Wednesday, December 16, 2009
ஜோதிடமா ? செக்ஸா ?
மனித வாழ்வை தீர்மானிப்பது ஜோதிடமா செக்ஸா என்ற கேள்விக்கு இந்த பதிவில் விடை தேடுவோம். சைக்காலஜி மனிதனின் கேரக்டரை தீர்மானிப்பதில் (வளரும் சூழல்) என்விரான்மென்டல் ஃபேக்டர் பெரும் பங்கு வகிக்கிறது என்று கூறுகிறது. ஆனால் ஜோதிடத்தில் பார்த்தால் வளரும் சூழலே உங்கள் ஜாதகத்தை வைத்துதான் அமைகிறது. வளர்ப்பு சூழலால் உங்கள் செக்ஸ் லைஃப் பாதிக்கப்படுகிறது என்று செக்ஸாலஜி கூறுகிறது. இதையும் கிரகங்களே தீர்மானிக்கின்றன என்று ஜோதிடம் கூறுகிறது.
கிரகங்கள், வாஸ்து அனைத்தும் மனித வாழ்வை விதவிதமாக பாதிக்கின்றன. ஆனால் இவை எல்லாம் தான் என்ற அகம் கொண்டு, நான் செய்கிறேன், இது என் எண்ணம், இது என் சொத்து என்று வாழ்வோர் மீதே அதிகம் வேலை செய்கின்றன.
மனிதனில் எப்போது அகந்தை குறைகிறதோ ஆட்டோமேட்டிக்காக கிரக, வாஸ்து பாதிப்புகளும் குறைந்துவிடுகின்றன. ஆண் பாதி உயிர், பெண் பாதி உயிர் இவர்கள் கூடும்போது , இணையும் போது (ஆழமாக/எவ்வித குற்ற மனப்பான்மையோ , பரபரப்போ, அச்சமோ இன்றி) சுக்கில சுரோணிதங்கள் வெளிப்படுவதோடு இன்னும் ஏதோ நடைபெறுகிறது. அது நடைபெற இருவரும் உச்சம் பெறுவது மிக முக்கியம்.
அந்த "ஏதோ ஒன்று நடைபெறும் போது" அவர்களின் அகந்தை கரைகிறது. அகந்தை கரைந்துவிடும்போது அவர்கள் மீதான கிரக,வாஸ்து பாதிப்புகளும் வெகுவாக குறைந்து விடுகின்றன.
கிரகமே வேலை செய்யாதா என்றால் செய்யும்? வாஸ்துவே வேலை செய்யாதா என்றால் செய்யும். எப்படி வேலை செய்யும் என்றால் ?
செக்ஸுக்கு பொறுப்பு வகிக்கும் சுக்கிரன் பாதகமாய் சஞ்சரிக்கும் நிலையில் வீடு,வாகன்ம் இத்யாதி வகையில் பாதிப்புகள் ஏற்படும் (காரணம் சுக்கிரனே வாகன காரகன், சுக்கிரனே கிருக காரகன்)
ஆனால் அவர்களிடையிலான புரிதலோ, ஒற்றுமையோ, காதலோ எள்ளளவும் மாறாது. இதற்கு காரணம் அவர்கள் அவ்விதமாக தொடர்ந்து சம ரதம் அடைவதால் ,ஒரே நேரத்தில் உச்சம் பெறுதலால் அவர்களில் ஒரு வித இணைப்பு ஏற்பட்டுவிடுகிறது. (உடல்,மன அளவில் மட்டுமல்லாது ஆன்ம அளவிலும்) நீங்கள் தனித்திருக்கும்போது தான் அகந்தை தலை விரித்தாடும். இணைப்பு ஏற்படும்போது அகந்தை கரைந்து விட்டுக்கொடுத்தல் அதிகரித்து விடுகிறது.
பக்கத்து தெருவில் எவனோ சிகரட் பிடித்தால் இங்கே குமட்டுது என்று சீன் போடும் பெண் கணவனுக்கு ஃபாரின் சிகரட் ப்ரசன்ட் செய்யும் ரேஞ்சுக்கு வர இதுதான் காரணம்.
ஈருயிர் ஓருயிராவதால் ஈகோ ஸ்மாஷ் ஆகிறது. அல் குரானில் சொல்லப்பட்டுள்ளதாய் நான் கேள்விப்பட்ட விஷயம் "உங்களில் இருவர் எதை கேட்டாலும் யாம் மறுப்பதில்லை" என்பதாகும்
எனவோ மனித வாழ்வை அதிகம் பாதிப்பது ஜோதிடமா ? செக்ஸா என்று ஆராயும்போது செக்ஸே என்று தாராளமாக கூறலாம் . ஆனால் அந்த செக்ஸ் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று பல முறை கூறியுள்ளேன்.
இதே பதிவில் இன்னொரு பஞ்சாயத்து/அதாங்க பட்டிமன்றம். ஒரு ஜோதிடனான நான் செக்ஸ் குறித்த பதிவுகள் போடலாமா? போடக்கூடாதா ?
நண்பர் ஷான் அவர்கள் என் மேல் பெரும் அக்கறை கொண்டு போட்ட நீண்ட மறுமொழிக்கான எனது மறுமொழியை இங்கு தருகிறேன். தாங்களும் ஒரு ஜோதிடனான நான் செக்ஸ் எழுதலாமா எழுதக்கூடாதா என்பது குறித்து தங்கள் கருத்தை தெரிவியுங்கள்
ஷான் அவர்களே,
//நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு.............பலான சமாச்சாரங்களை தேடிய காலம் மலையேறி பல வருடங்கள் ஆகிவிட்டது.....இன்று போதும் போது என்னும்மளவுக்கு .........சொல்லபோனால் அனைவருக்கும் பலான சமாச்சாரங்களின் மேல் அலுப்பு வந்து வெகுகாலம் ஆகிறது............இன்றைய யுகத்தில் பலான சமாச்சாரங்களுக்கு பஞ்சமே இல்லை எனலாம்........மேலும் அந்தபணியை செவ்வனே செய்ய தரங்கெட்ட தளங்கள் பல உள்ளது.............//
நீங்கள் சொல்வது தங்கள் பகுதி நிலவரமாக இருக்கலாம். ஆனால் எங்கள் பகுதிகளில் நிலைமை வேறாக உள்ளது. நெட்டிஜன் களை 3 வகையாக பிரிக்கலாம்
1.பலான சமாச்சாரங்களுக்காக வரும் இளைஞர்கள்/ நடுத்தரம்/வயோதிகர்கள்
2.கல்வி,வேலை வாய்ப்பு, ட்ரான்ஸ்ஃபர்,பி.எஃப் (பிராவிடண்ட் ஃபண்ட்ங்கோ வரும் அனைத்து வயதினர்
3.ஏதேனும் தகிடு தத்தம் செய்து பணம் சம்பாதிக்கமாட்டோமா? ( நெட்டில்)என்று வருவோர்
உங்களுக்கு நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால் ரன்னில் போய் ரீசன்ட் என்று அடித்து ஓகே செய்து பாருங்கள். உங்களுக்கு முன் இருந்தவன் என்னத்தை பார்த்தான் என்று தெரிந்து விடும் ( என்னதான் அவெய்லபிலிட்டி இருந்தாலுமதில் வெரைட்டி தேடுவோர் அத்யதிகம். உ.ம்: என் நண்பன் ஒருவன் சுய இன்பத்த காட்டும் க்ளிப்பிங்குகளை தவிர வேறு பார்க்க மாட்டான். நேற்று ரீசன்டில் பார்த்த போது எவனோ வெறும் மார்புகளை மட்டும் சேவ் செய்து வைத்துள்ளான்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னது போல் சாப்பிட ஆரம்பித்தால் தான்
இரைச்சல் குறையும். அதற்குதான் நான் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரத்தை சிபாரிசு செய்து வருகிறேன்.
//மேலும்...உங்களின் எழுத்துக்கள்...கருத்துக்கள், உங்களின் தனிமனித ஒழுக்கத்தை, தகுதியை, உங்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி எனலாம்.......நீங்களே தவறான பிம்பத்தை ஏன் உருவாக்குகிறீர்கள் !!!!!!!!!!!( நீங்கள் தவறான பிம்பமாக இல்லாதபோது )//
சரி, தவறு எல்லாம் கால தேச வர்த்தமானங்களை பொருத்து மாறுபடும். ஒரு வீட்டுக்கூரையின் மேல் சாக்கடை தண்ணீரை ஊற்றுவது தவறு. இதுவே அவ்வீடு தீப்பற்றி எரியும்போது ?
என் பிம்பத்தின் மீது எனக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது. நான் அவற்றையெல்லாம் கடந்தவன்.
என் நோக்கம் சிற்றின்பத்துக்கே கதியில்லாது அங்காடி நாயாய் அலையும் அன்பர்களை அதில என்னா இருக்கு ஜுஜுபி.. அதை பார் .. இப்போ இதைபார் (ஆன்மீகத்தை) என்று அவர்களை ஆன்மீக வழிக்கு திருப்புவதே . அதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உயிர் பாதுகாப்பு, உணவு, உடை, இருப்பிடம் செக்ஸை வழங்க வல்ல மரியாதைக்குரிய தொழில், உத்யோகம், வேலை.இதற்காகத்தான் ஆப்பரேஷன் இந்தியா 20000
//உங்களின் பதிவுகளை தொடர்ந்து படிக்கும்போது நீங்கள் பொதுநலவாதி என்பதையும், சோர்வடையாமல் போராடும் குணம் உள்ளவர் என்பதையும், எதையும் அரைகுறையாக கற்காமல் ஆழ்ந்து கற்றவர் என்பதையும், இத்தனைக்கும் மேல் மிகவும் எதார்த்தவாதி என்பதையும் அறியமுடிகிறது....//
தங்கள் அனலட்டிகல் அறிவுக்கு நான் சரெண்டர்..
//ஆனால் உங்களை எங்களுக்கு அறிமுகபடித்திய எழுத்துக்களே உங்களின் மீது ஒரு தவறான மதிப்பீடு கொள்வதற்க்கும் காரணமாகிறது எனலாம்.....//
நானும் படாத பாடு பட்டு தான் அதை (செக்ஸ்) கடந்து வந்தேன்.அப்போ எனக்கு ஒரு ஃப்ரெண்ட், கைட் இல்லே. அந்த நிலை அடுத்த தலைமுறைக்கு வரக்கூடாது. அவிக நேரம், சக்தி , அறிவுத்திறன் வீணாகக்கூடாது என்பதே என் நோக்கம்.என்னை சேர்ந்தவர்கள் உயர் நிலை எய்த என் நற்பெயர் மீதான கவலையே தடை என்றால் அதை தூளாக்கி என் கொள்கையை முன்னெடுத்து செல்வேன்
ஹீரோ ஈஸ் ஒன் வூ லே டவுன் ஹிஸ் லைஃப் ஃபார் ஹிஸ் பீப்பிள்
ஆள் கொலையானா என்ன கேரக்டர் கொலையானா என்ன ரெண்டும் ஒன்னுதான். நோ ப்ராப்ளம்.
//மேலும் நீங்கள் ஒரு தொழில் முறை ஜோதிடன் என்கிறீர்கள். துன்பப்படும் மக்கள், மனச்சோர்வடைந்த மக்கள், எதிர்காலத்தின் மேல் பயம் உள்ள மக்கள், அடுத்தடுத்த தோல்விகளால் தன்னம்பிக்கை இழந்த மக்கள் போன்றோர் தான் ஜோதிடர்களிடம் வருவார்கள்.................எதற்காக என்றால் ஆண்டவன் எழுதிய தலைஎழுத்தை ஜோதிடன் தான் படிக்க இயலும்....ஜோதிடன் மூலம் கடவுளின் நல்ல செய்தி வாராதா என்ற ஏக்கமும்.....ஜோதிடனின் வாக்கு உண்மையோ பொய்யோ...அதை மனதார ஏற்றுக்கொண்டு மனமகிழ்வுடன் வீடு திரும்புவார்கள்...........உங்கள் வாக்கு அவர்களுக்கு தன்னம்பிக்கையை , மனவலிமையை, ஒரு புத்துணர்வை, புதுவாழ்வை கொடுக்கும்..........அத்தகைய பெருமை வாய்ந்த கலையை சிறப்பாக கற்ற நீங்கள் சில சிற்றின்ப சில்லரைகளுக்காக ஏன் உங்கள் மீதே சேறு பூசி கொள்கிறீர்கள்.........//
நீங்கள் பாவம் ரொம்ப மேலோட்டமாக சிந்திக்கிறீர்கள். எனக்கு இது போன்ற யாரும் சொல்லத்துணியாத விஷயங்களை கூட சொல்லும் தைரியத்தை தந்தது என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற வரும் தாய்குலம் தான் என்றால் நம்ப மாட்டீர்கள். என் வயது 42 தான் ஆனால் 60 வயது பெண்ணும் என்னை தன் தந்தையாகவே உணர்கிறாள்.
ஜாதகச்சக்கரத்தில் 1,2,3,4,5,6,7,8,9,10,11,12 என்ற பனிரண்டு பாவங்களும் செக்ஸுடன் தொடர்பு கொண்டவையே (எப்படி என்பதை வரும் பதிவுகளில் தெளிவு படுத்துகிறேன். அது வரை பாப்பாரவுக மண்டைய பிச்சிக்கிடட்டும். சூரியன் முதல் சுக்கிரன் வரையான 9 கிரகங்களும் செக்ஸுக்கு தான் தூண்டுகிறார்கள். இதை என்னால் நிரூபிக்க முடியும்.
உண்மை நிலை இப்படியிருக்க "இவற்றை" தவிர்த்து என்னாத்த ,மக்கள்
எதிர்காலத்தை கணிப்பது ?
//உங்களை நீங்கள் சரியான முறையில் மார்கெட்டிங் செய்தால்...உங்கள் வெற்றி நிச்சயம்....அதுதான் உங்கள் பிரச்சனையே............( உ ம ) அமெரிக்காவை விட ரஸ்யா technology யும் சரி.. திறமையிலும் சரி...இயற்க்கை வளங்களிலும் சரி மிகவும் சிறந்த நாடு...ஆனால் அவர்களின் poor marketing திறமையால் வறுமையில் வாடுகிறார்கள்.... நீங்கள் ரஸ்யாவை போல.....//
தங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். ( ஒரு ரகசியம் சொல்லவா ? மார்க்கெட்டிங், விளம்பரம் இத்யாதியெல்லாம் ஓவராகிப்போனதாலேயே இது டுபாக்கூர் பார்ட்டியோ என்ற சந்தேகம் கூட சிலருக்கு வந்து விட்டது தலைவா?
பிற சோதிடர்களுக்கு பணம் வரும் நேரம் வந்து விட்டால் ஜாதகர் வந்துவிடுவார்.
நம்ம கேஸ்ல ஜாதகருக்கு சனி விடும் நேரம் வந்தால் தான் நம்மிடம் வரமுடியும்.
பிற ஜோதிடர்களிடம் ரிப்பீட்டட் ஆடியன்ஸ் அதிகம். நம்ம கிட்டே ஒரு தரம் வந்தா அதையடுத்து நாம சொன்ன நல்லதோ , கெட்டதோ நடந்தாதான் வரனும் .
//எனவே கொஞ்சம் உங்களை மாற்றிக்கொண்டு, உங்களை சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்தால்....உங்கள் இடத்தை மற்றவர் அடைவது சிரமும்......//
வேணாம் தலை மார்க்கெடிங் பண்ணா பணம் வரும். அந்தபணத்தோடவே கருமமும் வரும். எவனுக்கு கருமம் தொலையற நேரம் வந்திருச்சோ அவன் தானா வருவான். எவனுக்கு நான் கடன் பட்டிருக்கேனோ அவன் கட்டாயம் வருவான்.
போறவன் வரவனை எல்லாம் கூட்டி சொல்ல ஆரம்பிச்சா நாறிடும்.
//இதை நான் உபதேசமாக சொல்லவில்லை.....கடந்த மூன்று மாதகாலமாக ஏறக்குறைய 60 சதவீத பழைய பதிவுகளை எல்லாம் படித்து, பிரம்மித்து.. உங்களின் சமீப கால பதிவுகளினால் வருந்தி இதை எழுதுகிறேன்.........//
பொறுமைசாலி சார் நீங்க. அந்த பதிவுகளை படித்தவர்கள் எத்தனை பேர் இப்போ புதிய பதிவுகளை படிக்கிறவங்க எத்தனை பேர் ? கூட்டி கழிச்சு பாருங்க..
இயற்கை கூட மனிதனை " கண்ணா உடலுறவுல உனக்கு எந்த சுகமும் கிடையாது . ஆனா நீ இனப்பெருக்கம் செய்துதான் ஆகனும்னு வச்சிருந்தா .. நாடெல்லாம் காடாகியிருக்கும்.மனித இனமே மறைந்து போயிருக்கும்.
நல்ல நோக்கத்தை நல்ல வழில அடையறது ராமன் வழி
நல்ல நோக்கத்தை கெட்ட வழியிலயாவது அடையறது கிருஷ்ணன் வழி
//வலைப்பூ, இன்டர்நெட் போன்றவை மிக சக்தி வாய்ந்த மீடியா...இதை சரியான முறையில் உங்களை அனைவரிடத்திலும் கொண்டு செல்ல பயன்படுத்துங்கள்,பயன்பெறுங்கள்....//
கட்டாயம் முயற்சிக்கிறேன். நான் ஏதோ பணம் பண்ண வேண்டும் என்றல்ல. ஊரை ஏமாற்றும் டுபாக்கூர் பார்ட்டிகளிடம் மக்கள் மாட்டிசீரழியாதிருக்கவாவது இதை செய்கிறேன்.
//கொஞ்சம் ஓவராக பேசியிருந்தால் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் , ஏனென்றால் நானும் உங்களை போலதான்...மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லி விடுவேன் ...........//
என்ன அண்ணாச்சி ..இவ்ள அக்கறையெடுத்து மறுமொழி போட்டிருக்கிங்க உங்களை போய் தவறா எடுத்துக்குவனா ?
இனிப்பான பொய்யை விட கசப்பான நிஜத்தை நிர்பயமா ஃபேஸ் பண்றவன் நான்.
கிழிச்சு தொங்க போடுங்க தலை ! பிரச்சினையே இல்லை
விஷ் யு ஆல் தி பெஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
//நானும் படாத பாடு பட்டு தான் அதை (செக்ஸ்) கடந்து வந்தேன்.அப்போ எனக்கு ஒரு ஃப்ரெண்ட், கைட் இல்லே. அந்த நிலை அடுத்த தலைமுறைக்கு வரக்கூடாது. அவிக நேரம், சக்தி , அறிவுத்திறன் வீணாகக்கூடாது என்பதே என் நோக்கம்.என்னை சேர்ந்தவர்கள் உயர் நிலை எய்த என் நற்பெயர் மீதான கவலையே தடை என்றால் அதை தூளாக்கி என் கொள்கையை முன்னெடுத்து செல்வேன்//
ReplyDeleteஇந்த நோக்கம் போற்றத்தக்கது..
துணை நிற்பேன்..
நிகழ்காலத்தில் அவர்களே,
ReplyDeleteவருகைக்கும், மறுமொழிக்கும், அன்பு, ஆதரவுக்கும் நன்றி