Sunday, December 27, 2009

எங்கே கக்கூஸ் கட்டனும்னு தில்லில

இது தமிழின காவலர் கலைஞர் (?) உள்ளிட்டோரின் ஒரு காலத்து முழக்கம். ஆனால் இவர்கள் இந்த முழக்கமிடுவதற்கான வயது, அருகதை யாவும் இழந்து பலகாலமாகிறது.  நம் இந்திய அரசியல் சாசனம்,  மற்றும் நிர்வாக அமைப்பே பிரிட்டனிடம் கடன் வாங்கியது என்பதை யாரும் மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

அவன் வெளி நாட்டுக்காரன். நம் நாட்டை ஆள முனைந்த போது அவனுக்கு இங்குள்ள சுதேசிகள் மீது சந்தேகம் எனவே பல அடுக்கு நிர்வாகத்தை ஏற்படுத்தி , பல நிலைகளில் செக் வைக்க வழி செய்துகொண்டான். சுதந்திரத்துக்கு பின் நம்மை நாமேதானே ஆண்டு வருகிறோம். நம்ம ஆட்களை நாமே நம்பாவிட்டால் எப்படி?
மேலும் எத்தனை அடுக்கு நிர்வாகமிருந்தால் அத்தனை அடுக்கிலும் ஊழல்தான் தலைவிரித்தாடுகிறது.

மேலும் நம்முடையது ஜன நாயக அமைப்பு. ஒன்று மக்களுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். முடியாத பட்சம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். இரண்டுமல்லாத பட்சத்தில் இதென்ன ஜன நாயகம் ?

அதிலும் கவர்னர் பதவி என்பது  வெள்ளை யானை மாதிரி . ஆந்திரத்தில் அன்று ராம்லால் , இன்று திவாரி லட்சணத்தை பார்த்திருக்கிறோம். அங்கே கே.கே.ஷா.

அரசாங்கம் மக்களிடம் இருந்து ஒரு ரூபாய் வசூலிக்க பத்து காசு, மறுபடி அதை மக்கள் பணிகளுக்கு செலவழிக்க பத்து காசு, செலவிட்டதை சரிபார்க்க பத்துகாசு, ஊழல் 25 காசு என்று 55 காசு தண்ட கருமாந்திரமாய் போகிறது. சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்காபணம் கதைதான்.

அதிலும் இந்த கவர்னர் பதவி கிரிமினல் வேஸ்ட் என்று தான் நினைத்திருந்தேன். இப்போதுதான் புரிகிறது கவர்னர்களே கிரிமினல்கள்களாக இருக்கக்கூடும் என்பது .இதில் இந்த இழவெடுத்த பதவியில் இருக்கும் பீடைகளுக்கு சட்ட பாதுகாப்பு வேறே.  கவர்னர் தப்பு செய்தால் ராஷ்டிரபதிக்கு புகார் செய்யனுமாம்.

அங்கே மட்டும் என்ன வாழுது ஜனாதிபதியின் கணவர் ஒரு டிஃபால்டர்.  கையும் களவுமாய் பிடிபட்ட கிழவாடி கில்மா பார்ட்டியை உடல் நல காரணம் காட்டி ராஜினாமா செய்ய அனுமதிக்கிறோம். இது என்னத்த ஜன நாயகம் புரியவில்லை.

கவர்னர் செய்யும் வேலையை (அதாங்க பதவி பிரமாணம்,  மேல்/கீழ் சபை கூட்டு கூட்டத்தில் பீசறது , ஆட்சி அமைக்க அழைக்கிறது ) ஹை கோர்ட் தலைமை நீதிபதியே செய்யலாமேனு சிலர் சொல்றாங்க.  நான் மறுபடி மறுபடி சொல்றது என்னன்னா இது ஜன நாயகம். இதில்  ஒன்று மக்களுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். முடியாத பட்சம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். ஹை கோர்ட் தலைமை நீதிபதியை மக்களா தேர்ந்தெடுத்தாங்க? இல்லே மக்கள் பிரதி நிதிகள் தேர்ந்தெடுத்தாங்களா? கர்னாடகத்துல பார்க்கிறோம்ல மாண்பு மிகு  நீதிபதி பஞ்சாயத்தை?

முதல்ல தலையணை சைஸுக்கிருக்கிற அரசியல் சாசனத்துக்கு டாட்டா  சொல்லிட்டு 64 பக்கத்துல சின்னதா, க்யூட்டா, லாஜிக்கலா, ஹ்யூமனா, ஒரு அரசியல் சாசனத்தை தயார் பண்ணனும்.  பிரதமரை மக்கள் நேரிடையா தேர்ந்தெடுக்கனும். ஓட்டுரிமைக்கும் சில தகுதிகள் நிர்ணயிக்கனும். ஓட்டு போடுவது  கட்டாயமாக்கப்படனும். கிராமம்/ நகராட்சி வார்டை யூனிட்டா வச்சுக்கிட்டு திட்டமிடனும். திட்டம் வார்டுலருந்து, கிராமத்துலருந்து வரணும்.

கீய்வைத்னாங்குப்பத்ல எங்கே கக்கூஸ் கட்டனும்னு தில்லிலயா முடிவு பண்றது. ஷிட் ! மக்கள் பிரதி நிதியா தேர்தல்ல நிற்க ஒரு தகுதியை அறுதியடனும். அறுபது வயது ஆயிருச்சுன்னா  ஒவ்வொரு வருடமும்  ஒரு டாக்டர், ஒரு சைக்கிரியாட்ரிஸ்ட் சர்ட்டிஃபை பண்ணனும் அப்போதான் கன்டின்யூ பண்ண விடனும். இல்லேன்னா முதியோர் இல்லத்துக்கோ பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கோ அனுப்பனும் .

தேர்தல்ல நிக்கிறவனுக்கு மட்டுமில்லாம ஓட்டு போடறவனுக்கும் தனியா ஒரு டிப்ளமா படிப்பை அறிமுகப்படுத்தனும். ( பிரதமரா நிக்கனுன்னாலும் சரி வார்டு மெம்பரா சேரனும்னாலும் சரி  நாடு, நிர்வாகம், சரித்திரம், அரசியல் , பற்றின கு.பட்ச  கேள்வி ஞானமாவது இருக்கனும்.  இந்த தேர்வை கணிணி மயமாக்கனும். கணிணி கேட்கிற கேள்விக்கு பார்ட்டிங்க பதில் சொல்றாப்ல இருக்கனும். அவனவனோட கட்டைவிரல் ரேகையையே ரோல் நெம்பரா உபயோகிக்கனும்.

வேணம்னா இவிகளுக்கு கணிணி அறிவுள்ள பி.ஏ க்களை உதவியா நியமிக்கலாம். வீடியோ கான்ஃபிரன்சிங் லொட்டு லொசுக்குனு இருக்குல்ல. அப்புறம் என்னத்த நகர் மன்ற வளாகம் மயிரு. அவனவன் வீட்லருந்தே கலந்து கிடட்டும்.

கவர்னர் வசிக்கும் ராஜ் பவனை மட்டுமல்ல, ராஷ்டிரபதி பவன், பிரதமரின் அதிகார பூர்வ இல்லம், மத்திய , மானில செயலகங்கள், பாராளுமன்றம், சட்டமன்றம் அனைத்தையும் பல்கலை கழகங்களாக, மருத்துவமனைகளாக மாற்றவேண்டிய காலம் வந்து விட்டது.

பல்கலை கழகம்னாலே திகீர்ங்குது. கல்விங்கறது அதை பயில்றவனுக்கு தன் உடல், மனம், புத்தி,ஆத்மா, தன்னை பெற்றெடுத்த அப்பா, அம்மா, குடும்பம், சமுதாயம், மாவட்டம், மானிலம், நாடு பற்றிய அறிவை கொடுக்கனும். அவன் தன் சொந்த கால்ல நின்னு தன் தேவைகளை ( உயிர் பாதுகாப்பு, உணவு,உடை,இருப்பிடம், செக்ஸ்) பெற உதவுவதாய் இருக்கவேண்டும். அதான் கல்வி. மற்றதெல்லாம் ப்ர்ர்ர்ர்ர்ர்

 கையோட கையா இந்த ஐ.பி.சி ( அதாங்க இண்டியன் பீனல் கோட்) யையும் ஒரு வழி பண்ணிரனும். இந்த கிழவாடி, கிழட்டு காமப்பேய் விவகாரத்தையே எடுத்துக்குங்க . ஒரு தனியார் டி.வி.  சேனல் இது பற்றின  ஸ்டோரியை டெலிகாஸ்ட் பண்ணுது. அது என்ன ஏதுனு பார்க்காம லீவு நாள்ள கூட ஹவுஸ் மோஷன் கமிட்டி போட்டு உடனே இன்டிரியம் ஆர்டர் கொடுக்கிறாங்க.

நான் என்னோட ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை லோக்சபா ஸ்பீக்கருக்கு பதிவு தபால்ல அனுப்பறேன். எம்.பிக்களுக்கு  கிடைக்கச்செய்யுமாறு கேட்கிறேன். ஒரு மயித்து பதிலும் காணோம். இதை பத்தி ஹை கோர்டு தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பதிவு தபால்  அனுப்பறேன். சாகும்வரை உண்ணாவிரதம் அறிவிச்சு 12  நாள்  ஹங்கர் ஸ்ட் ரைக் பண்றேன். ஒரு மயிரு ஆக்ஷனும் கிடையாது. ஆனால் கே.சி.ஆர்னு ஒரு டுபாகூர் பார்ட்டி ஒன்னரை நாள் உண்ணாவிரதம் இருந்துட்டு டி.பி.என் ( டோட்டல் பேரண்டல் ந்யூற்றிசன்) ஏத்திக்கிட்டு ட்ராமா போடுது. (இதை ஏத்திக்கிட்டா  35 வருசம் சாப்பாடே இல்லாம நாடகம் போடலாம்) உடனே ஹ்யூமன் ரைட் கமிஷ ரெஸ்பாண்ட் ஆகுது. என்னத்த நீதி ? என்னத்த கோர்ட்டு.

குற்றம்  நடந்த  பிறகு அதுக்கு தண்டனை கொடுக்கிறது மடத்தனம். இந்தியா விவசாய நாடு. இருக்கிற விளை நிலங்கள்ள பெரும்பகுதி  சில ஆயிரம் நிலாச்சுவான் தார்கள் கையில இருக்கு. 10 கோடி ஆண்,பெண் வேலை வெட்டியில்லாமல் இருக்கிறார்கள் .   ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ  13 வயசுல செக்ஸ் தேவைப்படுது ஆனால் அவனுக்கு/அவளுக்கு 33 வயசுலதான் கல்யாணமே நடக்குது.  திவாரி கதையையே எடுத்துக்குங்க பெண்டாட்டிக்கு கேன்சர் வந்து செத்து போறா. இந்த கிழவாடி ஊர்ல இருக்கிற குட்டிகளை எல்லாம் பெண்டாள்றான்.  கர்பிணிக்கு , குழந்தைகளுக்கு தடுப்பூசி எவ்ள முக்கியமோ வயது வந்த ஆண் பெண்ணுக்கு செக்ஸ்  அவ்ளோ  முக்கியம். உடலுறவு வேட்கை+ திறன் கொண்டவர்க்கு செக்ஸை மறுப்பது அவரை கிரிமினலாகவோ , மன நோயாளியாகவோ மாற்றுவது உறுதி.

ஒன்று எல்லோருக்கும் வேலை கொடு. திருமணத்தை கட்டாயமாக்கு. செக்ஸ் கல்வி கொடு. குடும்பக்கட்டுப்பாட்டை கட்டாயமாக்கு. இல்லையா விபச்சாரத்தை லீகலைஸ் செய். அடிப்படையிலேயே ஓட்டைய வச்சுக்கிட்டு தொழு நோய்க்கு அவில் மாத்திரை கொடுத்த கணக்கா இருக்கிற அரசியல் சாசனம்,சட்டத்தை வச்சுக்கிட்டு என்னத்த கிழிக்கிறது.

விஸ்வேஸ்வரய்யா பத்தி கேள்விப்பட்டிருப்பிங்கனு நினைக்கிறேன். இவர் ஆதி காலத்துலயே சொல்லி வச்சாரு. இந்தியால ஒருத்தன் சம்பாதனைல பத்து பேர் வாழறாங்க (இவிகளை நீங்க தண்டத்தீனிம்பிங்க எக்கனாமிக்ஸ் அன் ப்ரொடக்டிவ் கன்ஸ்யூமர்ஸுங்குது)   இது நல்லதில்லை. சீக்கிரம் நாடு திவாலாயிருமுனு சொல்லியிருக்காரு.

இன்றைய தேதிக்கு அதி பெரிய அன் ப்ரொடக்டிவ் கன்ஸ்யூமர் யாருன்னா அரசாங்கம்தான். அரசாங்கத்தின் செயல்பாடுகளை இரண்டா பிரிக்கலாம்.ப்ரொடக்டிவ், அன் ப்ரொடக்டிவ். இப்போ 90 சதவீதம் அன் ப்ரொடக்டிவ் செயல்பாடுதான் இருக்கு. ( கலர் டிவி எட்ஸெட் ரா) டோட்டல் செட் அப்பே தூங்கி வழியுது. நான் எல்லா அரசு அதிகாரி, ஊழியனையும் வீட்டுக்கு அனுப்ப்ச்சொல்லலே.கொடுக்கிற சம்பளத்துக்கு சரிய்யா வேலை வாங்குங்கறேன்.

வடக்குல வெள்ளம், தெற்குல குண்டி கழுவ தண்ணியில்லே. நதி நீர் இணைப்பை ஏன் துவங்க கூடாது. 10 கோடி அன் எம்ப்ளாயிடை வச்சு ஸ்பெஷல் ஆர்மி ஃபார்ம் பண்ணி நதிகளை இணைக்க துவங்கினா தூங்கி வழியற நிர்வாகத்துல ஒரு சுறுசுறுப்பு வரும். நாட்டின் அனைத்து சக்தி, சோர்ஸையும் இதுக்கு ஏன் திருப்பி விடக்கூடாது.

4 comments:

  1. It is absurd to say that we should have some qualification for becoming people's representives... It is Kamaraj who proved better Chief Minister than anybodyelse. Do you think that those who are indulged in the corruption are all illiterates...??

    Wrong prescription... If we can't elect an honest village panchayat member, the problem is with us and not with the system or with the politicians.

    ReplyDelete
  2. அடிப்படைக் கல்வி சகலருக்கும் கிடைக்கணும். அப்ப...தானே எல்லா அரசியல்வியாதிகளும் படிச்ச(??)வங்களா இருப்பாங்க.

    காமராஜர் போலவே சிந்திக்கத் தெரிஞ்ச, அதே குணங்களுடன் கூடிய நல்ல மனிதர் கிடைச்சால் அந்த குறிப்பிட்ட ரூல்ஸை (அதான் படிச்சவங்க மக்கள் பிரதிநிதியா வரணும் என்பது) அவருக்கு மட்டும் மாத்திக்கலாம்.

    ஆஹா..இதை எழுதும்போதே ஆளாளுக்கு ஒரு சட்டமுன்னு வருது பாருங்க.

    மொத்தத்துலே அனைவரும் சட்டத்தின் முன்பு சமம்.

    யாரா இருந்தாலும் ஒரே சட்டம்( ஏய் நான் யாருன்னு தெரியுமுல்லேன்னு சவுண்டு விடறவனை ஆன் த ஸ்பாட் ஷூட் பண்ணனும்)

    ஊழல் தொலையும் நாடும் உருப்படும். அலங்காரப்பதவியால் யாருக்கு என்ன லாபம்?

    இன்னொன்னு முக்கியம். காலாவதியான நடிகைநடிகர்களை எம்.பி. ஆக்குவது முற்றிலும் ஒழிக்கப்படவேணும். இவிய்ங்க அங்கெபோயும் ஆடணுமா? போதுண்டா சாமி.

    ReplyDelete
  3. Mr.Ganesh,
    You had misunderstood my prescription. I had advocated only for a oral test that too by computer.

    I agree with you in the matter of literates. I had also abused the present educational system also in this post it self

    ReplyDelete
  4. //அடிப்படைக் கல்வி சகலருக்கும் கிடைக்கணும். அப்ப...தானே எல்லா அரசியல்வியாதிகளும் படிச்ச(??)வங்களா இருப்பாங்க.//

    என்னாங்க இது வம்பா போச்சு நான் எங்கயுமே கல்வி தகுதி பற்றி பேசவே இல்லை. நான் ப்ரிஸ்க்ரைப் பண்ணது சின்ன ஓரல் டெஸ்ட் அதுவும் கணிணி மூலமா. எனக்கு இந்த சமகால கல்வி மேலயே நம்பிக்கை இல்லிங்க‌

    //காமராஜர் போலவே சிந்திக்கத் தெரிஞ்ச, அதே குணங்களுடன் கூடிய நல்ல மனிதர் கிடைச்சால் அந்த குறிப்பிட்ட ரூல்ஸை (அதான் படிச்சவங்க மக்கள் பிரதிநிதியா வரணும் என்பது) அவருக்கு மட்டும் மாத்திக்கலாம்.//

    என் பதிவுல இந்த பிரச்சினையே கிடையாது. நான் ரெக்கமண்ட் பண்ணது சின்ன டிப்ளமாதான் அதுவும் ஓரல் டெஸ்டாயிருந்தாலும் பிரச்சினையில்லேங்க‌

    //ஆஹா..இதை எழுதும்போதே ஆளாளுக்கு ஒரு சட்டமுன்னு வருது பாருங்க.மொத்தத்துலே அனைவரும் சட்டத்தின் முன்பு சமம்.//

    விதினு கொண்டுவந்தாலே அங்கே விதி விலக்கும் வந்து உட்கார்ந்துருது. அதுக்குதான் நான் அரசியல் சாசனத்துக்கே 64 பக்க கோட்டா தான் கொடுத்திருக்கேன்

    //யாரா இருந்தாலும் ஒரே சட்டம்//
    நானும் உங்க கட்சிதான் தலை !

    ( ஏய் நான் யாருன்னு தெரியுமுல்லேன்னு சவுண்டு விடறவனை ஆன் த ஸ்பாட் ஷூட் பண்ணனும்)

    இந்த ஷூட்டுங்கற வார்த்தைய மட்டும் யூஸ் பண்ணிராதிங்க .துப்பாக்கிய ஏற்கெனவே கொடுத்து வச்சிருக்கம் . இதுல போலீஸுக்கு ஷூட் பண்ணவும் அதிகாரம் கொடுத்திங்கனு வைங்க நாஸ்தியாயிரும்

    //ஊழல் தொலையும் நாடும் உருப்படும்.//
    ஷூட் பண்றதாலதான் நாடு உருப்படும்னா அது தேவையே இல்லை
    // அலங்காரப்பதவியால் யாருக்கு என்ன லாபம்?//
    அந்த கஸ்மாலத்துக்கு லாபம், அந்த கட்சிக்கு லாபம்

    //இன்னொன்னு முக்கியம். காலாவதியான நடிகைநடிகர்களை எம்.பி. ஆக்குவது முற்றிலும் ஒழிக்கப்படவேணும். இவிய்ங்க அங்கெபோயும் ஆடணுமா? போதுண்டா சாமி.//

    ஓரல் டெஸ்ட்ல பாஸ் பண்ணா வந்து ஆடிட்டு போவட்டுமே

    ReplyDelete