தலைப்பே தப்புங்கண்ணா. நக்சல் பிரச்சினைக்கு தீர்வுன்னா பசியும் சுரண்டலும் ஒழியனும். அது நம்மால ஆகறதில்லே. பசியையும்,சுரண்டலையும் ஒழிக்கனும்னா ரொம்ப சிம்பிளுங்கண்ணா. இப்போ சனத்தொகை கணக்கெடுப்பு நடக்குதே அது முடிய இன்னம் எத்தீனி வருசம் ஆவுமோ தெரியாது. இப்படி வீடு வீடா போய் கணக்கெடுக்கிறதை விட சனங்களே தங்கள் விவரங்களை ஒரு குறிப்பிட்ட ப்ரஃபார்மால மெயில் பண்றாப்ல பண்ணனும்.
அரசாங்கத்துக்கு விவரங்கள் தர்ரதுல நம்ம சனம் அல்ப்பங்க. (அரசாங்கம் அதை விட அல்ப்பம் - கேஸ் ஸ்டவ் இருக்குதுனு சொல்ட்டா கிரோசின் கோட்டாவை கான்சல் பண்ணிரும்) சனங்களோட அல்ப்பத்தனம் ஒழிய அரசு ஒரு உறுதி மொழி வழங்கனும். வீடில்லன்னா வீடு தருவோம். வீடு இருந்தா மராமத்துக்கோ, இன்னொரு போர்ஷன் கட்டவோ பணம் தருவோம்னு டிக்ளேர் பன்னணும்.(இப்படியே எல்லாத்துக்கும்). இந்த ப்ரொஃபார்மாவை ஃபில் அப் பண்ண போதிய பயிற்சி கொடுக்கனும். ( இன்டர் நெட் காரவுகளுக்கு, டிகிரி ஃபைனல் இயர்ல கீற மாணவர்களுக்கு)
மத்திய அரசாங்கம் இந்த டேட்டா பேசை அடிப்படையா வச்சு எங்க ராஜசேகர் ரெட்டி மாதிரி குடிமகனுக்கு மைக்ரோ லெவல்ல உடனடியா பயன் தரக்கூடிய திட்டங்களை கொண்டுவரனும். ஒய்.எஸ். அரிசி பருப்பு கொடுத்தாரு. நாம தொழில்பயிற்சி, தொழில் வாய்ப்பு, தொழில்கடன்,மார்க்கெட்டிங், ஏற்றுமதிக்கான உதவி எல்லாத்தயும் கொடுக்கனும். 10கோடி சனத்தொகை கொண்ட ஸ்டேட்டுக்கு சில ஆயிரம் பேரை குளிப்பாட்டற ஓத்தலா வேலையெல்ல்லாம் கூடாது.
ஒவ்வொரு பயனாளிக்கும் ( என்னங்கண்ணா சனத்தொகைல 10% தேறினா யதேஷ்டம்) அவன் தேவைய/தகுதியை பொருத்து சாதி மதம் பார்க்காம உடனடியா கொடுக்கனும். மத்த எல்லா விதமான பெருமைக்கு பன்னி மேய்க்கிற வேலையையெல்லாம் மூட்டை கட்டிட்டு இந்த ஒரு பாயிண்ட் மேல கான்சன்ட்ரேட் பண்ணா போதும் ஈஸியா பண்ணலாம். மேற்படி தொழில்பயிற்சி, தொழில் வாய்ப்பு தொழில் கடன் மார்க்கெட்டிங் ஏற்றுமதிக்கான நெட் ஒர்க் எல்லாத்துலயும் 70 சதவீதம் விவசாயத்துக்கு தரனும். இப்படி செய்தா நக்சலைட் எல்லாம் ஆளுங்கட்சில சேர்ந்து அவிக தகுதிக்கேத்தமாதிரி கவுன்சிலராவோ, எம்.எல்.ஏ, எம்.பி,மந்திரியாவோ ஆயிருவாய்ங்க.
இந்த இழவெடுத்த வேலையெல்லாம் நல்லபடியா நடக்கனும்னா கவர்ன்மென்ட் மெஷினரி வேகமா வேலை செய்யனும். இன்னைக்கிருக்கிற மெஷினரி மேல எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதனாலதான் நதிகள் இணைப்புக்கு கால்வாய் வெட்டற வேலைய கூட 10 கோடி (இப்போ 12 கோடினு நினைக்கிறேன்) நிருத்யோகர்களை கொண்ட சிறப்பு ராணுவத்துக்கு ஒப்படைக்கனும்னு சொல்லிக்கிட்டிருக்கேன்.
சரிங்கண்ணா இதெல்லாம் நம்ம தலைக்கு மிஞ்சின வேலை இந்த பதிவுல நான் சொல்லவந்தது நக்சல் பிரச்சினைக்கு தீர்வை அல்ல. நக்சல் பிரச்சினையால் தேங்கும் வளர்ச்சி நடவடிக்கைகளை கேர் அப் பண்ண ஒரு தீர்வைத்தான் சொல்ல முனைஞ்சேன் .
நக்சல் பிரச்சினை காரணமா எங்கெல்லாம் அரசு அதிகாரிகள் ஃபீல்டுக்கு போக முடியாத நிலையிருக்கோ அந்த பகுதிகளுக்குனு அரசு ஒதுக்கி வச்சிருக்கிற நிதியை கணக்கிடனும்.
நக்சல் பிராபல்யத்தால இந்த இந்த பகுதிகள்ள அரசு இயந்திரம் ஃபீல்ட் ஒர்க் பண்ண முடியாத,வளர்ச்சி பணிகளை முடுக்கி விட முடியாத நிலைல இருக்கிறதால இந்த பணத்தை ஹாட் கேஷா, ப்ளாஸ்டிக் பேக்கிங்ல ஒரு விமானத்துல கொண்டு போய் அந்தந்த பகுதில கொட்டிட்டு வந்துர போறோம்.
நக்சல்ஸே இதை எடுத்து நேரடியா வளர்ச்சி பணிகளை செய்யறதா இருந்தாலும் செய்யட்டும், இல்லே அந்த பகுதி மக்களை கொண்டே செய்யறதா இருந்தாலும் செய்யட்டும். அவிகளுக்கு தேவையான எக்விப்மென்ட், மேன் பவர்,டெக்னாலஜி எல்லாத்தயும் அரசு தரும்னு அறிவிச்சுரனும்.
அந்த பணத்தை நக்சல்ஸ் ஒழுங்கா உபயோகிச்சு வளர்ச்சி பணிகள் செய்தா சந்தோஷம். அல்லது அவிகளும் ஊழல் வாதிகளா மாறி அவனவன் ஒதுக்கிக்கிட்டு,
அமுக்க பார்த்து பரஸ்பரம் சுட்டுக்கிட்டு செத்தாலும் ஓகே. ஒரு வேளை ஆயுதம் வாங்கறது இத்யாதிக்கு டைவர்ட் பண்ணாலும் ஓகே, (இதை மத்திய மானில அரசுகளின் உளவுப்பிரிவினரை மீறி நக்சல்ஸ் செய்ய முடியாது.
பூனை எந்த நிறமா இருந்தா என்ன ? எலியை பிடிக்கட்டுமே. அந்த பணம் என்னாச்சுன்னு அருந்ததி ராய்,வரவரராவ், ஹர கோபால் மாதிரி பார்ட்டிங்க டூர் அடிச்சுட்டு வந்து வெளியுலகத்துக்கும் அரசுக்கும் அறிக்கை தரட்டுமே.சதா சர்வ காலம் மாவோக்களுக்கு வக்காலத்து வாங்கற இந்த சனமும் அவிக லட்சணத்தை தெரிஞ்சுக்கட்டுமே.
ஹௌ ஈஸ் இட்?
No comments:
Post a Comment