Saturday, February 13, 2010

முத்துகுமார் ஒரு மன நோயாளி


ஈழத்தமிழர்களின் படுகொலையை , மத்திய மானில அரசுகளின் அலட்சியப்போக்கை கண்டித்து தீக்குளித்து இறந்த இளைஞர் முத்துகுமார் பெயரால் மானிலமெங்கும் பாசறைகள் அமைக்கப்படும் என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அறிவிப்புக்கு எதிர் வினையாக இந்த பதிவு போடப்படுகிறது.

" புதிதாக தமிழகத்துக்கு வருபவர்கள் சுவரெழுத்துக்களையும், பேனர்களையும் பார்த்து இங்கு ஏதோ பெரிய யுத்தம் நடக்கிறது என்று நினைத்துக்கொள்வார்கள் "என்று எழுத்தாளர் நா.பார்த்தசாரதி குறிப்பிட்டதாய் படித்துள்ளேன்.(அவரது கருத்தை மேற்கோள் காட்டுவதால் அவரது அனைத்துக்கருத்துக்களையும் நான் ஏற்றுக்கொள்வதாய் பொருளில்லை.)

முத்துக்குமார் பாசறை என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள அமைப்பு கூட அதைத்தான் நினைவு படுத்துகிறது.பாசறை என்றால் என்ன? அங்கு ஆயுதங்கள் இருக்கவேண்டும்.

நாளை மு.கு பாசறைகள் அமைந்தாலும் அவற்றில் என்ன இருக்கும்? காலையில் பாடாவதி செய்தி பத்திரிக்கைகள், எச்சி டீ க்ளாஸுகள், இருட்டினால் குவார்ட்டர் பாட்டில்கள் இருக்கக்கூடும் அவ்வளவே .அந்த இழவிற்கு பாசறை என்ற பெயர் ஏதுக்கு ?

தொல்.திருமாவளவன் தம் கொடுவாள் மீசை கொண்டு கலைஞரின் ஷூவுக்கு பாலிஷ் போட்டது போதாதென்று கலைஞரின் ஆணையை சிரமேற்கொண்டு இலங்கைக்கும் சென்று ராஜபக்ஸேவை பேட்டிக்கண்டு திரும்பி வந்து (பாலீஷ் போடலை என்று ஜூவி தொடரில் திருப்பி திருப்பி சொல்லியிருக்கிறார். தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு "அடுசு தொக்கனேலா காள்ளு கடகனேலா ?" ( நரகலை மிதிப்பானேன் கலை கழுவுவானேன்) திருமாவுக்கு பாவம் இந்த பழமொழி தெரியாது போலும்.

எப்படியோ உலக தமிழின காவலர் (?) கலைஞர் ஈழத்தமிழர்களை காப்பதே என் முதற்கடமை என்ற ஒன் லைனுடன் கதை திரைக்கதை எழுதி திரையிட்ட திடீர் திருப்பங்கள் நிறைந்த வண்ணப்படத்தில் திருமாவுக்கு கிடைத்ததென்னவோ விதூஷக பாத்திரம்தான். "அடங்க மறு சீறியெழு"என்று ஒடுக்கப்பட்ட இனத்து இளைஞர்களை அறை கூவி அழைத்த இயக்கத்தின் தலைவர் பெட்டிப்பாம்பாய் அடங்கி கிடப்பதன் மர்மமென்னவோ தெரியவில்லை.

இந்தியா எம்.பிக்களால் அல்ல கட்சிகளுக்கு தேர்தல் நிதி வழங்கும் டாப் டென் கோடீஸ்வரர்களால் ஆளப்படுகிறது என்பது உலகறிந்த ரகசியம் .. தமிழகத்துக்கு பத்து பேரால் ஆளப்படும் இழி நிலையை தவிர்க்க கலைஞர் தாம் கொள்ளையடித்து சேர்த்த கோடிகளை வாரி இறைத்து வெல்லச்செய்த எம்.எல்.ஏக்களை கொண்டு ஆளப்படும் பாக்கியத்தை ஏற்படுத்தி உள்ளார்.

கலைஞர் ஒரு அரசியல்வாதி என்ற நிலை மாறி பலகாலம் ஆகிறது. அவர் ஒரு பணமுதலை. அவர் குடும்பம் ஒரு கொள்ளைக்கார கூட்டம் என்பது குக்கிராமம் கூட அறிந்த ரகசியம். ஒடுக்கப்பட்ட வர்கத்துக்கு பிரதி நிதித்துவம் வகிக்கும் தொல்.திருமா கலைஞரின் தலைமையில் எந்த அடிப்படையில் செயல்படுகிறார் என்பது எத்தனை முக்கி யோசித்தாலும் ஸ்பார்க் ஆக மறுக்கிறது.

சரி ஒழியட்டும் கலைஞர் தலைமையில் லோக்கல் ஒடுக்கப்பட்ட வர்கத்துக்குத்தான் எதையும் செய்ய முடியவில்லை. கடல் கடந்த ஒடுக்கப்பட்ட வர்கத்துக்காச்சும் குரல் கொடுக்கலாம் என்று நினைத்தாரோ என்னமோ துரியோதனாதி கூட்டத்தில் கர்ணனாக மாட்டிக்கொண்டு விழிக்கிறார் என்று மனதை தேற்றிக்கொள்ளலாம் என்று பார்த்தால் மானிலமெங்கும் முத்துகுமார் பெயரால் பாசறை அமைப்போம் என்று அழைப்பு விடுக்கிறார்.

முத்துகுமார் யார் ? தோற்றுப்போன எழுத்தாளன். தோற்றுப்போன உதவி இயக்குனர் இவர் சாதித்தது என்ன? தற்கொலை செய்தார். எப்படி உடலெங்கும் குண்டுகள் கட்டிக்கொண்டு இலங்கை ராணுவ முகாமுக்குள் நுழைந்தாரா ? இல்லை . வெடி பொருட்கள் நிறைந்த வாகனத்தை ஓட்டிச்சென்று ராஜபக்சே கான்வாய் மீது மோதினாரா ? இல்லை . பின்னே என்ன தான் செய்தார் ஆயிரம் கனவுகளோடு பெற்றோர் பெற்று வளர்த்த இன்னுடலை அவர்தம் கனவுகளை கரியாக்கி தம்மை தீக்கிரையாக்கி கரியானார்.

டெப்ரஷன், தாழ்வு மனப்பான்மை யாதார்த்த வாழ்வின் சூனியத்தன்மை , எஸ்கேப்பிசம் ( அசலான பிரச்சினைகளிலிருந்து மனதை பொது பிரச்சினைகளின் பால் திருப்பிக்கொள்வது) இப்படி ஆயிரத்தெட்டு காரணங்களால் கோழை போன்று நாட்டுக்கு, வீட்டுக்கு, இயற்கைக்கு துரோகம் செய்து அற்பாயுளில் முடிந்து போன சாமானியர். அவர் பெயரால் பாசறைகள் அமைய வேண்டிய அவசியம் என்ன?

மனிதர்கள் பல்வேறு போர்வைகளில் மனிதர்கள் செய்வது இரண்டையே. ஒன்று கொல்லுதல் இரண்டு கொல்லப்படுதல். முத்துகுமாருக்கு சேடிஸ்டான ஒரு டைரக்டனிடம் அசிஸ்டன்ட் டைரக்டர் வேலை கிடைத்திருந்தால் பாவல் தவணையில் செய்திருப்பார் தற்கொலை. ஏதேனும் நாலணா தமிழ் பத்திரிக்கையில் சப் எடிட்டன் போஸ்ட் கிடைத்து சேடிஸ்டான எடிட்டனின் கீழ் வேலை செய்திருந்தாலும் தவணையில் செய்திருப்பார் தற்கொலை. அந்த வாய்ப்பு கிடைக்காததால் சிங்கிள் செட்டில் மென்டில் முடிந்தது காரியம்.

உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்களும் இது போன்ற ஃபேண்டசிக்கு தூண்டுவதுண்டு. ஆம் இதுவும் ஒரு வகை ஃபேண்டசிதான். நான் பெரிய தியாகம் செய்கிறேன். என் பெயர் வரலாற்றின் பொன்னேடுகளில் படி(தி)க்கப்படும். என் தற்கொலை செய்தியை கேட்டதும் மத்திய கேபினட் கூட்டம் கூடும். முப்படை தலைவர்கள் அக்கூட்டத்துக்கு அழைக்கப்படுவார்கள் . இலங்கைக்கு தீவிர எச்சரிக்கை விடுக்கப்படும். இருபத்து நான்கு மணி நேர கெடு விதிக்கப்படும். இருபத்து நான்கு மணி நேரம் கழிந்த மறு நிமிடம் இந்திய ராணுவம் இலங்கையில் கால் பதிக்கும். (மிச்சம் மீதி கிழவிகளை ரேப் செய்யும் ?) தமிழ் ஈழம் அமையும்..இந்த எண்ணங்களெல்லாம் ஃபேண்டசி அல்லாது வேறென்ன?

மு.கு பெயரால் பாசறைகள் அமைப்பதன் மூலம் அவரை ஆதர்சமாக முன்னிருத்துகிறார் திருமா. தற்கொலை செய்துகொள்வதுதான் ஆதர்சமா?

முதல் சொந்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கியிருந்தால் மு.கு தற்கொலை செய்திருப்பாரா? ஏன் சங்கர் தற்கொலை செய்யவில்லை ? மு.கு தற்கொலைக்கு பல்லாயிரக்கணக்கான உந்துசக்திகள் உள்ளன. அவற்றை மனவியல் கோணத்திலேயே அல்லாது பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து இது போன்ற தற்கொலைகள் எதிர்காலத்தில் நிகழாதிருக்க அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இங்கே தற்கொலை செய்பவனெல்லாம் தியாக செம்மல் என்று தானே புகழப்படுகிறான். இந்தி எதிர்ப்பாகட்டும், எம்.ஜி.ஆர் சாவாகட்டும் , கலைஞர் கைதாகட்டும் எத்தனை பேர் தற்கொலை செய்தான் என்பது ஒரு அளவுகோலாகி இருக்கிறது. "ஏ சரித்ர சூசினா ஏமுன்னதி கர்வ காரணம்?" (எந்தவரலாற்றை பார்த்தாலும் பெருமைப்பட என்ன இருக்கிறது?) என்று ஸ்ரீ ஸ்ரீ சொன்னது போலத்தான் சமீப கால தமிழக அரசியல் சரித்திரம் இருக்கிறது.

மு.கு பேரால் பாசறை அமைப்பது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடுவதோடு தற்கொலை செய்பவன் தான் வீரன், தீக்குளிப்பவன் தான் ஹீரோ என்ற தவறான மெசேஜ் இளைய தலைமுறைக்கு செல்லும் அபாயம் இருக்கிறது. எனவே திருமா தம் அறிவிப்பை மறு பரிசீலனை செய்யவேண்டும்.

இலங்கை பிரச்சினையில் தும்பை விட்டு வாலை பிடித்து ஓடியது யார் குற்றம். கடந்த பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்து காங்க். வேட்பாளர்களும் டிப்பாசிட் இழந்திருந்தால் சோனியா தூங்கியிருபபரா? இல்லை ராணுவத்தை தான் தூங்க விட்டிருப்பாரா?

ஏதிலார் குற்றம் போல் தம் குற்றமும் காண வேண்டியுள்ளது. இலங்கை அரசின் பாராபட்சத்தை வெளுக்கும் நம்மவர்கள் மலையக தமிழர்கள் பால் காட்டியதும் இதுதானே.

துரதிர்ஷ்ட வசமாய் அங்கு மெஜாரிட்டி இன மக்களுக்கு மைனாரிட்டி மக்களுக்கே உரிய இன் செக்யூரிட்டி ஃபீலிங் வந்து விட்டது . அரசு தரப்பு மிதவாதிகளை மிதி மிதி என்று மிதிக்க புலிகள் செல்வாக்கு பெற்றனர். பிரபாகரனேனும் சற்று தாராள மனதுடன் இதர இயக்கங்களையும் அணைத்து, மிதவாதிகளையும் ஒருங்கிணைத்து மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்பியிருந்திருக்கலாம். அவருக்கு அந்த மனப்பான்மை இல்லையா? அல்லது அவரது ஆலோசகர்கள் தூர திருஷ்டியுடன் சிந்திக்கவில்லையா என்று ஆராய்வதெல்லாம் ஆன கல்யாணத்துக்கு மேளம் கதையாகிவிடும்.

மிகை தவிர்த்து யதார்த்தமாக சிந்தித்து செயல்பட்டாலன்றி மிச்சம் மீதி உள்ள முள்வேலிக்கு பின்னான தமிழர்களையும் காப்பாற்ற முடியாது போய்விடும் என்பதை மனதிலிருத்தி திருமா போன்றவர்கள் செயல்பட வேண்டும்.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தாக் கொல்லப்பட்டதையும், தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டதையும்,பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதையும் , இளைஞர்கள் புலிகளோ என்ற ஐயத்தின் பெயரில் நரக வேதனைக்குள்ளாக்கப்பட்டதையும் மனிதன் என்று சொல்லிக் கொள்ளும் நன்றியில்லாத சொறி நாய் கூட ஏற்றுக்கொள்ளாது. புலிகள்,பிரபாகரன்( ராஜீவ் படு கொலை) ஆகியோரை ஆதரிக்காதவர்கள் கூட ராஜ பக்சே அரசின் படுகொலைகளை ஆதரிக்கமாட்டார்கள்.

இது க்ளோபல் விலேஜ் யுகம். எல்லாம் வியாபார மயம். அகந்தையால் ஆட்டம் போடும் ஒருவனை தலையில் என்னதான் அடித்தாலும் அவன் அகந்தை மேலும் மேலும் கிளறப்படுமே தவிர குறையாது. இலங்கைக்கு சீனா உதவுகிறதாம். இந்தியாவும் உதவித்தான் ஆக வேண்டுமாம்.

உலகமெங்கும் பரவி வாழும் தமிழ் மக்கள் அனைவரும் சீனத்தில் வேலை செய்வதில்லை. சீன உற்பத்திகளை வினியோகிப்பதில்லை.சீனம் செல்வதில்லை என்று முடிவெடுங்கள். அதை முழுமூச்சாய் அமல்படுத்துங்கள். சீனாவுக்கு அஸ்தியில் ஜுரம் காணும். இலங்கை அரசு மண்டியிடும். அதை விடுத்து பாசறை அமைப்போம் என்பது இ.பா.கருத்தைதான் வலுப்படுத்தும்.

4 comments:

  1. ஒரு லட்சம் ஹிட் அடித்தற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இந்தியன் அவர்களே !
    வாழ்த்துக்கு நன்றி .

    ReplyDelete
  3. கவிதா நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்.உலக வரலாற்றை-இந்திய பாரம்பரியத்தை எடுத்து கொண்டாலும் -ஒரு போர் தோற்கும்போது -பல தற்கொலை நடந்து இருக்றது.தியாகங்கழுகாக பல தற்கொலை நடந்து இருக்றது

    உளவியல் ரீதியாக,தாங்கமுடியாத சோகம் வாழ்கையில் நிகழும் போது,ஒருகன நேரத்தில் தற்கொலை முடிவு எடுக்கப்பட்டு,செயல்படுதபடிகீறது.அந்த நேரத்தை கடந்து விட்டால் தற்கொலை எண்ணம் நம்மை விட்டு போய்விடும்.

    ஆனால் முத்துக்குமார் அப்படி அல்ல .ஈழ போர் அவருக்கு மிகபெரிய சோகத்தை தருகிறது .ஆனால் ஈழ போரை நீருத்த தன்னால் (முதுகுமரால்) முடியாது .இந்திய அரசால் முடியும்.என்று நினைத்தார்.இந்திய அரசை தமிழகம் முழுவதும் நிர்பந்தித்தால் -இந்திய அரசு -போரை நிறுத்த உடன்படும் என்று நினைத்தார்.

    தமிழம் முழுவதும் எழுச்சியை ஏற்படுத்த -தன் மரணம் ஒரு பொறியாக(Spark)-ஆரம்பமாக இருக்கும் என்று நம்பினார்.முத்துக்குமாரின் நான்கு பக்க கடிதத்தை படித்து பார்த்தல் உங்களுக்கு இது புரியும்.

    தற்கொலை செய்து கொள்ள -இரண்டு பேரால் தான் முடியும் -ஒருவர் வீரன் ,மற்றவர் -மனநோயாளி.

    முத்துக்குமார் வீரன்.அவரின் கடிதத்தை படித்து பார்த்தல் இது உங்களுக்கு புரியும்.

    காமராஜர் -காந்தி ,சுபாஸ் சந்ரபோஸ் பெயறை நாம் குழந்தைகளுக்கு வைக்கிறோம் -ஏன? -அவர்களின் தியாகங்களை வரும் சந்ததிகள் மறக்க கூடாது என்பதற்காக.

    முத்துக்குமார் பாசறை ஏன் ?-அவரின் தியாகம் வரும் சந்ததிகள் மறக்க கூடாது என்பதற்காக.

    திருமா தமிழ் தேசியம் பேசுவதாழும் -முத்துக்குமார் பாசறை திறந்தாலும் -வேறு சாதி இந்துக்கள் யாரும் ஒட்டு போடா போவது இல்லை.

    திருமா -உண்மை தமிழன் என்பதால்-முத்துக்குமார் பாசறை -ஏற்படுகிறார்.

    திருமா -ஈழ விரும்பி என்பது - எதிரி -ராஜபக்சேவுக்கு

    தியாகி முத்துக்குமாருக்கு -தெரியும் !!!!

    //உலகமெங்கும் பரவி வாழும் தமிழ் மக்கள் அனைவரும் சீனத்தில் வேலை செய்வதில்லை. சீன உற்பத்திகளை வினியோகிப்பதில்லை.சீனம் செல்வதில்லை என்று முடிவெடுங்கள். அதை முழுமூச்சாய் அமல்படுத்துங்கள். சீனாவுக்கு அஸ்தியில் ஜுரம் காணும். இலங்கை அரசு மண்டியிடும்//

    உங்களின் இந்த கருத்தோடு மாத்திரம் நான் உடன்படுகிரன்

    முத்துகுமாரின் தியாகத்தை கொச்சை படுத்த வேண்டாம் !!!!

    த சேகர்
    மருதிபட்டி -அஞ்சல்
    அரூர் -tk

    ReplyDelete
  4. Rouse அவர்களே,
    நீங்கள் வரலாற்றை பார்க்க சொல்கிறீர்கள். வரலாற்றை உருவாக்கியது (எழுதியதை சொல்லவில்லை) குறைபட்ட மனிதர்கள்தான். ஒரு சங்கதி வரலாற்றில் இருக்கிறது என்ற மாத்திரத்தில் அதை அங்கீகரித்துவிடமுடியாது.( வரலாற்றில் சதி, விதவைக்கு மொட்டை,பால்ய திருமணம் என்று பல ஆயிரம் அநாகரீகங்கள் உள்ளனவே)

    கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். அந்த தவறுகள் தொடராது பார்க்க வேண்டும். வீரன் என்றுமே தற்கொலைக்கு துணியமாட்டான். ( ஒரு வேளை எதிரியிடம் சிக்கி அதனால் ரகசியங்கள் வெளியாகி தன் அணிக்கு நட்டம் ஏற்படும் என்ற நிலையில் தற்கொலை என்பது ஒரு வியூகமாகலாம். அதையும் கூட நான் ஏற்கமாட்டேன் )

    நாடு, வீடு எல்லாவற்றையும் விட புனிதமானது இயற்கை. தற்கொலை இயற்கைக்கு செய்யும் துரோகம். மு.குமார் தற்கொலை ஒரு விபத்தாக பார்க்கப்படவேண்டுமே தவிர சாதனையாக பார்க்க கூடாது.

    மு.கு பாசறைகள் தற்கொலையை ஆதர்சமாக கொண்டு செல்லும் அபாயம் இருக்கிறது. எனவேதான் நான் எதிர்க்கிறேன்

    தங்கள் மறுமொழிக்கும், ஈழத்தமிழர்கள் பால் கொண்ட அக்கறைக்கு மிக்க நன்றி

    ReplyDelete