பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்பதிவை தொடர்ந்து படிக்கும் உங்களுக்கு கண்ணனின் உன்னத அதிர்வுகள் கிடைக்கட்டும். அண்டை வெளியில் இன்றைக்கும் மிதக்கும் கண்ணனின் உண்மையான குரல் உங்கள் ஆத்மாவை வந்தடையட்டும். இந்த மூன்றாவது அத்யாயத்திலும் குலதர்மம் குறித்த பிரஸ்தாபனையே தொடர்கிறது.
//அப்படி குழப்பமமேற்பட்டால் (குலதர்மத்திலிங்கண்ணா) யார் அதனை அழித்தார்களோ அவர்களுக்கும் அவர்கள் குலத்தாருக்கும் நரகமே ஏற்படும் அவர்களுடைய மூதாதையர் சோறும், நீரும் இன்றி வீழ்ச்சி பெறுவார்கள்//
பாருங்கண்ணா குலதர்மம்ங்கறது அவிக வொக்காபிலரி. நம்ம வொக்காபிலரில இதுக்கு பேரு சாதீயம் (Castism) . சாதீயத்தை அழிச்சவுகளுக்கு நரகம் ஏற்படுமாம். அழிக்கலன்னா அந்த நரகம் இங்கனயே உருவாயிருமே. என்னைக்கோ .. செத்தபிறகு கிடைக்கப்போற நரகத்துக்கு பயந்து நிகழ்காலத்தை நரகமாக்கிக்க நாம என்ன கேணையனுங்களா? இந்த ப்ளாக் மெயில் இதோட முடிஞ்சுரலை.
//அவர்களுடைய மூதாதையர் சோறும், நீரும் இன்றி வீழ்ச்சி பெறுவார்கள்//ன்னும் சொல்லப்படுது. இங்கே மூதாதையர்னா யாரு? செத்துப்போனவுக. செத்துப்போனவுங்களுக்கு சோறு, நீர் எல்லாம் கொடுக்கறது யாரு? அவாள் . அதாவது பிராமனோத்தமர்கள். அவிக பொழப்பு கெட்டுடுமேன்னு தான் அர்ச்சுனன் வாக்காக கீதாசாரியரோடவாக்கு வருது.
கிருஷ்ணர் யுத்தம் பண்ணச்சொல்றார். யுத்தம் நடக்குது. யுத்தம் நடந்தா குலதர்மம் (சாதீயம்) அழிஞ்சு போயிரும்னு கிருஷ்ணருக்கு தெரியாதா? தெரியும். நிச்சயமா தெரியும்.அப்போ கிருஷ்ணரோட மனசுல குலதர்மம் நிலைக்கனுங்கற எண்ணம் இல்லையா? குல தர்மம் அழியனும்னுதான் யுத்தத்தை தூண்டினாரா? நம்ம ஊகம் கரெக்டா இருந்தா கண்ணன் ஒரு பெரிய ரேஷ்னலிஸ்டா இருக்கனும். குலதர்மம் ஒழியனும்னு திட்டமிட்டு " வேலை பார்த்திருக்கனும்"
குலதர்மம் அதாங்க சாதீயம் மட்டுமில்லே அரசு ஆதரவோட அல்லது பாராமுகத்தால தொடர்ர சமூக கொடுமைகள் ஒழியனும்னா அரசாங்கம் பலவீனமடையனும். யுத்தங்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும். இரண்டாம் உலகப்போரே நடக்காம இருந்திருந்தா பிரிட்டீஷ்காரனுக்கு இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கனுங்கற எண்ணமே வந்திருக்காது.
மத்தியில காங்கிரஸ் கட்சி பழைய காங்கிரஸ்,புதிய காங்கிரஸ்னு உடையறதுக்கு முன்னாடி ( பூரண மெஜாரிட்டியோட இருந்த காலத்துல ) இந்திராம்மாவுக்கு தாழ்த்தப்பட்டோர் மேல கருணை பிறக்கலை. எப்போ மூத்ததலைவர்கள் எல்லாம் அந்தம்மாவுக்கு எதிரா திரும்பினாங்களோ அப்பத்தான் அம்மாவுக்கு கருணை பொங்கிவந்தது.
இதுலருந்து என்ன தெரியுது சமூக கொடுமைகள் ஒழியனும்னா அரசாங்கங்கள் வலுவிழக்கனும். அரசுகள் வலுவிழக்க யுத்தங்களும் காரணமாகின்றன. சமூக கொடுமைகளை பாதுகாத்த, ஊக்குவித்த, கண்டுக்காத அரசுகள் பலவீனமடைஞ்சா மேற்படி சமூக கொடுமைகள் ஆட்டோமெட்டிக்கா ஒழிஞ்சு போயிரும். ஆக கிருஷ்ணர் ஒரு ரேஷ்னலிஸ்டாதான் இருந்திருக்கனும்.
(கீதோபதேசத்துக்கு பிந்தின நிகழ்வுகளை பார்க்கும் போது இந்த முடிவுக்குதான் வரவேண்டியிருக்கு. குல தர்மத்தை அழிக்கிற யுத்தம் நடந்தேறியது. இப்படிப்பட்ட சீர்திருத்தவாதியான கிருஷ்ணர் " யாகங்களால் மழை பெய்கிறது"ன்னு முட்டாள் தனமா சொல்லியிருப்பாரா?. இன்னைக்காச்சும் பொல்யூஷன் அதிகமாகிப்போய் மழை வருமா வராதாங்கற நிலை. அந்த காலத்துல மாசத்துக்கு மூணு மழை பெய்திருக்கும். இதுல என்ன மயித்துக்கு யாகம் பண்ணானுக? அடுத்தவன் உழைப்புல ,பிராமணோத்தமர்கள் சோமபானத்தை ஃபுல்லா ஏத்திக்கிட்டு ஆடு,மாடு,குதிரைய அறுத்துப்போட்டு பண்ற யாகத்துல மிஞ்சினதை மட்டும் திங்கறவன் உத்தமன்னு கிருஷ்ணர் சொல்வாரா? இதையெல்லாம் வச்சுத்தான் இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதை கண்ணன் சொன்னதில்லை, யாரோ ஐயரு சொன்னதுன்னு சொல்றேன் )
//வருணகுழப்பத்திற்கு வித்தூன்றும் குடிகேடர்கள் செய்கையால் சாதி தருமங்கள் அழிகின்றன. குல தர்மங்கள் கூண்டோடு போகின்றன//
போகட்டுமே. குலதர்மத்தை பின்பற்றி சூத்திரன் கண்ட சுகம் என்ன? இவன் கல் சுமந்து, மண் சுமந்து கட்டின கோவிலுக்குள்ள நுழையற யோகமில்லாம, இவன் பாடுபட்டு விளைவிச்ச ஆடு,மாடை, தானியத்தை யாகத்துக்குன்னு தத்தம் பண்ணிட்டு மிச்சம் மீதி பொறுக்கி தின்னதுதானே அவன் கண்ட சுகம். குலதர்மங்கள்னா என்னமோ ஏதோனு நினைச்சுராதிங்க.. செருப்பு தைக்கிறவன் பிள்ளை செருப்பு தைக்கனும். கக்கூஸ் கழுவறவன் பிள்ளை கக்கூஸ் கழுவனும் . இதான் குலதர்மம்.
சாதீயம் காரணமா ஒரு லிமிட்டட் குழுவுக்குள்ள பெண்ணெடுத்தல், பெண் கொடுத்தல் காரணமாதான் இந்திய மனிதவளமே வறண்டு போச்சு. அதனாலதான் அன்னியர்கள் நம்ம நாட்டை நூற்றாண்டு காலம் ஆள முடிஞ்சது. இன்னைக்கு பாருங்க கலப்பு திருமண்ங்கள் பரவலா நடக்குது. ஐ.டி துறைல தூள் கிளப்புறாய்ங்க. ஐக்யூ அதிகமாகியிருக்கு. அரசாங்கம் ஒரே சாதிக்குள்ள திருமணங்களை தடை செய்தா ஜஸ்ட் ஒரு பத்து,பதினைஞ்சு வருஷத்துல இந்தியாவோட தலையெழுத்தே மாறியிருக்கும்.
_______
//கிருஷ்ணன்:
ஆரியருக்கு இது அடுக்காது ( பக்கம்: 26)//
நான் வெறுமனே பரபரப்புக்காக எழுதற ஆளாயிருந்தாலோ, காழ்ப்புணர்ச்சில எழுதற ஆளாயிருந்தாலோ "ஆரியருக்கு" ங்கற ஒரு வார்த்தைய வச்சு கிழி கிழின்னு கிழிக்கலாம். ஆனால் நான் நடு நிலை தவறாம எழுதிக்கிட்டிருக்கேங்கறதுக்கு இது ஒரு ஆதாரம்.
இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைய சொன்னது கண்ணனில்லே. கண்ணன் சொல்லியிருந்தா இந்த வார்த்தைய உபயோகிச்சிருக்கமாட்டாரு.
ஆரியர் திராவிடர் ஆராய்ச்சியெல்லாம் சமீபத்துல வந்த பஞ்சாயத்து. ஆதியில ஆர்யாங்கற வார்த்தைக்கு மரியாதைக்குரியவர்னு குத்துமதிப்பா ஒரு அர்த்தம் உண்டு. அவ்ளதான்.
இன்னைக்கும் சிலர் தெலுங்குல கடிதம் எழுதும்போது ஐயாங்கறதுக்கு பதில் ஆர்யா னு துவங்குறாய்ங்க.
________
//இறந்தவர்கள் வாழ்பவர்களாகிய இருவருக்குமே அறிஞர்கள் துயரப்படமாட்டார்கள்//
அறிஞன் என்பவன் யார்? தான் இந்த படைப்பின் ஃபோன்சாய்க் பிரதி. இந்த படைப்புல எல்லாமே இன்டர்லிங்க் ஆகியிருக்கு. எங்கனயோ வெள்ளம் வந்தாலும் எனக்குள்ளவும் ஏதோ நனையுதுனு உணர்ரவன் தான் , நினைக்கிறவன் தான் ,நினைச்சு செயல்படறவன் தான் அறிஞன். ஆனால் கிருஷ்ணர் எவன் எக்கேடு கெட்டுப்போனா எனக்கென்னனு நினைக்கிறவந்தான் அறிஞன்ங்கறார்.
அரசாங்க ஆதரவோட தொடர்ர குலதர்மத்தாலதான் (சாதீய வாதம் ) பெருவாரியான மக்கள் சுரண்டலுக்கு பலியாகிறாங்க. யுத்தம் வந்து அரசாங்கம் பலவீனப்பட்டா குலதர்மம் அழியும் சுரண்டல் ஒழியும், பெருவாரியான மக்கள் சுதந்திர வாழ்க்கைய வாழமுடியும்னு ஸ்கெச் பண்ணி யுத்தத்தை தூண்டி விட்ட கிருஷ்ணர் இந்த மாதிரி ஒரு பொறுப்பில்லாத வாக்கியத்தை சொல்லியிருப்பாரா? ரோசனை பண்ணுங்க
_________
//அழிவற்ற பிறப்பற்ற என்றும் உள்ள ஒரு பொருளை உணர்ந்தவன் யாரை கொல்கிறான் அ அவனை எவன் கொல்கிறான்//
இது அந்த இனத்துக்கே உரிய சாலாக்கான வாதம். மேம்போக்கா பார்த்தா ஆஹா கரீக்டா சொல்றார்பானு தான் தோணும்.
தாளி மனுஷனுக்கு உடல், மனசு,புத்தின்னு மூணிருக்கு. ஆத்மானு ஒன்னிருக்கிறதா சொல்றாய்ங்க. சரி இருந்துட்டு போவட்டும்.
உலக வாழ்க்கைய பொருத்தவரை அன்னைக்காகட்டும் இன்னைக்காகட்டும் அரசு, நீதிமன்றம் எல்லாமே நீங்க ஸ்தூலமா/உடலளவுல என்ன செய்திங்கங்கறத வச்சுத்தான் அவார்டோ, தண்டனையோ கொடுக்குது. உங்களுக்கு நல்ல மனசிருந்தா போதாது அந்த மனசு சொல்றத செயலால காட்டனும். புத்தி இருந்தா போதாது அதை டாக்குமெண்டாவோ, ப்ளாக் போஸ்டாவோ ஆடியோ ஃபைலாவோ , வீடியோ ஃபைலாவோ வைக்கனும். அப்பத்தான் உலகம் அதை பரிசீலிக்கும்.
இவிக சொல்றபடி அழியாத ஒன்னு இருக்குன்னே வச்சுக்குவம் . அது என்னன்னு தெரிஞ்சுக்கிட்டம்னும் வச்சுக்குவம் இதெல்லாம் உன் அந்தரங்கத்துல நடக்கிற காரியம்.
//யாரை கொல்கிறான் அ அவனை எவன் கொல்கிறான்//ன்னிட்டு நீ பாட்டுக்கு போட்டு தள்ளிக்கிட்டே போனா என்ன ஆகும்? மனிதன் மிருகத்துக்கும் தேவனுக்கும் இடைப்பட்ட நிலைல இருக்கான். மதம் மனிதனை தேவனாக்கனும். அட்லீஸ்ட் அவனுக்குள்ளே மனிதாபிமானத்தை வளர்க்கனும்.
உண்மையான மதம் மனிதன் தன்னையே டிட்டாச் டா தேர்ட் பார்ட்டியா பாவிச்சு யோசிக்கிற பக்குவத்தை தரனும். இந்த இயற்கைல தான் தனிப்பட்டவனில்லே. தான் இந்த ஒட்டு மொத்த இயற்கையோட பிணைக்கப்பட்டிருக்கானு ஃபீல் பண்ண வைக்கனும். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்னாரே வள்ளலார் அவரோடதுதான் உண்மையான மதம். அகிம்சைய போதிக்கிறதெதுவோ அதுதான் உண்மையான மதம். அதை விட்டுட்டு நமக்குள்ள அழியாதது எதுன்னு தெரிஞ்சிக்கிடறதான் கண்டவனையும் போட்டுத்தள்ளிர்ரதான்.
மனிதர்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற இரண்டே கோரிக்கைகள் கொல்வது அ கொல்லப்படுவதுதானாம். இந்த அடிப்படை கோரிக்கைய தான் கீதாசாரியர் வெளிப்படுத்தறார்.
ஒரு செல் அங்கஜீவியான அமீபாலருந்து உருவான உயிர்கள் பல்லுயிராய் பெருக தனிமை வாட்ட மீண்டும் ஒன்னு சேர துடிக்கிற துடிப்புதான் மேற்படி இச்சைகளா வெளிப்படுதுங்கறது என் சித்தாந்தம்.
எல்லா உயிர்களோடவும் பின்னி பிணைக்கப்பட்டிருப்பதை அகந்தை காரணமாய் உணரமுடியாது ஒன்னு சேர துடிப்பானேன் ? கொல்வானேன்? கொல்லப்படுவானேன்? அதுக்கு ஆல்ட்டர் நேட்டிவா செக்ஸ், வாரிசு பிரச்சினையாலயும், செக்ஸுல இவன் வீக்குங்கறதாலயும் அதுக்கு ஆல்ட்டர் நேட்டிவா பணத்தை தேர்வு செய்வானேன். பணம் பணம்னு அலைவானேன்னு பணம் பற்றிய மர்மங்கள் டிவிடில சுந்தர தெலுங்குல விஸ்தாரமா சொல்லியிருக்கேன்.
இதை பரிசீலிச்சு அனுபவபூர்வமா இது கரெக்டுன்னு ஒருத்தன் புரிஞ்சிக்கிட்டா அவனால ஈ எறும்புக்கு கூட தீமை செய்ய முடியாது.
ஆனால் பகவான் சொல்ற கீதை " இவன் இவனுக்குள்ள அழியாத ஏதோ ஒரு சமாசாரத்தை கண்டுகிட்டு ஊர்ல இருக்கிறவனையெல்லாம் கொல்லலாம்னு லைசென்ஸ் கொடுக்குது. இது ஒரு புனித நூலா? இந்து வேத,உபனிஷத், புராண,இதிஹாசங்களுக்கு பிரமாணமா?
தெலுங்குக்கு தாய்மொழி சமஸ்கிருதம் . தெலுங்குல மதம் ( மத்தம்னு உச்சரிக்கனும். மதம்னா ஆனைக்கு பிடிக்கிற மதங்கற அர்த்தம் வந்துரும்) என்ற வார்த்தைய கருத்துங்கற அர்த்தத்துல உபயோகிக்கிற வழக்கம் இருக்கு. அதுக்கு ஒரு விகுதி சேர்த்து அபிமத்தம்னுவாங்க. ஆகக்கூடி மதங்கறது படைப்பு, படைப்பாளி, மனிதர்கள், உலக வாழ்வுக்கு முன்,பின்னான வாழ்வு இத்யாதிபத்தி கருத்தை சொல்லனும். அதைவிட்டுட்டு கருத்து சொல்லவே ஆளில்லாத மாதிரி போட்டுத்தள்ள லைசென்ஸ் கொடுக்கிறதுதான் மதம்னா அந்த மதத்தை தடை பண்ணுங்கய்யா, அப்பத்தான் உண்மையான மதம் பிறக்கும்.
சமஸ்கிருத இலக்கியங்களை டாஸ்மாக் சரக்கை உறிஞ்சி குடிச்ச மாதிரி குடிச்சிட்டதா அலம்பல் பண்ற பார்ட்டிகள்,ஆகா ஓகோ என்று அலட்டிக்கொள்ளும் பார்ட்டிகள் அனேகர். ஆனால் நானறிந்த வரை கற்பனை வறட்சி நிறைந்த ஒரே இலக்கியம் சமஸ்கிருத இலக்கியம்தான். கண்ணை வர்ணிக்க ஒரே வார்த்தை அது பிள்ளையார் கண்ணா இருந்தாலும் அதே வார்த்தை , ஆஞ்சனேயர் கண்ணுக்கும் அதே ,லட்சுமிகண்ணுக்கும் அதுவே.
கீழே வர்ர உவமைய பாருங்க..
//கடலுக்கு நடுவே கிணறு எதற்கு?//
இது கண்ணதாசன் கோர்த்துவிட்டதா? இல்லே பகவானே (?) சொன்னதா கன்ஃபார்மா தெரியலை. டோண்டு மாதிரி ஆட்கள் க்ளேரிஃபை பண்ணலாம். கடல்ல இருக்கிறது உப்பு தண்ணி.குடிக்க தகுதியில்லாத தண்ணி . கடல் நடுவுல ஒரு கிணறு இருந்தா அது வரபிரசாதம் மாதிரிதானே . இந்த சின்ன லாஜிக் கூட தெரியலை. என்னத்த பகவான்?
அடுத்து வர்ர உவமைய பாருங்க
//" எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு குட்டை எதற்கு?" //
அட டுபுக்குங்களே எங்கும் நீர் நிரம்பியிருக்கிறதா வாக்கியத்தின் முதல் பாதி சொல்லுது. அடுத்த பாதிலயே குட்டையிருக்கிறதா தகவல். குட்டை எப்போ ஏற்படும்
ஆறு காஞ்சிப்போனாதான் குட்டை ஏற்படும். எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் குட்டை ஏற்படுமா? முதல் பாதில லாஜிக் இல்லாத உவமை, இரண்டாவது பாதில பாசிபிலிட்டியே இல்லாத ஒரு மேட்டரை உவமையாக்கி லொள்ளு பண்றாரு பகவான்.
இதெல்லாம் எதுக்கு உவமையா வருது தெரியுமா?
//அப்படியே அறிவுள்ள பிராமணனுக்கு வேதங்களும்//
இதை ஒரு கோணத்துல பார்த்தா ரொம்ப லிபரலா, ரெவல்யூஷ்னரியா தோணும். அவாளோட பார்வைல வேதம் ரெம்ப (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லிங்கண்ணா) இம்பார்டெண்ட். அதை அப்யசிக்கிறதும், ஓதறதும்தான் அவாளுக்கு அவாள் அலாட் பண்ணிக்கிட்ட நோகாத வேலை. ஆனால் அதுல கூட ரிலாக்சேஷன் பாருங்க. அறிவுள்ள பிராமணனுக்கு வேதங்கள் தேவையில்லையாம். அப்போ அறிவில்லாத பிராமணர்கள் தான் வேதங்களை படிக்கிறாளா?
பிராமணன் என்ற வார்த்தைய ரெண்டு விதமா புரிஞ்சிக்கலாம். ஒன்னு பிராமண பெற்றோருக்கு பிறந்தவன். இரண்டு பிரம்மத்தை அறிந்தவன். பிரம்மத்தை அறிஞ்சவனுக்கு வேதம் தேவையில்லாத விஷயம்தான் இல்லேங்கலை.
வெறுமனே பிறப்பால பிராமணனா இருக்கிற பார்ட்டிக்கு கொஞ்சமா அறிவு இருந்தா வேதம் தேவையில்லையா?
இந்த வேதங்களை பத்தி சின்ன சேதி
ஆரம்பத்துல வேதத்தின் பொருள் தெரியுமாடா உங்களுக்குனு அலம்பல் பண்ணாய்ங்க. நம்மாளுங்க தாளி என்னதான் இருக்கு அதுலன்னு நோண்டி மொளாகாரிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க. இதான் பொருள்னு போட்டு உடைக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.
உடனே "உட் பொருள் தெரியுமா" னு பூச்சி காட்னாங்க. நம்மாளுங்க அதுலயும் பூந்து வெளிய வந்தாய்ங்க. உடனே வேதத்துல வார்த்தைக்கோ, அதன் பொருளுக்கோ உட் பொருளுக்கோ எந்த முக்கியத்துவமும் இல்லே. அதை சொல்ற ரிதம், மாடுலேஷன் தான் முக்கியம்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாய்ங்க.
இன்னைக்கு வேதம்ங்கற ப்ராடக்டை வச்சு பல ஆயிரம் லட்சம் கோடி பணம் அரசு நிதி உட்பட புரளுது. அது யார் பணமா இருந்தாலும் அந்த செலவு ப்ரொடக்டிவ்தானா? உபயோகமானதுதானான்னு தெரிஞ்சிக்கிறதுல தப்பே இல்லே.
தி.தி.தேவஸ்தானம் கூட வேதபாடசாலை நடத்துது. வாரிசில்லாம சாகிற பசையான பிராமணாள் சாகறப்ப வேதபாடசாலை நடத்தறதைதான் தங்கள் விருப்பமா வில் எழுதி வச்சு சாகிறாய்ங்க.
இத்தனைக்கும் இத்தனை செலவழிப்புக்குண்டான தகுதி,ஒர்த் வேதத்துக்கு இருக்கா இல்லியானு பரீட்சிக்க வேணாமா?
இன்னைக்கும் மகாமுனிவர்னு பிராமண மீடியா புகழ்ந்து தள்ற சந்திர சேகரானந்தாவுக்கு கூட காட் ராக்ட் ஆப்பரேஷன் பண்ண வேண்டி வந்தது, சோடா புட்டி கண்ணாடி அணிஞ்சிருந்தாரு.
சூரிய நமஸ்காரம் பண்ணாலே கண்பார்வைக்கு கியாரண்டி கொடுக்கிற மதத்துல வாழ் நாள் எல்லாம் காயத்ரி ஜபிச்ச சந்திர சேகரானந்தாவுக்கு கண்ணு ஏன் டப்ஸாச்சு?
அவரோட அடுத்த வாரிசு ஜெயேந்திர சரஸ்வதி மருந்து அலமாரியோட வாழ்ந்துக்கிட்டிருந்த விஷயம் சங்கர் ராமன் கொலை வழக்குல அவரு அரெஸ்ட் ஆனபிறகுதான் தெரிய வந்தது.
அவாள் எல்லாம் வேதத்தை சரியா ஓதலியா? பொருளை/உட் பொருளை அறிஞ்சுக்கலியா? அதுக்குரிய ரிதத்துல மாடுலேஷன்ல உச்சரிக்கலியா அவிகளுக்கு ஏன் இந்த நிலை வந்தது?
ஜெயலலிதா பண்ணாத யாகமில்லே, ரஜினியும் யாகம் பண்றாரு, சரத்,விஜய்காந்த் ,திராவிட பராம்பரியத்தில் வாழும் கடைசி அத்யாயமான கலைஞர் குடும்பத்தாரும் யாகம் பண்றாய்ங்க. யாகம் வேத கோஷமில்லாமயே நடக்குதா? ஏன் புட்டுக்குது? யாகத்துல,வேதத்துல விஷயம் இருந்திருந்தா அவிக வாழ் நாள் முடியற வரை ஜெ தான் முதல்வரா இருந்திருக்கனும். அத்தனை யாகம் பண்ண ஜெவோட கட்சி பெண்ணகரத்துல ஏன் டெப்பாசிட் இழக்கனும்?
நான் சொல்றது ஒன்னேதான். மனித குல நலம், மேம்பாடு முக்கியம். அதுக்கு நீ யாகமாச்சும் பண்ணு, வேதமாச்சும் ஓது. ஆனால் அதுல ஒர்த் இருக்கா இல்லியானு நிரூபிச்சுட்டு பண்ணு. அதை விட்டுட்டு "ஃபிலிம்"காட்டி அரசு பணத்தை ,அப்பாவிங்க பணத்தை கரியாக்கற உரிமை உங்களுக்கில்லே.
சீக்ரெட்:
கிருஷ்ணர் இந்த வாக்கியத்தை சொல்லியிருப்பாருனு தான் தோணுது.ஏன்னா அறிவுள்ள பிராமணனுக்கு வேதம் தேவையில்லனு நெத்தியடியா சொல்லியிருக்காரு.
உவமைகள் அய்யரோடதா இருந்தாலும் கான்செப்ட் கிருஷ்ணாவோடதாதான் இருந்திருக்கனும். ஆனால்பிராமணன் என்ற வார்த்தைக்கு பிரம்மத்தை (இயற்கையை) அறிந்தவன் என்ற பொருளை ஏத்துக்கிடறதா இருந்தா இந்த ஸ்டேட் மெண்டுக்கு ஓ போட நான் ரெடி
(தொடரும்)
ஆத்தாடி, எத்தனை நீள பதிவு, எத்தன நாள் எழுதினீங்க சாமி, இந்தப்பிரச்சின இப்பத்திக்கி தீராதுங்க. எழுதிட்டே இருக்கலாம், அவ்ளோதான்.
ReplyDeleteanna,
ReplyDeleteunga arivaiyum,energy-iyum aakkapoorvamaga selavazhithal nandraga irukkum. pazhasai pesi enna use? positive-aaga enna seyya vendum endbhadhai sollalame!