சாரு நிவேதிதா அவர்களே,
மனித உறவுகள் விசித்திரமானவை. உறவுக்கும் பகைக்கும் காரணங்கள் தேடினால் அவற்றில் தர்கமே இருக்காது. நான் சின்ன வயதில் கமலை "ஒன்பது" , ''அட்டு" என்றெல்லாம் பேசியுள்ளேன். இந்த பகைக்கு என்ன காரணம் என்பது எனக்கு பின்னர் புரிந்தது. எனக்குள்ளும் ஒரு கமல் இருக்கிறார். " ஸேம் போல்ஸ் டஸன்ட் அட்ராக்ட் ஈச் அதர்" என்பது இப்போது புரிகிறது.
எனக்கு தெரிந்து ஞானி அவர்களின் கேரக்டர் உங்களில் ஒளிந்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து புரிந்து கொள்ளுங்கள். பகை என்ற வார்த்தையை நான் உபயோகிக்க காரணம் தங்கள் விமர்சனங்களில் தர்கமே இல்லை. அதனால் தான் இது பகையோ என்ற ஐயம் எனக்குள் பிறந்தது.
//கிரிக்கெட் ஆடக் கூடாது என்று போலீஸ் உத்தரவு போட்டது. உடனே ஞாநி போலீஸின் உத்தரவை எதிர்த்து குமுதத்தில் எழுதினார்//
இந்த விசயத்தில் நானும் உங்கள் கட்சிதான். ஆனால் ஞானி அவர்கள் அடிப்படையில் இடது சாரி சிந்தனைகள் கொண்ட மனிதாபிமானி. இயற்கையாகவே அவரில் போலீஸ் எதிர்ப்பு உணர்ச்சி இருக்கும். எனவே
இதை கூடவா போலீஸ் இம்போஸ் செய்யும் என்று இர்ரிட்டேட் ஆகி எழுதியிருக்கலாம். இதில் அவர் இரண்டாவது கட்சி பற்றி ( பந்து அடி வாங்குவோர்) யோசிக்காதது தவறுதான்)
//ஞாநி ஒரு கலாச்சார தாலிபான். நானோ ஒரு ஹிப்பி.//
தாலிபான் என்ற வார்த்தையிலேயே பகை எட்டிப்பார்க்கிறது. ஞானி இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்பவர். நான் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்பவன் என்றும் சொல்லியிருக்கலாம். ஹிப்பிக்கள் தான் காலப்போக்கில் கலப்பற்ற அக்மார்க் ஆன்மீக வாதிகளாகவோ, முதலாளிகளாகவோ மாறுகிறார்கள் வாழ்க.
//பூச்செண்டுகளால் என்ன பயன்; இது எவ்வளவு அர்த்தமற்ற காரியம்//
//பூச்செண்டுக்கு பதிலாக புத்தகங்களைக் கொடுத்திருக்கலாமே//
இதே வார்த்தையை கலைஞரும் சொல்லியிருக்கிறார். அவரையும் கண்டிக்கலாமே.
//பூ என்றால் பெண்ணுக்குரியதாம்//
ஞானி பெண்கள் குறித்து கவலை கொண்டவர். அக்கறை கொண்டவர். அவர் பூ வைப்பது, வைக்காதது போன்ற அற்ப சங்கதிகளில் கவனம் வைக்கிறவர் அல்ல.அதே பூவை உங்களுக்கே கொடுக்கும்படி சொல்லியிருந்தால் அதற்கும் இதைவிட கடுமையாக சாடியிருப்பீர்கள். காரணம் பகை . பகைக்கு காரணம் உங்களில் ஒரு ஞானி உள்ளார் .
//4 மணி நேரமும் மனிதர்கள் தர்க்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன? //
ஒரு அரசியல் வாதி 24 மணி நேரமும் நாணயமாக வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன? என்று இந்தியாவை சீனாவுக்கு ஒத்திக்கு விட்டு விட்டால் என்னாகும்
//ஞாநியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மகாத்மா காந்தியின் ஞாபகமே வரும்.//
சூப்பருங்கோவ் !
// ஜட்டியே போடாமல் பேண்ட் போட்டுக் கொண்டு என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஐநாக்ஸ் தியேட்டருக்குச் //
பாருங்க பாருங்க உங்களுக்குள்ளயும் ஒரு ஞானி இருக்காரு
// ஞாநி சொன்னார், கே.கே. நகர் என்று சொல்வது தப்பு; அது எப்படி பெயர்களைச் சுருக்கலாம்? கலைஞர் கருணாநிதி நகர் என்றே சொல்ல வேண்டும். //
உடல் ஊனமுற்றோரின் நிகழ்ச்சியில் ஞானியின் பேச்சில் என்னாத்த தப்பு கண்டிங்களோ புரியலை.
நான் சின்ன வயசுல அப்பா அம்மா வயித்தெரிச்சலை கொட்டிக்காத நாளில்லே. நான் வெளிச்சத்துக்கு வராததுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் எவனாவது டீன் ஏஜனுக்கு அறிவுரை கூறும் சமயம் வரும்போது "த பாரு நைனா இவ்ளோ டேலண்ட் இருந்தும் நான் வெளிச்சதுக்கு வராததுக்கு காரணம் என்னன்னா அப்பா அம்மா ஆசீர்வாதம் இல்லாததுதான்" என்று கூறுவது வழக்கம். ஒரு வகையில் இது தவறாகவும் இருக்கலாம் . நோக்கம் ? அது நல்ல நோக்கம் தானே.
உடல் ஊனமுற்றவர்களுக்கு மனுஷ்ய புத்திரனை பற்றி சொன்னது தவறாகவே இருந்தாலும் அதன் நோக்கம் கல்வி என்ற ஆயுதத்தை ஏந்த சொல்வதே
// அது ஏன் ஐயா எல்லோரையும் பார்த்து எழுதாதே, வேலை செய்யாதே, வீட்டுக்குப் போ என்றே எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்? //
அது ஒரு வித தாய்மை உணர்ச்சி. கருணை காரணமாய் சொல்லப்படுவது. ஞானி பேச்சை பற்றி நக்கலடித்திருக்கிறீர்கள். அவர் எப்படி பேசினாலும் பிரச்சினையே இல்லை. கேட்கப்போகிறவர்களில் (என்ன ஒரு இரு நூறு பேரா) உங்களை போன்றவர்கள் எப்படியும் நக்கலடிக்கத்தான் போகிறீர்கள். என்னை போன்றவர்கள் இருந்தால் அவர்கள் ஞானியின் நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளத்தான் போகிறார்கள்
ஆனால் கலைஞரின் நிலை அதுவல்ல. பார்ட்டி கழண்டுகொண்டால்
புது வெள்ளம் பாயும் . * நாற்பதுக்குள் இருப்பவர்களுக்கே பதவி என்று முடிவு செய்தால் இன்னும் ஸ்ரேஷ்டம்
கலக்கல் பதிலடி
ReplyDelete//மனித உறவுகள் விசித்திரமானவை. உறவுக்கும் பகைக்கும் காரணங்கள் தேடினால் அவற்றில் தர்கமே இருக்காது. நான் சின்ன வயதில் கமலை "ஒன்பது" , ''அட்டு" என்றெல்லாம் பேசியுள்ளேன். இந்த பகைக்கு என்ன காரணம் என்பது எனக்கு பின்னர் புரிந்தது. எனக்குள்ளும் ஒரு கமல் இருக்கிறார். " ஸேம் போல்ஸ் டஸன்ட் அட்ராக்ட் ஈச் அதர்" என்பது இப்போது புரிகிறது.
ReplyDelete//
அண்ணே இதுக்கு ஏதும் "தியரி" இருக்கா ..
உங்க ஊர் பக்கம் நிலைமை எப்படி
மீன் துள்ளியான் அவர்களே,
ReplyDeleteநீங்கள் சிண்டை பிய்த்துக்கொள்ளும் வகையில் ஒரு தியரி சொல்லவா? எல்லாத்துக்கும் ஒரு தியரி இருக்கு. எல்லா தியரிக்கும் ஒரு எக்ஸெப்ஷன் இருக்கு.ஆனால் எதையுமே தியரிட்டிகலைஸ் செய்யக்கூடாது. எதுக்கு எதோடவும் தொடர்பில்லே என்பது தான் என் தியரி. இதை சனத்துக்கு சொன்னா புரிஞ்சிக்கிட மாட்டாங்கங்கறதால கண்ட தியரியையும் போட்டு குழப்பிக்கிட்டிருக்கேன். ( கொஞ்சமாவாச்சும் புரிஞ்சுதா தலை ?)
கரிசல் காரன் அவர்களே,
ReplyDeleteஇதை பதிலடி என்று ஏன் சொல்கிறீர்கள். நான் கமல் விஷயத்தில் மிஸ்டேக் செய்தாற்போல் சாரு ஞானி விஷயத்தில் மிஸ்டேக் பண்றாரோனு தோணுச்சு அதான் விசயம்
அண்ணே அருமையா புரிஞ்சது
ReplyDeleteமீன் துள்ளியான் அவர்களே,
ReplyDeleteஉண்மையிலேயே நீங்கள் ஞானி . வாழ்க வளர்க
சூப்பருங்க்கோ
ReplyDeleteநன்றி மோஹன் அவர்களே !
ReplyDelete