நண்பரே !
தங்கள் எழுத்துக்களை அச்சாக்க விரும்பிய தங்களுக்கு உதவ காத்திருக்கிறேன். ஆனால் நான் தொழில்முறை பதிப்பாளனோ அச்சக முதலாளியோ அல்லன்.
ஃபர்ஸ்ட் அஃப் ஆல் நான் எழுத்தாளன். ஆனால் இந்த பிரசுரகர்த்தர்களின் பேராசைதான் என்னை இந்த பதிவு போடச்செய்துள்ளது. தமிழர்ஸ் டாட்காம் தரும் ரேங்க் பட்டியலில் ஒரு சுபமுகூர்த்தத்தில் எனது வலைப்பூ தினகரன் கணக்காய் நெம்பர் ஒன்னாக நின்றது நினைவிருக்கலாம். அந்த ரேங்க் தந்த தில்லில் ஒரு 19 பப்ளிஷர்ஸுக்கு கடிதம் போட்டேன்.
சாராம்சம்: அய்யா, நான் லீடிங் ப்ளாகர் . எனது வலைப்பூவை ஒரே மாதத்தில் 15ஆயிரம் பேர் படித்துள்ளனர். இதுவரை 60 ஆயிரம் பேர் படித்துள்ளனர். எனது எழுத்துக்களை பிரசுரிக்க விருப்பமாகில் தொடர்பு கொள்ளவும்
மற்ற 18 பேரிடம் இருந்து நாளிது வரை பதிலில்லை (ஒரு சிலரேனும் வருந்துவார்கள் /அதாங்க பிரசுரிக்க இயலாமைக்கு/ என்று நினைக்கிறேன்)
இதெல்லாம் ஒரு புறம் என்றால் பெரும் பெயர் புகழ் புகழ் பெற்ற மணிமேகலை பிரசுரம் ஒரு ப்ரபோசலை அனுப்பியுள்ளது. அதற்கு ஒருபெயர் வேறு. எழுத்தாளர், பதிப்பாளர் கூட்டு முதலீட்டு திட்டமாம். திட்டத்தின் சாராம்சம் என்னவென்றால் ரூ 10,000 (கவிதை என்றால் 12 ஆயிரம் ரூபாய்/அதென்ன கவிதை எழுதுவோர்க்கு அபராதமா என்ன புரியவில்லை) செலுத்திவிட வேண்டுமாம். அவர்கள் அச்சிட்டு எழுத்தாளருக்கு 300 பிரதிகள் கொடுத்துவிடுவார்கள்.
அதை அவர் என்ன செய்வது புரியவில்லை. மிச்சத்தை விற்று மணிமேகலை பிரசுரம் வாயில் போட்டுக்கொள்ளும். மேலும் உங்கள் எழுத்து இந்த கூட்டு திட்டத்துக்கு தேர்வு பெறாவிட்டால் பரிசீலனை கட்டணம் ரூ.1000 கழித்துக்கொண்டு திருப்பி விடுவார்களாம். என்னங்கடா இது பகல் கொள்ளை.
மேற்கொண்டு அவர்கள் தரும் ஆஃபர். நூல் விமரிசனத்துக்கு பத்து பேருக்கு அனுப்புவாக. பரிசு போட்டிகளுக்கு அனுப்புவாக
நானும் பப்ளிஷர்தான்:
நானும் பப்ளிஷர்தான். என் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல இந்த அவதாரம் எடுத்தேன். இண்டியன் பொலிட்டிகல் க்ளோசப் என்ற பெயரில் தனிச்சுற்றுக்குமட்டும் ஒரு மாதமிருமுறை நடத்தி வருகிறேன்.இதனால் எனக்கும் பிரிண்டிங் டெக்னாலஜி தெரியும். வியாபார பெருமக்களிடமும், என் பால் அன்பு கொண்டோரிடமும் விளம்பரங்கள் வாங்கி பிரசுரித்து வருகிறேன். பத்திரிக்கை பிரதிகள் இலவசமாய் வினியோகிக்கப்படுகின்றன. விசேஷ காலங்களில் புத்தகங்களும் பிரசுரித்துள்ளேன். ( டூ கலர் கார்ட் போர்ட் அட்டை, சேஷாயி பேப்பரில் புக் சைஸ்: நீங்கள் பிரிண்ட் அவுட் எடுக்கிறீர்களே ஏ4 பேப்பர் அதில் பாதி. நான் போட்டால் ஐந்தாயிரம் பிரதிதான்போடுவேன். எல்லாம் தயிர்தானே ! அதாங்க விளம்பர வருமானம்)
பாக்கெட் சைஸில் அம்மன் துதி (16 பக்கம்), மினி ஜோதிட போதினி (32 பக்கம்) ப்ரஜா நாயகுலு சி.கே (32 பக்கம்), மீ பவிஷ்யத் 32 பக்கம் என்று பப்ளிஷ் செய்துள்ளேன். ஒன்பது கிரகங்களும் வக்கிரமாயிருந்தாலும் கு.பட்சம் 2000 பிரதிகளாவது நிச்சயம் வெளியிடுவது என் ஸ்டைல்.
நான் தங்கள் எழுத்துக்களை அச்சிட்டு வெளியிட பதிவர்களுக்கு சொல்வது என்னவென்றால்:
எழுத்தாளனிடமிருந்து ரூ .10 ஆயிரம் வாங்கிக்கொண்டு 300 பிரதி அவனுக்கு கொடுத்து , மற்றதில் சுமார் 50 பிரதிகளை மட்டும் நூல் விமர்சனத்துக்கும், பரிசு போட்டிகளுக்கும் அனுப்பி 650 பிரதிகளை விற்று தின்றுவிடுவது என்பது பகல் கொள்ளை.
நான் கொடுக்கும் ஆஃபர் இதுதான்:
ரேப்பர் மல்ட்டி கலரில் வேண்டும் என்று போனால் மொட்டைதான். அறிவுக்கு வேலை கொடுத்து சூப்பராய் டிசைன் பண்ணி டூ கலரில் போட்டாலே தூள் கிளப்பும். நீங்கள் ரூ.10000 என்னை நம்பி முதல்வைத்தால் (ஸ்க்ரிப்டை ப்ளாக்ரிலிருந்து காப்பி பேஸ்ட் செய்து ரிச் டெக்ஸ்ட் ஃபைலாக மெயிலில் அனுப்பினால் போதும். ரேப்பர், பேப்பர், ஃபிலிம், ப்ரிண்டிங், பின்னிங், பைண்டிங், டெலிவரி, பரிசுப்போட்டிக்கு , நூல் விமர்சனத்துக்கு 50 பிரதிகள் அனுப்புவதோடு 1000 பிரதிகள் லாரி சர்வீஸ் மூலம் அனுப்புகிறேன்.
இது எப்படி கட்டுப்படியாகும் என்றால் ? அங்கேதான் அனுபவம் கை கொடுக்கிறது. நானும் வசமாய் ஏமாந்தவன் தான். நீங்கள் ஏற்கெனவே யூனிகோடில் தட்டச்சி ரிச் டெக்ஸ்ட் ஃபைலாய் அனுப்பிவிடுவதால் டி.டி.பி வேலை 70 சதவீதம் குறைந்துவிடுகிறது. அலைன் செய்து ஃபிலிம் எடுக்கப்போகிறோம். ஒரு தவணையில் 16 பக்கங்கள் அச்சாகும். இதற்கு ரூ. 2,500 செலவாகும் இது போல் 4 தவணையில் அச்சிட்டால் 64 பக்க புத்தகம் தயார்.
வளரும் எழுத்தாளருக்கு இதைவிட நல்ல அறிமுகம் வேறு இருக்காது. ஒரு காஸ்ட்லி விசிட்டிங் கார்ட் போல உபயோகிக்கலாம். பிரபலங்களுக்கு அனுப்பலாம். இதர பப்ளிஷர்ஸுக்கு அனுப்பி அதனுடன் அடுத்த கை.எ பிரதியை அனுப்பலாம். நண்பர்கள் வட்டத்தில் விற்கலாம். பதிவுலகில் விளம்பர படுத்தலாம். நானும் எனது வலைப்பூவில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு உதவ தயார். தமிழ் மணமும் இது போன்ற தகவல்களை வெளியிடுவதை கண்டிருக்கிறேன். இப்படி எத்தனையோ செய்யமுடியும்.
ஆக எனது ஆஃபரின் சாராம்சம் இது:
ரூ.10000 த்துக்கு 64 பக்க புத்தகம் தயார். நூல் அறிமுகம் வெளியிட பிரபல பத்திரிக்கைகளுக்கு தலா 2 பிரதிகள் + பரிசுப்போட்டிகளுக்கு அவரவர் நிபந்தனைப்படி புத்தக பிரதிகள் அனுப்பப்படும். தங்களுக்கு ஆயிரம் பிரதிகள் லாரி சர்வீஸ் மூலம் அனுப்பப்படும்.
நிபந்தனை:
1.தங்கள் ஸ்க்ரிப்ட் என் லட்சியத்துக்கு விரோதமானதாக இருக்க கூடாது. என் லட்சியம் இந்தியா பணக்கார நாடாக வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் உயிர்பாதுகாப்பு, உணவு, உடை, இருப்பிடம், செக்ஸ் பெற்று வாழ ஏதுவான கௌரவமான வேலை வாய்ப்பு பெருக வேண்டும். மனிதர்கள் ஹார்டி பாடி (வலிமையான உடல்), விண்டி மைன்ட் (காற்று போல் லேசான மனம்) , ஹோலி ஸோல் (புனிதமான ஆத்மா ) பெற்று வாழ வேண்டுமென்பதே.
2.ப்ரூஃப் அனுப்பி வைக்கப்படும் போது ஓரிரு நாட்களில் பார்த்து உடனே திருப்ப வேண்டும்.
3.இது 100 சதவீதம் சேவை மட்டுமே. எனவே நச்சு பண்ணுவது, துக்ளக் போல் திட்டத்தை மாற்றிக்கொண்டே போவது, ஸ்க்ரிப்டை மாற்றுவது இத்யாதி எல்லாம் கூடாது.
4.ஸ்க்ரிப்ட் ஏற்கப்படாலன்றி பணம் பெற்றுக்கொள்ளப்படாது. பணம் வந்து சேர்ந்த 27தினங்களில் புத்தகம் டெலிவரி செய்யப்படும்
தலைவரே. இது கூட வாங்காமல் நிறைய பதிப்பகங்கள் இருக்கின்றன்வே.. ஏன் நீங்களும் அதை போன்ற ஒரு பதிப்பகத்தை ஆரம்பிக்க கூடாது.
ReplyDeleteகேபிள் சங்கர் அவர்களே,
ReplyDeleteஎன் கேரக்டரே விசித்திரமான கேரக்டர். என் லட்சியம் 10 கோடி இந்திய யூத்தை கொண்டு நதிகளை இணைப்பது. அதை சாதிக்க உதவுமென்று கருதாத எதையும் முதலீடு செய்து செய்வதில்லை என்பதை கொள்கையாகவே வைத்துள்ளேன். முதலீடு செய்தால் வட்டியாவது கட்டுப்படியாகனும்னு பார்ப்போம். அப்புறம் வெறுமனே வட்டி வந்தா எப்படி பத்து காசு லாபம் வந்தா தானேனு நினைப்போம். எதுக்கு தலை. நம்முது முதலில்லாத தொழில். மாதமிருமுறை வெளியிடறதா சொன்னேனே. அதுக்கு நான் வச்ச முதல் சிவாஜி ரஜினி மாதிரி ஒரே ஒரு ரூபாதான். வைட் பேப்பர் வாங்கி லே அவுட் பண்ணினேன் தட்ஸ் ஆல். வியாபாரிகளிடம் விளம்பரம் வாங்கித்தான் முதல் இதழையே வெளியிட்டேன். நதி நீர் இணைப்புபற்றி , என் திட்டம் பற்றி , அதன் சாதக பாதகங்கள் பற்றி யாரேனும் எழுதினால் நானே முதல் வைத்து வெளியிடுவேன்.
நான் கொடுத்த ஆஃபரில் ச்சும்மா காசு வந்து போகும் அவ்ளதான். மிஞ்சி மிஞ்சி போனா டீ , சிகரட் கிடைக்கலாம் தட்ஸ் ஆல்
மிக மிக உபயோகமான வரவேற்க படவேண்டிய முயற்சி
ReplyDelete(பணம் புரட்டி நம்ம கவிதைகளை எப்பிடியாவது வெளியிடனும், அதுக்கப்புறம் விவசாயிகளுக்கு ஒரு இயற்கை விவசாயம் பற்றிய முழு விபரம் அடங்கிய புத்தகம் போடணும் )
விஜய்
கவிதைகள் அவர்களே,
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி. கவிதை தொகுப்புக்கு ரீச் ரொம்ப குறைவு. இயற்கை விவசாயம் பற்றி நூல் வெளியிடுவது நல்லதே. ஆனால் கூட்டுறவு பண்ணை விவசாயம் அமலானாலன்றி இதன் பலன் கூட நிலச்சுவான் தார்களுக்குதான் போய் சேரும். ஒரு மூச்சு என் ஆப்பரேஷன் இந்தியா2000 திட்டச்சுருக்கத்தை பாருங்கள். தங்கள் கருத்தை அறிய ஆவல்.
உங்கள் சேவை நிச்சயமா பாராட்ட படவேண்டிய ஒன்று.உங்கலை நான் தொடர்பு கொள்வேன்.நானும் இரண்டு நூல் வெளிட்டுள்ளேன்.அடிபட்டுள்ளேன்.ஆனால் உங்கள் பதிவு நிறைய அனுபவம் தாங்கள் பெற்றவர் என சொல்லாமல் தெரிகிறது.
ReplyDelete