Sunday, July 25, 2010

சரஸ்வதி சபதம்

நடந்த கதை:
( சத்ய லோகத்தில் கோ பூஜை நடக்கிறது.  நாரதர் லட்சுமி கடாட்சமாக இருக்கிறதுனு சொல்லிர்ரார். சரஸ்வதி கோவிச்சுக்கிறாய்ங்க. நாரதர் பூலோகத்துல  கல்விக்கு மரியாதையே இல்லை . ஏம்மா அலட்டிக்கறேனு மொக்கை பண்ணிட்டு  வைகுண்டத்துக்கு போறார் . இங்கே நடந்தை லட்சுமிக்கு சொல்ல அவிக பணம் பத்தும் செய்யும்னு பத்தாம் பசலித்தனமா பழமொழி சொல்ல நாரதர் பணத்தால வர்ர தொல்லைகளையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்றாரு.  அங்கே இருந்து நேர கைலாசம் போறாரு. இதுவரை நடந்த கூத்தையெல்லாம் விவரிக்க பார்வதி அப்பாடா என்னருந்தாலும் வீரம் தான் எவர் க்ரீனுன்னு சொல்றாய்ங்க. அதுக்கு நாரதர் வீரம் சோரத்தை விட மோசமாயிருச்சுனு யதார்த்தத்தை எடுத்து சொல்றாரு. பார்வதி கமிட்டி போடலாமானு கேட்க கமிட்டியெல்லாம் ஓல்ட் ஃபேஷன். பேசாம க்ரீன் ஹன்ட்டுனு சொல்லி சி.பி.ஆர்.எஃப்ஃபையும்,ராணுவத்தையும்  அனுப்புங்கங்கறாரு) .

பார்வதி:
நாரதா ! போதும் விளையாட்டு. உருப்படியான யோசனை இருந்தால் சொல்.

நாரதர்:
சொல்றேன் தாயே. பேசாம நீங்க மூணு பேரும் பூலோகத்துக்கு போங்க. போயி கல்வி,செல்வம்,வீரம் மூணுமே நாறிப்போயிருக்கிறதை கண் கூடா பாருங்க. ஏன் இந்த நிலைனு யோசனை பண்ணுங்க. உலகத்தை மாத்துங்க. உண்மையான கல்வி செல்வம் வீரம் தழைத்தோங்கறாப்ல செய்ங்க

பார்வதி:
இதுக்கு நான் தயார். சிவனார் ஒத்துக்கிடனுமே

நாரதர்:
அவரையும் கூட்டிக்கிட்டா போச்சு.

பார்வதி:
நல்ல யோசனை. ஆனா இந்த யோசனைக்கு சரஸ்வதி ,லட்சுமி ஒத்து வரணுமே

நாரதர்:
நான் எதுக்கு இருக்கேன். "குடி முழுகிப்போச்சு!  பார்வதியம்மா பூலோகம் போகப்போறாய்ங்க. கல்வி,செல்வம் மட்டும் பழசா இருக்க வீரம் மட்டும் துலங்க ஆரம்பிச்சுரும் . கல்வி மான், செல்வ சீமான்  எல்லாம் மலங்க மலங்க விழிக்க வேண்டியதுதானு உடனே எஸ்.எம்.எஸ் அனுப்பறேன். றெக்கை கட்டிக்கிட்டு வராங்க பாருங்க

பார்வதி:
உடனே செய்

( நாரதர் எஸ்.எம்.எஸ் அனுப்பறாரு. சரஸ்வதி,லட்சுமி தம்பதி சமேதரா வராய்ங்க.)

லட்சுமி:
இது கொஞ்சம் கூட நியாயமில்லை

சரஸ்வதி:
ஆமாம். கரெக்டா சொன்னே லட்சுமி! இது நல்லதில்லை

பார்வதி:
நீங்க எதைப்பத்தி சொல்றிங்கண்ணே தெரியலை.

லட்சுமி:
ஆமா ஆயிரம் கண்ணு வச்சிருக்கிற உங்களுக்கு எங்களை மட்டும் தெரியலை போலிருக்கு.

பார்வதி:
வார்த்தைகள் கொஞ்சம் சாக்கிரதையா வரட்டும். என் கண்ட்ரோல்ல இருக்கிற வீரம் காலாவதியாகிட்டிருக்குனு தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க புறப்படறேன். நான் என்ன சோனியா காந்தியா..தேர்தல் பிரசாரத்துக்கும், திறப்பு விழாவுக்கும் மட்டும் போறதுக்கு.

சரஸ்வதி:
அப்போ நாங்க சோனியா மாதிரிங்கறிங்களா?

பார்வதி:
நாரதன் உங்களையெல்லாம் சந்திச்ச பிறகு தான் என்னை வந்து சந்திச்சான். நான் உடனடியா  முடிவெடுத்தேன். நீங்க கோபூஜையும், டிவி சீரியலுமா இருந்தா நான் என்ன பண்றது

லட்சுமி:
இதை நான் கண்டிக்கிறேன். இந்திர சபைல ஒரு ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவந்து..( ஆவேசத்தில் மூச்சிரைக்கிறது)

சரஸ்வதி:
அத்தை ! நீங்க இன்னைக்கு ப்ரஷர் மாத்திரை போட்டுக்கலை போல இருக்கு. நான் பேசறேன்

பார்வதி:
(சற்று கோபமாக) ம்.. நீ என்ன சொல்லப்போகிறாய்?

சரஸ்வதி:
மாதா,பிதா,குரு,தெய்வம்னு சொல்றப்ப இந்த பட்டியல்ல  தெய்வம் கடைசில வந்தாலும் தெய்வத்தோட அருளாலதான் மாதா,பிதா,குரு எல்லாம் அமையறாய்ங்க. அதைப்போல கல்வி,செல்வம்,வீரம்னு சொல்றப்ப வீரம் கடைசில வந்தாலும் நீங்க தான் ஆதி. உங்க அம்சம் தான் நாங்க. நமக்குள்ள எதுக்கு தகராறு. பிரச்சினையை பார்ப்போம், தீர்வை யோசிப்போம்.

பார்வதி:
சேராதிருப்பது கல்வியும் செல்வமும்னு லட்சுமி நிரூபிச்சுட்டா.. செல்வம் மக்களை பிரிக்கும்,கல்வி அவிகள சேர்த்து வைக்கும்னு  நீ நிரூபிச்சுட்ட.

நாரதர்:
தாயே .. விவரம் புரியாம பேசாதிங்க. செல்வம் மக்களை ஏழை, பணக்காரன்,அப்பர் மிடில் க்ளாஸ்,மிடில் க்ளாஸ் ,லோயர் மிடில் க்ளாஸ் இப்படி பிரிச்சுப்போட்டது நிஜம் தான் கல்வி மட்டும் என்னத்த கிழிச்சது?  நாலெழுத்து படிச்சதுமே ஃபேன் கீழே வெள்ளையும் சள்ளையுமா உட்கார்ந்து நோகாத சம்பாதிக்கனுங்கற எண்ணம் வந்துருச்சு. அரசாங்க வேலையோட எண்ணிக்கை  லிமிட்டட். அதுல எப்படியாச்சும் இடம் பிடிக்கனும்னு ஸ்டேட், டிஸ்ட்ரிக்ட்,மொழி,சாதி ,மதம்னு மக்களை கச்சாமுச்சானு பிரிச்சுப்போட்டது கல்விதான்.

சரஸ்வதி:
அப்படியா?

நாரதர்:
ஆமாங்கம்மா..கல்விலயே எத்தனை பிரிவு? ஸ்டேட் சிலபஸ், சென்ட் ரல் சிலபஸ், இங்கிலீஷ் மீடியம், தமிழ் மீடியம், ப்ரைவேட் ,பப்ளிக், ஆர்ட்ஸ், சைன்ஸ்

பார்வதி:
சரியப்பா.. கொஞ்சம் டீ,காஃபி,ஸ்னாக்ஸ் எதுனா சாப்பிட்டுக்கிட்டே பேசுவம். இது ரெம்ப பெரிய சப்ஜெக்ட்  போல  இருக்கு.

( மும்மூர்த்திகள் ஏற்பாடுகளை கவனிக்க நாரதர் உதவுகிறார்)

(தொடரும்)

No comments:

Post a Comment