Friday, February 19, 2010

விலை வாசி உயர்வுக்கு "பலான" காரணங்கள்

உற்பத்தியாளர்களின் லிவிங்க் காஸ்ட் பெருகியதால் லாபத்தை உயர்த்த வேண்டி வந்தது.அதனால் விலையை உயர்த்த வேண்டி வந்தது. தொழிலாளிகளின் லிவிங்க் காஸ்ட் பெருகியதால் கூலி உயர்த்த வேண்டி வந்தது. அதற்காக உற்பத்தியாளர்
தம் தயாரிப்பின் விலையை உயர்த்த வேண்டி வந்தது.. போக்குவரத்து தொழிலாளிகளின் லிவிங்க் காஸ்ட் உயர்ந்ததால் அவர்களின் கூலி உயர்ந்தது. அதை சமாளிக்க போக்குவரத்து செலவை அதிகரித்து அதை சரக்கின் மேல் போட சரக்கு விலை உயர்ந்தது.

வங்கிகளின் பந்தா செலவுகளால் அவை வழங்கும் கடன்கள் மீதான வட்டி ரேட் உயர்ந்தது இதனாலும் சரக்கு விலை உயர்ந்தது. ஊழியர்களில் நாசூக்கு பெருகியது. இதனால் முன்பு ஒருவர் செய்து வந்த வேலையை இருவர் செய்யவேண்டியுள்ளது. அதையும் சரியாக செய்வதில்லை. நிர்வாக குளறுபடிகளால் நஷ்டம் பெருக அதை சமாளிக்கவும் சரக்கு விலை உயர்ந்தது.

ப்ராண்டட் பொருட்கள் என்ற சைத்தான்கள் பிறந்தன. அவற்றை யடுத்து விளம்பரம் விளம்பரம் என்று ஒரு பிசாசு பிறந்தது. அது பகாசுர பசியுடன் சரக்கு மதிப்பை இருமடங்காய் கூட்டியது. அத்துடன் பேக்கிங்க் பிசாசும் பிறந்தது. சரக்கு காலணா விலை என்றால் பேக்கிங்க் முக்காலணா விலை.

பொருட்கள் மட்டுமே அல்ல சர்வீஸஸ் விஷயத்தில் கூட இதே விதி விளையாடியது. வந்தது தகவல் தொழில் நுட்ப புரட்சி என்று பம்மாத்து செய்கிறார்கள். ( கணிணி, இன்டர் நெட், இ மெயில் செல்ஃபோன்,பேஜட் இத்யாதி) இதற்கான செலவும் நாம் வாங்கும் சரக்கு மீதுதானே சுமத்தப்படுகிறது.

லிவிங்க் காஸ்ட் பெருக காரணங்கள்:
இதுக்கு ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்கு. சிம்பிளா சொல்றேன். ஒருகாலத்துல தண்ணிய காசு குடுத்து வாங்குவோம்னு சொல்லியிருந்தா வாய் விட்டு சிரிச்சிருப்பாங்க.ஆனா இன்னைக்கு கழுவ ,குடிக்க காசு கொடுத்துதான் வாங்க வேண்டியிருக்கு.

கிரமாங்கள்ள அடுப்புக்கு கட்டை ,எருமுட்டை இத்யாதியோ, காய் கறியோ , ஆட்டுக்கறி, கோழி முட்டை கோழிக்கறியோ காசு கொடுத்து வாங்கற வழக்கமே கிடையாது.

ஷாம்பு, டூத் பேஸ்ட், தேங்கா எண்ணெய் இப்படி எத்தனையோ பொருட்கள் சொந்தமா உற்பத்தியாகும் இல்லேன்னா பண்ட மாற்றுல கிடைக்கும்.

துணி வெளுக்கறது, கட்டிங் ,ஷேவிங் எதுக்குமே காசு கிடையாது வருசத்துக்கு ஒரு தரம் நெல்லு தர்ரதோடு சரி

முக்கியமா அரிசி வாங்கற வழக்கமே கிடையாது. கேழ்வரகு ,கம்பு,சோளம்,வரகரசி இப்படி எத்தனையோ ஆல்ட்டர்னேட்டிவ்ஸ் இருக்கும். விளைஞ்ச நெல்லோ, கூலியா கிடைச்ச நெல்லோ அதை புழுக்கி ,குத்தி வச்சிருப்பாங்க.

இப்போ கிராமங்கள்ள நிலைம என்ன ?

காந்தி தாத்தா கிராமங்கள் தயாரிப்பு மையங்களா இருக்கணும் நகரங்கள் விற்பனை கேந்திரங்களா இருக்கனும்னாரு.

இன்னைக்கு நிலைம என்ன? ஒரு கல்யாணம்னு வச்சிக்கங்க. அதுக்கு தேவையான பொருட்கள்ள எத்தனை பொருள் கிராமத்துல தயாரிக்கப்படுது.

எல்லா இழவுக்கும் நகரத்துக்கு தான் வந்தாகனும்.

பிளாஸ்டிக் நாற்காலி மூனு மாசத்துக்கொருதரம் உடைஞ்சிரும். புதுசா வாங்கனும். மர நாற்காலின்னா ரெண்டு வருசம் கழிச்சு லேசா ஆடும் . ஒன்னு ரெண்டு ஆணி அடிச்சுட்டா இன்னும் ரெண்டு மூனு வருசம் பிரச்சினை வராது.

மிக்ஸி 3 மாசத்துல ஒரு தரமாச்சும் ட்ரபிள் கொடுக்கும். கிரைண்டரும் அந்த கல்லெடுப்புதான். இதே அம்மி, உரலுன்னா வருசத்துக்கு ஒருதரம் லேசா கொத்தி விட்டா போதும்.( இந்த கிரைண்டர் கல்லுக்கும் இந்த கருமாந்தரம் செய்து தானே ஆகனும்.)

ஒரு காலத்துல சாயந்திரம் ஆறு ஏழுக்கெல்லாம் ஊர் அடங்கிரும். விடியல் நாலு அஞ்சுக்கெல்லாம் நாள் துவங்கிரும். இன்னைக்கு ? இரவை பகலாக்க எத்தனை மின்சாரம், பாடாவதி டிவி, அழுகாச்சி சீரியல். இப்படி இயற்கைல இருந்து விலக விலக காஸ்ட் ஆஃப் லிவிங்க் ஜாஸ்தியாயிட்டே வந்துட்டுது.


பால்ய திருமணம், வாழ்க்கைக்கு தேவையான அளவு கல்வி, குறைந்த தேவைகள் அதாங்க சூரியன் உதிச்சப்ப எழுந்து , மறைஞ்சதும் படுக்கைக்கு போறது,இப்படி இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்ததால ஆண்மை படைப்பு சக்தி உச்சத்துல இருந்துது. ஒரு கயித்து கட்டிலாகட்டும், ஒரு உறியாகட்டும் , அட ஓலை மாத்தறதாகட்டும் அந்த வீட்டு ஆம்பளையே செய்வான். இது நான் அடிச்ச கட்டில், இது நான் கட்டின ஓலைனு ஈகோவோட சொல்வான்.

இன்னைக்கு சாமி படம் மாட்ட ஆணியடிக்கனும்னா கூட எலக்ட் ரீஷியன் ஜம்பரோட வந்தாகனும். வந்தவன் ஜென்யூன் பார்ட்டியா இருந்தா பரவாயில்லை. அவன் ஜொள்ளு பார்ட்டியா காஞ்சானா இருந்தா கண்ட இடத்துல ஆணியடிச்சுட்டு போயிர்ரான்.

மக்கள் அன்னைக்கு சிறுக கட்டி பெருக வாழ், போதுமென்ற மனமே பொன் செய் மருந்துன்னு வஞ்சனை இல்லாம வாழ்ந்ததால மனசு அலைபாயலை. தேவைகள் கட்டுக்குள்ள இருந்தது. இருக்கிறத விட்டு பறக்கறதுக்கு மனசு துடிக்கலை. சவுண்ட் பாடி சவுண்ட் மைண்டோட இருந்ததால மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கம் பெயரளவுல தான் இருந்தது.

கணவனோட கடமைன்னா "பலான" விசயத்துல இடுப்பை ஒடிக்கிறதுதாங்கற ஒப்பனையற்ற அளவு கோல் இருந்தது. இன்னைக்கு ? பிஞ்சுல பழுத்து, வெத்து வேட்டுகளாகி கிடக்கிறது ஆண்கள் கூட்டம். ஏதோ சினிமால வடிவேலு மாதிரி கோக் டின்ல ஸ்ட்ராவ நுழைக்கிற கெப்பாசிட்டி கூட இல்லாம கிடக்குது. அந்த குற்ற உணர்ச்சில தம் வீட்டுப் பெண்கள் பலவீன உடல் தந்த செல்வமான தங்கள் இன்செக்யூரிட்டி காரணமாய் கோரும் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதன்றி வேறு வழியில்லாது போய்விடுகிறது. மேற்படி கோரிக்கைகளில் தலையாயது தனிக்குடித்தனம்.

என்னைக்கேட்டால் தனிக்குடித்தனத்துக்கு சம்மதிக்கு கேசெல்லாம் இந்த மாதிரி பீஸாதான் இருக்கும்.

நகரமயமாக்கத்துக்கு இது மாதிரி தனிக்குடித்தன கேஸ்கள் முக்கிய காரணம். கிராமத்துக்காரன் தனிக்குடித்தனம்னா டவுனுக்கு வரான். டவுன் காரன் சிட்டிக்கு வரான்.

குடும்பம் ரெண்டானா பேசிக்கல் எக்ஸ்பெண்டிச்சர்ஸ் ரெண்டாகுது. ரெவின்யூ எக்ஸ்பெண்டிச்சர் ( மாதாந்திர செலவு ) பாதியாயிருமான்னா இல்லை. தனிக்குடித்தனமாச்சே கண்ட நேரத்துல ..த்து முடிச்சதுமே கழுவிக்க அட்டாச்ட் பாத்ரூம் தேவைப்படுது. வீட்ல துணைக்கு யாரும் இருக்கமாட்டாங்களே அதுக்கு டிவி தேவைப்படுது , டிவிடி தேவைப்படுது.

கூட்டுக்குடும்பத்துல யாரோ ஒரு பெரியப்பா பையனுக்கு எலக்ட்ரிக்கல் வேலை தெரிஞ்சிருக்கும். யாரோ ஒரு சித்தப்பா பையனுக்கு சுண்ணாம்பு அடிக்க தெரியும். இங்கே தனிக்குடித்தனத்துல ?

எனக்கு தெரிஞ்சு புதுக்குடித்தனம் போன பார்ட்டி பூஜை ரூம்ல வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை பெண்டாட்டி கோலம் போட்டா தேஞ்சு போயிருவானு பெயிண்ட்ல கோலம் போட பெயிண்டரை வரவச்சான் ஒருத்தன் . வந்தவன் வேற எங்கயோ நல்லாவே பெயிண்ட் அடிக்க புதுப்பெண்டாட்டி எஸ்கேப். நம்மாளு கையில பிடிச்சிக்கிட்டு ( காணவில்லை கம்ப்ளெயிண்டை சொல்றேங்க) அலையறான்.

(அந்த காலம் அந்த காலம்னு நான் பெருமையா சொன்னாலும் வேறு சில சமூக கொடுமைகள் இருந்தது உண்மைதான். உம். சாதீய வேறுபாடுகள், தீண்டாமை, ஆண்டான் அடிமை வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள் )

டீ, காபி,டிஃபன்,ஸ்னாக்ஸ்,ஐஸ் க்ரீம், ஃபாஸ்ட் ஃபுட் இதெல்லாம் அந்த காலத்துல ஏது இப்போ காஸ்ட் ஆஃப் லிவிங்க் ஏன் அதிகரிக்காது.

டூ வீலர்னா எவனோ கொழுத்தவன், அவசியமிருக்கிறவன் மட்டும்தான் வச்சிருப்பான். இப்போ ? ஆட்டோ மொபைல் கம்பெனிங்க கொடுத்த தேர்தல் நிதிக்கு நன்றி கூற வங்கிகள் மூலமா கடன் வசதி வர சொறி நாய் கூட டூவீலர் இல்லாம தெருமுனை டீ கடைக்கு கூட வரமாட்டேங்குது. இவன் பண்ற பிசினஸ்ல இந்த டூ வீலர் மேல வட்டி, பெட்ரோல் செலவு எல்லாத்தயும் ஒர்க் அவுட் பண்ணித்தானே ஆகனும். ஏன் விலையேறாது.

எப்போ ஒருத்தன் பலான விஷயத்துல டம்மியாயிர்ரானோ / இல்லே பலான சுகம் நாட் அவெய்லபிளோ அவனுக்கு இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் அதிகரிக்குது, செல்ஃப் பிட்டி வருது, தன்னை பூஸ்ட் அப் பண்ணி காட்ட விரும்பறான். சமுதாயம் அதை திரஸ்கரிக்குது. அப்போ அவன் பிறரோட ஒத்துப்போறது கஷ்டமாயிருது. பத்து வட்டிக்கு கடன் வாங்குனத கொண்டாட குடிக்க போறானுக. அதுக்கு டாட்டா சுமோ புக் பண்ரானுக .ஏன் பஸ்ல போனா இறக்கி விட்டுருவாங்களா?

தியேட்டர்ல போய் சினிமா பார்க்க இரு நூறு பேரோட ஒத்துப்போகனும். கு.பட்சம் கேட் காரன், சைக்கிள் ஸ்டாண்ட்காரன், டிக்கட் கிழிக்கிறவன், கேண்டீன் காரன் பக்கத்து சீட் காரனோட ஒத்து போக வேண்டி வருது. இவனால அது முடியாது. ஸோ திருட்டு சி.டி தூள் பறக்குது.

அந்த காலத்துல உண்மையான ஸ்டஃப் இருந்தது. (பலான விசயத்துல) நல்லாவே அனுபவிச்சான். ஸோ இதர விசயங்கள்ள அவன் எதையும் கண்டுக்கறதில்லை. இப்போ அசல் விசயமே மொக்கை. ஸோ இதர விசயங்களுக்கு இல்லாத பொல்லாத ப்ராமினன்ஸ் தரான்.

பெண்டாட்டிய கோயிலுக்கு கூட்டிட்டு போகாட்டியும் ஷாபிங்க் அனுப்பியாகனும். வாரம் ஒரு தடவை ஹோட்டல்ல சாப்பிடனும், ஏன் ? இவன் அந்த விசயத்துல அவளை சரியா திருப்தி படுத்தறதில்லை. ஸோ அந்த குறைய பேலன்ஸ் பண்றான்.

வர்ரத கேட்க மாட்டேன்னா எஃப் எம் உதவாது . ஐ பாட் வாங்கனும்
வர்ரத பார்க்க மாட்டேன்னா டிவிடி வாங்கனும்
நினைச்சப்ப நினைச்சது வேணம்னா ஹாட் பாக்ஸ், ஃப்ரிட்ஜ்
தேவைகள் பெருகி பொம்பளை வேலைக்கு போறதால வாஷிங்க் மிஷின்,அவளுக்கொரு டூ வீலர்.
கெட்டப்பழக்கங்கள்:

ஏற்கெனவே பலபதிவுகள்ள சொன்னத போல "அது" கிடைக்காதவன் தான் குடிக்கிறான். போதை ஊசி போடறான், சூதாடறான். தன் ஆண்மைய தனக்கு நிரூபிச்சுக்க விலைமகளிரை நாடறான். இந்த செலவெல்லாம் எங்கே இருந்து வரனும்? அவனோட வியாபாரத்துல இருந்து வரனும். இல்லே அவன் தர்ர சர்வீசஸ்ல இருந்து வரனும். சரக்கை ஏத்தி விக்கிறான். தன் சர்வீஸுக்கு பில்லை அதிகரிக்கிறான்.

கல்வி,மருத்துவ செலவினங்கள்:
ஒரு குடும்ப பட்ஜெட்டில் ஏறக்குறைய பாதியை கல்வி,மருத்துவ செலவினங்கள் விழுங்கி விடுகின்றன. ஆனால் மக்கள் செலவழிக்கும் தொகைக்கேற்ற சேவை கிடைக்கிறதா என்றால் இல்லை.

கல்வித்துறையில் தனியார் யுகம் துவங்கிய பிறகு கல்வி செலவினம் மேலும் அதிகரித்து விட்டது. பாபாவில் ரஜினி பாடியது போல் "மாயா மாயா சாயா சாயா" தான்.

"அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா" கதையாய் கண்ட நாயும் தன் வாரிசை "பெத்த" படிப்பு படிக்க செய்ய துடிக்க புற்றீசலாய் தனியார் கல்லூரிகள் / பல்கலைகள் ( நிகர் நிலை ?) கிளம்பி விட்டன.

அது கல்லூரியாகட்டும், மாணவனாகட்டும்..லாலு சொன்னாற்போல் பால் கொடுக்க கூடிய பசு எதுவோ அதற்கு மட்டும் பருத்தி கொட்டை புண்ணாக்கை போட வழி வகை செய்ய வேண்டும்.

இன்று அவெய்லபிலிட்டியிலுள்ள அல்ட்ரா தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆரம்பபள்ளி நாட்களிலேயே மாணவர்களை தர நிர்ணயம் செய்து சாதி ( க்ரேடிங்) பிரித்து நெல்லுக்கு பொசியும் நீர் புல்லுக்கு போகாது தடுத்தாலே பாதி தலைவலி ஒழியும்.

மருத்துவத்துறையின் நிலையை மாற்ற நோய் தடுப்பை ஸ்பெஷலைஸ் செய்யும் படிப்பை அறிமுகம் செய்யவேண்டும்.

அரசும் மக்களுக்கு முதற்கண் தகுந்த கழிவறை, குடி நீர் வசதி செய்து நோய்களுக்கான கதவுகளை அடைக்க வேண்டும்.

தகுதியற்ற மாணவனுக்காக அவன் பெற்றோரும், அரசும் செய்யும் வீண் செலவினங்கள் தடுக்கப்படவேண்டும். ( உயர் கல்வியை டிஸ்கன்டின்யூ செய்த நாய் எத்தனை லட்சம்னு ஒரு சர்வே எடுத்து பார்த்தா தெரியும்.)

உதவாக்கரை கல்வி, குற்றங்களை தடுக்கும் ஏற்பாடு, தண்டிக்கும் ஏற்பாடு இல்லாமையால் மனிதர்கள் மத்தியில் வேல்யூஸ் என்பதே இல்லாது போய்விட்டது. தமிழ்ல என்ன சொல்ல ? ஆங் .. தார்மீக நோக்கு.

லஞ்சம் வாங்கினவனை பிழைக்க தெரிஞ்சவன்னும், வாங்காதவனை டம்மி பீஸுன்னும் சொல்ற சமுதாயத்துல சனம் ஈஸி மணிக்காகத்தான் அல்லாடும். ச்சும்மா வந்த பணத்தை ஆத்த மாட்டாத செலவழிக்க புறப்பட்டா விலைவாசி எகிறுது.

சுயக்கட்டுப்பாடு இல்லை. வேலை வெட்டிக்கு போகாத தண்டச்சோறு தடி ராமன், சோம்பேறி பய புள்ள வீட்ல கூட 54 இஞ்ச் கலர் டிவி இருக்கோனம். டி.எஸ்.பி வீட்ல இருக்கிற அதே பொருட்கள் கான்ஸ்டபிள் வீட்லயும் இருக்கோனம்.

எவனாச்சும் வந்து " சாமி வாழப்பழம் உரிக்க சூப்பர் மிஷின் வந்திருக்குது ஒன்னை வாங்கி போடக்கூடாதும்பான்" "அட போப்பா கையில பணம் இல்லே"னு சொல்லவே முடியாது.

எந்த தொழில்,வியாபாரம், வேலை வெட்டி இல்லாம வாங்கின கடன்ல ஒரு தணை கூட திருப்பி கட்டாம 25 வருசம் வாழ்ந்து செத்து போற அளவுக்கு சனம் வித்தை கைல வச்சிருக்காக. சிட்டி ஃபைனான்ஸாம், க்ரெடிட் கார்டாம், பர்சனல் லோனாம் ..இப்படி நோகாம வந்த காசு மார்க்கெட்ல நுழையறச்ச விலை வாசி எகிறாதா என்ன?

அப்போ அதாங்க ஒரு இருபது வருசத்துக்கு முன்னாடி சொத்துன்னா முக்கால் பாகம் நிலம்தான், வீடுங்கறது வியர்த்தமான முதலீடு. 100 ஏக்கர் ஆசாமி வீட்டை பார்த்தா கூட ஏதோ போலீஸ் குவார்ட்டர்ஸ் மாதிரி தான் இருக்கும்.

அப்போ மனுஷன் உண்மையா, திருப்தியா வாழ்ந்தான்.தேவைகள் கம்மி. அபத்திரபாவம் கிடையாது. சமுதாயத்தை தன் வீட்டுக்குள்ள வரவேற்க எப்பவும் காத்திருந்தான்.

இப்போ ? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

காம்பவுண்டு. காம்பவுண்டுக்கு ஒரு கேட். தலைவாசல்.தலைவாசலுக்கு முன்னாடி ஜெயில் மாதிரி ஒரு இரும்பு கேட்.

இந்த ரேஞ்சுல விவசாயியோட வாழ்க்கையும் மாறிப்போச்சு. ஒட்டு மொத்தமா மக்களோட மனோதத்துவம் மாறியதால விலைவாசி ஏறிபோயிக்கிட்டே இருக்கே தவிர ..

இவனுக சொல்ற டிமாண்ட் சப்ளை கழுதை முட்டை காரணம் எல்லாம் டுபுக்கு. முதல்ல மன்சனுக்கு சரிய்யாஆஆஆஅ செக்ஸ் அனுபவிக்க கத்து தரனும். அப்புறம் பாருங்க.

அடுத்த பதிவில் விலைவாசியை குறைக்க அயனான ஐடியாக்களை பார்ப்போம். உடு ஜூட்

No comments:

Post a Comment