Friday, February 19, 2010

விலை வாசி உயர்வை தடுக்க

முதலில் அரசு தன் செலவினங்களை பாதியாக குறைக்க வேண்டும்.
அதில் தலையாயது ராணுவசெலவு. அதையடுத்தது காவல்துறைக்கான நிதி ஒதுக்கீடு. இவற்றை குறைப்பதற்கான வழிகள்:
1.சீனா ,மற்றும் பாக்கிஸ்தானுடன் எல்லைதகராறு உள்ள நிலப்பகுதிகளை ஐ.நா சபைக்கு ஒப்படைக்க வேண்டும். சீனா மற்றும் பாக்கிஸ்தானும் அப்படியே செய்ய நிர்பந்திக்க வேண்டும். மேற்படி நிலப்பகுதியின் பாதுகாப்பை சர்வதேச ராணுவமும், நிர்வாகத்தை ஐ.நா சபையும் மேற்கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும்.

2.நாட்டில் உள்ள தீவிர வாத குழுக்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் சிவில் நிர்வாகத்தில் பங்கு கொள்ள அழைப்பு விடுக்க வேண்டும். அதை அவை ஏற்றால் திறந்த மனதுடன் அரசு வளர்ச்சிப்பணிகளில் அவற்றை பங்கேற்க அனுமதிக்க வேண்டும். தனி நாடு கேட்கும் குழுக்களுக்கும் இந்த வாய்ப்பு தரப்படவேண்டும். (தனி நாடு தானப்பா எல்லாம் இதற்கு அவை சம்மதிக்காவிட்டால் மனித உரிமைகள் பெயரில் மேற்படி தீவிர வாத குழுக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் என்.ஜி.ஓக்கள் மற்றும் அமைப்புகளுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும்.

3.ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் 3 செட்ஸ் ஆஃப் ஸ்டாஃபை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு செட்டும் ஒரு நாளைக்கு 8 மணி நேரமே வேலை செய்யும்படி ஏற்பாடு செய்யவேண்டும். இதனால் ஒவ்வொரு நடவடிக்கையும் ஸ்டேஷன் டைரியில் எழுதப்பட வேண்டி வரும். குற்றத்தடுப்பு, முதற்கட்ட விசாரணை மற்றும் வழக்குபதிவு செய்வதோடு காவல் துறையின் கடமை முடியவேண்டும். வழக்கை நடத்துவது, தண்டனை வாங்கித்தருவதெல்லாம் வேறொரு சுதந்திர அமைப்பு மேற்கொள்ள வேண்டும். இதனால் குற்றத்தடுப்பு, முதற்கட்ட விசாரணை மற்றும் வழக்குபதிவு செய்தல், தண்டனை வாங்கித்தருதல் வேகம் பெறும். தவறு செய்பவன் யோசிக்க ஆரம்பிப்பான்.குற்றங்கள் குறையும்

4. நாடெங்கிலும் உள்ள நிலதகராறுகளை பைசல் செய்ய விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். (அதற்குமுன் நீதித்துறையில் உள்ள காலியிடங்களை போர்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்). லேண்ட் ரிக்கார்ட்ஸை டிஜிட்டலைஸ் செய்து கணிணி மயமாக்க வேண்டும்.

5. வசதிபடைத்த குடும்பங்களுக்கு தம் வாரிசுகளுக்கு பால்ய விவாகம் செய்ய அனுமதி தர வேண்டும். , விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். பாலியல் தொழிலாளிகளுக்கு செக்ஸ் எஜுகேஷன் & நோய் தடுப்பு விழிப்புணர்ச்சி வழங்க வேண்டும். ஓரின புணர்ச்சிக்கும் சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்.

நிர்வாக செலவுகள்:
அரசியல் சாசன திருத்தம் மூலம் நேரிடை ஜன நாயகத்துக்கு மாறவேண்டும். பாராளுமன்ற தேர்தலா ? பிரதமருக்கு ஒரு ஓட்டு, எம்.பிக்கு ஒரு ஓட்டு, சட்டமன்ற தேர்தலா? முதல்வருக்கு ஒரு ஓட்டு எம்.எல்.ஏவுக்கு ஒரு ஓட்டு.பிரதமர் & முதல்வருக்கு வீட்டோபவர் இருக்க வேண்டும். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் , ஆட்சி கவிழ்ப்பு, இடை தேர்தல் எட்செட்ரா இருக்காது.எம்.எல்.ஏ ,எம்.பி செத்தால் நோ இடை தேர்தல். ஜெயித்த கட்சியே இன்னொரு ஆளை நாமினேட் பண்ணிக்கனும். இதனால் பல கோடி ரூபாய்கள் மீதமாகும்.

சட்டமன்ற கூட்டம், பாராளுமன்ற கூட்டமெல்லாம் வீடியோ கான்ஃப்ரன்ஸிங்க் மூலமாவே நடத்தனும்.

தலைமை செயலக ஊழியர்கள் கூட தம் வேலைகளை கம்ப்யூட்டர் நெட் வொர்க்கிங் மூலம் செய்யனும்.

போக்குவரத்து கழகம் போன்ற அரசு சார் நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தில் அதன் ஊழியர்களுக்கு, மொத்த முதலீட்டில் அவரவர் சம்பளத்தின் அடிப்படையில் (ரேஷோ) பங்கு தரவேண்டும்.

நஷ்டம் வந்தாலும் அதே ரேஷோவில் சம்பளத்தில் பிடிக்கப்பட வேண்டும்.

அரசு, அரசு சார் நிறுவன, தனியார் கட்டிடங்களில் டைம் ஷேர் முறையில் இதர நிறுவனங்கள் செயல் படவேண்டும்.

அரசு பள்ளிகள், ஐடிஐ போன்றன தம் நிர்வாக செலவில் முதலில் 30 சதமாவது தாமே ஈட்ட வழி வகை செய்ய வேண்டும். (உம் : காற்றாலை, கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ், மரம் நடுதல், தோட்டம் போடுதல், பயோ கேஸ் இத்யாதி)

பஞ்சாயத்து, வார்டு அளவில் வளர்ச்சி நல திட்டங்கள் தீட்டப்பட்டு மானில அளவில் உள்ள திட்ட ஒருங்கிணைப்பு அமைப்பால் பரிசீலிக்கப்பட்டு, சேங்க்ஷனாகி பஞ்சாயத்து,வார்டு மெஷினரி மூலமே அமலாகனும். மண்டல,மாவட்ட அளவில் திட்டமிடுவதற்காக உள்ள அமைப்புகள் கலைக்கப்பட்டு திட்ட அமலுக்கான மெஷினரியில் இணைக்கப்படவேண்டும்.

இந்தியா நம்ம நாடு. நம்மை நாமேதான் ஆளனும். ஸோ ஒவ்வொரு பிரிவினருக்கும் சங்கங்கள் இருக்கனும் . அவிகளுக்கு சிவில் நிர்வாகத்துல பங்கு தரனும்.
உ.ம்:
சேம்பர் ஆஃப் காமர்ஸ் வணிக வரி வசூலுக்கு பொறுப்பேத்துக்கனும்
வேலையில்லாத இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கும், சிறு தொழில் வளர்ச்சி கழகத்துக்கும் பொறுப்பேத்துக்கனும்

( நிர்வாக செலவுகளை பாதியாய் குறைக்க "எக்கானமி பேக்கேஜ் " என்ற பெயரில் இன்னும் நூற்றுக்கணக்கான ப்ரபோசல்ஸ் என்னிடம் உள்ளன. எந்த மானில அரசாவது, அல்லது மத்திய அரசாவது என் மெயிலுக்கு தொடர்பு கொண்டால் "முற்றிலும் இலவசமாக" தர நான் தயார்.)

No comments:

Post a Comment