அடி நாதம் : அரசுகள் எடுக்கும் சில்லரை முடிவுகள் சாமானிய மக்களின் வாழ்வை புரட்டிப்போடுவது
ஓப்பனிங் சீன் :
பிராமண குடும்பம் நடத்தற நெட் சென்டருக்கு நான் ப்ராமின் இளைஞன் ப்ரவுசிங்குக்கு வரான். ஐயரு (50) இவனை இன்சல்ட் பண்ணி சிஸ்டம் தர்ரதில்லை போங்கறா. அப்போ மகள் (32) அவரை கண்டிச்சு சிஸ்டம் கொடுக்கிறாள். இளைஞன் அனுமார் பக்தன் .கமிட்டட் பேச்சிலர் (22) ஒரு லீடிங் ப்ளாகர். பிராமணீயத்தை அர்ரகன்டா போட்டு தாக்கற பார்ட்டி. லோக்கல் எம்.எல்.ஏ வோட சப்போர்ட்டர்.
திருமலைல ஐயருங்க,தேவஸ்தான சேர்மன் பண்ற அட்டூழியத்தை எல்லாம் கிழி கிழினு கிழிக்கிறான். சாமானிய பக்தர்களோட அவதிகளை உலகத்துக்கே அஞ்சல் பண்றான். தி.தி.தேவஸ்தான சேர்மன் பெரிய தொழிலதிபர். முக்கியமா லிக்கர் லாபியை சேர்ந்தவர். எக்ஸ் எம்பி. எம்.எல்.ஏவை ரெண்டு தடவை கொலை பண்ண ஸ்கெச் போட்டு ட்ரை பண்ண பார்ட்டி. எல்லா பத்திரிக்கைகளும் அவரோட நிறுவனங்கள் & தேவஸ்தானம் தர்ர விளம்பரங்களுக்கு சரெண்டர். அவரை எதிர்த்து எழுதினா ஒரு எழுத்து கூட வெளிச்சத்துக்கு வராது. அதனால தான் ப்ளாக். ( லாஜிக் போதுமில்ல)
இவன் போடற போடுக்கு சி.எம் விசாரணை கமிஷனே போட்டுர்ராரு. இதையெல்லாம் ஓவர் கம் ஆக சேர்மன் தினசரி காலை 10 முதல் 11 வரை பக்தர்கள் ஆன்லைன் சாட் மூலம் தங்கள் குறைகளை நேரிடையா சொல்லனும்னு அறிவிக்கிறார். ஒரு தடவை இளைஞனும், சேர்மனும் பப்ளிக் சாட்ல கிராஸ் ஆகிறாங்க. சேர்மன் படு மொக்கையாகிவிட..
தனக்கு அனுகூலமான அர்ரகன்ட் சி.ஐ மூலம் இளைஞனுக்கு டார்ச்சர் கொடுக்க சேர்மன் திட்டம் போடறார். இளைஞனோட மெயிலை ஹாக் பண்ண வச்சு அதே ஐ.பி நெம்பர்ல இருந்து சேர்மனுக்கு கொலை மிரட்டல் மெயில் அனுப்ப வைக்கிறார்.
ப்ரவுஸ் பண்ணிக்கிட்டிருக்கிற இளைஞனை போலீஸ் அரெஸ்ட் பண்ணுது .சி.ஐ ஓவர் ஆக்சனால நெட் சென்டருக்கு சீல் வைக்கிறாய்ங்க. அப்போ ஐயரு பர்ஸ்ட் அவுட் ஆகிறார்.
இது மாதிரி எதுனா நடக்கும்னு தான் நான் இந்த நாயை சேர்க்காதிங்கனு சொன்னேன். பிராமண தூஷனை பண்றவன் கதி இப்படித்தான் ஆகும். இந்த அபிஷ்டுவுக்கு இடம் கொடுத்ததால நம்ம பிழைப்பும் போச்சு அது இதுனு கத்தறாரு.
அப்போ அவரோட பெண் "ரொம்ப அலட்டிக்காதிங்க ...ன்னிட்டு ஃப்ளாஷ் பேக் சொல்றாள்
< ஃப்ளாஷ் பேக் >
ஒரு பிராமண குடும்பம் - கிராமம்
ஐயர் ஃபேமிலி. அப்பா அஷ்ட லட்சுமி கோவில்ல அர்ச்சகர். இவரோட ஆசி (?) யுடன் பஞ்சாயத்து தலைவி (எஸ்.சி . எம்.எல்.ஏ ஆகிறாள். உயர் சாதியினரை கவிழ்க்க ஐயரை, கோவிலை துருப்பு சீட்டாக உபயோகிக்கிறாள். கோவில் வளருது. தை அரசு அற நிலையத்துறை எடுத்துக்கப்பார்க்குது. அரசியல் லாபம் கருதி எம்.எல்.ஏ அதை தடுக்கறதில்லை. உரசல்கள் வருது.அய்யருக்கு முதல்ல ஒரு மகள் ( முதிர்கன்னி). அப்பாறம் இரண்டு ஆம்பள பசங்க. கிராமத்துலருந்து கழண்டுக்கறச்ச பெரிய பையனை பெண் எம்.எல்.ஏவுக்கு பி.ஏவாக்கிட்டு டவுனுக்கு வந்துர்ராரு. அவன் ஸ்டேட் செக்ரட்ரியேட்ல இருக்கிற பிராமண ஐ.ஏ.எஸ் அதிகாரியோட மகளை கண்ணாலம் கட்டிக்கிட்டு குடும்பத்தை கழட்டி விட்டுர்ரான்.
கதைக்களம் டவுனுக்கு மாறுது:
டவுனுக்கு வந்த ஐயருக்கு வேலை கிடைக்க மாட்டேங்குது.புரோகிதம் நடக்கிறதில்லை. களவாணிபயல் தான் யாகம் பண்றான். சக ஐயருங்க மாதிரி இவரால காம்ப்ரமைஸ் ஆக முடியறதில்லை. முழு நேர ஜோதிடரா மாறப்பார்க்கிறார். அரசின் தவறான முடிவொன்றால் வேலையிழந்த பிராமணனல்லாத இளைஞன் ஒருவன் ஜோதிட தொழிலில் நெம்பர் ஒன்னாக இருக்கிறான். தாயை யூட் ரஸ் கான்சருக்கு பலி கொடுத்தவன். அண்ணன் தம்பி எல்லாம் லைஃப்ல செட்டிலாகியிருக்க இவன் மட்டும் சோஷியல் லைஃப் இனஃப்னு கமிட்டட் பேச்சிலரா வாழறான்.
ஐயரோட மகளும் இளைஞனும் கிராஸ் ஆகிறாங்க. இவன் ஏதோ யோசனைல வண்டில வர்ரப்ப ஐ.மகள் மேல மோதப்பார்த்து அதை தவிர்க்க விழுந்து வார்ரான்.
அடிப்பட்டுக்கறான். அந்த பெண் இளைஞனை தூக்கி டீக்கடை பெஞ்ச்ல படுக்க வச்சி
ஆசுவாசப்படுத்தறா. இந்த களேபரத்துல அவளோட சேலை சேறாயிருது. கிழிஞ்சி போயிருது. அவளோட குடும்பம் பத்தின அறிமுகத்துக்கப்புறம் பேர் ராசி, பேர் பொருத்தம்லாம் ஐயருக்கு அனுப்பறான். செகண்ட் ஒப்பீனியன் கேட்டுருங்க என்று கொழுத்தவர்களை அனுப்புகிறான்.ஆரம்பத்தில் இந்த மேட்டர் தெரியாது ஐயரு சிவாஜி கணேசன் ரேஞ்சில் பில்டப். அப்பாறம் பார்த்தா மேட்டர் தெரிஞ்சு ஜோதிடத்தொழிலையும் விட்டுர்ரார்.
ரெண்டாவது மகன் தி. தனமாய் நான் பிராமிண் இளைஞனிடம் உதவியாளனாய் வேலை செய்கிறான். இளைஞனின் உதவியுடன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் டாக்குமெண்ட் ரைட்டராகிறான். அங்கும் கணிணி மயம் நடக்குது. பையன் நொந்துர்ரான். இளைஞன் டோன்ட் ஒர்ரின்னிட்டு தன் ஆஃபீசுக்குன்னு கம்ப்யூட்டர் வாங்கி ஆள வச்சி டைப்பிங்க், வோர்ட் ப்ராசசர்ல பத்திரம் பிரிப்பேர் பண்ண கத்து தரான். கம்ப்யூட்டர் ஜாதகமும் போட காலம் ஓடுது.
ஐயர் ஃபேமிலில எம்.எல்.ஏகிட்டே பி.ஏ வா சேர்ந்தவன் இவிகளை கண்டுக்கற
தில்லை. அப்பா Vs மகன் சந்திப்பு சவால் எல்லாம் நடக்குது. ஐயர் மகள் ட்யூஷன் சொல்லி பத்து காசு சம்பாதிக்கிறாள். கவர்ன்மென்ட் ஸ்கூல் எல்லாம் நெக்லெஜென்சிக்கு ஆளாக ப்ரைவேட் ஸ்கூல்ஸ் செழிக்குது அங்கனயே ட்யூஷன் படிக்கனும்னு வற்புறுத்தறாய்ங்க. மகளோட பிழைப்பு கெடுது.
நான் ப்ராமின் இளைஞன் ஐயர் மகளுக்கு வேலை தர்ரதா சொல்றான் ஐயரு ஒத்துக்கறதில்லை. இவன் ஒரு இன்டர் நெட் சென்டரை துவக்கி ரெண்டாவது மகன் வங்கிக்கடன் வாங்கி துவக்கினதா நம்ப வைக்கிறாய்ங்க.
கதைக்களம்: இன்டர் நெட் சென்டருக்கு மாறுது.
ஐயர் மகளும் நெட் சென்டருக்கு மாறிர்ரா.தம்பி டாக்குமென்ட் டைப்பிங் பண்றச்ச இவள் சென்டரை மெயின்டெய்ன் பண்றாள். ஐயரும் லஞ்ச் ரிலீஃபுக்குனு என்டர் ஆகிறார்.
<ஃப்ளாஷ் பேக் முடிவு>
முன்னாள் எம்.பி கம் தி.தி.சேர்மன் ஆட்கள் ஒரு பக்கம் , எம்.எல்.ஏ ஆட்கள் ஒரு பக்கம் தர்ணா , ஆர்பாட்டம், சாகும் வரை உண்ணாவிரதம்னு இறங்க ஐயர் மகளும் அதுலகலந்துக்கறாய்ங்க. சொந்த தம்பி ( பெண் எம்.எல்.ஏ வோட பி.ஏ) அவளை தலை முடியை பிடிச்சு இழுத்து மிதிக்கிறான். எம்.எல்.ஏ வந்து அவனை ஒரே அறை.
ஒரே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி சம்பந்தப்பட்ட விஷயங்கறதால சி.எம். தலையிட்டு முன்னாள் எம்.பி யை ஸ்ட் ரிக்டா வார்ன் பண்றார். மேட்டர் கூல் ஆகுது.
திருப்பதி - பெங்களூர் சாலையை ஆறுவழி சாலையா மாத்த மார்க்கிங் நடக்குது. செக் போஸ்ட்ல இருந்து பல ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள் எல்லாட்தயும் இடிக்க வேண்டி வரும்னு ஆர் & பி அதிகாரிகள் மார்க் பண்ணிட்டு போயிர்ராய்ங்க. நகராட்சி காம்ப்ளெக்ஸ்ல இருக்கிற நெட் சென்டரையும் இடிக்க சொல்லி மார்க் பண்றாய்ங்க.
ஆக்சுவலா பை பாஸ் சாலை இருக்கிறச்ச இது தேவையில்லாத வேலை ஆனா முன்னாள் எம்.பி தன் தில்லி செல்வாக்கை உபயோகிச்சு லோக்கல் எம்.எல்.ஏ தலைய பிடிச்சுக்கட்டும்னு இப்படி வேலை பார்த்து விட்டுர்ராரு.
ஐயரு பெண் எம்.எல்.ஏவை பார்க்க போறார். அங்கே இந்த சாலை விரிவாக்கத்துல அவளும் ஒரு பெனிஃபிஷியரினு ( லாபமடைய போறவள்) தெரியவருது. ஐயரு தன் மகன் கிட்டே பிராமணனுடைய கடமையை விவரிக்க (ராஜா தப்பு பண்ண முனைஞ்சா உயிரை கொடுத்தாச்சும் தடுக்கனும்) அவன் முரட்டுக்களை சுருளி ராஜனோட ஃபார்முலாவை ஃபாலோ பண்றதா சொல்றான். ( என் இனம் ஒரு ஒட்டுண்ணி. சொந்த பலமில்லாத ஜீன் என்னுது. இன்னைக்கு சமுதாயமே என் இனத்துக்கு எதிரியா இருக்கு. இவள் கிட்டே இருக்கிறது தான் எனக்கு பாதுகாப்பு இவள் என் குலத்துக்குமட்டுமில்லே எனக்கும் எதிரிதான். இவளுக்கு சேனிட்டரி நாப்கின் வாங்கி வச்சிருந்து கேட்டப்ப கொடுக்கிறதும் என் வேலைதான். இவளுக்கு செருப்பு போட்டு விடறதும் என் வேலைதான்னு தன்னோட ஸ்டாண்டை ஜஸ்டிஃபை பண்றான்.
கூடப்பிறந்த அக்காவுக்கு ஒரு வாழ்க்கை துணைய தேடித்தரணுங்கற எண்ணம் கூட இல்லாத இல்லாத நீ ஒரு புழு. ஒரு சில கோடி ரூபாய் கமிஷன்களுக்காக இத்தனை ஆயிரம் மக்களோட பொழப்புல மண்ணள்ளி போடறாளே அந்த எம்.எல்.ஏ மலம்டாங்கறார்
மகன் காலம் மாறிப்போச்சுப்பா. இனி நம்ம சாதி ஆண்களெல்லாம் பஞ்சம சாதி பெண்களுக்கு நாப்கின் வாங்கி கொடுத்து பிழைக்கனும், நம்ம சாதி பெண்ணெல்லாம் பார்ட் டைமா விபச்சாரம் பண்ணித்தான் வரதட்சிணைக்கு காசு சம்பாதிக்கனும்னு சொல்றான். "உன் பெண்டாட்டி கூட அப்படி சம்பாதிச்சுத்தான் வரதட்சிணை கொடுத்தாளா"னு கேட்கிறார்..
"உன்னை மாதிரி கையாலாகாத பிராமணன் வயித்துல பிறந்தவுக நிலையத்தான் நான் சொன்னேன். எனக்கென்ன ஒவ்வொரு ராத்திரியும் எனக்கு முத ராத்திரிதான். காசை தூக்கிப்போட்டா புதுசு புதுசா கிடைச்சுட்டு போவுது"ங்கறான் மகன்.
ஐயரு காறி துப்பிட்டு வந்துர்ராரு.
<ஷாட் கட்>
ஸ்டார் ஹோட்டல் ரூம். ஐயரோட முதல் மகன் கையில மல்லிப்பூவெல்லாம் சுத்திக்கிட்டு "பட்லி"க்காக காத்திருக்கான். அப்ப அல்ட் ரா மாடர்னா ஒரு குட்டி
என்ட்ரி கொடுத்து முதுகை காட்டி நிக்குது. இவன் ஜொள்ளோ ஜொள்ளு . முகத்தை காட்டுடி செல்லம்னு திருப்ப "அக்கா "
நீ சொன்ன மாதிரியே வரதட்சிணைக்கு பணம் புரட்ட முடிவு பண்ணிட்டேண்டா.. இது குரு தட்சிணை மாதிரி வா"ங்கறா. அதே நேரம் இளைஞன் உள்ளே நுழையறான். நாலு காட் காட்டி சாலை விரிவாக்கத்துக்காக எந்த காண்ட் ராக்டர் கிட்டே பெண் எம்.எல்.ஏ எவ்ளோ பணம் வாங்கினா, முன்னாள் எம்.பிக்கு எவ்ளோ கிடைச்சதுனு விரையை நசுக்கி கேட்க அவனோட லாப் டாப்ல இருந்து விவரங்கள் கொட்டுது.
இந்த மேட்டரை ஆதாரங்களோட தன் ப்ளாக்ல எழுதி கிழிக்கப்போறதா சொல்ட்டு அவனோட லாப்டாப்போட கிளம்பறான். உடனே அவன் பெண் எம்.எல்.ஏவுக்கு தகவல் சொல்ல, அவள் முன்னாள் எம்.பிக்கு அதை பாஸ் பண்ண அவர் . தன் ரவுடிபட்டாளத்தை விட்டு ஊர்ல் இருக்கிற ட்ரான்ஸ்ஃபார்மர்களையெல்லாம் வெடிவச்சு தூள் பண்ண சொல்றாரு. இளைஞனை அவரோட ஆட்கள் வேட்டையாடறாய்ங்க. ஐயர் மகளும், இளைஞனும் எம்.எல்.ஏ வீடுதான் சேஃபுன்னு அவர் வீட்டுக்கு பறக்கறாய்ங்க. அங்கயும் பவர் கட். இவிக ரெண்டு பேரும் எம்.எல்.ஏ வீட்டுக்குத்தான் போயிருப்பாய்ங்கனு கெஸ் பண்ணி எம்.எல்.ஏ வீட்டை முற்றுக்கையிடறாங்க.
உள்ளே ரெண்டு கன் மேன் அவிக கைல ரெண்டு மெஷின் கன்.எம்.எல்.ஏ கைல ஒரு கைத்துப்பாக்கி. வெளியே ரணகளம். இளைஞன் விவரம் சொல்ல எம்.எல்.ஏ ப்ளாக் எல்லாம் அப்பாறம் முதல்ல இதை சி.எம்முக்கு ரிலே பண்ணிரலாம்னு ஃபோன்ல ட்ரை பண்ண நெம்பர் முடக்கப்பட்டிருக்கிறதா ஆன்சரிங் மெஷின் சொல்லுது.
இளைஞன் சுத்தும் முத்தும் பார்க்கிறான். பழைய சைக்கிள் ஒன்னு இருக்கு. அது எம்.எல்.ஏ வின் அப்பாவான சுதந்திர போராட்ட தியாகியோடது. அதுல இருக்கிற டைனமோல இருந்து லாப் டாப்புக்கு பவர் கொடுக்கிறான். சிஸ்டம் ஆன் ஆகுது. ஐயர் மகள் வீலை சுழற்ற பவர் ஜெனரேட் ஆகுது. உடனே இளைஞன் மொத்த மேட்டரையும் படபடனு தட்டச்சறான். எம்.பி.யோட வாடகை கொலையாளிகள் கூட்டம் கேட்டை தாண்டி உள்ளாற பூந்துருது. ஃபைரிங் நடக்குது. ஹாலுக்கு வெளிய அவிக. உள்ளாற இவிக. ஐயர் மகளுக்கு ரெண்டு கைலயும் புல்லெட் பாயுது. இளைஞன் மேல சர விளக்கு அறுந்து விழுது. ( தமிழ் சினிமா க்ளைமேக்ஸ்ல ரத்தமில்லைன்னா நல்லாருக்காதுல்லியா பாஸ்) எப்படியோ மேட்டரை அடிச்சு முடிக்கிறான் இளைஞன். இதை ப்ளாக்ல எப்படி அப்லோட் பண்றது?
நெட் கனெக்டிவிட்டிக்கு DTH மாதிரி ஒரு எக்விப்மென்ட் இருக்குது ( உண்மையிலயே இருக்கா தலைவா?) அது மொட்டை மாடில ஒரு 1 இஞ்ச் பைப் உச்சில இருக்குது . சமீபத்துல வீசன லைலா புயல் காரணமா அதனோட ஆங்கிள் மாறியிருக்கு. அதை சரி செய்தா தான் நெட் கனெக்ட் ஆகும். அந்த பைப் மேல ஏறனும்னா அது எம்.எல்.ஏவோட 7 வயது மகளாலதான் முடியும்(னு வைங்க. அப்பத்தானே தாய்குலம் எல்லாம் உச்சு கொட்டுவாய்ங்க).
உடனே எம்.எல்.ஏவும் ஒரு கன் மேனும் 7 வயசு சிறுமியோட மொட்டை மாடிக்கு போறாய்ங்க. பாப்பா பைப்பை பிடிச்சிக்கிட்டு ஏறுது. முன்னாள் எம்.பி ஆளுங்க இதை கவனிச்சு ட்ரெயின் பைப் வழியா மொட்டை மாடிக்கு வர பார்க்கிறாய்ங்க. டிஷ்யூங் டிஷ்யூங் .. இந்த தீபாவளிக்கு நடுவுல சிறுமி நெட் கனெக்டிவிட்டிக்கான எக்விப்மென்டோட ஆங்கிளை சரி செய்யறா. ப்ளாக்ல மேட்டர் அப்லோட் ஆகுது.
சிறுமியோட பாரம் தாங்காம பைப் முறிஞ்சி விழுது பாப்பாவை எம்.எல்.ஏ கேட்ச் பிடிக்கிறாரு. அப்போ வானத்துல ஒரு ஹெலிகாப்டர் . ஹெலிகாப்டர்லருந்து மெஷின் கன்ஸோட முனை வெளிய வருது குண்டு மழை.( வேற யாரு வில்லனுங்கதான்)
மேட்டர் சி.எம்., ஹோம் மினிஸ்டர், டி.ஜி.பி இத்யாதியினருக்கு ரிலே ஆறதை ஃபோன், ஃபேக்ஸ், வயர்லஸ் இத்யாதிய க்ளோஸப்ல காட்டறோம். அதுக்குள்ள கன் மேன், எம்.எல்.ஏ துப்பாக்கிகள்ள ரவை தீர்ந்துருது ( உப்புமா பண்ற ரவை இல்லிங்க)
மொட்டை மாடியோட பாரப்பெட் வாலை தாண்டி வாடகை கொலையாளிகள் மாடிக்கு வராய்ங்க. இவிக கைய தூக்கிக்கிட்டு மண்டியிடறாய்ங்க. மாடிக்கு போன பார்ட்டிங்க என்னாச்சுனு இளைஞனும், ஐயரு மகளும் மாடிக்கு வராய்ங்க. இவிகளும் துப்பாக்கி முனைக்கு வந்துர்ராய்ங்க.
மேல வட்டமிடற ஹெலிகாப்டர்ல இருக்கிற முன்னாள் எம்.பி. டைனமைட்டை வீசப்போறதா மெகா ஃபோன்ல எச்சரிக்கிறாரு. இளைஞன் " யோவ் உன் வண்டவாளம் தண்டவாளம் ஏறிருச்சு.உன் ஆட்டம் க்ளோஸ் . "ன்னு கூவறான். இதை கேட்டதும் எக்ஸ் எம்பிக்கு பித்துப்பிடிச்சாப்ல ஆகி டைனமைட்டை வீச கை ஓங்கறான்.
அப்போ கீழே ஒரு ராணுவ கவச வாகனம் சீறி வர்ரதையும் அது மேல ஒரு கமாண்டோ கையில பஸூக்காவோட நிக்கிறதையும் காட்டறோம். டைனமைட்டை வீச எக்ஸ்.எம்.பி கை ஓங்கவும் பஸூக்கா வெடிக்கவும் சரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா இருக்கனும் . ஹெலிகாப்டரை ஒரு நெருப்பு பந்து மோத ஹெலிகாப்டர் (சொல்லனுமா)
No comments:
Post a Comment