Thursday, December 17, 2009

ஆண்மை மிக்க பெண்களின்

"எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று கூத்திடும் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஆண்மை மிக்க பெண்களின் அபத்திர பாவம் அற்ற, அச்சமற்ற, சுய நலமற்ற, தம் அழகு, கவர்ச்சி இத்யாதிகளின் பால் கவனமற்ற , ஆண்களின் பால் நம்பிக்கையுடனான செயல்பாடுகள் மட்டும் அவர்களில் அந்த ஆதிசக்தியையே தரிசிக்கும் பக்தன் நான்.

இதென்ன ஆண்மை மிக்க பெண்கள் என்று குழம்பாதீர்கள். என் அகராதியில் சுய நலம்,அச்சம், குழப்பம்,அபத்திர பாவம் ( அதாங்க இன்செக்யூரிட்டி) இதெல்லாம் பெண்மையின் சின்னங்கள். பொது நலம், தியாகம், தைரியம், தெளிவு, தன்னம்பிக்கை இதெல்லாம் ஆண்மையின் சின்னங்கள்.

நான் கவனித்தவரை பெண்களில் பெரும்பாலோர் தமது சரீரம் குறித்த எண்ணச்சங்கிலிகளில் இருந்து வெளிவரவே இல்லை. இதற்கு காரணம் இல்லாதுபோகவில்லை.இந்த ஹிப்பாக்ரட் சொஸைட்டியில் செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஆண்கள் பெண்களை கேவலம் முலையும், துளையுமாகவே பார்க்கும் நிலையில் பெண்களை மட்டும்  குறை சொல்வது தவறுதான். என்றாலும் என் அவதானிப்பை இந்த பதிவில் கூறுகிறேன்.
ஆதி சக்தியை பக்தன் வழிபடுதற்போல் மேற்படி பெண்களை நான் வழிபடுகிறேன். தியானிக்கிறேன். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் முழுமையானவர்கள் அல்ல. ஆணில் பெண்மை, பெண்ணீல் ஆண்மை கலந்தே உள்ளன என்பது உயிரியல். ஆனால் ஆணில் பெண்மை சதவீதம் அதிகரிக்கும்போது அவனது கேரக்டராகட்டும், பாடி லேங்குவேஜாகட்டும் அருவருப்பூட்டுவனவாக இருக்கும். இதே பெண்களில் ஆண்மை சதவீதம் கூடும்போது அது ஒரு அற்புத கலவையாகிறது. இவள் என் மூத்த சகோதரியாய் இருந்திருக்க கூடாதா? இவள் வயிற்றில் நான் பிள்ளையாக பிறந்திருக்க கூடாதா என்ற எண்ணம் தான் பிறக்கும்.

வெறுமனே என் அவதானிப்பை ( அப்பாடா..இப்பதான் கவிதை07 இன்டெலக்சுவல் ரேஞ்சுக்கு போய்க்கிட்டிருக்குங்கறிங்களா வுடு ஜூட்) சொல்வதை விட சில பெண்களின் வீர வரலாறுகளை சொல்கிறேன்.

சதா சர்வகாலம் பின்னலை முன்னும் பின்னும் மாற்றிப்போட்டுக்கொண்டு, துப்பட்டாவையும், முந்தானையையும் சரி பார்த்துக்கொண்டு, மெனோஃபாஸ் வந்து விட்டாலும் குழந்தை கணக்காய் கொஞ்சிக்கொண்டு, ரோட்டில் எவனை கண்டாலும் அவனது பிறப்பின் நோக்கமே அவளை ஜொள்ளுவதும், தள்ளீக்கொண்டு போவதும் என்பது போல் ஆன பில்டப் எல்லாம் தரும் பெண்களை பார்த்து பார்த்து வெறுத்து போன உங்களுக்கு ஃபார் எ  சேஞ்ச் நான் பார்த்த பெண்களை பற்றி சொல்கிறேன்.

நிறைய சதவீதம் இளம் பெண்கள் ரொம்பவே பிராக்டிக்கல் தான். வீட்டுக்கு போனால் தங்கள் நிலை என்ன என்பது அவர்களுக்கு தெரியும்.தலைக்கு லைஃப் பாய் சோப்பும், வயிற்றுக்கு ரேஷன் அரிசியும் தான் என்ற நிலையை அவர்கள் மறப்பதில்லை. ஆனால் பின்னே வரும் ஆண் நாய்களின் காரணமாய் அவர்கள் "சிறகின்றி" இறங்கி வந்த தேவதைகள்
என்ற ரேஞ்சில் நடை பயில்வதும், சக மாணவியருடன் கிசு கிசுப்பதும் காரணமேயின்றி சிரிப்பதும் நம்மை  பைல்ஸ் நோயாளியாக்குவது சகஜம்
(கொஞ்சம் பொறுத்துக்கங்கண்ணே அடுத்த பதிவில் சந்திப்போம்)

2 comments:

  1. நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளீர்கள். இணையத்தில் ஆபாசங்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாம் நல்ல காமத்திற்க்கு, நல்ல உறவிற்க்கு வழிகாட்டுவை என்று சொல்ல முடியாது.

    நல்ல உறவு முறையானது, ஆழமானது. சுகமானது.

    எழுதுங்கள் நிறைய எதிர்பார்க்கின்றேன், படிக்கின்றேன் உங்களிடமிருந்து. நன்றி.

    ReplyDelete
  2. பித்தனின் வாக்கு அவர்களே,
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete