Saturday, February 27, 2010

நிர்வாணம் தெய்வீகமானது

கவர்னர் திவாரியோட லீலைகளை பத்தின அதிரடி வீடியோ க்ளிப்ஸ் ஒளிபரப்பு செய்து புகை வர வைத்த ஏ.பி.என்.ஆந்திர ஜோதியில் இந்த பதிவின் தலைப்பில் ஒரு விரிவான ஸ்டோரி ஒளிபரப்பானது. கடைசில பஞ்ச் என்னடான்னா " நீங்க நிர்வாணமா திரியாட்டியும் பரவாயில்லே.. நிர்வாணத்தை பார்த்து அருவறுப்படையாதிங்கங்கறது" தான் . அடங்கொப்புரானே.. திவாரி தாத்தா பண்ணது கூட அதை தானே.. அதை வெளிச்சம் போடற மோரல் ரைட் உனக்கேது.

சரி அது எக்கேடோ கெட்டு ஒழியட்டும். அவனவன் விரைக்கிறது தெரியக்கூடாதுன்னுதான் ட்ரஸ்ஸே போடறான்னும் ஒரு தகவல். ம‌த்திய படெஜ்ட் போட்டுட்டாய்ங்க. வழக்கம் போல விவசாயத்துக்கு கையில் கொடுத்துட்டாங்க (கப்பறைங்கண்ணா) அந்த விவசாயமே இல்லேன்னா புவ்வா இல்லே. பலான சமாச்சாரமெல்லாம் ஒடுங்கிபோயிரும்னா இதையும் படிச்சு வைங்கன்னா


"சத்யமேவஜெயதே"ன்னு ஸ்லோகன் வச்சிக்கிட்டு நம்ம அரசாங்கங்கள் அடிக்கிற

கூத்தை சொல்ல ஆரம்பிச்சா கலியுகம் முடிஞ்சு பிரளயமே வந்துரும். (அத்தனை

காலம் பிடிக்கும்னு சொல்ல வந்தேங்கண்ணா. நம்ம சனம் தோல் தடிச்சி போயி

கிடக்கு . ஆயிரம் நிஜங்கள் வெடிச்சாலும் பெண்கள் அழுகாச்சி

சீரியல்களையும்,ஆண்கள் சில்லறை பொறுக்கறதையும் விட்டு வெளிய வரவே

மாட்டாங்க, புரட்சி என்ன இழவு மாற்றம் கூட வராது ).

பொருளாதார சிறப்பு மண்டலங்கள் பேரால பொன் விளையற பூமியை பறிச்சிக்கிட்டு,

சிவப்பு நாடாத்தனத்தால அதை வருச கணக்கில வெத்தா விடறது, நிலத்தை

இழந்தவனுக்கு நஷ்ட ஈடு தராம பெப்பே காட்டறது. அந்த நிலம் ஒதுக்கப்பட்ட

கார்ப்போரேட் கம்பெனிகள் நோகாம ரியல் எஸ்டேட் வியாபாரம் பண்றது, நிலத்தை

இழந்த விவசாயி கூலியாகி, அல்லாடறது, தற்கொலை பண்ணிக்கிட்டு குடும்பத்தை

நட்டாத்துல விடறது அந்த குடும்பத்து இளைஞர்கள் வழிப்பறி

கொள்ளைக்காரர்களா மார்ரது, பெண்கள் விலைமாதர்களா மார்ரது இதெல்லாம் நம்ம

கண் முன்னாடி நடக்கிற நிஜங்கள்.

ஆந்திரத்துல சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமங்கள்ள ட்ரான்ஸ்மார்மர்களை

அடிச்சு தூள் பண்ணி அதிலிருக்கிற செம்பு கம்பிகளை ஒரு கூட்டம்

திருடிக்கிட்டிருந்தது. லேட்டா முழிச்சிக்கிட்ட போலீஸ் தந்தி பாஷைல வலை

வீசி தேடி பிடிச்சப்ப அவங்கல்லாம் பீகார்,உ.பி மானிலங்களில் விவசாய

குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள், லோக்கல் குவாரிகளில்,ஃபேக்டரிகளில்

வேலை பார்க்க வந்தவர்கள். குவாரி,ஃபேக்டரி ஓனர்களின் உழைப்பு

சுரண்டலால், கொத்தடிமைத்தனத்தில் வெறுப்பாகி கொள்ளைக்காரர்களானவர்கள்னு

என்று தெரிய வந்தது.

பாருங்க ஆட்சியாளர்கள் விவசாயம் லாபகரமா இல்லே. விளை நிலங்கள்ள பெரிய

பெரிய தொழிற்சாலைகளை கட்டி தொழில் மயமாக்கினா பொருளாதாரம் முன்னேறும்னு

நினைக்கிறாங்க. ஆனா நடக்கிறது என்ன?

எங்க முன்னாள் முதல்வர் சந்திரபாபு ரொம்பவே அறிவாளி. இப்போ விவசாயம்

பண்றவங்க ஓஞ்சு (ஒழிந்து) போட்டும். அவிக பசங்களாவது அதுல இறங்க கூடாது,

கம்ப்யூட்டர் கத்துக்கிடனும்னிட்டார். நம்ம ஆற்காடு வீராசாமி அந்தளவுக்கு

அறிவாளி இல்லேன்னாலும் ( பவர் சப்ளை ஒழுங்காயிருந்தாதானே அறிவாளி

ஆகமுடியும்) விவசாயிகள் விவசாயத்தோடவே வேற ஏதாச்சும் தொழிலும் பண்ணனும்னு

இலவச யோசனை தந்திருக்கார்.

பாவம் .. அந்த காலத்துல காந்தி தாத்தா விவரம் போதாம கிராமங்கள் உற்பத்தி

கேந்திரமா இருக்கனும். நகரங்கள் விற்பனை மையங்களா இருக்கனும்னு

சொல்லிட்டு போய் சேந்துட்டாரு.

இப்ப பாருங்க எல்லாமே தலை கீழா மாறிருச்சு. கிராமத்துல பசு வச்சிருக்கிற

குடும்பம் தங்கள் வீட்டு ஆளுங்க, குழந்தை குட்டி எல்லாம் குடிச்சபிறகு

அக்கம்பக்கத்து குடும்பங்களுக்கு கொடுப்பாங்க. இப்போ காசு மேல காசு வந்து

கொட்டனும்னு ஊசி மேல ஊசி போட்டு ஒட்டக்கறந்து டைரிக்கு ஊத்தறாங்க. அதே

பால் ப்ளாஸ்டிக் கவர்ல கிராமத்துக்கு வந்து சேருது. அதை காசு குடுத்து

வாங்கியாறது. அட ஒரு கல்யாணம்னு வச்சிக்கயேன் அதுக்கு தேவையான பொருட்கள்ள

எத்தினி கிராமத்துல கிடைக்குது எத்தினி டவுன்ல கிடைக்குது கூட்டி கழிச்சு

ஒரு கணக்கு போடுங்களேன்.

உப்பு மேல வரி போட்டதுக்காக தாத்தா பிரிட்டீஷ் காரனை காச்சு காச்சுனு

காச்சினாரு. இன்னைக்கு டாட்டா சால்ட் வாங்கினா லோக்கல் டாக்ஸஸ்

எக்ஸ்ட்ரா. லோக்கல் ட்ரிங்க்ஸ் காணாம போயிருச்சு. குக்குராமத்துல கூட

குண்டி கழுவ தண்ணி கிடைக்காத இடத்துல கூட பெப்சி,கொக்கோ கோலா.

தையல் காரங்க கதைய பாருங்க. எல்லாம் மெகனைஸ் ஆயிருச்சு. நீங்க தைய கூலியா

கொடுக்கிற காசுல முக்காவாசி மின்சாரத்துக்கும், ரா மெட்டீரியலுக்கும்,

மின் உபகரண தேய்மானத்துக்குமே சரியா போகுது. இதுல ஷகரான ஏரியால கடை

போடனும், பள பளானு இன்ட்டிரியர், ஜகஜ்ஜோதியா ஒளியலங்காரம்

எல்லாத்துக்கும் போக அவன் என்னத்த திங்கறது. இதுல ரெடி மேட்

கார்மென்ட்ஸோட போட்டி வேற. எந்த தொழிலை எடுத்தாலும் இந்த இழவுதான்.

உதவாத தீப்பெட்டிய எடுத்துக்கங்க.அதை கூட டாட்டா கம்பெனி தயாரிக்குது,

ஒரு காலத்துல ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை ஆயிரம் பேருக்காவது

நேரிடையாவும், மறைமுகமாவும் வேலை கொடுத்துக்கிட்டிருந்தது. இப்போ.

உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற ஒரே துறை விவசாயம்தான். ஒரு 54 இஞ்ச்

கலர் டிவியை புதைச்சி வச்சா ஒரே ஒரு எஃப்.எம். ரேடியோ கூட முளைக்காது.

டிவி தான் நாறிப்போயிரும்.

கால் நடை வளர்ப்பு, கோழி, வாத்து வளர்ப்பு கூட கன்வெர்ஷன் தான். பயிர்

பச்சைய பாலாவும், மாமிசமாவும் மாத்தி தருது (கன்வெர்ஷன்). ஆனால் விவசாயம்

ஜஸ்ட் இட் ப்ரொட்யூஸஸ்.

எல்லா தொழிற்சாலையும் ரா மெட்டீரியலை ப்ராடக்டா மாத்துது.(உ.ம் தகடை காரா

மாத்தறது) அவ்ளதான். பொல்யூஷனுக்கு இடமில்லாத ஒரே துறை விவசாயம் . (

நான் சொல்றது பயிரை தாக்குற பூச்சிகளுக்கு அமிர்தமாவும், விவசாயிக்கு

மட்டும் விஷமாவும் வேலை செய்யற பூச்சி மருந்து, செயற்கை உரங்களை டப்பா

டப்பாவா, மூட்டை மூட்டையா கொட்டி நிலத்தை ,நீரை , வயிறை, விஷமாக்கிற

விவசாயமில்லே தலைவா !).

இந்த நிர்வாண நிஜம் எப்பத்தான் இந்த கேடு கெட்ட அரசாங்கங்களுக்கு

உறைக்குமோ தெரியலை. விவசாயத்துக்கு தேவை ஜஸ்ட் பாசன நீர். வாட்டர்.

பானி.நீள்ளு . அத ஒழுங்கா கொடுக்க துப்பில்லே.

ஜஸ்ட் கன்வெர்ஷன் பண்ணிக்கிட்டு, கோடி கோடியா குவிச்சிக்கிட்டு, சில

ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குற ஃபேக்டரிக்கு லட்சகணக்கான காலன்

தண்ணி, சப்சிடில மின்சாரம், இலவச நிலம், வரி தள்ளுபடி எங்க

போயிட்டிருக்கோம்.

நீங்க ஒரு மாட்டுப்பண்ணை வச்சிருக்கிங்கனு வைங்க. ஒரு மாடு லிட்டர்

லிட்டரா பால் கொடுக்குது. ஒரு மாடு வெறுமனே கோமியம் விட்டுக்கிட்டு, சாணி

போட்டுக்கிட்டிருக்கு. நீங்க எந்த மாட்டுக்கு பருத்திக்கொட்டையும்

புண்ணாக்கையும் போடுவிக? பால் தர்ர மாட்டுக்குதானே.

விவசாயத்துறை வெறுமனே போஸ்டர்களை தின்னுட்டு பால் தர்ர மாடு மாதிரி

அல்லாடிக்கிட்டிருக்கு. ஆனால் காத்துல, தண்ணில, நிலத்துல விஷத்தை

கலந்துவிடற தொழில்துறைக்கு மட்டும் சிகப்பு கம்பள வரவேற்பு. அந்த சிகப்பு

கம்பளத்துல அதென்ன ராஜ நடையா போடுது. ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஒரு அரசாங்கமும் மாட்டுப்பண்ணை முதலாளி மாதிரி தான் செயல் படனும். எந்த

துறைல ப்ரொடக்டிவிட்டி அதிகம், எந்த துறை அதிகமான பேருக்கு வேலை வாய்ப்பை

வழங்குது, எந்த துறையால பொல்யூஷன் குறைவுன்னு பார்த்து அந்த துறைமேல

அக்கறை காட்டனும்.

இந்தியாவுல விவசாயம் 70 சதவீதம் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கறதா ஒரு

கணக்கு. அப்போ பட்ஜெட்ல 70 சதவீதம் விவசாயத்துக்கு தானே ஒதுக்கப்படனும்.

அரசாங்கங்கள் தொழில் துறை மேல அதீத அக்கறை காட்ட காரணம் கார்ப்போரேட்

கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதிதான் போலும்.

டூ வீலர் வாங்க கடன், ஆட்டோ வாங்க கடன், கார் வாங்க கடன். இதையெல்லாம்

வங்கிகள், அதிலும் அரசுத்துறை வங்கிகள், வழங்க காரணம் என்ன ? அந்த ஆட்டோ

மொபைல் கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதி அல்லன்னு உறுதியா

சொல்ல முடியுமா? வீட்டு வசதி கடன்கள் வழங்கப்பட காரணம் என்ன ? சிமெண்ட்,

ஸ்டீல் கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதி அல்லன்னு உறுதியா

சொல்ல முடியுமா?

விவசாயிகளுக்கு தரப்படும் அரை குறை கடன் வசதிகளுக்கு கூட இது போன்ற

விலங்கமான காரணங்கள் உண்டுன்னே சொல்லலாம்.(உர கம்பெனி, மோட்டார் கம்பெனி

, ட்ராக்டர் கம்பெனி, பூச்சி மருந்து கம்பெனி தர்ர கட்சி நிதி) ஒரு

அரசாங்கம் உண்மையிலேயே விவசாயத்துறையை முன்னேற்றனும்னு நினைச்சா எவ்வளவோ

செய்யலாம்.

விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிச்சு கூட்டுறவு பண்ணை விவசாயம்

அமலாக உதவலாம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வுங்கறத போல விவசாயிகள் ஒன்னு

சேர்ந்து சின்ன சின்ன செக் டேம், ஏரிகளின் இணைப்பு, ஏரிகளை தூர் வார்ரது

,, பாசன வாய்க்கால்களை வெட்றது சின்ன சின்ன உப நதிகளை இணைக்கறதுனு

செய்துக்கலாம். விவசாய உற்பத்திகளை நல்ல விலை வர்ர வரைக்கும்

பாதுகாக்க கிடங்குகள், கோல்ட் ஸ்டோரேஜ் இத்யாதி கட்டிக்கொள்ள மேற்படி

சங்கங்களுக்கு கடன் தரலாம். க்ராப் இன்ஷியூரன்ஸ் ஏற்பாடு செய்யலாம்.

விவசாய பொருட்களின் மதிப்பை கூட்டும் தொழிற்சாலைகள் அந்த சங்கங்களே

அமைத்து நிர்வகிக்க உதவலாம். (இதை பைலட் ப்ராஜக்டா ஆந்திர முன்னாள்

முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ஆர் அறிவிச்சாரு. விவசாயிகள் ஒப்புக்கிட்டா

செய்யலாம்னு சொன்னாரு. எங்க பிழைக்க விட்டாங்க. )

ஆனால் நம்ம அரசாங்கங்கள் இதையெல்லாம் செய்யாது ஏன்னா விவசாயிக்கிட்டே

இருக்கிறது ஒரு ஓட்டு. மிஞ்சிப்போனா அவனோட குடும்பத்து ஓட்டு. அவனென்ன

தேர்தல் நிதியா தரப்போறான். கார்ப்போரேட் கம்பெனிக குடுக்கிற ஃபண்ட்ஸ்ல

லட்சக்கணக்கான ஓட்டுக்களை விலைக்கு வாங்கிரலாமே..

தொழில் துறை, தகவல் தொழில் நுட்பத்துறை வளர்ச்சியெல்லாம் வெறும் வீக்கம்.

விவசாயி பயிர் செய்து, உற்பத்தி கைக்கு வந்தாதான், அது பணமாகி அவன்

கைக்கு போனாதான் மார்க்கெட்டுக்கே வாழ்வு .இல்லேன்னா சாவுதான்.

டிவி,மொபைல் தயாரிப்பாளர்கள் டீலர்கள் தம் வாடிக்கையாளர்களுக்கு தரும்

ஸ்பெஷல் ஆஃபர்ஸ் எல்லாம் அறுவடைகாலத்திலேயே வெளியாறத கூட்டிக்கழிச்சு

பாருங்க உண்மை தெரியும். எழுபது சதவீதம் மக்கள் விவசாயத்துறைய

சார்ந்து வாழற நாட்ல லட்ச ரூபாய்க்கு கார் வருது. ஏன் லட்ச ரூபாய்க்கு

ட்ராக்டர் தயாரிக்க கூடாது. எப்படியும் நகர மயமாக்கம் காரணமா, கிராமப்புற

வேலை வாய்ப்பு உறுதி திட்டம் , ஒரு ரூபா அரிசி திட்டம் இத்யாதி

காரணங்களால விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கிறது குதிரை கொம்பா போன காலத்துல

விவசாய வேலைகளுக்கு உதவக்கூடிய சிறு,குறு இயந்திரங்களை ஏன் குறைஞ்ச

விலைல தயாரிக்க கூடாது. மைல் கணக்குல வாய்க்கால்ல ஓடி வீணாகற பாசன நீரை

சூரிய வெப்பத்துக்கு ஆவியாகாம, நிலத்துல ஊறிப்போகாம , ஒரு சொட்டு

தண்ணியும் வீணாகிடாம பயிருக்கு கொண்டு சேர்க்க ஏன் நாடு தழுவிய ஒரு

திட்டத்தை கொண்டுவரக்கூடாது.

இந்தியா விவசாயத்துக்கு ஏதுவான சீதோஷ்ண நிலை , புவியியல் அனுகூலங்கள்

நீராதாரங்கள் கொண்ட நாடு. அரபு நாடுகள் வெறுமனே எண்ணெய் வளத்தை வைத்து

உலக மார்க்கெட்டை கட்டுப்படுத்தும்போது, நாம் ஏன் உணவு பொருள் உற்பத்தியை

வைத்து உலக மார்க்கெட்டை கட்டுப்படுத்தக்கூடாது.

ஒரு புடவைய சுத்தி விட்டா மரம் கூட ஏதோ ஒரு கோணத்துல மங்கையா

காட்சியளிக்கும். அதை உருவி பாருங்க..

நிர்வாணம் தெய்வீகமானது. நிஜமானது. போலிகளுக்கு இடமில்லாதது.

ஆட்சியாளர்களே நீங்கள் இந்திய பொருளாதாரத்துக்கு கட்டிவிட்ட ஆடைகள்

இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் காட்டி உங்களையும்

சேர்த்து குழப்புகிறது. நிலைமை கை மீறிப்போனா சனம் சாப்பிட

ரொட்டியில்லேன்னா கேக் சாப்பிடுங்கனு சொல்லக்கூடிய ஆளுங்க தான். ஆனால்

அப்படி சொன்ன ராணி என்ன ஆனாள்? அவள் ராஜ்ஜியம் என்னாச்சுனு ஒரு தடவை

நினைச்சு பாருங்க..

No comments:

Post a Comment