டாக்டர் ருத்ரன் அவர்கள் குருபெயர்ச்சி என்று துவங்கி லேசாய் கிண்டலடித்து சூப்பர் பதிவு போட்டிருந்தார். நான் அக்மார்க் ஜோதிடனாக இருந்தால் உடனே வரிந்து கட்டி எதிர்வினை செய்திருக்க வேண்டும். தமிழ் ஓவியா அவர்களும் ஜோதிடத்தை பல முறை கிண்டலடித்து எழுதியிருந்தாலும் நான் எதிர்வினை புரிவதில்லை காரணம் ?
என்னை பொருத்தவரை நான் ஒரு தேடுபவன். ஆம் மனித வாழ்வின் அவலங்களை மாற்றி "எல்லோரும் நலம் வாழ" வழி தேடுபவன். டீன் ஏஜ் முதலே என்னுள் எழுந்த வினாப்புயலுக்கு ஜோதிடம் பதில் சொன்னது.
என் கையில் சனி ரேகை ஸ்கெட்ச் பேனாவால் இழுத்தது போல் இருக்கும். புத்தி ரேகைக்கு கீழே துவங்கி மணிக்கட்டு வரை நேஷ்னல் ஹைவே மாதிரி இறங்குகிறது. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் சனிபலம் உள்ளவன் "சந்தேக புத்தி கொண்டவன்" எதையும் அத்தனை எளிதாக நம்ப மாட்டான். தங்க காசே தந்தாலும் அதை சோதிக்காது ஸ்வீகரிக்கமாட்டான் என்பதற்கே.
இவ்வகையில் நான் ஜோதிட ஆய்வாளன் ஆனேன் . இன்று என்னை அணுகுவோர்க்கு நான் தரும் பலன் எல்லாம் இன்ட்டிரியம் ஆர்டர் தான். நாளையே என் ஆய்வில் ஜோதிடம் பொய் என்பது நிரூபணமானால் பொய் என்று சொல்ல வெட்கப்படமாட்டேன் .
நானேதும் கிரகங்களின் ஏஜெண்ட் அல்லன். நான் என்னை ஒரு ஜோதிடனாக உணர்ந்ததும் இல்லை. கடிகாரத்தை கண்டுபிடித்தவன் தான் மேதையே தவிர அதை பார்த்து நேரத்தை சொல்பவன் மேதையில்லை. அதே மாதிரிதான் ஜோதிடத்தை வடிவமைத்த ரிஷிகள் மேதைகளே தவிர பஞ்சாங்கம் பார்த்து பலன் சொல்லும் ஜோதிடர்கள் மேதைகளல்லர்.
நான் கண்டு கொண்ட ரகசியம் என்னவென்றால்:
ஆன்மீகத்தின் முதல் படி ஜோதிட நம்பிக்கை. ஜோதிட நம்பிக்கை கொண்டு சேர்க்கும் இறுதிப்படி ஆன்மீகம். "கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" பைபிளில் என்னை கவர்ந்த பல வசனங்களில் ஒன்று. கிரகங்கள் கர்த்தரின் படைப்புகள் தான்.
தான் என்ற எண்ணம், சுய நலம், பேதபாவம், ருசி, அருசி, ரசம், விரசம் கொண்ட மாந்தர் கிரகங்களில் கால்களின் கீழே ஃபுட்பாலை விட கோரமாக உதைக்கப்படுகிறார்கள்.
அதே சமயம் அகந்தையற்றோர், பொது நலம் காப்போர், அபேதபாவம் கொண்டோர் விஷயத்தில் அந்த கிரகங்களே சைடு கொடுப்பதை கண்டிருக்கிறேன். ஜாதக பலன் விஷயமே இப்படி என்றால் ராசிபலன் பற்றி என்ன சொல்ல ?
ஜோதிடத்தில் இந்த ராசிபலனின் எஃபெக்ட் ஜஸ்ட் 15 சதம் கூட இருக்காது. ராசிபலன் நடப்பில் உண்மையானால் உங்க ஜாதகம் டுபாகூர் ஜாதகம்னு அர்த்தம்.
உங்க ஜாதகம் தான் கார். தசாபுக்திகள் தான் ரோடு. இந்த ராசிபலனெல்லாம் ச்சும்மா காத்து தான். வண்டில ஷாக் அப்சர்பர் எல்லாம் கரெக்டா இருந்தா எந்த பாடாவதி ரோட்லயும் ச்சும்மா சல்லுனு போயிரலாம்.
டப்பா காரா இருந்தா ? எனிவே.. சிலர் ராசிபலனுக்கு ரொம்ப முக்கியத்வம் தந்து படிக்கிறாங்க. அவிங்களுக்காக இந்த கும்ப குருவோட பலனை எழுதலாம்னு ஒரு ஐடியா.
நாளை சந்திப்போம் ! கும்ப குரு பலனுடன் !
( ஒரே மூச்சுல 12ராசிக்கும் போட்டுரலாம் டோண்ட் ஒர்ரி . பீ ஹேப்பி ! ஜூட்)
அப்போ நீ தேங்காமூடி ஜோசியனா?
ReplyDelete//அன்புடையீர்,
ReplyDeleteநான் ஒரு தொழில்முறை ஜோதிட ஆலோசகன் என்பதும் ஆராய்ச்சியாளன் என்பதும் தங்களுக்கு தெரிந்தே இருக்கும். தங்களுக்கோ, தங்களை சேர்ந்தவர்களுக்கோ ஜோதிட ஆலோசனை தேவைப்பட்டால்இமெயில் முகவரி://
முருகேசன் சே என்னவோ நினைத்தேனே?
இப்படி ஏமாத்திட்டீங்களே? யூ டூ ஃப்ராட்?மைகாட்,ஐடோண்ட் ஹாவ் வார்ட்ஸ் டு கர்ஸ்யூ,பக்கர்
இவ்வகையில் நான் ஜோதிட ஆய்வாளன் ஆனேன் . இன்று என்னை அணுகுவோர்க்கு நான் தரும் பலன் எல்லாம் இன்ட்டிரியம் ஆர்டர் தான். நாளையே என் ஆய்வில் ஜோதிடம் பொய் என்பது நிரூபணமானால் பொய் என்று சொல்ல வெட்கப்படமாட்டேன் .
ReplyDeleteநானேதும் கிரகங்களின் ஏஜெண்ட் அல்லன். நான் என்னை ஒரு //ஜோதிடனாக உணர்ந்ததும் இல்லை. கடிகாரத்தை கண்டுபிடித்தவன் தான் மேதையே தவிர அதை பார்த்து நேரத்தை சொல்பவன் மேதையில்லை. அதே மாதிரிதான் ஜோதிடத்தை வடிவமைத்த ரிஷிகள் மேதைகளே தவிர பஞ்சாங்கம் பார்த்து பலன் சொல்லும் ஜோதிடர்கள் மேதைகளல்லர்.//
சீ ஏமாற்றுக்காரா.
இதை போட்ட நீ மேலே உள்ள விளம்பரத்தை போட்டிருக்ககூடாது, யூ ஸ்கவுண்ட்ரல், வி ஆர் நாட் ய எக்ஸ்பெரிமெண்டல் சப்ஜெக்ட்,ப்ளடி ஃபூல், தென் கிவ் ஆல் த மனி பேக் டு யுவர் இன்னொசெண்ட் க்ளையண்ட்ஸ் டாம்மிட். சீட் த ஏதிஸ்ட் பீப்பில், நாட் காட்ஃபியரிங் க்ரூப்,கோ டு தெ ஹெல்
வம்பன் அவர்களே,
ReplyDeleteநான் ஏதும் சீத்தலை சாத்தன் அல்லன். என்றாலும் எழுத்துப்பிழைகள் ரொம்பவே கடுப்பேற்றுகின்றன. நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் . ஆனால் பிழையில்லாது எழுத பழகுங்கள்
பி.கு: ஜோதிட ஆலோசனை வேண்டி வரும் தனிப்பட்ட மெயில்களுக்கு பதில் சொல்லி மாளாதுதான் அந்த வேண்டுகோள்
அ.கு.ஜோ.முருகேசன்,
ReplyDeleteவம்பனுக்கு என்ன வழவழாகொழகொழான்னு பதில்?
சரியாக சொல்ல வேண்டியது தானே?
உம்மிடம் பதில் இல்லையா?
இல்லை நீர் சரியாக மாட்டிக்கொண்டீரா?
நீர் அப்ரெண்டீஸ் என்று ஒத்துக்கொள்ளும் அல்லது இந்த தொழிலை விட்டுவிடும்.யாரையும் ஏமாற்றவேண்டாமே ப்ளீஸ்.
இதற்கு சரியான பதில் வர்வில்லை என்றால் உம்மை எதிர்த்து ஒரு காட்ட்மான பதிவை போட்டு அதை எல்லா திரட்டியிலும் இணைக்காவிட்டால் என் பெயரும் முருகேசன் அல்ல.1மணி நேரம் அவகாசம்.பதிவு எழுதி ரெடியாக உள்ளது.
ReplyDeleteஅதே அதிகாலை.காமிலேயே வாங்கிக்கொள்கிறார்களாம் பதிவை,எப்படி வசதி?சீக்கிரம்,அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்,
ReplyDeleteஎன்ன திமிர் இருந்தால் ஸ்வாமிஜிக்கும்,மருத்துவருக்கும் காட்டமாய் பின்னூட்டியிருப்பாய்?
மீசைக்காரரே,
ReplyDeleteவீரப்பனுக்கும் மீசை உண்டு, ஐ.ஜி. தேவாரத்துக்கும் மீசை உண்டு. கரப்பான் பூச்சிக்கும் மீசை உண்டு. இதில் தங்கள் மீசை என்ன வகை என்று "சனம்" தெரிந்துகொள்ள அப்படித்தான் ஒரு பதிவை போடு தலை !
என்னை என்ன சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை ஓம்கார் ஸ்வாமிகள் என்று நினைத்தீரோ என் பின்னால் ஒரு சக்தியுண்டு. அது சத்தியம். என் ஜாதகத்தில் லக்னத்தில் குரு உச்சம். நான் கெட்டதை நினைக்க மாட்டேன். நினைத்தாலும் செய்யமாட்டேன். அப்படியே செய்தாலும் அது எதிராளிக்கு நன்மையாவே முடிஞ்சுரும். ஸோ !
தங்களுக்கு கெட்டதை நினைக்க கூட நான் தயாரில்லை. பாரும் ! பதிவை எழுதிப்பாரும் ! போட்டுப்பாரும் !