அருஞ்சொற்பொருள்;
மசாக்கிஸ்டு: தன்னை தான் துன்புறுத்தி இன்பம் காணும் மனோதத்துவம்
சேடிஸ்டு: எதிராளியை துன்புறுத்தி இன்பம் காணும் மனோதத்துவம்
அப்பப்போ என் பதிவுகள்ள ஹிப்பாக்ரசினு ஒரு வார்த்தைய பார்த்திருப்பிங்க. இதுக்கு நேரடி அர்த்தம் என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் "தன்னை தான் ஏமாத்திக்கிறது"ங்கற அர்த்தத்துல தான் நான் மேற்படி வார்த்தைய யூஸ் பண்றேன்.
இப்பக்கூட பாருங்க என் மனைவி தன் அக்காவோட ஃபோன்ல பேசிக்கிட்டிருக்கா.இவிக பேசிக்கறத பார்த்தா அடடா ..அக்கா தங்கைன்னா இப்படித்தான் இருக்கனும்னு நினைச்சிருவாக.
இவிக ரெண்டு பேருக்கும் இடையில் உள்ள உண்மையான "உறவு"வெளிப்படனும்னா சின்ன சின்ன ஃப்ளாஷ் பேக் காட்சிகளை பார்க்கனும். அதையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சா ரொம்ப பர்சனலா போகும் . ஸோ அம்பேல்.
நட்பு,குடும்பம், உறவு, நிறுவனங்கள், சமூகம் ,அரசியல் இப்படி எங்கே பார்த்தாலும் ஹிப்பாக்ரசி கொடி கட்டி பறக்குது.
கடைகள்ள பாருங்க "கடன் அன்பை முறிக்கும்"னு போர்டு இருக்கும். கடைகாரன் மட்டும் தனக்கு சரக்கு போட்டவனுக்கு பில்லே செட்டில் செய்யமாட்டான்.
ஒருத்தன் கூடப்படிச்சவனுக்கோ , பக்கத்து வீட்டுக்காரனுக்கோ ஏதோ எம்ஜிஆர் வேலை செய்றேனு கமிட் ஆகியிருப்பான். அப்போ "தம்பி.. ரொம்ப வெள்ளந்தியா இருக்கீக.. உங்களுக்கு சொன்னா புரியாது"னு ஒரு கிழடு ஆரம்பிக்கும். இந்த வார்த்தைகளுக்கும் அடுத்து பேச போற பேச்சுக்கும் உண்மையான அர்த்தம் என்னடான்னா "
நீ சரியான இளிச்சவாயன் இப்படி உதவி பண்ணிக்கிட்டே போனா திவாலாயிருவே.அவன் வேற ஜாதி. நானும் தான் கஷ்டப்படறேன் எனக்கு உதவக்கூடாதா?"
வள்ளலார் "உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்"னு சொன்னாரே .. அவர் மட்டும் இப்போ பிறந்து வந்தா பாரதியார் மாதிரி "தனிமை கண்டதுண்டு அதில் சாரம் இருக்குதம்மா"னு பாடிக்கிட்டு கிடக்க வேண்டியதுதான்.
இந்த மனுசங்க நினைக்கிறது ஒன்னு, செய்ய நினைக்கிறது வேறொன்னு.செய்றது ஒன்னு, செய்ததா சொல்றது வேறொன்னுனு வாழறதால இவிக மனோசக்தி வீணா போகுது. நிறைய பேருக்கு ஞாபக மறதியிருக்க காரணம் இதான். மல்டிப்பிள் டிஸ் ஆர்டருங்கற மனோ வியாதிக்கு இந்த நிலைதான் ஆரம்பம்.
ஏண்டான்னா இந்த சொசைட்டியே ஹிப்பாக்ரட். இதுல உண்மைய சொல்லிட்டா நாஸ்திதான்.குறி விரைச்சா அத சொல்ல கூச்சம். சுய இன்பம் அனுபவிக்கிற வயசுல அதை சொல்ல கூச்சம். தே. கிட்டே போனப்ப பயத்துல விரைக்காம போனத சொல்ல கூச்சம். நடந்தது ஒன்னுன்னா சனத்துக்கு சொல்றது வேறொன்னு.
எப்படியோ அந்த காலத்துலயே நான் அந்த ஹிப்பாக்ரசிய விட்டு வெளிய வரமுடிஞ்சது என் அதிர்ஷ்டம். இல்லாட்டி என் ப்ளாகுக்கு நிர்வாண உண்மைகள்னு ஸ்லோகன் வச்சிருக்க முடியாதே.
ஒருத்தனோட கேரக்டர் டிடர்மின் ஆறதே செக்ஸ் விஷயங்களை எப்படி பார்க்கிறான். (எந்த கோணத்துல) ,எப்படி புரிஞ்சிக்கிறான், எப்படி கம்யூனிக்கேட் பண்றாங்கறத பொருத்துதான்.
எந்த இழவா இருந்தாலும் காமெடி டச்சோட அதை ஷேர் பண்ணிக்கிறது என் ஸ்டைலா இருந்ததால எனக்கு நான் உண்மையா இருக்க முடிஞ்சது. அதனாலதான் செக்ஸை ஜெயிக்கனும்னா அதோட போராடறது வீண் வேலை. அதனால அது மேல இருக்கிற கவர்ச்சிதான் அதிகரிச்சுக்கிட்டே போகும்னு டிசைட் பண்ணேன்.
செக்ஸை அவெய்லபிலிட்டில வச்சிருக்கும்போதே அதை பாதி ஜெயிச்சுட்ட மாதிரிதான். அனுபவிச்சாச்சுன்னா முழுக்க ஜெயிச்ச மாதிரின்னு புரிஞ்சிக்கிட்டேன். ஜஸ்ட் 22 வயசுல கல்யாணம் தான் இதுக்கு சொல்யூஷன். இந்த டிஸ்டர்பன்ஸை வச்சிக்கிட்டு ஒரு ம..ரையும் சாதிக்க முடியாதுனு முடிவு கட்டித்தான் 1989ல லவ் மேரேஜ். ஆனா இந்த ஹிப்பாக்ரட் உலகம் நான் திருட்டு சுகம் அனுபவிச்சதையெல்லாம் ரெகக்னைஸ் பண்ணின இந்த ஹிப்பாக்ரட் பெரிய மனிதர்கள் " இந்த வயசுல இதெல்லாம் தகுமா"ங்கற ரேஞ்சுல கடி கடின்னு கடிச்சாங்க. "ஏற்கெனவே 5 வருசமா காமத்தோட போராடித்தான், அதுல ஜெயிக்கனுங்கற எண்ணத்துல தான்யா இந்த லவ் மேரேஜு"ன்னு சொன்னாலும் அவிக ஏத்துக்கலை. பிரிச்சு தொலைச்சானுவ.
மேலுமொரு இரண்டு வருசம் ஹிப்பாக்ரட் லைஃப். 1991 ல மறுபடி லவ் மேரேஜ். பெண்ணை முழுக்க தரிசிச்சி , பெண் குறித்த பிரமைகளை அகற்றி, செக்ஸ் குறித்த அல்லாடல்களை தவிர்க்க ஒரே வழி கல்யாணம் கட்டிக்கிடறதுதான்.
கல்யாணங்கற அமைப்பு விசித்திரமானது . நீங்க செக்ஸுக்காகத்தான் கல்யாணம் பண்றிங்க. ஆனால் அந்த ஏற்பாடு செக்ஸுவல் அர்ஜையே காலி பண்ணிரும். ( உண்மையா, நேர்மையா வாழ்ந்திருந்தா) செக்ஸ்ல இருந்து விடுதலை பெற திருமணத்தை விட உத்தமமான மார்கம் வேறு கிடையாது. ஐஸ்வர்யா ராயையே கட்டினாலும் அங்கே இருக்கப்போவது மனைவி என்ற ஜந்துதான். வண்டி வண்டியாய் கற்பனை வளம் இருந்தாலும் மனைவி என்பவளை வேறு விதமாய் பார்க்கவே முடியாது. மார்க்கெட்டிங் நெசசிட்டி தீர்ந்து போன நிலையில் பெண் தன் சுயரூபத்தை காட்டுவாள். அதை சகித்துக்கொள்ள எவராலும் முடியாது. ( தாய் குலம் என் மீது போர் அறிவிப்பு செய்ய ஆயத்தமாவது தெரிகிறது. சற்றே பொறுமையுடன் தொடர்ந்து படியுங்கள்)
ஆண் விஷயத்திலும் இதே நிலைதான். . கல்யாணத்துக்கு முன்பு அவன் இவன் என்று வித்யாசங்கள் உண்டோ என்னவோ திருமணத்துக்கு பின் அதிலும் 2 வருடங்களுக்கு பின் இருப்பது ஒரே ஒரு ஜந்துதான் அதன் பெயர் கணவன்.அபிஷேக் பச்சன், அஜீத்து எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடிதான்.
நீங்க தம்பதிகளை அப்சர்வ் பண்ணா ஈஸியா கண்டுக்கலாம். ஒருத்தர் சேடிஸ்டா இருப்பார். இன்னொருத்தர் மசாக்கிஸ்டா இருப்பார். கணவன் சேடிஸ்டுன்னா மனைவி மசாக்கிஸ்டா இருப்பாங்க. மனைவி சேடிஸ்டா இருந்தா கணவன் மசாக்கிஸ்டா இருப்பான். பகலெல்லாம் இப்படியே நாடகம் நடக்கும்.
. தம்பதிகள் இரவில் செய்வதெல்லாம் என்னவென்றால் தங்கள் பாத்திரங்களை மாற்றிக்கொள்வதுதான். பகலில் சேடிஸ்டாக இருக்கும் கணவன் இரவில் மசாக்கிஸ்டாக மாறுவான். பகலில் மசாக்கிஸ்டா இருக்கிற மனைவி இரவில் சேடிஸ்டா மாறுவாள்
//1989ல லவ் மேரேஜ்// //1991 ல மறுபடி லவ் மேரேஜ்.//
ReplyDeleteஅப்ப இரண்டா?
1989 ல கடிச்ச ஹிப்பாக்ரட் பெரிய மனிதர்கள் 1991 ல கடிக்கலையா?
குறும்பன் அவர்களே,
ReplyDeleteவிதி தேவன் செய்த குறும்பால் முதற்காதல் கல்யாணத்தில் முடிந்தும் அம்போவாகிவிட்டது.1989ல் கடித்த ஹிப்பாக்ரட்டுகள் 1991ல் கடிக்கவில்லையா என்றால் கடிக்கத்தான் செய்தார்கள். ஆனால் இவன திருத்த முடியாதுப்பா என்று விட்டுவிட்டார்கள்