Saturday, October 23, 2010

சிங்கம்ல்ல... On Survival of the fittest

 சுகுமார்ஜி பக்கங்கள் :)


 நம்மை  கூண்டில் இருத்தி நமக்கு நம்மை தெளிவு செய்யும் சுகுமார்ஜியின் அற்புத பதிவு .டோன்ட் மிஸ் இட். ப்ளீஸ் ஷேர் இட் டு யுவர் ஃப்ரெண்ட்ஸ் ‍ 

- சித்தூர் .எஸ்.முருகேசன்
கூண்டுக்குள் இருந்த சிங்கம் சொல்லிக்கொண்டது...

'காட்டுக்குள்ள வந்து கேட்டுப்பாருங்கடா! நான் தான்டா காட்டுல ராஜா...'

சிங்கம் கேனத்தனமாக சொல்லுவதாக இருந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்களில் பலரும் 'அப்படியா?' என்றனர்

அந்த 'அப்படியா?' வில் இருந்த கிண்டல் அந்த அப்பாவி சிங்கத்திற்கு புரியவில்லை... ஒரு வேளை அதை புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் வரவில்லை போலும்...

ஒருவேளை அது இன்னமும் மனிதனாக மாறாது, மிருகமாகவே இருப்பதுதான் காரணமோ!...

சிலர் நெருங்கி வந்து 'அப்போ ஏன் கூண்டுல இருக்க?' என்று கேட்டனர்.

'உண்மைதான் சர்வைவல் ஆஃப் த பிட்டஸ்ட் ல தான் இங்கே வந்து மாட்டிகிட்டேன்' சிங்கம் பதிலளித்தது.

பரிதாபத்துடன் ஒருவர் கேட்டார்

'உன்னை யாராவது கொடுமை படுத்துறாங்களா?'

சிங்கம் முகம் திருப்பிக்கொண்டது... "கொய்யால... கூண்டுக்குள்ள இருக்கேன்... அதே உனக்கு தெரியலையே... சொன்னா புரியுமா?" கொட்டாவி விட்டபடி சிங்கம் தன் நாவால் மூக்கை ஈரப்படுத்திக்கொண்டது.

கேள்வி கேட்ட நபர் ' இந்த சிங்கத்துக்கு கொழுப்பை பாரேன்...மெனக்கெட்டு கேட்டா மூஞ்ச திருப்பிகிச்சு' என்னவாறே கூண்டை கடந்து சென்றான்.

'ஹாய்!'

குதூகல குரல் கேட்டு சிங்கம் தலைதிருப்பியது.

ஒரு சிறுவன் ஓடிவந்து கைக்கெட்டா தூரத்தில் நின்றவாறு...

'ஹாய் சிங்கம், எப்படியிருக்க?' என்றான் சிநேகத்துடன்...

சிங்கம் சட்டென எழுந்து நின்று பதிலுரைக்க விழைந்தது...

சிறுவன் திடுக்கிட்டு பின் தள்ளி நின்றவாறு பின்னால் திரும்பி பார்த்தான். அவனை நோக்கி வந்த ஒருவர், அருகில் வந்த பிறகு...

'பயப்படாதே சன்... நானிருக்கேன்...'

'நோ டாட், இந்த சிங்கம் லெசன்ல இருக்கிற விடவும் பயங்கரமா இருக்கு... ஐ லவ் திஸ் லைன் டாட்'

'ஆமா, அதுனால தான் கூண்டுல இருக்கு'

சிங்கம் அந்த தகப்பனை கண்கள் சுருக்கிக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தது.

'டாட், அது ஏதோ உங்க கிட்ட பேசுற மாதிரி இருக்கு. அதோட லாங்வேஜ் உங்களுக்கு தெரியுமா?'

'எனக்குத்தெரியாமலிருக்குமா? நானும் இது போல சிங்கமா இருந்தவன் தானே!'

சிறுவன் வியப்போடு பார்த்ததை போலவே சிங்கமும் தன் புருவம் உயர்த்தி வியந்தது.

'சன், இந்த சிங்கத்தை பார்த்தால் உனக்கு என்ன தோன்றுது?'

'சிங்கத்தோட வலிமை, கர்ஜனை, வேகம், ஆளுமை, வேட்டைத்திறன், ஆக்ரோசம் இதெல்லாமே டாட்'

சிங்கம் கண்கள் சுருக்கி புன்னகைத்தது.

'யா சன்... ஆனா இது எதுவுமே சிங்கத்திற்கு உதவாது தெரியுமா?'

சிங்கம் அதிர்ச்சிக்குள்ளாகியது...

'ஆமா, சன்... சர்வைவல் ஆஃப் த பிட்டஸ்ட், சிங்கத்திற்கு தெரியல்ல...'

'எனக்கு புரியல டாட்...'

சிங்கமும் தலை தொடங்கி வால் வரை சிலுப்பிக்கொண்டது.

'நீ குட்டிடா, நீ சிங்கமாகும் பொழுது நான் புரிய வைக்கிறேன்...'

'ஒகே டாட்... ஒரு சந்தேகம்... நீங்க சிங்கமா இருந்ததா சொன்னீங்க... அப்ப நீங்களும் கூண்டுல இருந்தீங்களா?'

'ஆமா, கொஞ்ச நாள்... பிறகு வெளிய வந்துட்டேன்'


சிங்கம் ஒருகண் சுருக்கி எப்படி என்பதாக பார்த்தது.

'இப்போ என்னவா இருக்கீங்க டாட்?'

'நான் இப்போ பாஃக்ஸ்... குள்ளநரி மை சன்...'

சிங்கம் கர்ஜித்தது...

'அப்போ உங்களுக்கு கூண்டு இல்லையா டாட்?'

'குள்ளநரிகள் கூண்டில் இருக்கமுடியாது... அப்படியே கூண்டில் போட்டாலும் தந்திரத்தால் தப்பிவிடும்... பொதுவா குள்ளநரிகள் நாட்டில், சுதந்திரமாத்தான் இருக்கும்.'

சிங்கம் தன் காலை தேய்த்துக்கொண்டு ஆக்ரோசமானது...

'அப்போ இந்த சிங்கமும், குள்ளநரியா மாறிட்டா வெளிய வந்திடுமா டாட்'

'நல்லா புரிஞ்சுகிட்டயே... ஆமா, மை சன்... ஆனா இந்த சிங்கம் கொஞ்சம் அடங்க மறுக்கிற சிங்கமா இருக்கு... இது வாழ்நாளெல்லாம் கூண்டிலேயே கழிக்க வேண்டியதுதான்...'

சிங்கம் இப்பொழுது நிலை கொள்ளாமல் அலைந்தது...

சிறுவன் சொன்னான்...

'என்ன சிங்கம், இது கூட தெரியாதா உனக்கு? உன்னப்போய் காட்டுக்கு ராஜான்னு யாரு சொன்னாங்க?'...

சிங்கம் ஆவேசத்தோடு கூண்டு கம்பியில் அறைந்தது. கூண்டுக்குள்ளிருந்து தப்பும் வகையில் அலைக்கழித்தது...

'வா... சன்... அதுக்கு கோபம் வந்திடுச்சு... நாம் போய்டலாம்...'

சத்தம் கேட்டு மேனேஜிங் டைரக்டர் காரில் வந்து இறங்கியவாறே....

'எவ்வளோ சொன்னாலும் நீ திருந்த மாட்டியா?' சொல்லியபடி தன் கைகளில் வைத்திருந்த பைஃல்களால் சிங்கத்தை அடிக்க முனைந்தார்...

தந்தையோடு போய்க்கொண்டிருந்த சிறுவன் திரும்பி பார்த்தபடி கேட்டான்...

'யாருப்பா அவர்?'

'அவர்தான் டிரைனர்... குள்ளநரியா மாத்தறாரு...'

'நீயும் அடிவாங்கிருக்கியா டாட்'

'இல்லவே இல்லை' குள்ளநரி சொன்னது

'சிங்கம்... பாவம் டாட்... '


பின் குறிப்பு; சிங்கத்திற்கு பதிலாக அவ்விடத்தில் உங்களை பொருத்திக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல...

6 comments:

  1. சுகுமார்ஜி சார்,
    நான் உங்களை பாராட்டினா சனம் சப்பு கொட்டிருவாய்ங்கனு தெரியும். ஆனாலும் உ.வ பட்டு இந்த கமெண்ட்.
    //நான் இப்போ பாஃக்ஸ்... குள்ளநரி மை சன்//

    ஒவ்வொரு அப்பனின் வாக்கு மூலமும் இதா தான் இருக்கும். ஆனால் ஏன் என்னைப்பாரு என்னைப்பாருனு பசங்களை இம்சை பண்றாய்ங்க‌

    //பொதுவா குள்ளநரிகள் நாட்டில், சுதந்திரமாத்தான் இருக்கும்//
    நெத்தியடி பாஸ்!

    //இந்த சிங்கம் கொஞ்சம் அடங்க மறுக்கிற சிங்கமா இருக்கு... இது வாழ்நாளெல்லாம் கூண்டிலேயே கழிக்க வேண்டியதுதான்.//
    இங்கே நான் ப்ரொட்டெஸ்ட் ஆறேன். அடிமைப்பெண் ஷூட்டிங் நடக்கறச்ச வாய் தைக்கப்பட்ட சிங்கம் கிணறு கணக்கா ஆழமான பள்ளத்துல இருந்து படக்குனு மேலே தாவி ஏறிருச்சாம். செட் ப்ராப்பர்ட்டிங்க தவிர சனமெல்லாம் டர்ராகி விர்ர்..

    அடங்க மறுக்கிற சிங்கம் ஒரு நாளில்லை ஒரு நாள் வெளிய வந்தே தீரும்.

    ஷூட்டிங் கலவரத்துல என்ன நடந்ததுனு கேப்பாய்ங்க. வாத்தியார் கவுனுக்குள்ள போட்டிருந்த அண்டர்வேர்ல இருந்து ஒரு கைத்துப்பாக்கிய எடுத்து காத்துல சுட்டாராம். அப்பாறம் சிங்கம் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைமுன்னு அஜீஸ் ஆயிருச்சாம்.
    //சிங்கத்திற்கு பதிலாக அவ்விடத்தில் உங்களை பொருத்திக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல... //

    இந்த நக்கல் தானே வேணாங்கறது.. நீங்க சொன்னதே எங்களை வச்சு.. எங்களுக்காக‌

    ReplyDelete
  2. செம சூப்பர்! நிஜ உலகில் பலர் வாழும் வாழ்க்கையை மனநிலை எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க!

    ReplyDelete
  3. சார்...எப்படி சார் ....எப்படி!!!!!!!

    நீங்களே ஒரு வசூல் ராஜா...ஜோதிடம்...வாஸ்து...பில்லி சூனியம்...ஊரை ஏமாத்தி வசூல் பண்ணறீங்க....

    இப்போ உங்க நண்பரும் ஏதோ கிராபிக்ஸ்...பேனர்...லோகோ...அது இதுன்னு ஊரை ஏமாத்த கிளம்பிட்டார் ....

    நல்ல சரியான ஜோடிதான் போங்க...

    ஏற்கனவே உங்க ப்ளாக் சீந்துவார் யாருமில்லை.....இதுல இந்த மொக்கை பதிவெல்லாம் போட்டா வர்ற நாலு பேரும் வரமாட்டார்கள்...

    சும்மா சொல்ல கூடாது...நீங்க 100 ரூபாய் கொடுத்து போட்ட ஒரு பேனருக்காக உங்க நண்பர் நல்லாவே கூவுறார்...

    ஏற்கனவே ஒரு வெட்டி ஆபிசர் தொல்லை தாங்க முடியலை...அதுல ரெண்டாவது அரை கிறுக்கு வேறையா...........

    போங்கசார் போய் எதாவது வேலை வெட்டி இருந்தா பாருங்க....அப்படி எந்த வேலையுமே இல்லாட்டி 4-5 மரமாவது வைத்து பராமரியுங்க ...நாடுக்காவது ஒரு பிரயோசம் இருக்கும்....

    உங்க கவிதை 07 ப்ளாக் ஒன்னும் குட்டி சுவர் இல்லை ....கண்ட கண்ட ஜந்து எல்லாம் பதிவு என்ற பெயரில் வந்து சிறுநீர் கழித்து செல்ல...

    ReplyDelete
  4. நைனா முரசு!
    கற்பூர வாசனை தெரியாத ..ன்னு ஆரம்பிச்சிருக்கனும். என்ன பண்ண நாகரீகம் தடுக்குது.

    நேத்து சுகுமார்ஜி போட்ட சிங்கம்ல்ல பதிவை படிச்சுட்டு 108 டிகிரி ஜூரம். நான் 1,500 க்கும் மேலான பதிவுகள்ள முயன்றும் பட்டவர்த்தனமா சொல்லமுடியாத மேட்டரை ஒரேபதிவுல போட்டு தொலைச்சுட்டதை நினைச்சு டர்ராயிருச்சு. ஆனால் பாருங்க முரசுன்னு ஒரு பார்ட்டி மரு மொழி போட்டிருக்கு ( எ.பிழை இல்லிங்கண்ணா மருதான்)

    //சார்...எப்படி சார் ....எப்படி!!!!!!!

    நீங்களே ஒரு வசூல் ராஜா...ஜோதிடம்...வாஸ்து...பில்லி சூனியம்...ஊரை ஏமாத்தி வசூல் பண்ணறீங்க....//

    த பார்ரா முரசு கண்ணா .. நீ கொடுத்த ஸ்டேட்மென்டை நூறே பேர் டிஃபெண்ட் பண்ணட்டும் தொழிலையே விட்டுர்ரன். கண்ணா.. பெரியார் ஜோசியம் சொன்னா எப்படி இருக்குமோ அந்த ரேஞ்சுல பகுத்தறிவோட இருக்கும். .. நைனா நம்ம ப்ரிடிக்சன். உங்க தொழிலை ஏன் எனக்கு லிங்க் பண்ணிவிடறிங்க (பில்லி சூனியம்). நமக்கு தொழில் நாட்டுக்குழைத்தல். . அப்பாறம் தான் ஜோசியம். டுப்புக்கு ! நீ அடங்கு !!

    //இப்போ உங்க நண்பரும் ஏதோ கிராபிக்ஸ்...பேனர்...லோகோ...அது இதுன்னு ஊரை ஏமாத்த கிளம்பிட்டார் ....//

    பார்ட்டி! நீ யாருனு உடை. பங்காரு அடிகளார் க்ரூப்பா..இல்லை கலைஞர் தாத்தா ஆளா? இல்லே எந்திரன் இயக்கிற எந்திரமா? ங்கொய்யால நேரா வா பிரதர். உனக்கு எங்க வலிக்குதுன்னு சொன்னா மருந்து போடுவம்ல. அதை விட்டுட்டு பினாத்தறியே. ஜோசியமாச்சும் சந்தேகாஸ்பதமான சமாசாரம் - நான் வாங்கிற காசு அதுக்காக நான் செலவழிக்கிற நேரத்துக்குண்டான காம்பன்சேஷன் தான்- கிராஃபிக்ஸ் பேனர் லோகோ எல்லாம் கண்ணு எரிய,முதுகு குறுக்கு வலிக்க பண்ற வேலை தம்பி..

    //நல்ல சரியான ஜோடிதான் போங்க...//

    உன் மருமொழிலயே இதுதான் பக்கா.

    //ஏற்கனவே உங்க ப்ளாக் சீந்துவார் யாருமில்லை.//

    நைனா உனக்காகவே தான் ஹிட் கவுண்டர்,ஸ்பெஷல் விட்ஜெட் எல்லாம் வச்சிருக்கு. எந்தெந்த பதிவை எத்தீனி பேர் படிச்சாய்ங்கனு கூகுல் ஸ்டேடிஸ்டிக்ஸோட ஸ்க்ரீன் ஷாட்டை வச்சிருக்கேன் பாரு.

    //இதுல இந்த மொக்கை பதிவெல்லாம் போட்டா வர்ற நாலு பேரும் வரமாட்டார்கள்...//

    த பார்ரா .. நாலும் தெரிஞ்சவன்னா நாலு பிட்டில்லை வாத்யாரே ..எல்லாம் தெரிஞ்சவனு அர்த்தம். நாலு பேர் வராய்ங்கன்னா நிறைய பேர் வராய்ங்கனு அர்த்தம் - அப்படி அண்டர்ஸ்டாண்டிங் பண்ணிக்கிறேன்.

    //சும்மா சொல்ல கூடாது...நீங்க 100 ரூபாய் கொடுத்து போட்ட ஒரு பேனருக்காக உங்க நண்பர் நல்லாவே கூவுறார்...//

    அப்பாறம்... வாணாம் பதிவு எழுதறது வேற கை. இது நாற வாய். ஏன்யா ரஜினி எந்திரனுக்கு பைசா வாங்கலேன்னா நம்பற பார்ட்டிங்க.. பேனருக்கு சுகுமார்ஜி காசு வாங்கலைன்னா நம்பவா போறிங்க..தூத்தேரிக்க

    //ஏற்கனவே ஒரு வெட்டி ஆபிசர் தொல்லை தாங்க முடியலை.//

    வெட்டி ஆஃபீசர்தான் ஞான வெட்டியான் ங்கற பேரை கேள்விப்பட்டிருக்கியா நைனா .. அந்த ரேஞ்சு நம்முது

    //அதுல ரெண்டாவது அரை கிறுக்கு வேறையா...........//

    உன்னை மாதிரி ஆரோக்கியமான மன்சங்க வாழறதால தானே நாட்ல காவால பாலும் தேனும் ஓடுது .. உங்க ஆரோக்கியம் எங்களுக்கு வேணா சாமி..கிறுக்காவே இருந்துட்டு போறம்.. ஞான கிறுக்கு.

    //போங்கசார் போய் எதாவது வேலை வெட்டி இருந்தா பாருங்க//
    நம்ம வேலை நாட்டுக்குழைத்தல்னு சொல்லியாச்சுல்ல. வெட்டின்னா ஆமாம் வெட்டித்தான் ஆகனும் உன்னை மாதிரி பார்ட்டிங்க மைண்டல் செழிச்சு வளர்ந்திருக்கிற மடமைங்கற பார்த்தினீயத்தை. வெட்டினா போறாதுங்கோ எரிக்கனும்..

    //அப்படி எந்த வேலையுமே இல்லாட்டி 4-5 மரமாவது வைத்து பராமரியுங்க //
    ஏன் பாஸ் நீ தனி தானா? கூட நாலு பேரை சேர்த்துக்க பாஸ். நீங்க இருக்கிறச்ச மரம் வேற எதுக்கு தெண்டம்?

    //நாடுக்காவது ஒரு பிரயோசம் இருக்கும்....//

    ஓ சாலை விரிவாக்கத்தின் போது வெட்டித்தள்ளவா? அல்லது வெட்டி ஓட்டி கொட்டிக்கிட்டு திங்கவா..

    மொதல்ல கொஞ்சமாவாச்சும் மாத்தி யோசிங்க. குறைஞ்ச பட்சம் அப்படி யோசிக்கிறவுகளையாச்சும் ஃபாலோ பண்ணுங்க. சுய புத்தியும் இல்லாம சொல்புத்தியுமில்லாம எதுக்குண்ணே லந்து பண்ணி வாங்கி கட்டிக்கிறிங்க.

    //உங்க கவிதை 07 ப்ளாக் ஒன்னும் குட்டி சுவர் இல்லை ....கண்ட கண்ட ஜந்து எல்லாம் பதிவு என்ற பெயரில் வந்து சிறுநீர் கழித்து செல்ல...//

    கரீட்டுதான் உன்னைதானே சொல்றே.. சின்ன திருத்தம் பதிவு இல்லை . கமெண்ட். அடப்போய்யா .. நீயும் உன் ரசனையும்..

    ReplyDelete
  5. வணக்கம் முரசு அய்யா... நன்றாக எங்கள் காது கிளியும்படி உங்க மனதை முரசடித்து தெரிவித்தற்கு நன்றி... வாழ்த்துகள்

    //ஏற்கனவே ஒரு வெட்டி ஆபிசர் தொல்லை தாங்க முடியலை...அதுல ரெண்டாவது அரை கிறுக்கு வேறையா...........//
    தங்களுக்கு அடுத்ததாகவே நாங்கள் எங்கள் பெயரை பதிந்துள்ளோம் என்பதை மகிழ்வோடு சொல்லுகிறோம்

    //ஏற்கனவே உங்க ப்ளாக் சீந்துவார் யாருமில்லை.....இதுல இந்த மொக்கை பதிவெல்லாம் போட்டா வர்ற நாலு பேரும் வரமாட்டார்கள்...//
    உங்களைக்கூட நாங்கள் அழைக்கவில்லையே... வருபவர்களை மட்டுமே வரவேற்க காத்திருக்கிறோம்...

    //சும்மா சொல்ல கூடாது...நீங்க 100 ரூபாய் கொடுத்து போட்ட ஒரு பேனருக்காக உங்க நண்பர் நல்லாவே கூவுறார்...//
    அப்படியா... 100 ரூபாய் எனக்காக நீங்க வாங்கிட்டீங்களா, முரசு அய்யா...அடடா... நல்லா கூவுரேன்னு சொன்னதற்கு நன்றி... திரு. முருகேசனுக்கு அதான் பிடிக்கும்...

    //போங்கசார் போய் எதாவது வேலை வெட்டி இருந்தா பாருங்க....//
    நீங்கதான் 100 ரூபாய் பிஸினஸுனு சொன்னீங்க... இதாங்க என்னோட வேலை வெட்டி... இதுகூட தெரியலையே...

    //அப்படி எந்த வேலையுமே இல்லாட்டி 4-5 மரமாவது வைத்து பராமரியுங்க ...நாடுக்காவது ஒரு பிரயோசம் இருக்கும்....//
    நல்லயோசனை... இப்படி முரசு அய்யா பின்னூட்டம் போடுவதற்கு பதிலாக இதையே செய்திருக்கலாமே... நாட்டுக்கு பிரயோசனத்தை குறைத்து விட்டீர்களே...

    //உங்க கவிதை 07 ப்ளாக் ஒன்னும் குட்டி சுவர் இல்லை ....//
    தாங்கள் முரசு அய்யா... இல்லையா? குட்டி சுவர் தேடிவந்த ___ ஆ? அடுத்து அந்த காரியத்தை செய்ததை நீங்களேதான்... குழந்தைகள் கைகளில் தவழும் பொழுது இப்படியாகலாம்... ஆனால் குழந்தைக்கு தண்டனையெல்லாம் தர இயலாது...

    உங்கள் மேல்மாடி காலியாகத்தான் இருக்கிறது என்று அறிந்து கொண்டோம்... தயவுசெய்து கடன் வாங்கியாவது நிரப்பவும்... http://murasu.livejournal.com/

    எங்களை கவனித்து, உள் வாங்கிக்கொண்டு தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அன்பர்களை அன்போடு அழைக்கிறோம்... வருக... வருக...

    ReplyDelete