Monday, December 14, 2009

கேட்க விரசமாக இருந்தாலும்

காதலில் வெற்றிக்கு அயனான டிப்ஸ்
என்னைப்பொருத்தவரை காதல் என்பதே முட்டாள்தனம். அந்த அஞ்சு நிமிசத்துக்காக மைனர் செயின் போட்டு, டூ வீலரை போட்டுக்கிட்டு, இன்ன‌ம் என்னென்ன இழவோ செய்து அல்லாடுவதை விட தன் கையே தனக்குதவினு வாழ்ந்து , ஒழுங்கா படிச்சு, வேலை வெட்டி தேடிக்கிட்டா பாதம், பிஸ்தா, தாது புஷ்டி லேகியம் வாங்க வரதட்சியணையும் தந்து ஒரு பெண்ணையும் கட்டிக்கொடுப்பாங்க.
இல்லே நான் காதலிச்சுத்தான் தீருவேன்னு அடம் பிடிக்கிறிங்களா உங்களுக்கு சில டிப்ஸ்

1.உங்களுக்கு எவளை பார்த்ததும் இவள் இல்லாம வாழ்க்கையே இல்லைனு தோணுதோ அவ பக்கம் கூட திரும்பாதிங்க.( இது ரிவர்ஸ் எஃபெக்ட்) எவளை பார்த்ததுமே இது டம்மி பீஸுனு தோணுதோ அவளை லவ்வுங்க‌

2.மீனைப்பிடிக்கிறவன் கரை மேல தான் இருக்கனும். அதை போல காதல்ல விழுந்துராம தூண்டில் போடுங்க. வந்தால் வரவில் வைப்போம், போனால் செலவில் வைப்போம்னு உறுதிப்படுத்திக்கனும்

3.காதலிச்சு என்னத்த கிழிக்க போறிங்க அவளையே கட்டிக்கிட்டா ஒரு இம்சை, காதல் பிரிக்கப்பட்டா வேறுவித இம்சை. இது ரெண்டையும் ரோசிச்சு பார்த்து இறங்குங்க.

ஒரு ஜோக்:

ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி. ரெண்டு ரூம்லயிருந்து ஒரே அலம்பல், கூச்சல் . ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த டாக்டரோட ஃப்ரெண்ட் டாக்டரை கேட்டார் . " என்ன சார் கேஸு ?"

"வாங்க போய் பார்க்க‌லாம்"

முதல் அறை . சுவற்றில் ஒரு அழகான பெண்ணின் படம். டாக்டர் சொன்னார் " இவன் இந்த பெண்ணை லவ் பண்ணான் . காதல் தோல்வி பைத்தியமாயிட்டான்"

அடுத்த அறைக்கு போனாங்க. அந்த அறை சுவரிலும் அதே பெண்ணின் படம் நண்பர் கேட்டார்" என்ன டாக்டர் இங்கயும் அதே பெண்ணோட படமிருக்கு. இவனும் அவளை லவ் பண்ணி தோத்தவனா?"

டாக்டர் சொன்னார் " இல்லே அவளை கல்யாணம் கட்டிக்கிட்டவன்"

இதான் காதலோட போஸ்ட் மார்ட்டம். சரித்திரத்தை கி.மு ,கி.பினு பிரிக்கிறாப்ல காதலியோட குணத்தையும் ரெண்டா பிரிக்கலாம். தி.மு, தி.பி இன்னம் புரியலயா? திருமண‌த்துக்கு முன், திருமணத்துக்கு பின். அவள் எவளா இருந்தாலும் சரி. கல்யாணம்னு கட்ன பிறகு பெண்டாட்டி தட்ஸ் ஆல்.

இவளுக எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி அப்பனை அத வாங்கி தா இத வாங்கிதானு தாலியறுத்து பழக்கப்பட்டவளுக. கல்யாணத்துக்கப்பறம் அப்பன் ரோலை கணவன் தான் ப்ளே பண்ணனும்.



இந்த நரகத்ல இருந்து தப்ப வழி நீங்க அரை டிக்கெட்டாயிருங்க அவள் தாயாயிருவா. அவளுக்கு தேவை ஒரு தகப்பன் அல்லது மகன். தகப்பனா இருந்தா டாரா கிழிஞ்சுரும் ஸோ மகனாயிருங்க (பொறுப்பில்லாத)



ஜோதிட டிப்ஸ்:





ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுட‌ன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது.



உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.



அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.

5 comments:

  1. முருகேசன் சார்,

    உங்கள் கருத்துக்கள் மிகவும் எதார்த்தமாக இருக்கிறது , நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை ஒளிவு மறைவு இன்றி தைரியமாக அலசுகிறீர்கள்.........

    உங்கள் கருத்துக்களின் தரம் உயர்வாக உள்ளது ஆனால் அதைசொல்லும் எழுத்துநடையின் தரம் ரசிக்கத்தக்கதாக இல்லை. உங்கள் எழுத்துக்களில் ஒருவித அலட்சியமும், அதி மேதாவித்தனமும், அனுபவ சலிப்பும் தென்படுவதை மறுக்க இயலாது ....வாசகர்களில் இருபாலரும் அதிகம் உள்ளார்கள்..........இன்னும் சொல்ல போனால் வீட்டில் உள்ள பெண்கள் தான் அதிக ஓய்வுநேரம் கிடைப்பதால் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறார்கள், (குறிப்பாக வெளிநாடுகளில் குடும்பத்துடன் வசிக்கும் தமிழர்கள் - ஆனால் அவர்களில் எவருமே பின்னூட்டம் போடுவது இல்லை என்பது வேறு விஷயம்) ............

    அனைவரும் இந்த எழுத்து நடையை விரும்புவார்கள் என்று சொல்ல முடியாது...........ஒருமுறை உங்கள் பதிவுகளின் மேல் தவறான கண்ணோட்டம் ஏற்பட்டுவிட்டால் பிறகு எளிதில் அதை மாற்ற இயலாது..........


    இது உங்களை மட்டம் தட்டும் பின்னூட்டமோ அல்லது அவமானப்படுத்தும் கருத்தோ அல்ல....உங்களின் ரெகுலர் வாசகன் என்ற முறையில் உங்களின் எழுத்துநடையின் மேலான எனது கண்ணோட்டம்.

    ReplyDelete
  2. நண்பர் ஷான் சொல்றவது நூறு சதவீதம் உண்மை. உங்கள் கருத்துக்களை சிலசயமம் படிக்கும்போது படிக்கிறவன்லாம் கேனப்பயலுகன்னு நீங்க நினைக்கிறீர்களோன்னு தோணுது.

    இதே கருத்துக்களை யதார்த்தமாகவும், நாகரீகமாகவும் சொல்லிப்பாருங்கள் கண்டிப்பாக ரசிக்கப்படும். உடலுறவு,செக்ஸ் பறறி சொல்லுவது தவறில்லை. ஆனால் அந்தகருத்துக்களை எல்லாராலும் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லவேண்டும். சிலசமயம் உங்கள் வலைப்பூவை படிக்கும்போது மஞசள் பதிரிக்கைகளை படிக்கிறமோன்னு தோணுது. மஞசள் வலைப்பூன்னு முத்திரை குத்தும்முன் உங்கள் எழுதும் முறையை மாற்றிவிடுங்கள்.

    அதுதான் உங்களுக்கும் நல்லது படிக்கிறவங்களுக்கும்..

    ReplyDelete
  3. ஷான் அவர்களே,
    கடவுள் புண்ணியத்தில் எத்தனை உயர்ந்த நடையில் (ஹை ஹீல்ஸ் போட்ட?) வேணும்னாலும் எழுதற கெப்பாசிட்டி இருக்கு.ஆனால் நெட்டிஜன்களில் பல பேர் இங்கிலீஷ் மீடியம் கேஸ், பலான சமாச்சாரங்களை தேடும் கேஸ். ஏறக்குறைய எ,பி,சி சென்டர்களை திருப்தி படுத்தற சினிமா மாதிரி ஆயிருச்சு. நீங்க சொன்னதில தவறேதுமில்லே.

    நீங்க சொன்ன குறைகள் நிச்சயம் என் பதிவுகளில் உண்டு. முடிந்தவரை தவிர்க்க பார்க்கிறேன்

    மறுமொழிக்கும், பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  4. நாஞ்சில் பிரதாப் அவர்களே,
    ஷான் அவர்களுக்கு கூறிய பதிலையே தங்களுக்கும் வழி மொழிகிறேன். வருகைக்கும்,என் பால் அக்கறைக்கும், எச்சரிக்கைக்கும், பாராட்டுக்கும், (எத்தனை க்கும் ?) நன்றி நன்றி நன்றி ( முந்தா நா பார்த்த அசத்த போவது யாரு எஃபெக்டுங்கண்ணா)

    ReplyDelete
  5. ////நெட்டிஜன்களில் பல பேர் இங்கிலீஷ் மீடியம் கேஸ், பலான சமாச்சாரங்களை தேடும் கேஸ், ஏறக்குறைய எ,பி,சி சென்டர்களை திருப்தி படுத்தற சினிமா மாதிரி ஆயிருச்சு////

    நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு.............பலான சமாச்சாரங்களை தேடிய காலம் மலையேறி பல வருடங்கள் ஆகிவிட்டது.....இன்று போதும் போது என்னும்மளவுக்கு .........சொல்லபோனால் அனைவருக்கும் பலான சமாச்சாரங்களின் மேல் அலுப்பு வந்து வெகுகாலம் ஆகிறது............இன்றைய யுகத்தில் பலான சமாச்சாரங்களுக்கு பஞ்சமே இல்லை எனலாம்........மேலும் அந்தபணியை செவ்வனே செய்ய தரங்கெட்ட தளங்கள் பல உள்ளது.............

    மேலும்...உங்களின் எழுத்துக்கள்...கருத்துக்கள், உங்களின் தனிமனித ஒழுக்கத்தை, தகுதியை, உங்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி எனலாம்.......நீங்களே தவறான பிம்பத்தை ஏன் உருவாக்குகிறீர்கள் !!!!!!!!!!!( நீங்கள் தவறான பிம்பமாக இல்லாதபோது )

    உங்களின் பதிவுகளை தொடர்ந்து படிக்கும்போது நீங்கள் பொதுநலவாதி என்பதையும், சோர்வடையாமல் போராடும் குணம் உள்ளவர் என்பதையும், எதையும் அரைகுறையாக கற்காமல் ஆழ்ந்து கற்றவர் என்பதையும், இத்தனைக்கும் மேல் மிகவும் எதார்த்தவாதி என்பதையும் அறியமுடிகிறது....ஆனால் உங்களை எங்களுக்கு அறிமுகபடித்திய எழுத்துக்களே உங்களின் மீது ஒரு தவறான மதிப்பீடு கொள்வதற்க்கும் காரணமாகிறது எனலாம்.....

    மேலும் நீங்கள் ஒரு தொழில் முறை ஜோதிடன் என்கிறீர்கள். துன்பப்படும் மக்கள், மனச்சோர்வடைந்த மக்கள், எதிர்காலத்தின் மேல் பயம் உள்ள மக்கள், அடுத்தடுத்த தோல்விகளால் தன்னம்பிக்கை இழந்த மக்கள் போன்றோர் தான் ஜோதிடர்களிடம் வருவார்கள்.................எதற்காக என்றால் ஆண்டவன் எழுதிய தலைஎழுத்தை ஜோதிடன் தான் படிக்க இயலும்....ஜோதிடன் மூலம் கடவுளின் நல்ல செய்தி வாராதா என்ற ஏக்கமும்.....ஜோதிடனின் வாக்கு உண்மையோ பொய்யோ...அதை மனதார ஏற்றுக்கொண்டு மனமகிழ்வுடன் வீடு திரும்புவார்கள்...........உங்கள் வாக்கு அவர்களுக்கு தன்னம்பிக்கையை , மனவலிமையை, ஒரு புத்துணர்வை, புதுவாழ்வை கொடுக்கும்..........அத்தகைய பெருமை வாய்ந்த கலையை சிறப்பாக கற்ற நீங்கள் சில சிற்றின்ப சில்லரைகளுக்காக ஏன் உங்கள் மீதே சேறு பூசி கொள்கிறீர்கள்.........

    உங்களை நீங்கள் சரியான முறையில் மார்கெட்டிங் செய்தால்...உங்கள் வெற்றி நிச்சயம்....அதுதான் உங்கள் பிரச்சனையே............( உ ம ) அமெரிக்காவை விட ரஸ்யா technology யும் சரி.. திறமையிலும் சரி...இயற்க்கை வளங்களிலும் சரி மிகவும் சிறந்த நாடு...ஆனால் அவர்களின் poor marketing திறமையால் வறுமையில் வாடுகிறார்கள்.... நீங்கள் ரஸ்யாவை போல.....

    எனவே கொஞ்சம் உங்களை மாற்றிக்கொண்டு, உங்களை சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்தால்....உங்கள் இடத்தை மற்றவர் அடைவது சிரமும்......

    இதை நான் உபதேசமாக சொல்லவில்லை.....கடந்த மூன்று மாதகாலமாக ஏறக்குறைய 60 சதவீத பழைய பதிவுகளை எல்லாம் படித்து, பிரம்மித்து.. உங்களின் சமீப கால பதிவுகளினால் வருந்தி இதை எழுதுகிறேன்.........

    வலைப்பூ, இன்டர்நெட் போன்றவை மிக சக்தி வாய்ந்த மீடியா...இதை சரியான முறையில் உங்களை அனைவரிடத்திலும் கொண்டு செல்ல பயன்படுத்துங்கள்,பயன்பெறுங்கள்....

    கொஞ்சம் ஓவராக பேசியிருந்தால் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் , ஏனென்றால் நானும் உங்களை போலதான்...மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லி விடுவேன் ...........

    ReplyDelete