நீரின்றி அமையாது உலகுன்னாரு வள்ளுவர்.இப்போ தனித்தெலுங்கானா கேட்க முக்கிய காரணம் கடந்த காலத்துல மைனர் இர்ரிகேஷன்ல ( ஆறு,ஏரி,குளம்) இருந்த விளை நிலங்கள்ள 95 சதவீதம் மேஜர் பிராஜக்டுகளை நம்ப வேண்டிய நிலைக்கு வந்ததும் போதுமான தண்ணி அணைக்கட்டுல இருந்து விடுவிக்கப்படாததுமே.
ஜைன சன்னியாசிகள் தண்ணின்னாலே அலறி ஓட காரணம், குளிக்காம,பல்விளக்காம இருக்க காரணம் உடல்ல நீர் சத்து அதிகமான விந்து பெருகும். நமீதா மாதிரி பார்ட்டிகளை பார்த்தா புரளும்னுதான். அவிக சனியாசிங்க விந்து வறண்டா பிரம்மச்சரியம் காக்கிறது ஈஸியாயிருக்கும்னு தண்ணிய தவிர்க்கிறாங்க. நமக்கு என்ன கேடு ?
ஹ்யூமன் பாடில 70 சதவீதம் தண்ணி தான்னு ஏற்கெனவே சொல்லியாச்சு . ஸோ தாராளமா தண்ணி சாப்பிடுங்க. ஒன் பாத்ரூம் போக ஏற்பாடில்லன்னா , நீங்க வீட்டுவரி கட்டற பார்ட்டியா இருந்தா பப்ளிக் யூரினல்ஸ் கட்டச்சொல்லி கன்ஸ்யூமர் ஆக்ட் 1987 படி கார்ப்பரேஷன் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் கொடுங்க.வழிக்கு வந்துருவாங்க இல்லாட்டி கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸ் போடுங்க. தூத்தம் மட்டும் குடிக்காம இருந்துராதிங்க.
கண்ட நேரத்துல குடிக்கிறத விட காலைல எந்திரிச்சதும்( பத்து மணிக்கில்ல பாஸ் ! சூரிய உதயத்துக்கு முன்னாடி ப்ரஷ் பண்ணிட்டு உடனே குடிங்க. முத நாள் அப்படியே எதுக்களீச்சுக்கிட்டுவரும். ப்யந்துராதிங்க. கொஞ்சமா குடிங்க. குளிர் காலத்துல வெது வெதுனு குடிங்க.
மலச்சிக்கல் உள்ளவங்களுக்கு இது நல்லாவே ஒர்க் அவுட் ஆகும். கல்லு குடல் கேஸுங்க பி.பி இல்லாத பார்ட்டிக மட்டும் லேசா சோற்று உப்பு போட்ட வெது வெதுப்பான தண்ணி ஒரு செம்பு அடிங்க. அப்படியே கேசிஆர் உண்ணாவிரதத்தை பார்த்து சோனியாவுக்கு கலங்கன மாதிரி கலங்கும்.
நம்ம வீட்ல சமையல் யாரு அம்மாவா? சம்சாரமா? யாரா இருந்தா என்ன காரத்துக்கு மிளகு, புளிப்புக்கு எலுமிச்சை, உபயோகிக்க சொல்லுங்க. சிலர் நம்ம வீட்ல ஃபுல் வெஜிட்டேரியன் சார் என்று பீத்துவார்கள். நம்ம தாய்குலம் கைல மாட்டினா வெஜ்ஜா நான் வெஜ்ஜா ரெண்டுமே விஷமா மார்ர வரை அதை விடவே மாட்டாங்க. உப்பும், உரைப்பும், எண்ணையும், கொட்டி அதுல இருக்கிற உயிர் சக்தி ஆவியாகி அ அதுவே விஷமாகற வரைக்கும் சிவக்க வறுத்து ( பேருதான் சிவக்க / ஒரிஜினலா பார்த்தா கருக்க)
நமக்கு 3 வேளையும் சோறில்லன்னா வேலைக்காகது என்று பீத்தும் ரகமா ?
அரிசின்னா என்ன கார்போ ஹைட் ரேட், அது க்ளூகோஸா மாறுது. கணையம் இன்சுலினை சுரந்து அதிகப்படியா சேர்ந்த க்ளூக்கோசை க்ளைக்கோஜனா மாத்துது. நாளடைவுல கணையம் சக்தியிழந்தா இன்சுலின் குறைஞ்சுரும். அதான் சர்க்கரை வியாதி, ஷுகர். அதிகப்படி ஷுகர் (க்ளூக்கோஸ்) மட்டுமில்ல அத்யாவசியமா ஸ்டாக் பண்ண வேண்டிய க்ளூக்கோஸ் கூட சிறு நீர் வழியா வெளியேறி சுஸ்தாயிருவிங்க . அதை கண்ட் ரோல் பண்ண போடற மாத்திரை சில நேரம் லோ ஷுகர்ல கொண்டு விட்டுரும். ஹை ஷுகராயிட்டா கண்ணு டப்ஸாயிரும், பாடி சப்பி போட்ட ஐஸ் ப்ரூட் மாதிரியாயிரும். சின்னதா விழுந்தா கூட மளுக் மளுக்குனு எலும்பு முறிவு ஏற்படும். ஆக ஷுகர்ல மாட்டிக்கிட்டா அவ்ளதான் அதை கட்டுப்படுத்த முடியுமே தவிர க்யூர் பண்ணவே முடியாது. செருப்பு கடிச்சு காயமேற்பட்டு அது குணமாகாம காலை இழந்த சர்க்கரை வியாதியஸ்தர்கள் கூட உண்டு. முக்கியமா ஆண்களுக்கு விரைப்பு தன்மை குறைஞ்சுரும். உடலுறவு மேலுள்ள ஆர்வமே குறைஞ்சுரும். உடலுறவு திறன் இருக்கும் வரைதான், அதுக்கான வாய்ப்பு இருக்கும் வரைதான் நீங்க நீங்களா ,உங்க இளமை கால குணங்களோட வாழமுடியும். இது ரெண்டும் குறைஞ்சா உங்க கேரக்டரே டமாலாயிரும்.
குழந்தையோட பாலை நிர்ணயிக்கிறதும், குண நலனை நிர்ணயிக்கிறதும் ஒரே ஜீன் தான்னு லேட்டஸ்டா கண்டு பிடிச்சிருக்காங்கோ.
க்ளூகோஸ் ஜஸ்ட் சக்திய , உற்சாகத்தை தர்ரது . மனித உடல் என்ற வண்டி ஓட ஃப்யூயல் மாதிரி உபயோகப்படுது. உடம்புக்கு வெறுமனே க்ளூக்கோஸ் மட்டும் இருந்துட்டா போதாது. கால்ஷியம், விட்டமின்ஸ், தாது உப்புக்கள், ப்ரோட்டீன் இப்படி எத்தனையோ தேவைப்படுது. அதுக்கு எல்லாத்தயும் கலந்து கட்டியா சாப்பிட வேண்டியிருக்கு.
சாப்பிடறது கூட அவ்ள முக்கியம் இல்லே அது செரிக்கனும் செரிச்சு ரத்தத்த்ல கலக்கனும். அப்பதான் சக்தி ஏறும். தாளிக்கிற சமாச்சாரத்துல கடுகை குறைக்க சொல்லுங்க. ( பி.பி எகிறும். இடுப்பு பகுதில இருக்கிற மெல்லிய நரம்புகள் முறுக்கிக்கிட்டு கர்பமாகமயே இடுப்பு வலி வரும்). குழம்பு ரசத்துல மோர்ல போடற கறிவேப்பிலை,கொத்துமல்லி எல்லாம் மென்னு சாப்பிடுங்க. கீரைக்காரிகளை பழக்கம் பண்ணிக்கிட்டிங்கன்னா அவிகளே எந்த கீரைய எப்படி சமைக்கனும், எது சூடு, எது குளிர்ச்சினுபாடம் நடத்துவாக.
தக்காளி அதிகமா போடவேணாம்னு சொல்லுங்க. சைனஸ் வரும், சிறு நீரகத்துல கல் கூட வருதாம்.
ச்சீச்சீனா தெரியுமோல்லியோ அதாங்க ஆடு,கோழி. அதை வெட்டனம்னு வாங்கின கணமே அதுக்கு டெலிபதி மூலமா தெரிஞ்சுருது. கத்திய தீட்டறப்பவே பயம்/பரபரப்பு/தெரியாத்தனம் / இத்யாதியால அதனோட உடம்பு கண்ட கண்டஅமிலங்களை மானாவாரியா சுரந்துருது. அதெல்லாம் கலந்த அதுகளோட உடம்பே விசம். இதுல உயிர் போன செகண்ட்லருந்து அது அழுக ஆரம்பிச்சுரும்.
நம்ம நிர்வாண கண்களுக்கு ( ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டானு புலம்பாதிங்க நேக்ட் ஐனு அர்த்தம் ) அந்த அழுகல் தெரியலன்னாலும் அழுகல் அழுகல்தான்.
கறி சமையல்ல மஞ்சள், பட்டை,லவங்கம் இத்யாதி ஏன் சேர்க்கிறாங்க தெரியுமோ? அது மேலும் அழுகாம இருக்க. கிருமிகள் பெருகாம இருக்க. ஈறு அழுகி வீங்கி வலியில தவிக்கிறப்ப லவங்கத்தை தண்ணில போட்டு கொதிக்க வச்சு அந்த தண்ணீயால கொப்புளிச்சு பாருங்க.பட்டுனு வலி நிக்கும். ஏன்னா அது அழுகறாது தொடரல ஃப்ரீஸ் ஆயிருச்சு (கொஞ்ச நேரத்துக்காவது)
பல்:
பல் லேசா மஞ்சள் நிறத்தோடதான் இருக்கனும். பளிச்சிடும் வெண்மையெல்லாம் துணிக்குதான். பல் பளிச்சிட்டா எனாமல் காலியாயிருச்சுனு அர்த்தம். சாப்ட்டா கொப்பளிங்க.முக்கியமா ஸ்வீட். ப்ரஷ்ஷை அடிக்கடி மாத்துங்க. நாக்கை அடியோட சுரண்டிடாதிங்க. அதுல லேசா மாவு படலம் இருக்கனும். இல்லன்னா சில உருசிகளே தெரியாம போயிரும்
முகம்:
முகம்னா லேசா எண்ணை பசை இருக்கனும் . அது சருமத்துக்கு பாதுகாப்பு . 12 தடவை சோப்பு போட்டு கழுவினா காஞ்சி போயிரும். வறட்டு வறட்டுனு இருக்கும். முக்கியமா தாய்குலம் கண்ட களிம்பை போடறத விட்டுரனும். போட்டா சூரியனுக்கும் முகத்துக்கும் இருக்கிற தொடர்பு கட்டாயிரும். கண்ணுக்கு தெரியாத துளைகள் மூடப்பட்டுரும்.
நீங்க என்ன குழந்தையா? கோடு போட்டா ரோடு போட மாட்டிங்க ? நான் சொல்றது ரொம்ப சிம்பிள் . உடம்பு விசயத்துல உடம்பு சொல்றத கேளுங்க. பசி எடுத்தா மட்டும் சாப்பிடுங்க. (பசி மிச்சமிருக்கிறப்பவே நிறுத்திருங்க. ) தாகம் எடுத்தா தண்ணி குடிங்க. பாத்ரூம் வந்தா போங்க. தினசரி ஆய் போவுதா பாருங்க. இல்லென்னா நீங்க சாப்பிட்டதோ, சாப்ட நேரமோ, தப்புனு அர்த்தம். அதை வரும் காலத்துல திருத்திக்கங்க. வீர்யம் புரண்டா மேரீட்னா செக்ஸ், அன் மேரீட்னா செல்ஃப் செக்ஸ் அதாங்க சுய இன்பம். (வித் அவுட் எனி சார்ட் ஆஃப் கில்ட்டி ஆர் டென்ஷன்) . உடம்பு ரெஸ்ட் கேட்குதா இன்னொரு மணி நேரம் கழிச்சு கொடுங்க. ( வயசான கட்டைகளுக்கு, ஷுகர் பேஷண்ட், ஹார்ட் பேஷண்டுகளுக்கு இந்த விதி பொருந்தாது. இந்த கட்டுரைகள் எல்லாமே திமிர் பிடிச்சு உடம்பை கெடுத்துக்கிட்டு நாராயணரெட்டிக்கு லெட்டர் எழுதற பார்ட்டிகளுக்குதான்) இன்னும் ஒரு மணி நேரம் தூங்கனும் போல இருக்கிறப்பவே எந்திரிங்க.
உங்க பாடி கூல்பாடியா, ஹீட் பாடியா அனுபவத்துல தெரிஞ்சிக்கங்க. சாப்பிடற ஐட்டங்கள்ள எது ஹீட், எது கூல், எது வாயுனு தெரிஞ்சுக்கங்க. மலச்சிக்கல் வரவே கூடாது.ஏன்னா இது செயின் லிங்க் பிசினஸ் மாதிரி. மலச்சிக்கல் அதோட மட்டும் நிக்காது எல்லா வியாதியையும் கூப்டிக்கிட்டு வந்துரும் க்ளைமேக்ஸ் ஆசனத்துல ரத்தம் வடியறது ( அதாங்க மூலம்/பைல்ஸ்) அ ரத்த வாந்தி (பெப்டிக் அல்சர்)
தலைய கெடுத்துக்காதிங்க. டென்ஷன் கூடாது. தலைல டென்ஷனை வச்சுக்கிட்டு அமிர்தமே சாப்டாலும் அது விசமா மாறிடும். முக்காலம் உணராட்டி போவுது பீடை. நேற்றுல இருந்து பாடம் கத்துக்கிடுங்க. நாளைய கனவு காணுங்க (கலாம் சொன்ன மாதிரி கவைக்குதவாத கனவில்லை.. சின்ன சின்ன கனவுகள் ) அதை விட்டுட்டு கஷ்டத்துல இருக்கிறவங்க நேத்து எப்...டி யிருந்தோம் இன்னைக்கு இப்பிடி ஆயிட்டோம்னு ஏங்காதிங்க . வசதியாயிட்டவங்க நேத்து எப்டியோ இருந்தோம் இன்னைக்கு ஆண்டவன் இவ்ளவாச்சும் வச்சிருக்கானேனு நினைங்க. ஏறு மாறா புத்திய போட்டு குழப்பிக்கிட்டா நாறிடும்.
இப்படித்தான் என் யங் ஃப்ரெண்டு ஒருத்தன் ஜெகத் சோம்பேறி. வயது ஓமகுச்சி நரசிம்மன் மாதிரி பாடி. நாலணா மாதிரி மூஞ்சி. எப்பவோ காலேஜ்ல படிக்கிற காலத்துல வைஸ் சேர்மனா ஜெயிச்ச நினைப்புலயே கண்டவளையெல்லாம் படுக்க வச்சுரனும்னு தவிப்பான். சிகரட்டா புகைச்சு தள்ளுவான். ஒரு நாள் ரெண்டு பேரும் தம் போட்டுக்கிட்டு இருந்தோம் . அவன் பேச் மெட் ஓருத்தன் வந்தான்.
" சார் ! இவனோட பப்ளிக் ப்ளேஸ்ல தம்மடிக்காதிங்க"
"ஏன்பா ?"
'இவன் ரயில்ல கூட தம் போடலாம். ஏன்னா புகையே வெளிய வராது நீங்க,நானு தான் மாட்டுவம் "
அப்புறம் கவனிச்சி பார்த்ததுல சத்தியமா ஒரு இன்ச் புகை கூட வெளிய வரலை.
இதுல பயங்கர கையடி வேற. அப்பன் ஆயி இருந்தவரை ஏதோ வண்டி ஓடுச்சு. அவிக போய் சேர்ந்துட்டாங்க. வயித்துக்கு திங்க மாட்டான். பாதி ராத்திரிவரை ஏறக்குறைய அவித்து போட்டு நடக்கிற டிவி சேனல்களை மட்டும் பார்ப்பான். திருப்பள்ளியெழுச்சி பகல் 11 மணிக்கு. 2 மணி வரைக்கும் டீக்கடைல அரை டஜானாச்சும் டீ. 3 மணிக்கு ஓட்டல்ல அளவு சோறு, சில நாள் அதுவும் மிஸ்ஸாகிட்டா மாலை நகராட்சி காவா கரைல விக்கிற பானிபூரி. ( அது ஏன் பாஸ் எல்லா பானி பூரி கடையும் சாக்கடை மேலயே வச்சிருக்கானுவ) ராத்திரில ஒரு குவார்ட்டர் சீப் லிக்கர் ரெண்டு இட்லி (டயட் மெயிண்டெனென்ஸுங்கோவ்) . இதுல தண்ணி ஒரு சிப் உள்ளே போனா அப்படியே ஃபயர் இஞ்சின் ஹோஸ் பைப் மாதிரி வெளியே வரும்.ஒரு பிடி சோறு உள்ளாற போனா கொக்கோ கோலா மெஷின்ல பைசா போட்டா கோலா கொட்டறாப்ல கொட்டும் . பேசறது மட்டும் சர்வ ரோக நிவாரணி ,சஞ்சீவணி எல்லாம் வச்சிருக்கிறாப்ல பேசுவான்.
ஒரு நாள் அவன் ரூமுக்கு போனேன். லுங்கிய வழிச்சிக்கிட்டு கண்ணாடில தன் ஆசனத்தோட அழகை பார்த்துக்கிட்டு சாவுக்கு அழுவறாப்ல அழுதுக்கிட்டுருந்தான். அப்படியே நீண்ட காம்புல தாமரை பூத்த மாதிரி ஆயிட்டிருக்கு அந்த இடம். "என்னடா இழவுனு வைத்தியம் பத்தி விசாரிச்சா ஆசிட் வச்சிரனுமாம்" அடங்கொக்கா மக்கானு முக்கி யோசனை பண்ணி பச்சை பச்சையா திட்டின திட்டு திட்டாம அந்த நாய திட்டி எனிமா கொடுத்து , எலக்ட் ரால் பவுடர் கொடுத்து பத்து நாள் ஜெயில் மாதிரி உள்ளாறயே போட்டு வச்சிருந்தோம். சைக்கிளுக்கு எண்ணை விடற மாதிரி தினசரி 50 கிராம் தேங்கா எண்ணை உள்ளுக்கு கொடுத்து 3 மாசம் மவனே தயிர் சோறு தவிர வேற சாப்ட செத்துருவடா என்று பயம் வைத்து ஒரு மாதிரியா தயார் பண்ணீ விட்டா நாயி முந்தா நாள் கூட குடிச்சு போதைல விழுந்து கிடக்கு. ஆட்டோல போட்டு ரூம்ல சேர்த்த ஃப்ரெண்டு அட்வைஸ் பண்ணா " ஹும்.. இந்த மாதிரி அட்வைஸ் பண்ணவன்லாம் என்ன ஆனான் தெரியுமா"னு வானத்துல நட்சத்திரத்தை காட்டுது நாயி. நமக்கு மண்டைக்குள்ள ஸ்டாருங்க.
இப்படி ஆயிரம் கேஸு இருக்கு. சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். எடுத்தா எடுங்க விட்டா விடுங்க . வுடு ஜூட்
உமக்கு ஃபைல்ஸ் வேற உண்டா முருகா?ஆமாம் நீ என்ன ஆல் இன் ஆல் அழுக்கு ராஜாவா? லேகியம் வேற விக்கிற? சோசியமும் சொல்லுற?
ReplyDeleteஉனக்கு எப்போ கண்டம்?