Tuesday, February 9, 2010

மாத விலக்கு தினங்களில் மகளிர்

கவிஞர்களில் பல ரகம் உண்டு. தண்ணி போடற பார்ட்டிங்க, தே.தனம் பண்ற பார்ட்டிங்க,கஞ்சா அடி கேஸுங்க, வி.டி வாங்கின பார்ட்டிங்க,ஏன் எய்ட்ஸ் வாங்கின பார்ட்டிங்க கூட உண்டு. ஆனால் இவிக பொங்கல் புது துணி செலவுக்காகவோ, தங்களுக்கு கிடைக்க போற சால்வைய மனசுல வச்சோ எழுதாத கவிதைகளுக்கு ஒரு ஷக்தி இருக்கு ( ரஜினி ஸ்டைலுப்பா !)

குழந்தைகள், மாத விலக்கு தினங்களில் மகளிர்,அதீத செக்ஸ் அனுபவங்களில் ஈடுபடும் ஆண்கள், கிழவாடிகள், பைத்தியங்களின் சிந்தனைகள், பேச்சின் வேவ் லெங்த் ஒரே மாதிரி இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? இந்த பட்டியலில் கவிஞர்களை சேர்க்க விரும்புகிறேன்

நானும் ஒரு கவிஞன் என்பதாலும், அனேக கவிஞர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களை படித்து,பார்த்து அறிந்திருப்பதாலும் இந்த பட்டியலில் கவிஞர்களை
சேர்த்திருக்கிறேன்.

மேற்படி பட்டியலிலான மனிதர்கள் தம் உடல் வலிமை/போலியான சுயக்கட்டுப்பாடுகள்/ ஈகோவை இழந்து இருப்பார்கள் என்பதால் அந்த நேரம் அண்டை வெளியின் அகண்ட பாத்திரத்து அமுதம் அவர்கள் மூளையில் சொட்டுகிறது. எதிர்கால சம்பவங்கள் உளறல்களாக தெறிக்கின்றன.

ஜாதகத்துல லக்னாத் இரண்டாவது இடம் தன,வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானம். அது வாக்கு ஸ்தானமா ஒர்க் அவுட் ஆகி கவிஞர்கள் நாக்குல வாக்தேவி குத்தாட்டம் போடும்போது பிச்சை எடுப்பாங்க. ஏதோ நேரம் மாறி பைசா கைக்கோ,பைக்கோ வரும்போது கவிஞர்கள் மட்டுமே அல்ல அவர்களின் கவிதைகள்,வார்த்தைகள்,பேச்சு எல்லாமே மலடாயிரும்.

கவிஞர்களின் வாக்கு பலிக்கவும் இதுதான் காரணம். ( இந்த பாயிண்டை கடைசில விவரிக்கிறேன்)

எப்பவோ பிச்சை எடுத்தப்ப எழுதின கவிதைகள் வசதி வந்த பிறகு அச்சாகும், நல்ல பேரை வாங்கி தரும். அப்புறம் சினிமா. சினிமாக்கு பாட்டெழுதும்போது கற்பனை மொத்தமா செத்திருக்க சப் கான்ஷியஸ் மைண்டுங்கற கொடவுன்ல இருக்கிற பழைய சரக்கு பாட்டாகும். அது அவன் பிச்சை எடுத்த சமயத்துலயே சிந்திச்சு வச்சது அ எழுதினதுங்கறதால தூள் கிளப்பும்.


இப்போ கவிஞர்களோட வாக்பலிதத்தை பார்ப்போம். எம்.ஜி.ஆருக்கு வாலி,கண்ணதாசன் எழுதின பாட்டெல்லாம் எப்படி நிஜமாச்சுனு பட்டியல் போட்டா அடிக்கவே வந்துருவிக (ஏன்னா இதெல்லாம் ஊரறிந்த ரகசியம் !) ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதங்கற மாதிரி ஒளி விளக்கு பாட்டை மாத்திரம் கோட் பண்ணிட்டு சைடு வாங்கிக்கறேன்.

தமிழ்ல அறிமுகமாகி தெலுங்குல இது தாண்டா போலீஸ் மாதிரி படங்கள்ள தூள் கிளப்பின ராஜ சேகர் படத்துக்காக யாரோ கவிஞர் எழுதினபாட்டு ஒன்னு இன்னைக்கு டாக்டர் .ஒய்.எஸ்.ஆர் ஃபாலோயர்ஸோட சுப்ரபாதம் மாதிரி ஆயிருச்சு. அந்த பாட்டு படத்துல வர்ரதுக்கு முன்னாடியோ, படம் வெளி வந்தப்பவோ ,அதுக்கு பின்னாடியோ யாரையும் கவரலை. ஆனால் ராஜசேகர் ரெட்டி ஹெலிகாப்டர் விபத்துல மாட்டி செத்த பிறகு அந்த பாட்டுக்கு இப்படி ஒரு வாழ்வு.

சங்கரா பரணம் படம் ஞா இருக்கும்னு நினைக்கிறேன். அதுல ஹீரோ சோமயாஜுலு சிவபெருமான் கிட்டே கோவமா பாடற பாட்டு ஞா இருக்கா. சங்கரா நாத சரீரா பரா வேத விஹாராஹரா ன்னு துவங்கும் அந்த பாட்டோட இசைக்கு நான் எழுதிய பாடல் இது.

"வாணியே கலை தந்த கலைவாணியே
தேயுது என் மேனியே "

என்று கவிதை எழுதினேன். கலைவாணி என் முறையீட்டை பரிசீலித்துவிட
இப்போது லேசாக தொப்பை கூட பொட்டிருக்கிறது. 2007 லாவது தினத்தந்தியில் வேலை , போதுமான சம்பளம், ஜாப் செக்யூரிட்டி என்ற சந்தோசம் என்று சொல்லலாம். தினத்தந்தியை விட்ட பிறகு ? சரி சொந்த பத்திரிக்கை இருக்கு என்ற திருப்தியென்றும் கூறலாம். செப்டம்பர் 2 ஆம் தேதி முதல்வர் வருகை நிமித்தம் போட்ட இஷ்யூவுக்கு பிறகு செப் 26 அன்று போட்ட சனிபெயர்ச்சி ஸ்பெஷல். அதற்கு பிறகு ஜனவரி 14 ஆம் தேதி காலண்டர் . தட்ஸால். உபரியாக வந்த பணத்தை விரல் விட்டு எண்ணலாம். பின் எப்படி சாத்தியமானது இந்த தொப்பை. அதுதான் கலைவாணியின் அருள்.

விவேகானந்தர் சொல்றார். நீ உண்மையா நம்பின விசயத்தை 14 வருசம் சொல்லிட்டே இரு . அதுக்கு ஒரு மந்திர சக்தி வந்துரும். மக்கள் அதை நோக்கி கவரப்படுவார்கள்னு. நான் இந்த வலைப்பூவில் சொல்லிட்டு வர்ர விசயங்களை பல காலமா சொல்லிக்கிட்டுதான் இருக்கேன். ஆனால் இதுக்கெல்லாம் 2009 மே முதல் ஓரளவு ஆதரவு கிடைச்சிக்கிட்டு இருக்கு.

எனக்கு நம்பிக்கை இருக்கு என்னைக்கோ ஒரு நாள் ஏதோ ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் அ சப் எடிட்டர் அ பப்ளிஷர் கண்ல இந்த பதிவுகள் பட்டு புத்தகமா வெளிவரத்தான் போகுது. சரி பாட்டின் அடுத்த வரிகளை பார்ப்போம்.

"நானொரு மாளிகை
சிதைத்தது என் பகை
முடியுமோ என் கதையே "

இதை எழுதினப்போ அப்பா நிழல்ல இருந்தேன். அன் ப்ரொடக்டிவ் கன்ஸ்யூமர் ஆஃப் தி ஹவுஸ். இப்போ அப்பா போய் (1994) இன்னைக்கு 16 வருசமாகுது. என் கதை முடியாம தொடர காரணம் என்னன்னு சொல்றது ? இத்தனைக்கும் வாலை சுருட்டி பாக்கெட்ல வச்சிக்கிற பழக்கமெல்லாம் கிடையவே கிடயாதே நமக்கு." என்னடா இது கதை முடிஞ்சுரும் அது இதுன்னு புள்ளை கலங்கி கிடக்குன்னு அந்த கலைவாணியே அப்பப்ப புதுபுது ஐடியாக்களை ஸ்பார்க் ஆக வச்சிக்கிட்டிருக்கா.


கலைவாணியோட அருள் இப்படி பெருக இன்னொரு காரணமும் உண்டு எங்கம்மா பாடி பாடி என் மனசுல பசுமரத்தாணியா பதிஞ்சிருக்கிற பாட்டு. "சகல கலா வாணியே சரணம் தாயே" ன்னு துவங்கும் இந்த பாட்டுல "ஆற்றலும் ஆயுளும் எட்ஸெட் ரா எட்ஸெட் ரா வை தேச நலம் புரிய எங்களுக்கருள்வாய் மங்கல செல்வியே"ங்கற வரியும் வரும். அந்த வரிகள் தான் ஆப்பரேஷன் இண்டியா 2000 திட்டத்தை தீட்ட வச்சதோன்னும் ஒரு சம்சயம்.

வேறொரு பதிவுல நான் எழுதின இந்திரகுமார்ங்கற வெட்டி ஆஃபீசர் "சரஸ்வதி நமஸ்துப்யம்னு துவங்குற ஸ்லோகத்தை சொல்லிக்கொடுத்தாரு. கி.பி.2000 ல வேற ஒரு க்ரூப்(இவிக உலகமே அம்புலிமாமா கணக்கா,விட்டலாச்சார்யா படம் கணக்கா இருக்கும்) காசு வரதுக்கு மந்திரம் கத்து கொடுங்கப்பானு கேட்டா ப்ரணவம், வித்யா பீஜம், மாயா பீஜம், காளி பீஜம், லக்ஷ்மீ பீஜம் எல்லாத்தயும் கலந்து கட்டியா கொடுக்க தனிதனியே ஒர்க் அவுட் ஆகி சரஸ்வதியோட மூல மந்திரமும் அதே க்ரூப் மூலமா கிடைக்க நான் அதை தொடர்ந்து சாண்ட் பண்ண என்னென்னவோ அற்புதமெல்லாம் நடந்துருச்சு.

இதையெல்லாம் நான் இங்கே எழுத காரணம் ஒரு சின்ன ஃபார்முலாவை நெத்தியடியா சொல்லத்தான்.

யூனிவர்சல் மைண்ட் :

(இது அண்ட சராசர பிரபஞ்சங்களோட மனம். இதுல இல்லாத சமாச்சாரமே கிடையாது. ஒட்டு மொத்த படைப்போட முக்காலங்களையும் உள்ளடக்கிய இந்த நினைவுகள் ஒவ்வொரு மனித மூளையிலும் பொதிந்து கிடக்கின்றன. என்ன கொஞ்ச ஆழத்தில் )

இண்டிவியூஜுவல் மைண்ட்:
ஒவ்வொரு குழந்தையும் மேற்சொன்ன யூனிவர்சல் மைண்டுடன் தான் இந்த பூமிக்கு வருகிறது. ஆனால் பெற்றோர், ஆசிரியர்கள். சமூகம் எல்லாருமாய் சேர்ந்து அந்த யூனிவர்சல் மைண்டுக்குள் அகங்காரத்தை புகுத்துகிறார்கள். ( நான் சிவப்பு, நான் குண்டு, நான் நாடார், நான் பணக்காரன் எட்ஸெட் ரா)

எனவே கொஞ்சூண்டு ஆழத்தில் இருந்த முக்கால அறிவு மூளையின் அதல பாதாளத்துக்கு போய் புதைந்து விடுகிறது. அதனால் தான் நீ வேறு , நான் வேறு நீ செத்தா எனக்கென்னன்னு இருக்கோம்.

இன்னைக்கு நீங்க செத்தா எனக்குள்ளயும் ஏதோ செத்து போகுது. நான் செத்தா உங்களுக்குள்ளயும் ஏதோ செத்து போகுது.

இலங்கைல தமிழர்கள் செத்தா எனக்கென்னனு நினைக்கிறவன்லாம் நிர்மூடம். ஜடம். என்னதான் ஜடமா இருந்தாலும் அந்த அப்பாவி மக்கள் மரணத்துக்கு காரணமான எல்லாருக்குள்ளயும் ஏதோ செத்துப்போச்சு. அந்த மரணம் ஊமை மரணம். நேரம் வரும்போது அந்த மரணமே தன்னை அறிவிச்சுக்கும்.

அகந்தைய விடுங்க .. யூனிவர்சல் மைண்டுங்கற ஞான செல்வத்தை அள்ளுங்க. அப்போ வித்யா பீஜம், சரஸ்வதி மூல மந்திரம்லாம் தேவையே இல்லாம உங்க நாக்குல சரஸ்வதி குத்தாட்டம் போடுவாங்க.

2 comments:

  1. //நாக்குல சரஸ்வதி குத்தாட்டம் போடுவா//

    நாக்குல போட்டா எப்புடி பாக்கறது தல ! கொஞ்சம் எறங்கி வந்து ரோட்டுல போடா சொல்லுங்க

    ReplyDelete
  2. வாங்க ராஜன் !
    வர்ரப்பவே வில்லங்கமா ? ஆர் எஸ் எஸ் எல்லாம் ஞா இருக்கில்ல. சரஸ்வதி நாக்குல குத்தாட்டம் போட்டா உங்க சொல்லே அம்பாகும். ஆ.வி மாதிரி கோட்டை கூட அம்போ ஆகும்

    ReplyDelete