Saturday, January 23, 2010

நம்மள டச் பண்ற பன்னாடைகளை

கவிதை 07 ஐ கழிவறை சுவராக கருதி கண்டதையும் கழிந்து வைக்கும்
வம்பன் இத்யாதியினரை ஒன்றுமே செய்யாமல் எதுவேண்டுமானாலும் செய்யும் வித்தை என்னிடம் இருப்பதாய் கூறியது சிலருக்கு நினைவிருக்கலாம். இத்தனைக்கும் என் சாதனை ( அச்சீவ்மென்ட் இல்லிங்க ஆன்மீகத்துல என் முயற்சிகள்னு அர்த்தம்) என்ன ? ஏது என்றறிய உங்களில் சிலருக்கு ஆர்வமிருக்கலாம். என் ஆன்மீக வாழ்வின் ஸ்டார்ட் பட்டன் மட்டும் மன்மதன் தான்.(அவருக்கு உருவமில்லேங்கற கதை அற்புதமான உருவக கதை. உணர்வுகளுக்கு உருவமிருக்காதில்லயா?)

பால்யத்துல சுக்கிர தசை வேற மாட்டிக்கிச்சா செம பேஜாராயிருச்சுப்பா .பார்ட்டி துரத்துன துரத்துல ஜெய் ஹனுமான் சீரியல் தனமா சாதனை ஆரம்பம். கொஞ்சம் நின்னு நிதானிச்சு பார்த்தா நம்ம ஆஞ்சனேயருக்கு ஒரு வீக் பாயிண்ட் இருக்கிறது தெரிய வந்தது. அதாவது ராம நாமம் எங்கே சொல்லப்பட்டா அங்கே இவர் ஆஜராம். ஸோ ராம நாம ஜெபம் ஸ்டார்ட். அதுவும் ஆஞ்சனேயர் ஸ்டைல்ல " ராம்" ( இதுவே நாமம் இதுவே பீஜம்னு டூ இன் ஒன்னா ஒர்க் அவுட் ஆயிருச்சு) + கிழவாடிங்க ஸ்டைல்ல "ராமா "

ராமாங்கற வார்த்தைல ஒரு சூட்சுமம். இதிலான முதலெழுத்து (ரா) ஹரா என்ற சிவன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. இதிலான இரண்டாம் எழுத்து (மா) உமா என்ற அம்மன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. ( கருத்து உபயம் : ராம கிருஷ்ண பரமஹம்சர்)

முக்திக்கான ப்ராசஸ்:
ஒரு பிறவி முழுக்க பஞ்சாக்ஷரி ஜபிச்சா தான் அடுத்த ஜன்மத்துல ராம நாமம் ஜெபிக்க தகுதி ஏற்படும். அந்த ஜன்மம் முழுக்க ராம நாமம் ஜெபிச்சா அடுத்த ஜன்மத்துல ஆத்தாளை அணுகற ஆர்வம் ஏற்படுமாம்.

டபுள் ப்ரமோஷன்:
நம்ம ஜாதகத்துல சூரிய,சந்திரர்கள் பக்கத்து பக்கத்து ராசிகளில் இருப்பதோடு பரிவர்த்தனமும் பெற்றதால் இது சிவசக்தியோகம் என்று சில காலம் பஞ்சாக்ஷரி ஜபித்ததுண்டு. அது ராமா என்று ஜபிக்கும் தகுதி தர ராமா ராமா என்ற என் ஜபம் சிவ சக்திகளை மனம் இளக செய்ய 3 ஜன்மங்களுக்கான ப்ராசஸ் 13 வருடங்களில் முடிந்து ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனின் ஹ்ரீங்கார பீஜத்தை ஜெபிக்கும் அதிர்ஷ்டம் ஏற்பட்டது. அதுவும் ப்ரணவம், வித்யா பீஜம், லட்சுமி பீஜம் ,சூரிய பீஜம்/ ஹரி பீஜம், மற்றும் காளி பீஜங்களுடன் ஜெபிக்கவே அது எக்குத்தப்பாக ஒர்க் அவுட் ஆகி பாடி காட்பாடி ஆகி ஷீரடி சாய்பாபா கணக்காய் 7 வருடங்களுக்க் பிச்சை எடுக்கவே வைத்துவிட்டது. அதற்கு பின் ப்ளாக் அண்ட் வைட் படமெல்லாம் ஈஸ்ட்மென் கலராகி இப்போ செம கலக்கு கலக்குது.

இதையெல்லாம் ஏன் சொல்லவரேன்னா ராட்சசர்கள் வரம் வாங்கி "அவாள" மாதிரி இஷ்டாத்துக்கு ஆட்டம் போட்டு ஷெட் ஆனாங்க. நம்ம விசயத்துல வரும்போது அது ஒரு ட்ரில்லியன் டாலர் செக் மாதிரி மாத்தறதுக்குண்டான வாய்ப்பே இல்லாம நம்மள டச் பண்ற பன்னாடைகளை பொசுக்கிக்கிட்டு இருக்கு. குண்டலி மூலாதாரம்,ஸ்வாதிஷ்டானம், மணி பூரகம், அனாஹதம், விசுத்தி எல்லாம் தாண்டி ஆக்னா சக்கரத்துல உட்கார்ந்து உட்கார்ந்த இடத்துல கண்டமேனிக்கு காரியம் நடந்துக்கிட்டிருக்கு.

நம்ம எண்ண அலைகள் கச்சா முச்சானு உலகமெல்லாம் பரவி சனத்தை ரோசிக்க வைக்குது. மூளை டூ இன் ஒன்னாகி ட்ரான்ஸ்மீட்டராவும் ரிசீவராவும் வேலை செய்யுது. இத்தனைக்கும் நாம கிழிச்சது எப்பவோ பஞ்சாக்ஷரி, ஒரு 13 வருசம் ராம நாம ஜெபம், ஒரு 10 வருசமா ஹ்ரீங்கார பீஜம் தான். எப்பவாச்சும் கொஞ்சம் பேட்டரி வீக்கான நேரத்துல மாந்திரீக பத்ததிகள்ள சில மந்திரங்களை சாதனை பண்ணது ஊர் சொத்துக்கு அலையாதது தப்பி தவறி எவனாச்சும் அஞ்சு பத்து அதிகமா கொடுத்து வாங்கி செலவழிச்சுட்டாலும் அது புத்திக்கு உறைச்சா உடனே எம்.ஜி.ஆர் வேலை பண்ணிர்ரது இந்தியாவை பணக்கார நாடா மாத்தியே தீர்ரதுன்னு புலம்பறது தட்ஸால்.

ஒரு காலத்துல கந்தர் சஷ்டிகவசம், ஸ்கந்த குரு கவசம்லாம் படிச்சதுண்டு. அம்மனோட சத நாமாவளி சில காலம் தொடர்ந்து படிச்சாலும் கன்டின்யுட்டி விட்டு பல காலம் ஆச்சு. எப்பவாச்சும் ஓம்கார் ஸ்வாமிகள் மாதிரி பார்ட்டிங்க சாபம் விட்டா மூளை கொஞ்சம் பஜ்னு ஆயிர்ரப்ப இப்பவும் நாமாவளி படிப்பது உண்டு. கீழே கொடுத்திருக்கிற தினசரி ஸ்லோகங்கள் கூட மாசத்துக்கு ஒரு தடவை ரெண்டு தடவை சொன்னா ஜாஸ்தி.

சூட்சுமம் தெரிஞ்சி போனதால இதெல்லாம் புளியம்பழ ஓடு மாதிரி கல கலத்துக்கிட்டு இருக்கு. ஆனால் ஒரு காலத்துல இதான் நமக்கு ரீசார்ஜ் மாதிரி. ஸோ பதிவன்பர்களில் ஆஸ்திக அன்பர்கள் வசதிக்காக இங்கே தந்திருக்கிறேன்.

நவகிரகங்களின் உக்கிரம் குறைய அந்தந்த கிரகங்களுக்குரிய கடவுள்களின் நாமங்களை ஜெபிப்பதும் தியானிப்பதும் கூட ஒரு வகை பரிகாரமே. எனவே இந்த நவ கிரகங்களின் வரிசையில் அவற்றிற்குரிய கடவுளரின் ஸ்லோகங்களை தந்துள்ளேன் .படித்துபயன் பெறவும்.

1.
குறிப்பு:
ஆதி கடவுள் என்பதால் ஏழாவதாக வரவேண்டிய கேதுவுக்குரிய கடவுளான கணபதிக்கான ஸ்லோகம் முதல் வரிசையில் உள்ளது
ஓம் ஸ்ரீ விக்னேஷ்வராய நமஹ
ஓம் கம் கணபதே ஸ்வாஹா
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயே சர்வ விக்னோப ஸாந்தயே
2.குறிப்பு:

கிரக கூட்டத்தின் தலைவன் சூரியன். இவருக்குரிய தேவதை காயத்ரி. இது காயத்ரி மந்திரம். இதை உச்சரிப்பதால் என்ன பலன், அது எவ்வாறு ஏற்படுகிறது என்று யாராவது பிராமணோத்தமர் மறுமொழியிடுகிறாரா பார்ப்போம் இல்லாவிடில் நானே கூறுகிறேன்.
ஓம் பூர்புவஸ்வ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோனஹ் ப்ரச்சோதயாத்

இதுவும் சூரியனுக்கு சம்பந்தப்பட்ட மந்திரமே . இதை வசிய மந்திரம் என்றும் உரைக்கிறார்கள்.
ஓம் நமோ பகவதே சூர்யாய ஹ்ரீம் சஹஸ்ர கிரணாய
ஐம் அதுல பல பராக்ரமாய
நவக்ரஹ தச திக்பாலகாய
லக்ஷ்மீ தேவதாய தர்ம கர்ம சஹிதாய
சர்வ ஜன நாதயனாதாய
மோஹாய மோஹாய ஆகர்ஷ
ஆகர்ஷ தாசானுதாசம் குரு குருபட் ஸ்வாஹா

3.குறிப்பு:
சந்திரனுக்குரிய தேவதை ஆயுதம் தரிக்காத / சாந்த வடிவிலான அம்மன். இங்கு புவனேஸ்வரி அம்மனுக்கான தியான ஸ்லோகத்தை தந்துள்ளேன்.

விருப்பமுள்ளவர்கள் கன்னியாகுமாரி அம்மனையும் தியானிக்கலாம்.
ஹ்ரீங்கார பீஜாக்ஷரி ஹ்ரீம் மயீ தேவி அபய வரத ஹஸ்தினி பாசாங்குச தாரிணி
ஸ்ரீ சக்ரவாசினி, பால பீட அதிரோஹிணி
மாதா மாத்ருமயீ,அம்ருதமயீ, ஆனந்த மயீ அனந்த மயீ
மாதா காலகரணி தேஹீ தக்ஷணம் அஷ்ட ஐஸ்வர்யம்
மாதா தேஹீ தக்ஷணம் த்ரிகால க்னானம்
மாதா தேஹீ தக்ஷணம் யத்ன கார்ய சித்தி
மாதா தேஹீ தேஹீ வர ப்ரசாதம் தேஹி

4.குறிப்பு:
அடுத்த கிரகம் செவ்வாய்.இவருக்குரிய கடவுள் சுப்பிரமணியர். இது அவருக்குரிய மூலமந்திரம் . (ஸ்கந்த குரு கவசத்தில் இது உள்ளது)
ஓம் சௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ

5.குறிப்பு:
அடுத்த கிரகம் ராகு. இதற்குரிய தேவதை துர்கை. விருப்பமுள்ளவர்கள் தர்கா, சர்ச் சென்றும் வழிபடலாம்.
தும் துர்காயை ஸ்வாஹா

6.
குறிப்பு:
அடுத்த கிரகம் குரு.குருவுக்குரிய தேவதை தட்சிணாமூர்த்தி .அவருக்குரிய ஸ்லோகம்.

ஓம் நமசிவாய
சம்போ சங்கர சம்போ மகாதேவ

குறிப்பு:
ஆஞ்சனேயர்தான் என்னை பொருத்தவரை குரு/ராமாயணத்துல கூட இவர் குரு தத்துவம் தான். சீதை ஆத்மா. ராமன் பரமாத்மா. ஆத்மா பரமாத்மனை விட்டு உதவாத ப்ராபஞ்ச்சிக வஸ்துக்களின் பால் ( மாய மான்) கவனம் சிதறவிட பரமாத்மனை பிரிஞ்சி தவிக்குது. அப்போ குரு தத்துவமான ஆஞ்சனேயர் வந்து " சீதா டோண்ட் ஒர்ரி பரமாத்மனிருக்கான். உன்னை காப்பாத்த நிச்சயமா வருவான்"னு சொல்றார் . ஸோ ஆஞ்சனேயரை குருவா வச்சிக்கிட்டேன்.

ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா
ஓம் ஹரி மர்க்கட மர்க்கடாய ஸ்வாஹா

குறிப்பு:
ஏற்கெனவே கால ஞானம் , உலக அழிவு தொடர்பான பதிவுகளில் வீரபிரம்ஹேந்திர ஸ்வாமி பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கேன்.அவர் தொடர்பான ஸ்லோகங்கள்.
ஓம் நமோ வீரபிரம்ஹேந்திர ஸ்வாமினே நமஹ
ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சிவாய பிரம்ஹனே நமஹ
இதர குருக்கள்:
அ) ஷீரடி சாயி பாபா:
ஓம் சமர்த்த சத் குரு ஸ்ரீ சாய் நாத் மகராஜ் கீ ஜெய்
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
ஆ) ஸ்ரீ ராகவேந்திரர்:
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்ப்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே
இ) சரஸ்வதி:
ஓம் ஐம் க்லீம் சௌஹ வத வத வாக்வாதினீ ஸ்வாஹா

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி
சித்திர் பவதுமே சதா

7.சனி: (இதற்குரிய கடவுள் வராஹ ஸ்வாமி)
ஓம் நமோ வராஹ ஸ்வாமினே நமஹ

8.புதன் (பெருமாள்)
ஸ்ரீ ராம ராம ராமேட்டி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே

ஹரே ராம ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே


ஓம் நமோ வேங்கடேசாய. ஓம் நமோ ஸ்ரீனிவாசாய ஓம் நமோ பத்ம நாபாய
ஓம் நமோ பட்சி வாஹனாய ஓம் நமோ துஷ்ட சிட்சணாய ஓம் நமோ சிஷ்ட ரக்ஷணாய

9.சுக்கிரன்
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீட்டே சுர பூஜிதே சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

பூஜா பலன் வழங்கும் டெல்லர் தனமான பஹலா முக்கி:
ஓம் ஹ்லீம் பஹளா முகே ஸ்வாஹா
ஓம் ஹ்லீம் பரமந்த்ர ப்ரயோகேஷூ சதா வித்வம்ச காரிணே பஹளா முகே
ஸ்வாஹா
ஓம் ஹ்லீம் ஸ்வமந்த்ர ஃபல தாயிகே பஹளா முகே ஸ்வாஹா

சாந்தி பர்வம்:
சஹனாவவது சஹனௌ புனக்து சஹவீர்யம் கரவாவஹே
தேஜஸ்வினா வதீத மஸ்து மாவித் விஷாவஹே ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி

2 comments:

  1. நன்றி சங்க மித்திரன் அவர்களே,
    பாவம் பொட்டிக்கடையை அவிக ஊரு கவர்மெட்டு ஆஸ்பத்திரில வெறி நாய்கடி ஊசி இருக்கா விசாரிக்கச்சொல்லுங்க

    ReplyDelete
  2. சங்கமித்திரன்January 25, 2010 at 3:18 AM

    www

    ReplyDelete