அண்ணே வணக்கம்ணே,
இந்த கல்யாண சமையல் சாதம் பதிவோடவே அம்மாவுக்கு கோவில் கட்டின பார்ட்டி ஒருத்தரை பத்தி இன்னொரு பதிவும் போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க
பதிவோட தலைப்பை பார்த்ததும் மாயா பஜார் சினிமா - எஸ்.வி.ரங்காராவ் - அண்டா குண்டாக்களில் பண்டங்கள், பலகாரங்கள் எல்லாம் ஞா வந்திருக்கும்.
நான் சினிமா போயி பலகாலமாகுது. 1997 முதல் இன்னி வரை பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணிரலாம். உ.ம்: அன்னமய்யா, ஸ்ரீராமதாஸ், சிவாஜி.
பால கிருஷ்ணா நடிச்ச பாண்டு ரங்க மஹத்யம் பார்த்துட்டு கொலை வெறி வந்துருச்சு. இவிக நம்மை கொலைகாரனாக்கவே சினிமா எடுக்கிறாப்ல இருக்கு. ஆப்பரேசன் இந்தியா 2000 ஐ அமல் படுத்தற வரையாவது ஜெயிலுக்கு போககூடாதுனு டிசைட் ஆயி படம் பார்க்கிறதையே விட்டுட்டன்.
அப்படியே கல்யாணங்களுக்கு போயி பல பல காலமாகுது. கட்ட கடைசியா நான் போன கல்யாணம் எது, யாருதுன்னு கூட ஞா வரமாட்டேங்குதுன்னா பார்த்துக்கங்க.
இந்த தீனி சமாசாரம்னாலே நமக்கு பயங்கர கடுப்பு. ஏதோ கலப்பு திருமணம் பண்ணிக்கிட்டு சோத்துக்கு லாட்டரி அடிச்சதால வந்த கடுப்புனு நினைச்சுராதிங்க. வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புங்கற என் பதிவை படிச்சா புரியும் எனக்கு ஏன் தீனி மேல இத்தனை கடுப்புன்னு.
நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகள் தான் தீனி மேல ஆர்வத்தை உண்டாக்குது. சைக்காலஜி சொல்ற ஆசனப்பருவத்தை தாண்டாத / ஹோமோவுக்கு துணியாத சன்மங்கள் தான் தீனிக்காக அலையுதுங்கறது என் அபிப்ராயம்.
ரஜினி காந்த் சினிமால ஒரு டயலாக் " நான் வாழறதுக்காக சாப்பிடறேன். சாப்பிடறதுக்காக வாழலே "
சத்துக்குறைவால எவ்ள பேரு சாகிறாங்களோ, அதை போல இரண்டு மடங்கு மக்கள் மிஞ்சியான தீனியால சாகறாங்க. மனுஷன் எப்ப சமைச்சு சாப்பிட ஆரம்பிச்சானோ அப்பருந்துதான் நோயே ஆரம்பிச்சிருக்கும் போல.
சின்ன வயசுல அம்மா தட்ல சோத்த போட்ட உடனே வெறும் வெள்ளை சோத்த எடுத்து திங்க ஆரம்பிச்சுருவம். அம்மா " வெறும் சோத்த திங்காதிங்கடா"ன்னு தலை தலையா அடிச்சுக்குவாய்ங்க.
ராத்திரி பிள்ளைகள்ள எவனாச்சும் சோத்துக்கு வராம போயிட்டா மிஞ்சிப்போன சோத்தை மிளகாய் பொடி போட்டு கலக்குவாய்ங்க. அப்படி கலக்கிட்டு இருக்கும்போதே திட்டுகளோட சேம்பிள் வாங்கி வாங்கி திம்போம். அப்புறமா அடுப்புல வணலிய போட்டு அரை கரண்டி எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிச்சு ரெண்டு பிரட்டு பிரட்டி முடிக்கிறதுக்குள்ளவே சேம்பிள் கேட்டு தட்டுகள் நீளும்.
மதன பல்லியை சேர்ந்த கதிர்வேலு என்பவர் தன் அம்மாவுக்கு கோவிலே கட்டியிருக்கிறாராம். நாம கு.பட்சம் ப்ளாக்லயாவது நினைச்சு பார்க்கலாம்ல.
அம்மாவுக்கு கோவில் பதிவை இங்கே அழுத்தி படிங்கண்ணா
( இந்த ஃபார்முலா இப்ப உதவாதுங்கண்ணா. ஆக்கி இறக்கின சோறு 12 மணி நேரத்துல பூனை கழிஞ்சது மாதிரி ஆயிருது)
இதையெல்லாம் நினைச்சு பார்க்கறப்ப எனக்கு தோனினது என்னன்னா அதுல தாய்பாசம் கலந்திருந்துச்சு, அரிசி, எண்ணெய், கடுகு ,உளுத்தம்பருப்புல நாணயம் இருந்துச்சுங்கறதெல்லாம் கூட ஒரு காரணமா இருக்கலாம்.ஆனால் அசலான காரணம் அப்ப இருந்த அப்ப இருந்த இளமை, அப்ப இருந்த பசி. அப்ப இருந்த ஜீரண சக்தி தான்.
எவனுக்கு பசி மந்தப்பட்டு போயிருச்சோ அவன் தான் ருசியை எதிர்பார்க்கிறான். ருசியை கூட ரசனைன்னு ஜஸ்டிஃபை பண்ணிக்கிரலாம். இந்த மசாலா, ஆடு,கோழி, காடை கவுதாரினு பறக்கறதெல்லாம் ரசனையோட சேர்த்தியில்லை. அவிகளுக்கு ஜடராக்னி அணைஞ்சுருச்சுன்னு தான் அர்த்தம்.
No comments:
Post a Comment