Tuesday, July 13, 2010

பிரபாகரன் எதிர்காலம்

எனக்கு பிடிச்ச தெலுங்கு கவிதை வரி " ஏனடா எழுதுகிறீர்கள் ? தடை செய்ய தகுதியற்ற கவிதைகள்"

எப்படியோ முந்தா நாள் போட்ட வில்லங்க பதிவுகளை காரணம் காட்டி பிரபாகரனை கேவலம் ஜோதிட ரீதியா உயிர்ப்பிச்ச பாவத்துக்கு என் வலைப்பூவை   தடை செய்து  தமிழுணர்வை காட்டியிருக்கு தமிழ் மணம் .

எல்லாத்தயும் ஆத்தாளே பாத்துப்பான்னிட்டு பிரபாகரன் எதிர்காலம் ங்கற தலைப்புல பதிவை தொடர்ரேன்.
ஜோதிட விதிகளின் படி பார்த்தால் பிரபாகரன் சாகவில்லை, 2010, நவம்பர் 26 க்கு பிறகு தமது சாகச பயணத்தை துவக்கலாம்னு கடந்த இரண்டு பதிவுகள்ள சொல்லியிருந்தேன். அவர் பிறந்த நேரத்தை யாராவது பிக் அப் பண்ணி சொன்னா நெத்தியடியா சொல்லலாம். இப்ப மட்டும் கெட்டுப்போனது ஒன்னுமில்லை. நெத்தியடியா  சொல்ல முடியாட்டாலும் உறுதியாவே சொல்ல முடியுது.

பிரபாகர் திருமண தினத்தன்றாகட்டும்(1/10/1984) , புதிய புலிகளை துவக்கிய தினத்தன்றாகட்டும் (22/5/1972) தெய்வீக கிரகமான குரு ஆட்சி பெற்றிருப்பது குறிப்பிடித்தக்கது. (பிரபாகரன் பிறந்த தினத்தன்று அவர் உச்சத்தில்) . இதையெல்லாம்  கோ இன்சிடென்ட் என்று சொல்லிவிடமுடியாது.  ஒரு ரயில் எப்படி தனக்குரிய பாதையில் குறிப்பிட்ட ஸ்டேஷன் களை தாண்டியே செல்கிறதோ அதே போல்தான் ஒவ்வொரு வாழ்க்கையும் பயணிக்கிறது.

மேலும் பிரபாகரனின் கூட்டு எண்ணை கவனிக்கும்போது (2)  இதற்கு அதிபதி சந்திரன். இறைவனுக்கும், இயற்கைக்கும் நெருக்கமாக உள்ள ஒரே கிரகம், ஒரே எண் இதுதான் சந்திரன் ஆதிக்கம் பெற்ற மனிதர்கள் ஜஸ்ட் தமது உள்ளுணர்வை அடிப்படையாக கொண்டே செயல்படுவார்கள். இவர்களின் முடிவுகள், செயல்பாடுகள் தர்கத்துக்கு ஒவ்வாததாக இருந்தாலும் அவை வெற்றியடைவதை அனேக முறைகள் கண்டுள்ளேன். இரண்டாம் எண் காரர்  ஜலதத்துவமாக உள்ளார். நீரை எவனும் அழுத்தி சுருக்க முடியாது. (பாஸ்கலின் விதி) . ஒரு ஆறு எப்படி கோடையில் வறண்டு , மாரிக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதோ அப்படி இரண்டாம் எண் காரர்கள் வாழ்வும் ஜீரோ பேலன்ஸுக்கு வந்து மறுபடி முந்தைய வளர்ச்சிக்கு இரண்டு மடங்கு வளர்ச்சி பெறுவதையும் கண்டிருக்கிறேன்.


மேலும் இவர்கள் ஒரு ஆதர்ச புருஷனை வரித்துக்கொண்டு அவர்களாகவே மாறுவதையும் கண்டிருக்கிறேன்.  பிரபாகரனுக்கு சுபாஷ் சந்திர போஸ் மீது இருந்த காதல் அளவிட முடியாதது. சந்திரன் எப்படி சூரியனின் ஒளியை வாங்கி பிரதிபலிக்கிறதோ அப்படியே இவர்களும் (சந்திர ஆதிக்கம் கொண்டவர்கள்) தம் ஆதர்ச புருஷர்களாகவே மாறிவிடுகிறார்கள். (யத்பாவம் தத்பவதி)

சுபாஷ் சந்திர போஸ் முடிவு எப்படி  அமைந்ததோ அதே போல் பிரபாகரன் முடிவும் அமைந்திருப்பதை காணலாம். ஆனால் பிரபாகரன் விஷயத்தில் ஒரு அதிர்ஷ்டம் என்னவென்றால் அவர் கொல்லப்பட்டதாய் கூறப்படும் காலகட்டத்தில் அவருக்கு உயிர் எண்ணை பொருத்த மட்டில் 7 ஆவது ரவுண்டுதான் நடந்துகொண்டிருந்தது.

7ஆவது ரவுண்டு மனைவி மற்றும் , தன்னவர்களிடமிருந்து பிரிக்குமே தவிர கொல்லாது. ( 2002 நவம்பர் 26 முதல் 2010 நவம்பர் 26 வரை 7 ஆவது ரவுண்டு தான் நடக்கிறது)

அடுத்துவரக்கூடிய எட்டாவது ரவுண்டு கொன்றுவிடுமா? என்று நீங்கள் கேட்கலாம். இவரது உயிர் எண் 8 . இதற்குரிய கிரகம் சனி. இவர் ஆயுஷ்காரகர். எனவே உடனடியாக கொல்ல வாய்ப்பில்லை.

ஆனால் ஜாதகர் விருச்சிக ராசிக்காரர் என்பதால் இவரது பலமே இவரது விரோதிதான்.இவர் விரோதியை விட்டு விலகினாலோ (இப்ப விலகித்தானே இருக்கார்) ,களத்தில் இல்லையென்றாலோ இவர் பலம் பாதியாகிவிடும். எனவே தாக்க காத்திருந்த  நோய்கள் எல்லாம் தாக்க ஆரம்பித்துவிடும்.

தலைமறைவாவது, தீர்க ரோகங்களுக்கு ஆளாவது, இறந்துவிட்டார் என்று பிரச்சாரம் செய்யப்படுவது, பெரிய அளவில் துஷ் பிரச்சாரத்துக்குள்ளாவது, வெளி உலகத்துக்கு வராது சிறைப்பட்டது போன்று அடைந்து இருப்பது இதெல்லாம் இந்த எட்டாவது ரவுண்டின் தோஷத்தை 90% குறைத்துவிடும்.


புதிய புலிகள் தோன்றிய தினத்தின் உயிர் எண் படி பார்த்தால்(4)  2008 மே வரை 9 ஆம் ரவுண்டுதான். அதற்குபின் 2012 வரை பத்தாவது ரவுண்டு. பத்து என்றால் தொழில் ஸ்தானம். எனவே புலிகள் அமைப்பு அழிய வாய்ப்பே இல்லை. என்ன ஒரு குறை என்றால் உயிர் எண் 4 என்பதாலும் அதன் அதிபதியான ராகு நிழல் கிரகம் என்பதாலும் இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் வெளி உலகத்துக்கு தெரியவராது. ஆனால் 2012 மே 22 க்கு பிறகு வரும் 11 ஆவது ரவுண்டு ஜாக்பாட்டுதான்.

காந்தீய வழி என்றால் அதென்னவோ கையாலாகாதவர்கள் வழி என்று ஒரு பிரமை உள்ளது. ராஜ பக்ஷேவுக்கு கிருஷ்ண பட்சம் துவங்க உலகமெங்கும் பரவி வாழும் கோடானு கோடி தமிழர்கள் காந்தீய வழியை பின்பற்றினால் போதும்.

1.இலங்கைக்கு யார் ஆதரவு ? இந்தியா மற்றும் சீனா.  புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் இந்திய, மற்றும் சீன பொருட்களை பகிஷ்கரிக்கலாம். இந்தியாவில் வாழும் தமிழர்கள்  இலங்கை மற்றும் சீன பொருட்களை பகிஷ்கரிக்கலாம்.

2. ஈழத்தமிழர்களுக்காக வாயை கிழித்துக்கொள்ளும்  சினிமா உலக பிரமுகர்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு ஒரு மல்ட்டி நேஷ்னல் கம்பெனியை துவக்கனும். அந்த கம்பெனி சார்பா பிரபல நடிகர்கள் எல்லாரையும் போட்டு ஒரு சினிமா எடுத்து ( குறுகிய கால தயாரிப்பு/ஜஸ்ட் என்டர்டெயினர்/எஸ்.வி சேகர் நாடகம் மாதிரி துணுக்கு தோரணமா இருந்தாலும் சரி) எல்லா மொழிலயும் டப் பண்ணி  ரூ 25 விலைல டிவிடி ரிலீஸ் பண்ணனும். இந்த விற்பனை மூலமா வர்ர காசு பணத்தை இலங்கை அரசு ,அரசு சார் , லீடிங் தனியார் கம்பெனி ஷேர்ஸை வாங்கி வச்சுக்கனும். இதையெல்லாம் குழப்படி இல்லாம அந்தந்த ஃபீல்டுல புலியா இருக்கிறவங்களை வச்சு செய்யனும். அப்போ ராஜபக்சே விரைக்கு கயிறு கட்டி தமிழன் வச்சுக்கலாம். தாளி.. தமிழனுக்கு வீடு கட்ட மாட்டயா .. ஷேர் மார்க்கெட் தொபுக்கடீர். தமிழனோட பகுதில சிங்களனை குடியேத்தறியா ஷேர் விலை அதல பாதாளம்னு படம் காட்டலாம்

3.இங்கே இருக்கிற எல்லா சினிமா தயாரிப்பாளரும் தங்கள் படத்துக்கு தேவையோ இல்லையோ ஒரு பாட்டையாவது இலங்கைல எடுக்கனும். வசதி உள்ளவுக எல்லாரும் இலங்கைக்கு  டூரிஸ்டா போகனும். ஒரு 6 மாசம் இந்த மாதிரி செய்தா போதும்  அங்கே அவனவன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலும், ஸ்டுடியோவும் கட்டி நம்மாளுங்களுக்காக ஜொள்ளு விட்டு காத்திருப்பான். அப்போ படக்குனு கண்டிஷன் போடனும். நீ இது இதையெல்லாம் நிப்பாட்டு. இது இதையெல்லாம் செய் அப்பத்தான் ஷூட்டிங், அப்பத்தான் டூரிஸ்டுனு கிடுக்கிப்போடனும்..

( மீதி 48 ஐடியாக்கள் அடுத்த பதிவில்)

8 comments:

  1. பிரபஞ்சன்July 13, 2010 at 12:55 AM

    இங்கே இருக்கிற எல்லா சினிமா தயாரிப்பாளரும் தங்கள் படத்துக்கு தேவையோ இல்லையோ ஒரு பாட்டையாவது இலங்கைல எடுக்கனும். வசதி உள்ளவுக எல்லாரும் இலங்கைக்கு டூரிஸ்டா போகனும்.

    தலை கீழா நடக்குதே...

    ReplyDelete
  2. http://oslotamils.blogspot.com/2009/12/blog-post_7631.html

    பிறந்தநாள் : 26-11-1954.
    பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.
    பிறந்த இடம் : யாழ்ப்பாணம் அருகிலுள்ள கிராமம்.
    ஜென்ம லக்னம் : கும்பம்.
    ஜென்ம ராசி: விருச்சிகம்.
    ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.
    திதி: பிரதமை திதி.
    ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.

    ReplyDelete
  3. . இந்த விற்பனை மூலமா வர்ர காசு பணத்தை இலங்கை அரசு ,அரசு சார் , லீடிங் தனியார் கம்பெனி ஷேர்ஸை வாங்கி வச்சுக்கனும். இதையெல்லாம் குழப்படி இல்லாம ##அந்தந்த ஃபீல்டுல புலியா இருக்கிறவங்களை வச்சு செய்யனும். அப்போ ராஜபக்சே விரைக்கு கயிறு கட்டி தமிழன் வச்சுக்கலாம். தாளி.. தமிழனுக்கு வீடு கட்ட மாட்டயா .. ஷேர் மார்க்கெட் தொபுக்கடீர். தமிழனோட பகுதில சிங்களனை குடியேத்தறியா ஷேர் விலை அதல பாதாளம்னு படம் காட்டலாம்##
    ஐடியா சூப்பர்அப்பு முருகேஷ்.

    ReplyDelete
  4. //மகாத்மாவே ஆனாலும் பிரிச்சு மேஞ்சுருவமில்லே//

    தல ...கலைஞரோட எதிர்காலம்(?) பத்தி சொல்ல முடியுமா?

    ReplyDelete
  5. தனிக்காட்டு ராசா .. இந்த லின்கை க்ளிக் பண்ணுங்க லேசா தாத்தாவின் எதிர்காலம் தெரியும்
    http://kavithai07.blogspot.com/2010/07/blog-post_11.html

    ReplyDelete
  6. பிரபஞ்சன் அவர்களே,
    சாம ,பேத, தான,தண்ட உபாயங்களில் நான் சொன்னது தான தண்ட உபயம். குதிரைக்கு கடிவாளம் மாட்ட முதல்ல கொள்ளுப்பைய கொண்டு போகனும் . அப்பத்தாய் அது வாயத்திறக்கும். அப்போ படக்குனு கடிவாளத்தை மாட்டனும்

    ReplyDelete
  7. தமிழ் மணி அண்ணா,
    தங்கள் மறுமொழி இனிய அதிர்ச்சி. பிரபாகரனின் பிறந்த நேரத்த வச்சி பதிவு போட்டுட்டு அப்பாறம் உங்க கணிப்பை படிக்கிறேன்னா ( எனக்கே தெரியாம சுட்டுட்டா?)

    ReplyDelete
  8. நாகா அவர்களே,
    பாராட்டுக்கு நன்றி. இன்னம் நூத்து பதினாலு ஐடியா இருக்கு ராகு காலம் எமகாலம் இல்லாத நல்ல நேரமா பார்த்து போடறேன்

    ReplyDelete