Thursday, July 1, 2010

லட்சியம் - டார்கெட்ஸ் - ஆசைகள்

யாராவது தாங்கள் சாதிக்க நினைச்சிருக்கிற ஒரு பெரிய லட்சியத்தை சொன்னா  உடனே எதிராளி "ஆலு லேது சூலு லேது கொடுக்கு பேரு சோமலிங்கமன்டா"ன்னு தெலுங்குல  ஒரு சொலவடைய எடுத்து விடுவான்.  ஆலு - மனைவி, சூலு - கர்பம் கொடுக்கு - மகன் அதாவது பெணாட்டியும் இல்லை, கர்பமும் இல்லை மகன் பேரு சோமலிங்கமாங்கறது இதனோட அர்த்தம்.

ரைட் பிரதர்ஸ் விமானம் கண்டுபிடிக்கனும்னு நினைச்சப்ப கூட ஆலு லேது, சூலு லேது. ஆனா விமானம் பறந்துச்சு.

திராவிடர் கழகத்துலருந்து அண்ணா வெளியே வந்தப்ப பெரியார் கண்ணீர் துளிகள்னுதான் சொன்னாரு. அண்ணா வெளிய வந்த நேரம் ஆலு லேது சூலு லேது
அப்பாறம் என்னாச்சு?

வாத்தியாரை தி.மு.க லருந்து கட்டம் கட்டினப்ப வாத்தியாரே பேதியாயி ஸ்டுடியோக்குள்ள பதுங்கிட்டாராம்.  ஆறுதல் சொல்ல சனம் பெரிய அளவுல வர ஆரம்பிச்சப்ப கூட ஓப்பன் டாப் ஜீப்ல வெளிய வந்து அமைதியா கலைஞ்சு போகத்தான் சொல்வாராம். அப்பவும் ஆலு லேது சூலு லேது. ஆனா  எதிர்காலம் எம்.ஜி.ஆரை சரித்திர  நாயகனா நிறுத்தலியா என்ன?

வாழ்க்கையே ஒரு லாட்டரி டிக்கெட் மாதிரி .ஜொள்ளு விடறதுதான் விடறோம் அதுல என்ன அடாசா ஆறுதல் பரிசுக்கு ஜொள் விடறது. ஏக் தம் ஹெவி.

1986 லருந்தே எனக்குள்ள ஒரு ரெஸ்ட் லெஸ் நெஸ் வந்துருச்சு. சனங்க வாழ்க்கைய பார்த்து என்னங்கடா லைஃப் இது.. தூத்தேறிக்கனு ரோசிக்க ஆரம்பிச்சுட்டன். என் சிந்தனைப்பறவை கிழக்கை  நோக்கி பறக்க ஆரம்பிச்சுருச்சு. உதயம் என் கண்ணுக்கு தெரியுது. அதை என் மக்களுக்கு காட்டி எழுப்பறேன் எழுப்பறேன். ஆரும் எந்திரிக்க மாட்டேங்கறாய்ங்க. அட கண்ணை திறந்து  பார்க்க மாட்டேங்கறாய்ங்க.

என் லட்சியம் எதுன்னு  ரொம்.........................ப பெரிசு. (தெரியுமில்லியா..ஆப்பரேஷன் இந்தியா2000) அதுக்காக நாளைக்கே இந்தியாவுல நேரிடை ஜன நாயகம் அமலாயிரனும். எதிர்கட்சிகளோட பொது வேட்பாளரா நான் தேர்தல்ல நிக்கனும். சர்வ அதிகாரங்கள் படைச்ச ஜனாதிபதியாயிரனும்னு தவிக்கலை.

வாத்தியார் ஒரு படத்துல பாடுவாரே " ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பெருமை விளங்கட்டுமே"ங்கறது தான் நம்ம ஸ்டாண்டு.  அதுக்காக லட்சியம் லட்சியம்னு மடி கட்டிக்கிட்டு இருக்க முடியாதுங்கண்ணா.

நம்ம திறமை மேல நமக்கு நம்பிக்கை வர, சமுதாயத்துல நம்ம எக்ஸிஸ்டன்ஸ எஸ்டாப்ளிஷ் பண்ணிக்க சின்ன சின்னதாவும் டார்கெட் வச்சு கோல் அடிக்கனும். ஆனால் இந்த சின்ன டார்கெட்டுங்களுக்கும்  நம்ம லட்சியத்துக்கும் கான்ட்ராவர்ஸி வரக்கூடாது.

இந்த சின்ன சின்ன டார்கெட்ஸ் என் தன்னம்பிக்கைய மட்டும் வளர்க்கலை என் வயித்தயும் வளர்த்துச்சு.

நம்ம ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ ஜனாதிபதி, பிரதமர்,முதல்வர்,கவர்னர், மந்திரி, எம்.எல்.ஏ ,எம்.பினு அனுப்பி அனுப்பி கவரிங் லெட்டர் ட்ராஃப்ட் பண்றதுல புலியாயிட்டன்.

இதுக்கெல்லாம் நிறைய செலவாகும். ஆக்சுவலா சாப்பாட்டுக்கே லாட்டரி அடிக்கிற நாட்கள்ள 1997 முதல் 2004 வரை 7 வருஷம் தினம் தினம் கூரியர், ரெஜிஸ்டர் போஸ்டு, ஃபேக்ஸ், இமெயில்னு அனுப்பிக்கிட்டே இருந்தேன். எப்படி எப்படி?

புதிய பாரதம் காண, பொது நலம் காக்க ,  வளர்த்துக்கிட்ட கம்யூனிகேஷன்ஸ் ஸ்கில்லை சனங்களோட சுய நலத்துக்காகவும் உபயோகிச்சன். லாயர் கணக்கா நம்ம கிட்ட கேஸ்கள் பெண்டிங்ல கிடக்கும்னா பார்த்துக்கங்க. இந்த கேஸ்களை டேக் அப் பண்றதால தன்னம்பிக்கை,சமூகத்துல ஹானர், விவகாரங்கள்ள அனுபவம் மட்டுமில்லாம பைசாவும் புரளும். புரண்ட பைசாவ தேச நலம் காக்க ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ " நாட்டின் தூண்களுக்கு" அனுப்பவும் ரிமைண்ட் பண்ணவும் உபயோகிச்சிக்கிறது வழக்கம்.

லட்சியம், டார்கெட் எல்லாம் சரி . ஆசைனு எதுவும் கிடையாதா? 365  நாள், 24 மணி நேரம் லட்சியம்,டார்க்ட்டுனு  இருந்தா நரம்பெல்லாம் பைண்டிங் ஒயர் மாதிரி ஆயிராதானு கேட்பிங்க. நிசம்தான். அதுக்குத்தான் சின்ன சின்ன ஆசைகள வச்சிருக்கேன்.

ஊருக்கு வெளிய  டோட்டலா 40/60 சைட் . நார்த் ஈஸ்டா கிடைச்சா ரெம்ப நல்லது. அதுல குபேர மூலைல ஒரு பத்துக்கு பத்து அடில  மோல்டிங் போட்டு ஒரு ரூம். அதுமேல அதே சைஸ்ல ஒரு ரூமு. ஓலைக்கூரை. ஆனால் அதுக்கு படி இருக்காது. ஏணிதான். கீழ்  அறைக்கு முன்னே நல்லா பத்து பேரு உட்கார்ந்து பேசற மாதிரி பந்தல். சைட்டுக்கு ஆக்னேய மூலைல அற்ப சங்கியைகளுக்கு ஒரு கழிவறை. டோட்டலா இவ்ளதான் கன்ஸ்ட்ரக்சனே. ஆனால் சுத்திலும் ஃபென்சிங்காச்சும் போட்டுரனும். சைட்டுக்கு ஈசான்யத்துல ஒரு கேட்டு. எப்பயாச்சும் எக்ஸர்சைஸ் பண்ற மூட் வந்தா சைட்லயெ  ஒரு பார். ஒரு செட் டம்பிள்ஸ்.  சைட்ல தெற்கு, மேற்கு திசைகள்ள மரங்கள். அங்கங்கே  பார்க் கணக்கா சிமெண்ட் பெஞ்ச்.  சின்ன பத்திரிக்கை. சின்ன பதிப்பகம். சின்னதா மாதாந்திர இலக்கிய கூட்டம். சின்னதா ஒரு ஹாண்டி காம். வருஷத்துக்கு ஒரு ஷார்ட் ஃபிலிம்.. போதுங்கண்ணா..

ஆனால் அப்பயும் விடாது கருப்பு. அதாங்கண்ணா ஆப்பரேஷன் இந்தியா 2000. தட் ஈஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி



காலைல 6 முதல் 12 மணிவரை சனம். சனம். சனம். 12 க்கு மேல ப்ளாகிங். மெயில் செக். மதியம் ஒரு குட்டி தூக்கம். மறுபடி 4 மணில இருந்து 7 மணி வரை சனம் சனம் சனம். ராத்திரி 9 மணிக்கு மலை ஏறிட்டா சாரி மாடியேறிட்டா ஏணி மேல ஏறிவர்ர கெப்பாசிட்டி இருக்கிற பார்ட்டிங்களுக்கு மட்டும் அப்பாயிண்ட்மென்ட். மத்தபடி ஜஸ்ட் ரீடிங் அண்ட் டைப்பிங் போஸ்ட்.
ஒவ்வொரு சனி ஞாயிறும் அவுட் டோர். கடைசி ஞா கிழமை குடும்பத்தோட அவுட்டிங். 

1 comment:

  1. //அதை என் மக்களுக்கு காட்டி எழுப்பறேன் எழுப்பறேன். ஆரும் எந்திரிக்க மாட்டேங்கறாய்ங்க. அட கண்ணை திறந்து பார்க்க மாட்டேங்கறாய்ங்க.//

    எப்படி தல ...நைட் 1 மணிக்கு வந்து எழுப்புனா ....எப்படி..எப்படிங்கறேன் ?

    ReplyDelete