Tuesday, July 13, 2010

இன்றைய செய்தி நாளைய குப்பை

இன்றைய செய்தி நாளைய வரலாறுன்னு பீலா விடறாய்ங்க. என்னைக்கேட்டா
காம்படிட்டிவ் எக்ஸாம்ஸுக்கு ப்ரிப்பேர் ஆவறவங்களை தவிர மத்தவுக  வருசத்துக்கொருதரம் பேப்பர் வாங்கினா போதும்னு நினைக்கிறேன். (இந்த காம்படிட்டிவ் எக்ஸாம்ஸ் மட்டுமில்லே . நம்ம கல்வி முறையே தண்ட கருமாந்திரம்.

கல்விங்கறது எப்படி இருக்கனும்னா ஒரு பையனுக்கோ பெண்ணுக்கோ 18 வயசு முடியறதுக்குள்ளாற இந்த உலகம், நாடு, அவன் மானிலம், அவன் மாவட்டம், அவன் தாலுக்கா, அவன் ஊரு,கிராமம், குடும்பம், அப்பா, அம்மா, அவன் உடம்பு, மனசு,புத்தி, ஆத்மா பற்றின தெளிவை கொடுக்கனும். அவனுக்கு/அவளுக்கு 18 வயசு நிறையறதுக்குள்ள தன் மேல் படிப்புக்கோ/கண்ணாலம் கட்டிக்கிட்டா தன் குடும்பத்தை போஷிக்கவோ தேவையான பணத்தை எவன் மேலயும் டிப்பெண்ட் ஆகாம சம்பாதிச்சுக்கற சக்தியை கொடுக்கனும். ஒரு கண்ணாலம் கட்டி ,ஒன்னோ ரெண்டோ பெத்து அதை உத்தமமான இந்திய பிரஜையா வளர்க்கிற அளவுக்கு அவனுக்கு ஸ்டஃபை கொடுக்கனும். அதான் உண்மையான கல்வி.

இந்த இழவெடுத்த கல்வியோட வெளிய வந்தவனுக்கு  நடத்தற காம்படிட்டிவ் எக்ஸாம்ஸ் எந்த லட்சணத்துல இருக்கும்னு நீங்களே கெஸ் பண்ணிரலாம். சரிங்கண்ணா ஆரம்பிச்சதுமே டீல்ல விட்டு டைவர்ட் ஆயிட்ட "வருசத்துக்கு ஒரு தரம் பத்திரிக்கை வாங்கினா போதும்" ங்கற பாயிண்டுக்கு வந்துருவம்.

டிசம்பர் 31 ஆம் தேதியோ , ஜனவரி 1 ஆம்தேதியோ அந்த ஒரு வருசத்துல நடந்த முக்கியமான சம்பவத்தை எல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணியிருப்பாய்ங்க

இதுலயும் ஒரு தொல்லை இருக்கு கட்சிப்பின்னணி உள்ள பத்திரிக்கையா இருந்தா  365 செய்திகள்ள தங்கள் கட்சித்தலைவருக்கு ஸ்வப்ன ஸ்கலிதமானது, மெனோஃபஸ் வந்ததை கூட சேர்த்து விட்டுர்ராய்ங்க. சரி கட்சிப்பின்னணி இல்லாத பத்திரிக்கையா இருந்தா   நிறுவனர் பிறந்த நாள், இப்ப உசுரோட இருக்கிற பேரன் எவனாச்சும் நிறுவனர் சமாதிக்கு மலர்வளையம் வைக்கிறது மாதிரி செய்திகளை கோர்த்துவிட்டுருவாய்ங்க.

என்னடா முருகேசன் இந்த ரேஞ்சுல கடுப்பாகி ஒரு பதிவு போடறாரேனு நினைச்சுராதிங்க. அடக்கிதான் வாசிக்கிறேண்ணா. இருந்தாலும்  அனல் பறக்குதுன்னா என் நெஞ்சத்துல இன்னா மாதிரி கனல் இருக்கும்னு ரோசிங்க. ஒரு காலத்துல நாம எழுதின வார்த்தையோட ஸ்பெல்லிங் எதையாவது  சரி பார்க்கனும்னா அது எங்கனா அச்சாகியிருக்கானு பார்ப்பம். இப்ப அப்படி பார்க்கமுடியுமா? நெம்பர் ஒன் செய்திபத்திரிக்கைல கூட அச்சுப்பிழை. எழுத்துப்பிழை.

வரலாறே பிழையாப்போன காலத்துல எழுத்துப்பிழைய பத்தி பேசறயே தலைனு சலிச்சிக்கிராதிங்க. பிள்ளையார் சுழி போட்டுத்தானே ஆரம்பிக்க வேண்டியதா இருக்கு. எனக்கு இந்த மீடியா மேல என்னைக்குமே நம்பிக்கை இருந்தது கிடையாது.

நான் என்ன கலைஞரா ? எனக்கு அனுகூலமா ஒரு செய்தி வந்ததுமே அதை ஸ்கான் பண்ணி போட்டு பார்த்தாயா உடன் பிறப்பேனு கடிதம் எழுத.

எமர்ஜென்ஸி காலத்தை பத்தி நிச்சயம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அப்போ பத்திரிக்கை செய்திகளுக்கு சென்சார் இருந்தது. அப்பத்துல இப்ப மாதிரி கம்ப்யூட்டர் டிடிபி எல்லாம் கிடையாது ஒவ்வொரு எழுத்தா பொறுக்கி  அச்சு கோர்த்து ப்ரூஃப் போட்டு ப்ரூஃப் திருத்தி தாலியறுந்துரும். இந்த இழவுல ப்ரூஃபை எடுத்துக்கிட்டு அதிகாரிங்க கிட்ட போய் அவிக அப்ரூவல் வாங்கித்தான் பத்திரிக்கை அச்சிடனும்.

இன்னைக்கு ராகுல், ப்ரியாங்கா, சோனியா,ராஜீவ்னு சஹஸ்ர நாமார்ச்சனை பண்ற பார்ட்டிங்களுக்கு இந்திராவை பத்தி பேச தம்மிருக்கா?  எமர்ஜென்சி பத்தி பேசற தாக்கத் இருக்கா? அப்போ அந்த மகராசி போட்ட இருபது அம்ச திட்ட தீம்ல வாரம் ஒரு சிறுகதை போட்டிருக்கு ஆனந்த விகடன். (இவிக  ஜன நாயக காதல்ல  கொள்ளிய வைக்க) அன்னைக்கு விரைய பிசைஞ்சுருவாய்ங்கன்னு போட்டே ..ஓஞ்சு போவட்டும். அதை பொக்கிஷம் பகுதில ரீ ப்ரிண்ட் பண்ணவேண்டிய அவசியம் என்னா இருக்கு?

சஞ்சய் காந்தி வேற கொசுறுக்கு அஞ்சு அம்ச திட்டம் போட்டாருங்கோ. அதுக்கும் சேர்த்து தூர்தர்ஷன்,ஆல் இண்டியா ரேடியோ, தினசரிங்க,வாராந்தரிங்கல்லாம் வானளாவிய பிரசாரம் செய்தாய்ங்க. அன்னைய தேதிக்கும் இத்தினி பேப்பர் கிடையாது,இத்தீனி சேனல் கிடையாது,இன்டர் நெட் கிடையாது, ப்ளாகிங்,மினி ப்ளாகிங் கிடையாது .இவ்ளோ ஏன் ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிட மொபைல் கூட கிடையாது.

அதாவது அன்னைக்கு இந்திரா சொன்னது தான் வேதம். எமர்ஜென்சிய எதிர்த்து களமிறங்கின லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் கிட்டே ஒரு ....ரும் கிடையாது. பாம்லெட் போட்டா கூட அதை சாராய கடைகள்ள தான் டிஸ்ட் ரிப்யூட் பண்ணனும். (இந்த வேலைய அந்த நாள்ள ஆர்.எஸ்.எஸ் காரவுக செய்தாங்கண்ணா. வாழ்க!)

எலக்சன் வந்தது அப்பு ! சனம் இந்திராவுக்கு வச்சாய்ங்க ஆப்பு. இதுலருந்து இன்னா தெரியுது ? இந்த பேப்பர் காரவுக பண்ற அலம்பல் எல்லாம் எட்டாத தொலைவுல மஸ்தா சனம் கீது நைனா. எட்டினாலும் இவன் தட்டிவிட்டதை எல்லாம் நம்ப சனம் தயாரா இல்லே நைனா.




தி.மு.க கவர்ன்மென்ட் மேல சர்க்காரியா கமிஷன் போட்டாங்களே அப்போத்துலருந்து செய்திகளை படிச்சுட்டுருக்கேன். எம்ர்ஜென்சி அமல்ல இருந்தப்ப என் சித்தப்பு கொண்டுவர்ர முரசொலிய எல்லாம் உ.வசப்பட்டு படிச்சிருக்கேன்.  ஒரு கட்டத்துல அப்டேட் பண்ணிக்கிறதுக்காக மட்டும் படிக்க ஆரம்பிச்சேன். வயசான கட்டைங்க இளந்தாரிக யாராச்சு மாட்டின உடனே "அந்த காலத்துல"னு ரம்பம் போட ஆரம்பிச்சுர்ராய்ங்கனு நான் கூட பேசியிருக்கேன்.  ஆனால் அவிக ஏன் அப்படி பேசினாய்ங்கனு இப்பத்தான் புரியுது. அவிக இளந்தாரிகளா இருந்தப்ப அவிகளுக்கு சக்தியின் ஊற்று இருந்திருக்கும்.  எது வந்தாலும் எதிர்கொள்ற பவர் இருந்திருக்கும். (அட்லீஸ்ட் தன்னம்பிக்கை) அவிக இளமை போன பிறகு முதுமை காரணமா சக்தி வற்றிப்போய் நிகழ் காலத்தை கண்டு அரண்டு போய் தான் அந்த காலத்துலங்கற ட்ரான்ஸுக்கு போயிட்டிருந்தாங்களோ என்னவோ? இது ஒரு கோணம்.

ஆனா அவிக சொல்றதுலயும் நியாயமிருக்கப்பு. காலம் மாறிப்போச்சு. வாழ்க்கை மாறிப்போச்சு.

இந்த சின்ன உதாரணத்தை  பாருங்க. ராமன் வனவாசம் போனப்ப  அயோத்தி மக்கள் எல்லாம் நீ இல்லாத நாடு சுடுகாடு . அதை விட பெட்டர் நீ இருக்கிற காடுனு கிளம்பி  அவரோடயே காடுவரைக்கும் போயிட்டாய்ங்களாம்.  ராமரா பார்த்து கன்வின்ஸ் பண்ணி திருப்பி அனுப்பினாராம்.

என்.டி.ஆர் அரசை நாதேண்ட்ல பாஸ்கர்ராவ் கவுத்தப்ப ஆந்திர மக்கள் பொங்கி எழுந்தாய்ங்க. ரோட்டுக்கு வந்து போராடினாய்ங்க. இரும்பு பெண்மணி இந்திராவே நாக்கை கடிச்சுக்கிட்டு சட்டசபைய கூட்ட  சொல்லிட்டாய்ங்க.

அதே என்.டி.ஆர் அரசை சந்திரபாபு கவுத்தப்ப அதே ஆந்திரமக்கள்கிட்டருந்து அந்த அளவுக்கு ரியாக்ஷன் வரலை. ஏன்?

வாழ்க்கை முறை மாறிப்போச்சு. மருத்துவத்துறைல  முன்னேற்றம் காரணமா சாவு குறைஞ்சு போச்சு. சனம் பெருத்துப்போச்சு. கூட்டுக்குடும்பங்கள் உடைஞ்சு போச்சு.  மக்க, மனுசா மொகத்தை பார்க்கவே எப்படா வரும் திருவிழானு இருந்த சனம் சலிச்சுக்க ஆரம்பிச்சது. குடும்பங்கள் சிதற விவசாய நிலம்லாம் பிரிஞ்சு பிரிஞ்சு சோளப்பொரி மாதிரி சிதறிப்போச்சு. விவசாயம் காஸ்ட்லி ஆயிருச்சு. இயந்திர மயம், தொழில் மயம், நகரமயம், மேற்கத்திய கலாச்சார தாக்கம், உலக மயம், தனியார் மயம்  எல்லாமா சேர்ந்து மக்களுக்கு சொந்த பிரச்சினைகள் அதிகமாயிருச்சு

மக்களை சொல்லி தப்பில்லை.

1 comment:

  1. தலைப்பில் என் மாநிலம் என வர வேண்டும் திருத்தவும்.
    பிரபாகரன் பிறந்த தேதி குறிப்புகள்-26.11.1954.பிறந்த நேரம்-பகல் 12.00மணி 2 நிமிடம்.பிறந்த ஊர்-யாழ்பானம்,ஜெய வருடம் பிரதமை திதி..கேட்டை 1 ம் பாதம்

    ReplyDelete