அண்ணே வணக்கம்ணே,
அவாளை கிழிச்சு கொஞ்ச நாளாச்சு. நாமா ஓஞ்சு போவட்டும்னு விட்டா கூட வா கிழினு கூப்பிடறாய்ங்க என்ன பண்ண? "அவா" மென்டாலிட்டி ங்கற தலைப்புல தனிப்பதிவு போட்டிருக்கேன். படிங்க. கமெண்ட் அடிங்க.
சரி ஸ்வீட்டி ஐலவ் யு க்கு வந்துருவமா?
இதென்னடா முருகேசனுக்கு வந்த போங்காலம், இந்த 43 வயசுல (அதுவும் ஆகஸ்ட் 7 வந்தா 44) எவளோ குட்டிய பார்த்து ஜொள்ளு விட்டுட்டாப்ல இருக்குன்னு இந்த பதிவை படிக்க வந்த நீங்க (வழக்கம் போல) செமர்த்தியா ஏமாற போறிங்க. காரணம் ஸ்வீட்டிங்கறது என் மகள் வளர்க்கிற 11 மாச பெண் நாய் குட்டி (பாமரேனியன் தான் ) . நாட்ல எத்தனையோ பிரச்சினை இருக்க நாயை பத்தி எழுதவந்துட்டார்யானு சலிச்சுக்கிறாதிங்க. நான் எழுதவந்தது நாய்க்குட்டிய பத்தி மட்டுமில்லை. அன்பை பத்தி.
இன்னைக்கு உலகத்துல உள்ள 99.9 சதவீத பிரச்சினைகளுக்கு காரணம் அன்பு இல்லாததே. நோயாளிகள் மேல கொஞ்சூண்டு அன்பு இருந்திருந்தா காலாவதியான மருந்துகளை லோட் லோடா கொண்டு வந்து வித்திருப்பாய்ங்களா?
நம்ம பிரதமருக்கு மட்டும் 2007லயே ஆந்திரமக்கள் மேல அன்பு பிறந்திருந்தா 2010ல சந்திரபாபு பாப்லி அணைய பார்க்கிறேனு போய் நாறியிருக்கமாட்டாரு.சோனியாவுக்கு ஈழத்தமிழ் மக்கள் மேல கொஞ்சமே கொஞ்சம் அன்பு பிறந்திருந்தா தனி ஈழம் மலர்ந்திருக்கும். கலைஞருக்கு தமிழ் நாட்டு மக்கள் மேல அன்பு இருந்திருந்தா வெறுமனே இலவசங்களை அள்ளி வீசிக்கிட்டு காலத்தை தள்ளியிருக்கமாட்டாரு.
"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் தமதென்பும் உரியர் பிறர்க்கு" தேவேந்திரனுக்கு ஆயுதம் தேவைப்பட ததீச்சிங்கற ரிஷி தன்னோட எலும்புகளை கொடுத்தாராம்.
அன்பு! அன்பு! அன்பு! இந்த ஒரு ஐட்டம் தம்பதிகள் மத்தில இல்லாம போனா என்னெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிக்க ஒரு வாரத்து தந்தி பேப்பரை படிச்சா போது.
ஒரு ஆசிரியனுக்கு மாணவிகள் மேல காமம் தான் வருது ஏன்? அந்த பிக்காலி மனசுல அன்பில்லை. .
நான் ஒன்னும் உத்தம புத்திரனும் இல்லே. நைஷ்டிக பிரம்மச்சரியத்தை கடை பிடிச்சவனும் இல்லே (1986 ல ஒரு ஆறுமாசம் தவிர) பிடிக்கிறவனுமில்லே .
ஒரு படத்துல (தமிழ்) மணிவண்ணன் பேசற டயலாகை பாருங்க:
ஒரு வயசுல எந்த பொம்பளய பார்த்தாலும் அம்மாவா தோணும். இன்னொரு வயசுல எந்த பொம்பளய பார்த்தாலும் பெண்டாள தோணும். எந்த பொண்ணை பார்த்தாலும் மகளா தோணும்.
என் விளக்கம்:
இதெல்லாம் வளர்ச்சி. "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் " அப்பத்தான் இந்த ஸ்டேஜ் வரும். இப்ப ரெடிமேட் ட்ரஸ்ஸுங்க வேற அதிகமாயிருச்சா. எந்த பொண்ணை பின்னே இருந்து பார்த்தாலும் அந்த மாதிரி ட்ரஸ்ஸை என் மக போட்ட மாதிரியே தோணுது. ஏதோ குட்டி தன் அப்பாவை" டாடி" ன்னு கூப்பிட்டா என் மக என்னை கூப்பிட்ட மாதிரி செல்ஸ்ல வைப்ரேஷன். "அது அது" அந்தந்த வயசுல முடிஞ்சுட்டா அடுத்து வர்ரதெல்லாம் கரெக்டா இருக்கும். அரை குறைங்க சாகிற வரை அரை குறையாவே வாழ்ந்து சாகவேண்டியதுதான்.
தாய் பால் மேட்டரையே எடுத்துக்குங்க.. கொடுக்கிற நிலைல தாய் இல்லைன்னாலும் ( இன்ஃபெக்சன் ?) குடிக்கிற நிலைல குழந்த இல்லைன்னாலும் அது பாட்டுக்கு சுரந்துக்கிட்டே கிடக்கு. கொடுக்கப்படலன்னா/குடிக்கப்படலன்னா கட்டிக்குது. இயற்கைய எவனும் தடுக்கமுடியாது. தடுக்கிறேனு இறங்கினா அகாலமா தடுக்கி விழவேண்டியதுதான்.
1993ல நான் இந்தி பண்டிட்.கண்ணாலமாகி 2 வருஷம் ஆகியிருக்கு. வயசு 26. 8,9,10 க்ளாஸ் வரை நாமதான் இந்தி டீச்சிங். பாவம் அந்த குழந்தைங்க உடலளவு வளர்ந்திருக்கங்களே தவிர மனசுல கல்மிஷம் கிடையாது. ஒரு ஃபாதர்லி நெஸ்ஸுக்கு தவிக்கிற வயசு.(பொண்ணு பெருசாயிருச்சுனு அவிக அப்பன் லேசா விலகியிருப்பான்) தேவையில்லாம வந்து வந்து உரசும். கும்பலா உரசும். வேணம்னே குரல்ல கரகரப்பை வரவச்சுக்கிட்டு, " தத் தள்ளி நில்லு . தலைக்கு என்னா எண்ணெய் வச்சுருக்கே"ன்னோ, " வேகுது .. தள்ளி நில்லு காத்துவரட்டும்"னோ, "வெளிச்சம் வரட்டும்"னோ சுத்தமா வெட்டி விட்டுர்ரது.
இந்த மெச்சூரிட்டிக்கு காரணம் 1984டு 1986 போட்ட கெட்ட ஆட்டம். ப்ளஸ் 1991 டு 1993
முறையான திருமண வாழ்க்கை. காமத்தை வெல்ல ஒரே வழி அன்புதான். உங்க மனசெல்லாம் அன்பு பொங்கி வழியறப்ப காதலிய கூட உச்சந்தலைல கை வச்சு ஆசீர்வதிக்க தோணுமே தவிர கை போட தோனாது.
கொஞ்சமா வாச்சும் அன்புங்கறது மனிதர்கள் இடையில நசுங்கலாவோ,தேசலாவோ , தீசலாவோ மினுக் மினுக்னு அடிச்சிக்கிறாதாலதான் வாழ்க்கை சக்கரம் கட முடானு சத்தம் போட்டுக்கிட்டாவது ஓடிக்கிட்டிருக்கு.
மனித உணர்வுகள் தொத்து நோய் போல் பரவக்கூடியவை. நீங்க சிரிச்ச நானும் சிரிக்கிறேன். நீங்க அழுதா நான் அழாட்டாலும் சிரிக்க முடியறதில்லை. ஒரே உயிர்ல இருந்து வந்த (அமீபா) நாமெல்லாம் இணைக்கப்பட்டிருக்கோம். நீங்க யாருக்கோ காட்டற அன்பு சரியான விலாசம் இல்லாத தபால் அட்டை மாதிரி தடுக்கி தடுக்கி என்னை வந்து சேருது. நீங்க யாருன்னு எனக்கு தெரியாட்டாலும் உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய நன்றிய நான் யாரோ ஒருத்தருக்கு தெரிவிக்கிறேன்.
சரிங்கண்ணா அன்பு அன்புங்கறியே ஏன் அன்பு காட்டனும்ங்கறிங்களா..சக உயிர்களின் பால் நீங்க காட்டற அன்பு இயற்கைக்கு நீங்க சொல்ற நன்றி தலை.
இன்னைக்கு நான் இந்த பதிவை போட நீங்க படிக்கிறிங்க. இந்த ரெண்டு செயலுக்கும் இடையில எத்தீனி ப்ராசஸ் கீது. உதாரணத்துக்கு என் தமிழறிவு. கண்ணி ஆர்வம், இந்த அழகி சாஃப்ட்வேர், இந்த கம்ப்யூட்டர் , அடிச்சதை ஸ்டோர் பண்ணிக்கப்போற பென் ட்ரைவ், இன்டர் நெட் கனெக்சன், ப்ளாகர் டாட்காம் ,இந்த பதிவுகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்க போற திரட்டிகள் ஷேர் பண்ணப்போற ஆர்க்குட், ஃபேஸ் புக் மாதிரி தளங்கள். இவிகளுக்கெல்லாம் நன்றி சொல்ல ஆரம்பிச்சா என் ஆயுசு போதாது. மேலும் அவிகளுக்கு என் நன்றியால பெரிசா லாபமும் கிடையாது. இப்ப நான் என்ன பண்ணனும்?
என் நன்றிய வேற யாருக்காச்சும் தெரிவிக்கலாம். ஒரு கண்ணில்லாத தோழன் சாலையை கடக்க உதவலாம், படிப்பறிவில்லாத தாய்குலத்துக்கு எம்.ஓ ஃபார்ம் ஃபில் அப் பண்ணலாம்.
இப்ப ஸ்வீட்டி மேட்டருக்கு வரேன். என் பாயிண்ட் ஆஃப் வ்யூல சட்டைக்கு இஸ்திரிபோடறதே லக்சரி. இதுல பாமரேனியன் எல்லாம் டூ மச். ஆனா என்ன பண்றது? நம்ம கொள்கையே "எல்லோர்க்கும் வழி காட்ட நானிருக்கிறேன்"னு காட்டவேண்டியது. வரலைன்னா அவிக வழிக்கே போயிர்ரது. (இங்கன பலான ஜோக், செக்சாலஜினு தாவினது கூட அந்த வழிதான்) . சரி ஓஞ்சு போவட்டும் வாங்கியாச்சு.
அது என் மேல காட்டற அன்பையும், தன் அன்பை வெளிக்காட்ட தன் மொழியை தீட்டிக்கிட்டதையும், அதனோட பாடி லேங்குவேஜையும், டெலிபத்திலயே பேசறதையும் சொன்னா அப்பாறம் நாய் வளர்க்கிற பார்ட்டிங்கல்லா க்யூ கட்டிருவாய்ங்க அதனால் அம்பேல்.
No comments:
Post a Comment