1.பையன் பேரு வேணாங்க எதுக்கு வில்லங்கம். இவிக வீட்ல கல்யாணமான தம்பதிங்க வாடகைக்கு குடியிருந்தாங்க. பையன் அந்த கல்யாணமான குட்டிய கணக்கு பண்ணிட்டான். அவள்+ ரெண்டு குழந்தைகளோடு உடு ஜூட். சாதி,சனம் வலை வீசி தேடியும் ஒன்னும் பேரலை. பையன் கொண்டு போன காசு தீர்ந்து போச்சு. கல்யாணமான குட்டி மெல்ல கழண்டுக்கிச்சு. புருஷனோட போய் ஒட்டிக்கிச்சு. பையன் சில மாசம் அனாதையா பனாதையா அலைஞ்சான். வீட்ல இருக்கிறவங்க பையனை பிடிச்சு கொண்டாந்தாங்க. காலம் ஓடுச்சு. பையனுக்கு சம்பந்தம் பார்க்க ஆரம்பிச்சாங்க.. கடைசில அவனுக்கு கிடைச்ச பொண்ணு ஏற்கெனவே கல்யாணமாகி ஒன்னை பெத்த கேஸு.
நீதி: அவன் கல்யாணமாகி குட்டி போட்ட குட்டிய தள்ளிக்கிட்டு போனான். அந்த கருமம் கல்யாணமாகி குட்டி போட்ட குட்டிய மனைவி ஆக்கிருச்சு.
2.பையன் பேரு ..வழக்கம் போல வேணாங்க. படிப்பு எஸ்.எஸ்.சி தான் .குடும்பம் லோயர் மிடில் க்ளாஸ்தான். ஏதோ தனியார் இன்ஷ்யூரன்ஸ்ல இறங்கினான். அந்த ஏஜென்சி இந்த ஏஜென்சினு எடுத்தான் நல்லாவே முன்னுக்கு வந்தான். எலிக்கு அறுவடை காலத்துல அறுபது பெண்டாட்டிங்கர மாதிரி ஒரு கல்யாணமான குட்டி மாட்டிக்கிருச்சு. அவளோட புருசன் பயங்கர டம்மி பீஸு. காஞ்ச தலை, ஆட்டு தாடி ,டப்பா கட்டு வேஷ்டியோட சுத்துவான். நம்மாளு சல்லுனு அவ வீட்டு பக்கத்துல இருக்கிற தியேட்டர்ல தன் டூ வீலரை பார்க் பண்ணிட்டு தன்னை அவள் கட்டில்ல பார்க் பண்ணிருவாரு. இது ஊரறிஞ்ச ரகசியம்.
நான் பல விதமா யோசிக்கிறது. "என்னங்கடா இது. அந்த கல்யாணமான குட்டிக்கு 7 ஆவது இடம்( கணவனை காட்டற இடம்) அவளோட புருசன் ஏதோ கெட்டு போயிதான் காஞ்ச தலை, ஆட்டு தாடி ,டப்பா கட்டு வேஷ்டியோட சுத்துரான். நம்மாளு அவளோட படுத்துக்கறான். நல்லாதான் இருக்கிறான். அப்போ அவளோட ஜாதகத்துல 7 ஆவது இடம் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருச்சா" இப்படி பல யோசனை. சீன் என்னடான்னா என்னாச்சுன்னே தெரியாது அந்த கல்யாணமான குட்டியோட புருசன் இருக்கானே அதே ரேஞ்சுக்கு நம்மாளூ வந்துட்டான். என்ன ஏதுன்னா வாய திறக்க மாட்டேங்கிறான். ஆஃபீசு போச். டூவீலர் போச், பந்தா போச், முகத்துல களை போச்.
ஓஹோ அவன் பெண்டாட்டிய இவன் யூஸ் பண்ணான் அப்போ அவன் கர்மம் இவனுக்கு வந்துருச்சுனு புரிஞ்சிக்கிட்டேன்.
No comments:
Post a Comment