Friday, February 12, 2010

இன்னொரு சாமியாரும் 2 ஆவது திருமணமும்

பைரேட்டடோ, சுட்டதோ இல்லே ஹார்ட் டிஸ்க்லயே இருந்ததோ ரீ சைக்கிள் பின்லருந்து ரீஸ்டோர் பண்ணதோ, ஹிடன் ஃபைல்ஸ்ல இருந்து மாட்டினதோ ஸ்பெஷல்  சாஃப்ட் வேர் மூலமா ஃபார்மட்டட் டிஸ்க்லருந்து தோண்டி எடுத்ததோ தெரியாது. சாஃப்ட் வேர் என்னவோ கிடைச்சுருச்சு.

இன்ஸ்டாலேஷனும் செய்தாச்சு.ஃபைல்ஸ் ரெஜிஸ்டர் ஆயிக்கிட்டிருக்குனு வைங்க .படக்குனு முக்கியமான ஃபைல்ஸ் இல்லே பலான வெப்சைட்லருந்து பிக் அப் பண்ணிக்கவானு சிஸ்டம் கேட்குது. நெட் கனெக்சனுக்கெங்கே போகறது. சில நேரத்துல நெட்டும் கனெக்ட் ஆகுது. ஆனால் வேலை முடியறதுக்குள்ளே நெட் கட்டாயிருது.

இதுவேதான் என் ஆன்மீக வாழ்க்கையோட நிலை. ஒரு நிலைல என்னை ராமகிருஷ்ண பரமஹம்சராக, இன்னொரு நிலைல விவேகானந்தராக ஏன் அந்த கிருஷ்ணனாக கூட என்னை நான் உணர்ந்திருக்கிறேன்.

ஆனால் சில நேரத்தில் ( என் பிரக்ஞை உச்சத்தில் இருக்கும்போது)  நான்  பாஸ்டில் ஜுஜுபியாக நினைத்த சங்கதி கூட பயங்கர சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது.
என் லக்னம் கடகம் என்பதாலோ அதில் குரு உச்சம் பெற்றதாலோ தெரியாது எந்த விஷயத்திலும் சூட்சுமம் பிடிபட்டுவிடுகிறது.. அதாவது சென்ட்ரல் தீம். அந்த தீமுக்கு அடிப்படை.சென்ட்ரல் தீமை பிடிச்சிர்ரதால முரண்பாடுகளின் இடையில் ஒரு ஒத்திசைவை என்னால் உணர முடிகிறது."இறைவன் இல்லை இல்லை இல்லவே இல்லை இறைவனை கற்பித்தவன் முட்டாள் என்ற  ஈ.வெ.ராம சாமி நாயக்கரிலான பொது நலத்திலும் ஒரு புனிதத்தை , ஏன் தெய்வீகத்தையே  என்னால் உணர முடிகிறது. நிற்க சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒரு கொட்டேஷன்

"உன்னதமான லட்சியங்களை நோக்கி ஒன்றுக்கும் உதவாத கூட்டம் கவரப்படுகிறது.
 அதமமான லட்சியங்களை நோக்கி  உத்தமர்கள் கவரப்படுகிறார்கள்"

இதை என் அனுபவத்தில் சற்று மாற்றி சொல்ல விரும்புகிறேன்.

"உன்னதமான விசயங்கள், படைப்பின் சூட்சுமங்கள்  நிர்மூடர்களுக்கு ஸ்பார்க் ஆகின்றன. (என்னை போன்ற)
அறிவாளிகளோ தேடுதலுக்கே முனையாது கட்டுச்சோற்றிலேயே திருப்தியடைந்து விடுகிறார்கள்"

இந்த ரெண்டு கொட்டேஷனையும் சொன்னது ஏன்னு சூட்சுமமா யோசிச்சா புடிச்சிரலாம்.

அந்த தைரியத்தில் தான் ஒரு குருவை பற்றி ஒரு பதிவு.


அந்த குருவின் பெயர் மாஸ்டர் சிவிவி . சமீபத்துல அவரைபத்தி படிச்சேன்.
படிச்சது சமீபத்துலன்னாலும் 1984 முதலே க்ராஸ் ஆகிட்டுதான் இருக்கார். என் இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி மூணு பேருமே மாஸ்டர் ஃபாலோயர்ஸ்தான். ஆனால் நம்ம உடன் பிறப்புகளோட தகுதிய வச்சு (?) மாஸ்டரை கம்ப்ளீட்டா நெக்லெக்ட் பண்ணிட்டேன்.

இப்ப புரியும் நான் ஏன் கொட்டேஷன் மேல கொட்டேஷன் விட்டேன்னு. ( ஆப்சண்ட் மைண்ட் பார்ட்டிங்களுக்கு இன்னொரு தரம் கீழே தர்ரேன்)

"உன்னதமான லட்சியங்களை நோக்கி ஒன்றுக்கும் உதவாத கூட்டம் கவரப்படுகிறது.
 அதமமான லட்சியங்களை நோக்கி  உத்தமர்கள் கவரப்படுகிறார்கள்"

கும்பகோணத்துல  பிராமண குடும்பத்துல பிறக்கிறார். தாத்தா கிராம முன்சீப். ஆசாரசீலர். சவுண்ட் பார்ட்டி. அப்பா காலம் வரதுக்குள்ளே குடும்பத்தோட பொருளாதார நிலை காலி பெருங்காய டப்பா ஆயிருது. அந்த வெறுப்புல அப்பா நாஸ்திகராயிர்ரார்.

சிவிவி சொந்த அத்தைக்கே ஸ்வீகாரமா போறார்.அவிக நல்ல சவுண்ட் பார்ட்டிங்கறதால படிப்புல பிரச்சினை இல்லே. துரை மாதிரி கோட்,ஹேட் எல்லாம் போட்டுக்கிட்டு ஜட்கால ஸ்கூல் போறார்.

எத்தனை முரண்பாடுகள் பாருங்க. பிறந்தது பிராமண குலம். முன்சீப் குடும்பம். அவர் தாத்தா ஆஸ்திகர், ஆச்சார சீலர். படக்குனு ஃபேமிலி டிஸ்டர்ப் ஆயிருது அப்பா நாஸ்திகராயிர்ரார்.படிப்பா துரைமார் படிப்பு.  தியசாஃபிக்கல் சொசைட்டியோட தொடர்பு ஏற்படுது. ப்ளாவட்ஸ்கி அம்மையாரோடு தியானத்துல ஈடுபடறார்.

கவுன்சிலராகிறார்.சேர்மனாகிறார். பெரிய்ய ரயில்வே காண்ட்ராக்டராகிறார். பெருந்தொகையை இழக்கிறார். ( இந்த காலம் மாதிரி மந்திரிக்கு சூட் கேஸ் டொடுத்து காண்ட் ராக்ட் கிடைக்காததால இல்லை. அரசு சொன்ன தொகைய விட அதிகம் செலவாயிருச்சா இல்லே உரிய காலத்துல முடிக்க முடியலயா தெரியலை. (இன்னொரு தடவை ரெஃபர் பண்ணி அடுத்த பதிவுல சொல்றேன்)

உறவுலயே திருமணம் நடக்கு. சில காலத்துல மனைவி இறந்துர்ராங்க. அப்போ தன்னை விட பல வயது சிறியவரான பெண்ணை மணக்கிறார். வயசான காலத்துல ஒரு மகன் பிறக்கிறான்.

ஞானம் பிறக்க ஆன்ம விழிப்பு ஏற்படனும். ஆன்மா விழிக்கனும்னா ஒரு விதி இருக்கு. அது ரொம்ப சிம்பிள்

மனிதனுக்கு ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை வந்துரனும் .அவன் தன் உடல் பலத்தால, மனோ பலத்தால, அசேதன மன பலத்தால ( அதாங்க சப் கான்ஷியஸ் மைண்ட்) அந்த பிரச்சினைய தீர்க்க முயற்சி பண்ணி தோத்து போயிரனும். செமையா தோத்து போகனும். அப்போ விழிக்கும் ஆன்மா.

அந்த ஆத்மாவுக்கும்,பரமாத்மாவுக்கும் வித்யாசமில்லே. அஹம் ப்ரம்ஹஸ்மிங்கறது அப்போ நடந்துருது. இதெல்லாமே மாஸ்டர் லைஃப்ல மட்டுமில்லே வெற்றி பெற்ற அனைத்து மாஸ்டர்ஸ்/ ஞானிகள்/வாழ்க்கையிலயும் காண க்கிடைக்கிற பொதுவான அம்சம்.

மாஸ்டரோட மிச்ச வரலாற்றையும் மேற்படி விதி மாஸ்டர் வாழ்க்கைல எப்படி ஒர்க் அவுட் ஆச்சுங்கறதையும் அடுத்த பதிவுல விளக்கறேன்.

No comments:

Post a Comment