கூட்டி கழிச்சு பார்க்கிறேன்
ஒரு தரம் புத்தூர்ல ஒரு ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு போயிருந்தம். ராத்திரி ரிசப்ஷன் ஆயிருச்சு. மறு நாள் விடியல்ல தோஸ்துங்கல்லாம் "ஒதுங்க" புறப்பட்டாங்க. அந்த காலத்துல நமக்கு அந்த பிரச்சினையெல்லாம் கிடையாது. எப்போ வசதியோ அப்போ எனிமா எடுத்தா தான் விசயமே வெளிய வரும். காரணம் நம்ம "ராவுகள்" அப்படி. எனிவே தனியே என்னத்த பண்றது ச்சும்மா அப்டி காத்தாட போய் தம்மடிக்கலாமேனு கூட போனேன்.தண்டவாளத்து மேலயே நடந்து போறோம். நான் தான் கடைசியா நடந்துக்கிட்டிருக்கேன்.
தண்டவாளம் ஒரு சுரங்கத்துக்குள்ள போகுது. (அதை என்ன சொல்வாங்க?) நானும் போறேன். உள்ளே தண்டவாளத்துக்கு ஒரு புறம் திண்ணை மாதிரி இருக்கு. அதுல ஒரு தம்பதி. சஷ்டியப்த் பூர்த்தியானமாதிரி கல்யாண காஸ்ட்யூம், நகை நட்டுகூட அணிஞ்சிருந்தாப்ல ஞா . அவிக முகத்துல அப்படி ஒரு களை. உள்ளுக்குள்ள லேசா சிலீர்ங்கற மாதிரி ஒரு உணர்வு. இருந்தாலும் என்னை நான் ஈஸி பண்ணிக்க அந்த பெரியவர்கிட்டே போய் சிகரட்டை எடுத்து வாய்ல வச்சுக்கிட்டு தீப்பெட்டி கேட்டேன்.அவர் அந்தம்மா பக்கம் திரும்பி சுந்தர தெலுங்குல "குடு"ங்கறார். நான் வாங்கி சிகரட் பத்த வச்சிக்கிட்டு, பெட்டிய திருப்பி கொடுத்துட்டு நடக்கிறேன்.தோஸ்துகளோடபோய் சேர்ந்துக்கிட்டேன். விஷயத்தை சொல்றேன். சுரங்கம் இருந்தது நிஜம்தான். அது மாதிரி தம்பதியை பார்க்கவே இல்லேங்கறாங்க. வாய்ல சிகரட் புகைஞ்சிக்கிட்டு இருக்கு. யாரை நம்பறது?
இது நடந்தது 1990 லனு நினைக்கிறேன். இப்போ 20 வருசம் கழிச்சு 2010 ல வீடு தேடி அலையறேன். ரூ1,200 வரைக்கும் ப்ரிப்பேர் ஆனாலும் வீடு கிடைக்கல. அப்புறமா பெரிய வேப்ப மரம். அதனோட நிழல்ல இருக்கிற வீட்டுல ஒரு போர்ஷன் காலினு "சாந்தி"ங்கற பொம்பளை சொல்லுது. அது "சத்யா"ங்கற நண்பன் மூலமா அறிமுகம். போய் பேசறேன். ஆமா காலிதான்னு கன்ஃபார்ம் ஆகுது. ஒரு பொண்ணு வீடு திறந்து காட்டுது.அட்வான்ஸும் வாங்கிக்குது.அப்பா,அம்மா பலமனேர் போயிருக்காங்க. தாத்தா பாட்டி வீட்ல இருக்காங்க ஒரு தடவை பார்த்து அட்வான்ஸை அவிக கைலயே கொடுத்துருங்கங்குது. நான் என் மகளை நீ போய் பார்த்து கொடுத்துருப்பாங்கறன். என் மகள் போய் பார்த்து பேசி கொடுத்துட்டு வரா.
அந்த கிழ தம்பதிகளை வர்ணிக்கிறா. மைண்ட்ல எந்த ரெஸ்பான்சும் இல்லே ப்ளாங்காவே இருக்கு. சாமான் செட்டை எப்படி கட்டறது என்னாங்கற யோசனைதான்.பிப்ரவரி 6 ஆம் தேதி இந்த வீட்டுக்கு குடி வந்துட்டம். இன்னைக்கு தேதி என்ன? பிப்ரவரி 22. பதினாறு நாள் வரை தம்பதி பத்தி எந்த யோசனையும் இல்லே. இன்னைக்கு இந்த விடியல்ல டக்குனு ஸ்பார்க் ஆகுது. 1990 ல நான் பார்த்த தம்பதி வர்ணனையும், என் மகள் கொடுத்த வர்ணனையும் பச்ச்சக்குனு பொருந்துது.
1990 ல நான் அரை குறை . என் ஜாதகத்துல சூரிய சந்திரர்கள் பக்கத்து பக்கத்துல இருக்கிறதால அது சிவசக்தியோகம்னு படிச்சுட்டு பஞ்சாட்சரி ஜபிச்சிக்கிட்டிருந்த நேரம் அது.
வருசம் 2000, மாசம் டிசம்பர் தேதி 23 லருந்து சக்தி உபாசனை . இந்த வீட்டுக்கு வர்ரதுக்கு மாசம் முன்னாடிதான் சத்யா டிக்டேட் பண்ண பண்ண அம்மனுக்காக சாரி அம்மன் அருளுக்காக நான் எழுதின தெலுங்கு கவிதைகளை தட்டச்ச ஆரம்பிச்சதும் ஞா வருது. ஏதோ கணக்கிருக்கு. நானும் எனக்குள்ள கேள்விகள் எழ ஆரம்பிச்சப்பத்துலருந்து கூட்டி கழிச்சிக்கிட்டே இருக்கேன். டேலி ஆன மாதிரியே இருக்கு. அப்புறம் பார்த்தா ஆன்சர் தப்பு. பார்ப்போம்.
முந்தா நாள் பெரிய சைஸ் தீப்பெட்டி பத்து ரூ க்கு மூனுனு வாங்கினேன். கம்பெனி பேரு ஜோதி. இன்னைக்கு ஒரு க்ளையண்ட் தெலுங்கு ப்ளாகை பார்த்து ரெஸ்பாண்ட் ஆகி தெலுங்குல ப்ரிடிக்ஷன் கேட்டிருக்காங்க. எல்லாமே ரஸ்னா பவுடர் தனமா ஏற்கெனவே இருக்கும் போல. அப்பப்போ சந்தர்ப்பத்தை பொருத்து சர்க்கரை தண்ணி சேர்த்து ஆஃபர் பண்றா அவள்.
No comments:
Post a Comment