அண்ணே வணக்கம்ணே,
பலான நேரத்துல சில்மிஷத்துல இறங்கறதுக்கு மிந்தி முதல்ல செக் பண்ணிக்க வேண்டிய ஒரு மேட்டரை வச்சு இந்த பதிவை போட்டிருக்கேன். பை தி பை "சாம்பார் சரியில்லை என்று சம்சாரத்தை வெட்டிகொன்ற கணவன்"
குறுகிய கால தொடர் ஆரம்பமாகுது. "உனக்கு 22 எனக்கு 32 " தொடர் ஆஃப்டர் எ லாங் டைம் மீண்டும் துவங்குது.
சைக்காலஜி யெல்லாம் உடான்ஸ் தனிப்பதிவும் போட்டிருக்கேன்
இதுக்கெல்லாம் கொசுறா டீன் ஏஜர்களுக்கான கடிகள்
எல்லாத்தயும் படிச்சு உங்க கருத்தை கமெண்டா போடுங்க .. கையோட கையா தமிழ் மணம் கவிதை07 ஐ தடை செய்ய உண்மையான காரணம் எதுனு நீங்க நினைக்கிறிங்க? உங்க எண்ணத்தை பட்டுனு சொல்றமாதிரி ஒரு ஓட்டுப்போடுங்கண்ணா..
பலான நேரத்துல சில்மிஷத்துல இறங்கறதுக்கு மிந்தி முதல்ல செக் பண்ணிக்க வேண்டிய ஒரு மேட்டருக்கு போயிருவமா? ஜூட்
சந்திரபாபுவை தாக்கிய மகாராஷ்டிர போலீஸ்ங்கற தலைப்புல நேத்து நான் போட்ட பதிவை பார்த்திருப்பிங்க.மொதல்ல 2 நாள் ரிமாண்ட். நேத்தைக்கு ரிமாண்டை நீட்டிச்சு ஔரங்கா பாத் செயில்ல அடைக்க ஸ்கெச். பாதிவழில பேதியாகி பலவந்தமா ஐதராபாதுக்கு ஃப்ளைட்டேத்தி விட்டிருக்காய்ங்க.இதை சந்திரபாபு விடப்போறதில்லை. தேசீய அளவுல இதை இஷ்யூவாக்கி ஒரு வழி பண்ணி தீருவார். ஒன்னுமில்லாத மேட்டரையெல்லாம் ஊதி பெருசாக்கிய பார்ட்டி. இத்தனாம் பெரிய மேட்டரை சொம்மா விட்டுட வாய்ப்பே கிடையாது. அது பாட்டுக்கு ஒரு ட்ராக்ல ஓடட்டும்.
பிரச்சினையோட ஆணி வேரை பார்ப்போம். நம்ம நாட்டு மக்களோட முக்கிய தொழில் விவசாயம். சுதந்திரம் வந்து 63 வருஷம் ஆனாலும் பாசன நீர் பற்றாக்குறை இருக்கு. கங்கை,சிந்து பிரம்மபுத்ரா மாதிரி ஜீவ நதிகள் இருந்தாலும் பாசன நீர் பற்றாக்குறை தொடர் கதையா இருக்கு. வடக்குல வெள்ளம் . தெற்குல வறட்சி. இதுமட்டுமில்லே. தென் மானிலங்களை மட்டும் ஜூம் போட்டு பார்த்தாலும் கோடையில நதி நீர் பங்கீடு தாவாக்கள், தர்ணா, ராஜினாமா மழைகாலம் வந்துட்டா அணைகள் திறக்கப்பட்டு உபரி நீர் வீணா கடல்ல போய் கலக்குது.
நீர் மேலாண்மைன்னா என்னன்னே தெரியாம பாசன நீரை விரயமாக்கிறாய்ங்க. செட்டா உபயோகிச்சா கர்னாடகம், மகாராஷ்டிரா மாதிரி மானிலங்கள் அடாவடி அணைகள் கட்ட வேண்டிய அவசியமும் இல்லை. இந்த மாதிரி லொள்ளுக்கும் வாய்ப்பிருக்காது.
பெட்ரோல் டீசலுக்காச்சும் ஆல்ட்டர்னேட்டிவ் இருக்கு.( ராமர் பிள்ளை என்ன ஆனாருங்க. ரெம்ப நாளா செய்தியே காணோம்!) தண்ணிக்கு இல்லவே இல்லை. காடுகள் அழிஞ்சு கிட்டே வருது. பொல்யூஷன் அதிகரிச்சுக்கிட்டே போவுது. மழை அளவு குறைஞ்சிக்கிட்டே போகுது. சனம் பெருகிக்கிட்டே போகுது. மானாவாரியா தண்ணீர் தேவைப்படற தொழிற்சாலைகள் பெருகிக்கிட்டே போவுது. ஆத்து நீர் மட்டுமில்லிங்கண்ணா நிலத்தடி நீரும் நாசமா போச்சு.
ஒரு ஏரியால ரியல் எஸ்டேட் நிலவரத்தை தண்ணீருக்கான வாய்ப்புதான் தீர்மானிக்குது. ஒரு வீட்ல பெண்ணை கொடுக்க அந்த வீட்டுக்கு தண்ணி வசதி எப்படினு முதல்ல பார்க்கிறாய்ங்க. தண்ணி லாரில க்யூல முண்டியடிச்சு அம்பது குடம் தண்ணி பிடிச்சிட்டு அவன் எங்கருந்து சில்மிஷம் பண்றது. அவள் ஒரு பக்கம் திறந்து போட்டு தூங்க இவன் ஒரு பக்கம் திறந்து போட்டு தூங்கிக்கிட்டு கிடப்பான். நான் வாய சொன்னேன் தலை ! குண்டி கழுவ கூட தண்ணி கிடைக்காத நிலை. அட கழுவறது கழுவாதது அப்பாறம். குடிக்க ஒரு மிழுங்கு தண்ணி வேணம்னாலும் கிடைக்காத நிலை.அட சொன்னா மானக்கேடு . ராத்திரி வேலை எடுக்கிறதுக்கு மிந்தி ஜன்ய பாகங்களை கழுவ தண்ணி இருக்கானு பார்த்துக்க வேண்டிய நிலை. தண்ணி இல்லைன்னா தொடை நடுவுல கைய வச்சுக்கிட்டு தூங்க வேண்டியதுதான்.
ஆனாலும் பாருங்க.. வயல்களுக்கு தண்ணி வாய்க்கால்ல தான் பாயுது. பிவிசி பைப்லைனை உபயோகிக்கலாமே. மாட்டாய்ங்க. டிப் இர்ரிகேஷன் மாதிரி எத்தனையோ முறைகள் இருக்கு. அதையெல்லாம் பின்பற்ற மாட்டாய்ங்க. வீணா கடல்ல கலக்கற உபரி நீரை எப்படி உபயோகிக்கலாம்னு பார்க்க மாட்டாய்ங்க.
மானிலத்துக்கு மானிலமே இந்த மாதிரி வெட்டி மடிஞ்சா நாளைக்கு அருகாமை தேசங்களோட தகராறு வந்தா என்னாகும்?
நதிகள் எந்த ஒரு தனிமனிதனுக்கோ, மானிலத்துக்கோ சொந்தமானதில்லை. நாட்டுக்கு சொந்தமானது. இன்னம் சொல்லப்போனா உங்களுக்கு சொந்தமான வீடு கட்டப்பட்டிருக்கிற நிலம் கூட தனி மனிதனுக்கு சொந்தமானதில்லை.
நீங்க ஒரு துண்டு நிலத்தை வாங்கறிங்கனு வைங்க.அதுக்கு நீங்க செலுத்தற தொகை அந்த நிலத்துக்கான தொகை அல்ல. அதுக்கு அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிற ட்ரெயினேஜ்,சாலை, குடி நீர் இத்யாதி வசதிகளுக்கான தொகைதான்.
சாலைய அகலப்படுத்த அரசாங்கம் நிலம் கேட்குது. உங்களுக்கு தர விருப்பமில்லேனு வைங்க. " போடாங்கோ"ன்னிட்டு கோர்ட்டுக்கு போயிரமுடியாது. கோர்ட்டுல நஷ்ட ஈடு போறாது, கட்டாதுனு வேணம்னா வாதாடலாம். அதனாலதான் இத்தனை கோர்ட்டுகள் இருந்தாலும் சாலை அகலப்படுத்தல், சிறப்பு பொருளாதார மண்டலம்னு அரசாங்க லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக்கிட்டே இருக்கு. இதான் உண்மை. இல்லேன்னா யாராச்சும் ஒரு ஜட்ஜ் விருப்பமில்லாதவனை நிலத்தை கொடுக்கும்படி அரசாங்கம் வற்புறுத்தக்கூடாதுனு ஜட்ஜ்மென்ட் கொடுத்திருக்கலாம்ல.
இவ்ள எதுக்கு ? ஒரு காலம் வரை உங்களுக்கு சொந்தமான நிலத்துல மேல்பாகத்துல உள்ள சொத்து உங்களுக்கு சொந்தம். நிலத்துக்கு அடில இருக்கிறதெல்லாம் அரசாங்கத்துக்கு சொந்தம்னு ஒரு ரூல் இருந்தது. ஆனால் இப்போ அப்படியில்லை. உங்களுக்கு சொந்தமான நிலத்துல போர்வெல் போடனும்னாலும் அரசு அனுமதி தேவை.உங்களுக்கு சொந்தமான நிலத்துல ஒரு கிரானைட் குவாரி இருக்குதுனு வைங்க அதை வெட்டி எடுக்கவும் அரசு அனுமதி தேவை. உங்களுக்கு சொந்தமான நிலத்துல வாஸ்துப்படி தப்பான திசைல ஒரு மரம் இருக்குதுனு வைங்க அதை வெட்டி எறியவும் அரசு அனுமதி தேவை.அதான் ரூலு.
இந்த ரூல்படி தான் நதி நீர் மேல மானில அரசுகள் உரிமை கொண்டாட வாய்ப்பு ஏற்படுது. அதனால தான் விவரம் தெரிஞ்சவுக ஆதி நாள்ள இருந்து நதிகள் தேசீயமயமாக்கப்படனும்னு வற்புறுத்தறாய்ங்க. தேசீய மயம்னா என்ன ? மத்திய அரசுக்கு சொந்தமாயிரும்.
சென்ட்ரல் வாட்டர் கமிஷன் எப்போ எந்த அணைய திறந்து தண்ணீர் விடனும்னாலும் விடலாம். அதுக்குண்டான அத்தாரிட்டி ஏற்பட்டுரும்.இப்போ போல மானில அரசுக்கு காயிதம் அனுப்பிட்டு விரலை சப்பிக்கிட்டு இருக்கற நிலைம இருக்காது. சரி தேசீயமயமக்கிர்ராங்கன்னே வைங்க.
கர்னாடக விவசாயிகளுக்கு உள்ள பாசன நீர் தேவைய புறக்கணிச்சுட்டு தமிழக விவசாயிகளுக்காக தண்ணிய திறந்து விட்டுர முடியுமா? அப்பவும் இந்த லொள்ளு இருக்கத்தான் செய்யும். இப்ப உண்மையில பாதிக்கப்பட்டவுக சத்தம் போடறோம்.அப்போ நம்ம பாதிப்புக்கு காரணமானவுக சத்தம் போடுவாய்ங்க. சத்தம் இருக்கத்தான் செய்யும்.
இல்லாத பாவம் தான் அவிகளை இப்படி பிஹேவ் பண்ண வைக்குது. இல்லாதனு மொட்டையா சொன்னா எப்படி? மனிதாபிமானம், தன்னை போல் தானே பிறரும்ங்கற எண்ணம், கொஞ்சம் முக்கி யோசிச்சு தங்கள் மானிலத்துல வீணா கடல்ல கலக்கிற தண்ணிய எப்படி திருப்பி விட்டு பாசனத்துக்கு உபயோகிக்கிறதுனு திட்டம் போடற, திட்டத்தை அமல் படுத்தற வசதி வாய்ப்பு இதெல்லாம் இல்லாத பாவம் தான் அவங்களோட இந்த பிஹேவியருக்கு காரணம்.
இதுக்கெல்லாம் நிரந்தர தீர்வுதான் என்னன்னா... இந்திய நதிகளை கால்வாய்கள் மூலம் இணைக்கறது. செலவாகுமேம்பாய்ங்க. எந்த காலத்துக்கு முடியறதும்பாய்ங்க.
செலவாகுமே:
ஒரு கோடி ரூபாய் கார்களையும், லட்ச ரூபா பைக்ஸையும் ,கார்ப்போரேட் கம்பெனிகளோட சரக்கையும் ஏத்திக்கிட்டு வர்ர 24 வீலர்ஸ் ஈஸிய டர்ன் ஆக வசதியா சாலைகளை அகலப்படுத்தவும்தான் செலவாச்சு. ஆஷியாட் கேம்ஸ் நடத்த செலவாகலையா? செம்மொழி மாநாடுக்கு செலவாகலியா? தாளி மாநாட்டுக்கும் மேம்பாலத்துக்கும் என்னய்யா சம்பந்தம்?
வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலமா நடத்தியிருக்கலாம். ஒரு ஸ்டுடியோல நடத்தி இருபது ரூபாய்க்கு டிவிடி செய்து வித்திருக்கலாம். இவ்ள ஏன் இண்டோர் நடத்தி டிவில லைவ் கொடுத்திருக்கலாம். மக்கள் தலைமேல பாரமேத்தாம , பணம் புரட்டி அயனான ஐடியா எல்லாம் கைவசம் இருக்கு.
எந்த காலத்துக்கு முடியறது:
சீக்கியர்களோட தங்க கோவில் குளத்துல தூறெடுக்க அவிக க்ளோபல் டெண்டர் விடலை. தாங்களே கோதாவுல இறங்கினாய்ங்க. குளத்துல இறங்கி சேறு வார்ர தாக்கத் இருக்கிற சிங் எல்லாம் குளத்துல இறங்கினாய்ங்க. பணம் காசு உள்ளவன் பணம் காசு கொடுத்தான். ரொட்டி ,சப்ஜி கொடுக்க முடிஞ்சவன் அதை கொடுத்தான்.
மேட்டர் ஃபினிஷ்.
சிறப்பு ராணுவம்:
நாட்ல பத்து கோடி பேர் வேலையில்லாத ஆண்,பெண்கள் இருக்காய்ங்க. ஆளுக்கொரு கடப்பாறை, மண்வெட்டி, கூடை கொடுத்து அனுப்பினா போதும். நதி இணைப்பு ஓவர்.
கூட்டுறவு பண்ணை விவசாயம்:
என்னதான் நதிகளை தேசியமயமாக்கினாலும், என்னதான் நதிகளை இணைச்சுட்டாலும் நீர் மேலாண்மை அமலாகலைன்னா அஞ்சு பத்துவருஷத்துல மறுபடி பத்தாக்குறை வந்துரும். அதனால விலேஜ் டு நேஷ்னல் லெவல்ல விவசாயிகள் சங்கங்களை ஏற்படுத்தனும். இருக்கிற நிலங்களை அந்த சங்கத்துக்கு லீஸ் ப்ரப்போசல்ல தரனும். அவிகளுக்கு தேவையான உள் கட்டமைப்பு, கட்டமைப்பு, கம்யூனிகேஷன்,தொழில் நுட்ப பயிற்சி, கடன் வசதி எட்செட்ரா எட்செட்ராவ பண்ணி தர்ரதுதான் அரசு துறைகளோட டாப் ப்ரியாரிட்டியா இருக்கனும். லார்ஜ் ஸ்கேல்ல விவசாயம் பண்ணனும். அப்பத்தான் பயிர் காப்பீடு, மார்க்கெட்டிங், இயற்கை விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலகங்கள், கிடங்குகள் , ட்ரான்ஸ் போர்ட்டேஷன் முக்கியமா நீர் மேலாண்மை எல்லாம் சாத்தியம்.
இதையெல்லாம் செய்யனும்னா இப்ப உள்ள மறைமுக ஜன நாயகத்துல ( எம்.பிக்களால தேர்ந்தெடுக்கப்படற பிரதமராலயோ, எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படற சி.எம் களாலயோ ஆகாது. நேரிடை தேர்தல் வரனும். அதுக்கு மிந்தி ப்ளாக் மணி ஒழியனும். தற்போதைய கரன்சிய ரத்து பண்ணி புதுகரன்சியை கொண்டு வரனும். பழைய கரன்சிக்கு கணக்கு காட்டி புது கரன்சியை வாங்கிக்க ஒரு 3 மாசம் டைம் கொடுக்கலாம். ஸ்விஸ் பேங்க் மாதிரி ஒரு பேங்கை திறக்கலாம்.
ஒரு அஞ்சு வருஷம் அரசு,கட்சிகள், மக்கள் தங்களோட அன் ப்ரொடக்டிவ் ஆக்டிவிட்டீஸை நிறுத்திக்கிட்டு முழு மூச்சா ஒரே நோக்கத்தோட செயல்பட்டா பாப்லி, அல்மட்டி மாதிரி இழவெல்லாம் ஒழிஞ்சு போறதோட உண்மையிலயே இந்தியா பணக்கார நாடாயிரும்.
No comments:
Post a Comment