அண்ணே வணக்கம்ணே,
நேத்து பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி தொடருக்கு லின்க் கொடுத்து " மதக்கலவர காண்ட் ராக்ட் @ 60 லட்சம்னு ஒரு பதிவை போட்டிருந்தேன். இன்னொரு பார்ட்டி இதே மேட்டரை டிவி பார்த்துட்டு அட்வான்ஸா போட்டதால நம்ம பதிவு கொஞ்சமா பின் தங்கிட்டமாதிரி இருக்கு. Any how.............தொடரை படிக்கிற சனம் படிச்சிருப்பாய்ங்கனு ஒரு நம்பிக்கை.. இந்த தொடரை ஏன் தொடர்ந்துக்கிட்டிருக்கேங்கறதுக்கான காரணங்களை தனிப் பதிவாவே போட்டிருக்கன். அதை படிக்க இங்கே அழுத்துங்க இப்ப தொடரை படிங்கண்ணா
போன அத்யாயத்துல யாகம், வேள்வி இத்யாதியோட குறுக்கு வெட்டு தோற்றத்தை படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சோம். யாகம்/வேள்வி செய்வதால் மழை வராதுங்கற சங்கதி நாலாங்கிளாஸ் படிக்கிற கால் டிக்கட்டுக்கு கூட தெரிஞ்சிருக்கும்போது கண்ணன் எப்படி// வேள்வி செய்வதால் மழை வருகிறது.//என்று சொல்லியிருப்பார். ஆக இப்ப செலாவாணில இருக்கிறகீதைய சொன்னது கண்ணனில்லே ஆரோ ஒரு பஞ்ச கச்சம்னு புரிஞ்சிருக்கும்னும் நினைக்கிறேன்.
மேற்படி ஸ்டேட்மெண்ட்ல இந்த கடைசி பார்ட்டை பாருங்க
//வேள்வி என்பது செய்கையில் இருந்து பிறப்பது.// வேள்விக்கு நெருப்புல அள்ளிக்கொட்ட தானியம் வேணும், வெட்டிப்போட ஆடு மாடு வேணும். இதெல்லாம் சொம்மா திண்ணைல உட்கார்ந்து விசிறிகாம்பால முதுகை சொறிஞ்சிகிட்டிருந்தா கிடைக்குமா? கிடைக்காது. அதனால தான் //வேள்வி என்பது செய்கையில் இருந்து பிறப்பது.//ங்கறார் நூலாசிரியர். செய்கைன்னா நம்ம மொழில உழைப்பு, கீதை மொழில கர்மயோகம்.
இருக்கிற சூத்திரன் எல்லாம் உழுது, விதைச்சு, நீர் பாய்ச்சி, களையெடுத்து ,அறுத்து களத்து மேட்ல கொண்டு சேர்த்தாதானே இவிக நெருப்புல அள்ளிப்போட முடியும்.
இன்னைக்கு ஒரு மொபெட்டோட சைலன்சர்லருந்து வெளி வர்ர புகைக்கே லிமிட்டேஷன் வச்சிருக்காய்ங்க. ஆனால் இன்னைக்கும் இந்த பாதகங்க பண்ற யாகத்துக்கும், அதுலருந்து வெளியேர்ர புகைக்கும் கட்டுப்பாடில்லை. எங்கன போயி முட்டிக்கிறது.
அடுத்த பத்திய பாருங்க. இதுவும் லார்ட் கிருஷ்ணாவோட டயலாக் தான்.
//தொழில் பற்றிய இந்த கரும யோகத்தை நான் முதலில் சூரியனுக்கு சொன்னேன். சூரியன் மனுவுக்கு சொன்னான். மனு இஷ்வாகு மன்னருக்கு கூறினான்//
நான் இந்த தொடரோட ஆரம்பத்துல ஒரு மேட்டர் சொன்னேன். ஒரு காலகட்டத்துக்கு முந்திய எந்த நூலுமே இப்படித்தான் ஆரம்பமாகும்னு. போனியாகாத டிவி சேனல்ஸ் மறு ஒளிபரப்புலயே காலத்தை கழிக்கிற மாதிரி கிருஷ்ணன் இடம்,பொருள், ஏவல் எதையும் யோசிக்காம யுத்தரங்கத்துல ப்ரைம் டைம்ல போனியாகாத கிழவாடியோட பேட்டிய ஒளிபரப்பின மாதிரி இந்த பழைய பஞ்சாங்கத்தை விவரிக்க ஆரம்பிப்பாரா?
இவர் சூரியனுக்கு சொன்னதை கூட மன்னிக்கலாம் . மனுவுக்கு சொல்றாராம். மனு யாருனு தெரியுமில்லியா? நம்ம அரசியல் சட்டத்தை ட்ராஃப்ட் பண்ண பி.ஆர்.அம்பேத்கர் மாதிரி வர்ணாசிரம தர்மத்தை டாக்குமென்டைசேசன் பண்ண பார்ட்டி இவருதான். இது எங்கத்தி நியாயம்யா?
ஒரு வேளை இந்த தவறை திருத்திக்கத்தான் கண்ணன் கீதைய சொல்லி அர்ச்சுனனை கொம்பு சீவி விட்டு யுத்தத்தை நடக்க வச்சு குலதர்மத்தை கொன்னு போட்டாரோ என்னவோ?
அடுத்த பத்திய பாருங்க..
//அவரவர் இயற்கைக்கும் குணத்துக்கும் செயலுக்கும் தக்கபடி நான்கு வர்ணங்களையும் நான் தான் உண்டாக்கினேன்//
இவிக சொல்ற வர்ணம் எப்படி உருவாச்சுனு புராணங்கள்ள இருக்கிற தகவல் என்னன்னா பிரம்மனோட தலை தோள்கள், வயிறு, அ பாதத்திலிருந்து மனிதர்கள் பிறந்து வந்தார்களாம். தலைலருந்து வந்தவன் பிராமணன். தோள் -க்ஷத்திரிய குணம், வயிறு - வைசிய குணம் , பாதம் - சூத்திர குணம்.
பாப்பா எப்படி பிறக்குதுன்னு பாப்பாவுக்கு கூட தெரியற காலம் இது. ஆனால் கோகுலத்துல கண்ட பாப்பாக்களோட தாப்பா போட்ட கண்ணனுக்கு தெரியாதா பாப்பா எப்படி பிறக்குதுன்னு. பின்னே ஏன் வர்ணாசிரம தர்மத்தை தூக்கி பிடிக்கிறதோட நான் தான் உண்டாக்கினேன்னு ஏன் சொல்றாரு? பிரம்மனோட பல அவயங்கள்ளருந்துதான் நாலு வர்ணத்தார் உருவானாங்கனு புராணங்கள்ள சொல்லப்ப்ட்டிருப்பது அவருக்கு தெரியாதா?
மனிதர்கள் உருவாவது ஒரே ஒரு அங்கத்துலருந்துதான்னு படு கிட்டனான கிட்ணபரமாத்மாவுக்கு தெரியாதா?
வர்ணத்தை உருவாக்கினது சனார்த்தனனில்லே. சனம். குறிப்பா சொன்னா பிராமண இனம். இந்த இனம் எப்படி உருவாச்சுன்னு கூட ஒரு பதிவுல சொல்லியிருக்கேன்.
மனிதன் அடர் காடுகளில், குகைகளில் குழுக்களா வாழ்ந்தப்போ ஒரு சில சூட்சும புத்தி படைச்ச நபர்கள் மழை,வெயில்,புயல்,வெள்ளம் மாதிரி இயற்கை உற்பாதங்களை முன் கூட்டி கணிச்சி தலைவனுக்கு சொல்லியிருக்கனும். ஆரம்பத்துல நாலு பேரை மாதிரி எல்லா வேலையும் பார்த்துக்கிட்டே இந்த வேலையும் செய்திருப்பாய்ங்க. போக போக ரொட்டீன்லருந்து குழுத்தலைவன் இவிகளுக்கு விதிவிலக்கு கொடுத்திருக்கலாம் அல்லது இவிக டிமாண்ட் பண்ணி விதிவிலக்கு பெற்றிருக்கலாம். ஒரு இந்தியாவுலயே இல்லை எந்த நாட்டு சரித்திரத்தை பார்த்தாலும் பிராமண இனத்தை போன்ற ஒரு இனம் நிச்சயமா இருக்கும். இந்த ஆலோசகர் பதவி தகுதியை பொருத்தல்லாது வாரிசுரிமையா மாறியிருக்கலாம்.
இவிக குழுத்தலைவனோட க்ளோசா இருந்துக்கிட்டு மத்த பயலெல்லா ஒத்துமையா இருந்தா நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற விதிவிலக்குகளை கேள்வி கேட்க ஆரம்பிச்சுருவான்னு இப்படி ஒரு பிரிவினைய ஏற்படுத்தியிருக்கலாம். ஜீன் கலப்பு, இனக்கலப்பு ஏற்பட்டுராம இருக்க கலப்பு மணம் தடை செய்யப்பட்டிருக்கலாம். இதனால கார்பன் காப்பி மாதிரி, ஜிராக்ஸ் காப்பி மாதிரி இனப்பெருக்கம் நடந்திருக்கலாம்.
ஆக வர்ணங்களை (அதாவது மனிதர்களின் இயல்பை, குணத்தை ) உருவாக்குவது கண்ணனோ, கடலை பர்பியோ கிடையாது. விந்து ..விந்துவில் உள்ள ஜீன்கள். ஒரு செல் அங்கஜீவில இருந்து புதுபுது உயிர்கள் உருவாகிட்டே போனாலும் ஒரே மனிதனின் ஜீனில் குரங்கு,பாம்பு, நாய், நரிகளோட குணங்கள், லட்சணங்கள் கூட இருக்க வாய்ப்பிருக்கு.
டார்வின் தன்னோட எவால்யூஷன் தியரில மனிதனோட மண்டைக்குள்ள ஒருவனுக்கு ஒருத்திங்கற கான்செப்ட் ஒரு வித பாம்புகளில் இருந்து வந்திருக்கலாங்கறாராம்.
(அந்த இனத்துல ஆண் பாம்பு உடலுறவுக்கு அப்புறம் பெண் பாம்போட உடலுறவு துளைய ஒருவித லிக்விடால சீல் பண்ணிருமாம். )
டார்வின் தன்னோட எவல்யூஷன் தியரியை என்னைக்கோ எழுதி முடிச்சுட்டாரு. அதை உறுதிப்படுத்தற மாதிரி இன்னைக்கு பேப்பர் நியூஸ் .
ஒரு தம்பதி. மனைவி பாவம் "ஆத்தா" வீட்டுக்கு போய் வரேன்னிருக்கா. அதுக்கு இந்த ஆம்பள நாய் என்ன பண்ணுச்சி தெரியுமா? கோணி ஊசில இரும்பு கம்பியை கோர்த்துக்கிட்டு அவளோட ....................ஐ தைச்சிருக்கு. இப்போ உயிருக்கு ஆபத்தான நிலைல அந்த பெண் ஹாஸ்பிட்டல்ல அட்மிட்.
அதே மாதிரி சதிங்கறது சிம்பன்சிலருந்து வந்திருக்கலாங்கறார். மேற்படி குரங்கு கும்பல் தலைவனை ஒழிச்சு கட்ட மத்த குரங்குகள் ஒன்னு சேர்ந்து அது தூங்கும்போது பெரிய கல்லா தூக்கி போட்டு கொன்னுருமாம்)
ஆக வர்ணங்கள் 4 அல்ல. மனித இனத்தின் குணங்கள் கீதைல சொல்ற மாதிரி 3 இல்லே. இதையெல்லாம் உருவாக்கினது கண்ணன் இல்லே. நான் கூட மனிதர்களை இரண்டு வகையா பிரிச்சு (சூரிய,சந்திர மனிதர்கள்) ஒரு பதிவு போட்டேன் இல்லேங்கலை. என் பதிவு ஒரு அவதானிப்பு மட்டுமே.
கீதைல சொல்ற வர்ணம், அவிகளுக்குண்டான குணங்கள் கூட ஒரு அவதானிப்பா இருக்கலாம். ஆனால் வர்ணத்தையோ,குணத்தையோ ஒரு கண்ணனால உருவாக்கிரமுடியாது. இந்த பிரிவினை (ஸ்தூல பிரிவினையில்லிங்கோ.. குண நலன் கள்) பல லட்சக்கணக்கான வருஷங்களில் லாங் ரன்னில்,லாங் ப்ராசஸில் ஏற்பட்டிருக்கலாம்.
இந்த குண வேறுபாடுகள் உண்மையாகவே இருந்தாலும் இந்த வர்ணம்,குணம் இத்யாதியெல்லாம் வெறுமனே பிறப்பின் மூலம் ஏற்பட வாய்ப்பே கிடையாது.
ஒரே தகப்பனுக்கு பிராமண, க்ஷத்திரிய,வைசிய, சூத்திர குணங்கள் கொண்ட 4 பிள்ளைகள் பிறக்கலாம். இதை நிறைய குடும்பங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் கண்ணன் வர்ணத்தை நான் தான் உருவாக்கினேன்னு சொல்றாராம். அப்படின்னு ஐயரு சொல்றாரு.
கீதாசிரியர் கீதைல கண்ணனை பல கோணங்கள்ளருந்து காட்டறதால தான் இந்த நக்கலுக்கு வழி ஏற்பட்டது.
கீதைய சொல்ற கண்ணன் சில சந்தர்ப்பத்துல ஒரு இன்டிவியூஜுவலா , துவாரகையோட மன்னனா, அர்ச்சுனனோட ஃப்ரெண்டா ஃபோக்கஸ் ஆவறார்
சில சமயம் இயற்கையா ஃபோக்கஸ் ஆவறார்.
ஒரு கண்ணன் மட்டுமில்லே ஒவ்வொரு மனிதனும் இந்த இயற்கையின் மீனியேச்சர்தான். ஜாதக சக்கரத்தை நேரா நிமிர்த்தி நிக்க வச்சா அதுதான் மனிதனோட உடல். ராசிச்சக்கரத்துல முத ராசியான மேஷம் தலையையும், கடைசி ராசியான மீனம் பாதத்தையும் காட்டுது. இடையில் உள்ள 10 ராசிகள் உடலின் இதர பாகங்களை வரிசை கிரமத்துல காட்டுது. பால் வீதி, நட்சத்திர மண்டலம், கிரக சஞ்சாரம்லாம் நம்ம பாடிலயும் நடக்குது.
ஒரே ஒரு வித்யாசம் என்னடான்னா இயற்கை அடையாறு ஆலமரம். மனிதன் ஃபோன்சாய்க் ஆலமரம். தட்ஸால்.
இதுவரை கண்ணனை தனி மனிதனா காட்டிக்கிட்டு வந்த கீதாசிரியர் படக்குனு இயற்கையின் பிரதி ரூபமா காட்டறார்.. இதை அடுத்து வர்ர வரில இருந்து இதை தெரிஞ்சுக்கலாம்.
//செயலற்றவனும், அறிவற்றவனுமாகிய நான் தான் நான்கு வர்ணங்களுக்கும் கர்த்தா என்பதை அறிந்துகொள்.//
இங்கே செயலற்றது, அறிவற்றதுன்னு கீதாசிரியர் சொல்றது இயற்கையைத்தான். நான்கு வர்ணங்களுக்கும் கர்த்தா இயற்கை தான். (ஜெனட்டிங்க் இஞ்சினீரிங்க்)
இதை இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்றேன். அப்புறம் இருக்குது ஆப்பு..
//செயலற்றவனும், அறிவற்றவனுமாகிய நான் தான் நான்கு வர்ணங்களுக்கும் கர்த்தா என்பதை அறிந்துகொள்.//
இந்த வாக்கியத்துல வர்ர வார்த்தைகளுக்கு நேரடி அர்த்தம் எடுத்தா ரொம்ப அசிங்கமா இருக்கும். நேரடி அர்த்தத்தை சொல்லனும்னா
செயலற்றவனும் - வேலை வெட்டியில்லாதவனும்
அறிவற்றவனுமாகிய - முட்டாளுமான
ன்னு தான் சொல்லனும். ஆனால் இங்கே தான் நிறுத்தி நிதானமா ரோசிக்க வேண்டியிருக்கு.
கண்ணன் இங்கே படக்குனு தன்னை காலபுருஷனா, அதாவது ஒட்டு மொத்த இயற்கைக்கு மனித உருவா ஃபோக்கஸ் பண்றாரு.
இயற்கைக்கு செயல் இருக்காது. செயல்னா என்ன ? Action ! ஒரு காரியம். ஒரு செயல்பாடு. இதுல ரெண்டு வகை இருக்கு. ஒன்னு Action அடுத்தது ரியாக்சன். Action என்பது நோக்கத்துடன் கூடியது. இயற்கைக்கு நோக்கம் கிடையாது. ஸோ செயலும் இருக்காது. இயற்கை வந்து எப்பவுமே ரியாக்ட் தான் பண்ணும். நோக்கம் ஏற்படனும்னா அறிவு இருக்கனும்.அறிவுங்கறது என்ன ? தன்னை தான் இந்த இயற்கைல இருந்து வேறா உணர்ரது. இயற்கையோட பின்னி பிணைஞ்சிருக்கிற எந்த ஜீவராசிக்குமே அறிவுங்கறது கிடையாது. ஸோ நோக்கத்துடனான செயலும் இருக்காது. எல்லாமே ரிஃப்ளெக்ஸ் தான்.
ஜேம்ஸ் வாட் ஸ்டீம் இஞ்சின் கண்டுபிடிச்சாரு. அதை இயக்க நிலக்கரியை கச்சாமுச்சானு எரிக்க ஆரம்பிச்சோம். காட்டை அழிச்சோம். வயக்காடா மாத்தினோம். வயக்காட்டை ஸ்பெஷல் எக்கானமி ஜோனா மாத்தினோம். இப்போ குண்டி கழுவ தண்ணி இல்லே. இது இயற்கையோட செயலா ? இல்லே ..
அடுத்து ஒரு பத்துவருசம் மரமே வெட்டாம , மரம் நடறதே தொழிலா இருந்தோம்னு வைங்க. மழை கொட்டோ கொட்டுனு கொட்டும். இது இயற்கையோட செயலா ? இல்லே.
இயற்கைக்கு அறிவு கிடையாது. ஸோ நோக்கமும் கிடையாது. ஸோ செயலும் கிடையாது. ஜஸ்ட் எதிர்வினைதான். ஆக இவ்ளோ நேரம் தனிமனிதனா ஃபோக்கஸ் செய்யப்பட்ட கண்ணன் படக்குனு இயற்கைக்கு பிரதி ரூபமா ஃபோக்கஸ் ஆகிறார். இதுக்கு பின்னாடி பிராமண இனத்தோட பெரிய சதியே இருக்கு.
வடிவேலு பாணில கேட்கவேண்டியிருக்கு. ஏன்? ஏன் ? ஏன் ?
கீதாசிரியரே!
எதையோ சொல்ல வந்திங்க. நீங்க சொல்ல வந்த விஷயத்துல உங்களுக்கு சின்சியாரிட்டி இருந்தா உள் நோக்கம் எதுவுமில்லேன்னா நேரடியா நெத்தியடியா சொல்லிட்டு போக வேண்டியதுதானே.
ஒரு கட்டத்துல கிருஷ்ணனை ஒரு இண்டிவ்யூஜுவலா காட்டறிங்க. அடுத்த பத்திலயே இயற்கைக்கு பிரதி ரூபமா காட்டறிங்க. இந்த முரண்பாடுகளால தான் உங்க இனத்தை, உங்க நோக்கத்தை கெஸ் பண்ணி சிங்கப்பூர் பாணில பிரம்படி கொடுக்க முடியுது.
வர்ணத்த ஏற்படுத்தினது இயற்கைன்னா நானும் ஏத்துக்க தயார். ஏன்னா இயற்கை
ஃப்ளெக்ஸிபிள். பச்சை களி மண்ணு அதை எப்படி வேணம்னா மோல்ட் பண்ணிக்க முடியும்.
தாளி பத்து வருஷத்துக்கு கலப்பு திருமணத்தை கட்டாயமாக்கிட்டா உயர் தர கலப்பின மனிதர் கூட்டம் ஏற்பட்டுரும்.
இயற்கைக்கு ஒரு உருவம் கொடுத்து அதுக்கு சக்திமான் கணக்கா ஏக பில்டப் கொடுத்து இதான் ஃபைனல் இதை மீற முடியாது, மாத்த முடியாது, மாத்தினா ஜேஜி கண்ணை குத்திருங்கற இடத்துலதான் உங்க இன புத்தி, அதோட நோக்கம்லாம் நீலப்படத்து பெண்ணோட அந்தரங்கம் மாதிரி வெட்ட வெளிச்சமாயிருது.
""""""தற்போது பிரசுரமாகிக்கொண்டிருக்கும் "பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி" தொடர்பதிவின் மீது எதிர்வினயாற்றுபவர்கள் தனிப்பட்ட மெயில் களை அனுப்புவதை விட மறுமொழியிட்டால் ஒரு ஆரோக்கியகரமான விவாதம் நடை பெற வழியேற்படும்!!!!!!!!
ReplyDeleteஇதுதான் பெரிய உட்டாலக்கடி.....இந்த நூற்றாண்டின் மிக பெரிய ஜோக்......... இந்த குப்பை பதிவை படிக்கிறதே உன்னோட மொக்கையையும், கிறுக்குத்தனத்தையும் பார்த்து கொஞ்சம் டைம் பாஸ் பண்ண தான்....2 வரி மறுமொழி போடுறதுக்கே ஒருத்தரையும் காணோம், இதுல வேறு துரைக்கு தனியா மெயில் போட்டு கருத்து சொன்னாங்களாம்.....நீயும் பாவம் யாராவது மறுமொழி போடா மாட்டாங்களா, நாம நம்ம மேதாவித்தனத்தை காட்டலாம்ன்னு அலையிற.... ஆனா உன்னோட பதிவை படிக்கிறவங்கள் எல்லோரும் உன்னை விட எமட்டனுன்களா இருக்காங்க .........உனக்கு தான் வேற வேலை இல்லை....எல்லோருக்குமா!!!!!!!!..... முதல்ல உனக்கு ஜோசியம் பார்த்து உன்னோட ப்ளாக்-க்கு பரிகாரம் பண்ணு...அப்பவாச்சும் ஏதாவது மாற்றம் வருதான்னு பார்....பிறகு நீ ஊருக்கு நவீன பரிகாரம்.....பழைய பரிகாரம் எல்லாம் சொல்லலாம்..............