உடல் நிலை,வயது மிக சரியான இடைவெளிகள்ள உடலுறவோ சுய இன்பமோ செய்யாதவனுக்கு "அந்த" எண்ணம் 24 மணி நேரமும் இருக்கும். (எண்ணம் தான். செயல் திறன் என்னவோ நா நாளைக்கு டௌன் ஃபால் ஆயிட்டே வரும்) இந்த நிலையில் உள்ளவனுக்கு நல்ல பசி எடுக்காது. எடுத்தாலும் வயிறு நிறைய சாப்பிடமாட்டான். ( என்னத்த சாப்பாடு ஒரு அம்பாரம் சோறு, சாங்கியத்துக்கு காய்,கறி . ஆக்சுவலா அறுசுவை உணவுங்கறோமே அதுல நாம 6 சுவைய பார்க்க முடியுமா முடியாத். எதுல பாரு உப்பு,புளிப்பு,காரம் மிஞ்சி போனா இனிப்பு. தாளி ! கசப்பு, துவர்ப்பு இத்யாதியெல்லாம் பார்க்கவே முடியாது. எப்படி சாப்பிடனும்னு கூட ஒரு பதிவு போடனும் போல என்னடா இது தமிழ்திரு நாட்டுக்கு வந்த சோதனை ? கச்சிக்கா கிண்ணில சோறு வச்சிக்க . சாப்பாட்டு தட்ல காய்,கறி வச்சுக்க. ஒரு நாள் கோதுமை,ஒரு நாள் கேழ்வரகு, ஒரு நாள் கம்பு, ஒரு நாள் சோளம், ஒரு நாள் அரிசி. ஒரு நாள் பச்சை காய் கறி,பழம். ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து பாரு. பத்திரிக்கை , டி.வி ,சினிமா மட்டும் பச்சை பச்சியா இருக்கனுன்றோமில்லே காய்,கறியும் பச்சி பச்சியா சாப்டா என்ன ? பச்சையா சாப்டா 100 சதம் சேஃப். வேக வச்சு சாப்பிட்டா 80 சதம் சேஃப். தாளிச்சு சாப்டா 60 சதம் சேஃப். வதக்கி சாப்பிட்டா நாஸ்திதான். 30 வயசு வரை சாப்ட முடியும் அப்பாறம் கஞ்சிதான் மகனே !)
சரி பிட்டே மெயின்படம் மாதிரி ஆயிருச்சு எங்கே விட்டம் ?நல்ல பசி எடுக்காது. எடுத்தாலும் வயிறு நிறைய சாப்பிடமாட்டான். ஆறு கிலோ அரைக்கிற கிரைண்டர்ல அரை கிலோ போட்டு அரைச்சா என்னாகும் ? எல்லாம் கிரைண்டர்லயே ஒட்டிக்கிடும்.
மேலு சனங்க பண்ற பெரிய தப்பு லாலா குடிக்க கஷ்டமா ? கிடைக்கிறது கஷ்டமா? தெரியலை. குடிச்சு தொலைக்க மாடானுங்க. மூத்திரம் அப்படியே கழுதை மூத்திரம் மாதிரி நாறும். அதாங்க தூத்தம் ,ஜலம், வாட்டர்,பானி, நீள்ளு தாராளமா குடிங்க.
தாகமே இல்லேம்பிங்க. அது நீங்க செய்துக்கிட்ட பழக்கம். ஒரு நாள் தாகமில்லன்னாலும் குடிங்க .அப்புறம் பாருங்க . மேல இருந்த கீழ வரை காஞ்சிரும். கார் ரேடியேட்டரை விட பாடி காட்பாடி ஆயிருச்சு
( சரி நீளம் ரொம்ப அதிகமாயிருச்சு அடுத்த பதிவுல பார்ப்போம்)
// டென்டக்ஸ் ஜட்டி போட்டு அதைவிட டைட்டா பேண்டை போட்டு சட்டைய இன்பண்ணி (விரை நசுங்கி வீங்கி எத்தனை பேரு டாக்டரை பார்க்கிறாங்க தெரியுமா ?) //
ReplyDeleteஇவிங்க பட்டாபட்டி அண்ட்ராயர கிண்டல் பண்றாங்க!
அதோட அருமை தெரியாத காமெடி பண்ணிட்டு இப்ப காமராஜையோ இல்ல சிவராஜையோ போயி பாக்கறாங்க!
நாம எப்பவும் ப்ரீயா பாக்ஸர் ஷார்ட்ஸ்தான்.
ப்ரீயா உடு...ப்ரீயா உடு... மாமே!