Sunday, May 16, 2010

ஜோதிடம் தொடர்பான புது நிகழ்ச்சி ஏற்பாடு

ஜோதிடம் என்றால் உங்கள் மனதில் தோன்றும் காட்சிகளில் சில வருமாறு:
1. பிராமண கிழவர் ஒருவர், சோடா புட்டிகண்ணாடி அணிந்து  விசிறியால் முதுகு சொறிந்தபடி இருக்கும் எதையோ சொல்லிக்கொண்டிருக்கும் காட்சி.
2. கோட்டும், சூட்டுமாய் வியர்த்து வழிய  முகத்தில் திருட்டு + விஸ்கி களை சொட்ட இலக்கண பிழைகளுடன் தனியார் டிவி சேனல்களில் ஸ்பான்ஸ்ர்ட் ப்ரோக்ராமில் (பணம் கொடுத்து ஒளிபரப்ப வைக்கிற  நிகழ்ச்சிக்கு கௌரவ பேர்)   நடுத்தர வயது பார்ட்டிகள் பேசும்  காட்சி

ஆனால் 1989 முதல் தொழில் முறை ஜோதிடனாக இருக்கும் நான் கற்பனை செய்யும் காட்சியே வேறு. 

கட்டம்:1

முதல் கட்டத்துல ஜாதகம் உள்ளவுக, கு.ப டேட் ஆஃப் பர்த் தெரிஞ்சவுகளை மட்டும் ஆட்டத்துல சேர்த்துக்கனும். அவிக காசு கட்டி பதிவு பண்ணிக்கிட்ட உடனேயே அவிக ஜாதகத்தை பார்த்து/ கம்ப்யூட்டர்ல ஜாதகம் போட்டு அதுல இருக்கிற முக்கிய அம்சங்களை  ஒரு ப்ரிண்டட் ஃபார்மெட்ல  குறிச்சிரனும்.

உ.ம்: செவ்வாய் தோஷம் (4ல் செவ்வாய் ) ,சர்ப்பதோஷம்: 1-7 ல் ராகு கேது
லக்னாதிபதியாரு அவரு 6,8,12ல எங்கேனா மாட்னாரா? இல்லே அஸ்தங்கதமாயிட்டாரா? இல்லே 6,8,12 அதிபதிகளோட எங்கேனா சேர்ந்துட்டாரா? 6,8,12 அதிபதிகள் யாரு அதுல எத்தனை பேர் மேற்படி இடங்கள்ளயே உட்கார்ந்திருக்காங்க..  யோககாரகன் யாரு அவர் எங்கே இருக்கார்.அங்கே அவரோட பலம் என்ன?   அவரோட யார் சேர்ந்தார். சுபர்கள்: யார் யாரு எத்தனையாவது வீட்ல இருக்காய்ங்க. எந்த பாவத்துக்கு யார் அதிபதி அவர் எத்தனாவது பாவத்துல இருக்காரு

இப்படி ஒரு கொஸினேர் பிரிப்பேர் பண்ணி அதுல மொத்த டேட்டாவையும் என்ட் ரி போட்டுக்கனும். இதை  ஒன் ப்ளஸ் டூ  காப்பி எடுக்கனும் ஒன்னு பார்ட்டிக்கு. ஒன்னு ப்ரோக்ராம்ல என்னோட  ரெஃபரன்ஸுக்கு. ஒன்னு ஃபைல் காப்பி.

இப்படி ஆயிரம் பேருக்கு குறையாம பதிவு பண்ணிக்கிறாப்ல குட் பப்ளிசிட்டி தரனும். (அப்பத்தான் கட்டுப்படியாகுங்கண்ணா)  நெக்ஸ்ட் நம்ம கிட்டே இருக்கிற கொஸினேர் காப்பிய வச்சி எந்த அம்சம் மேஜரா நிறைய ஜாதகங்கள்ள இருக்குனு ஒரு கணக்கு போட்டு பார்த்து  அந்த வரிசைல ஐட்டம் வாரியா ஒரு அஜெண்டா பிரிப்பேர் பண்ணிக்கனும் . ரேரஸ்ட் ஆஃப் தி ரேரஸ்டா இருக்கிற அம்சங்களை கூட விடாம அஜெண்டால சேர்க்கனும்.

நிகழ்ச்சியை  இண்டோர் ஸ்டேடியத்துல ஏற்பாடு செய்யனும்.   பெரிய்ய அளவுல கூட்டம் இருக்கனும்.

(நிகழ்ச்சிக்கு வரப்ப அந்த கொசினேரை தவறாம கொண்டுவரனும்னு சொல்லி யிருக்கனும். இது ரொம்ப முக்கியம்)

நிகழ்ச்சி ஆரம்பமாகுது. சம்பிரதாயங்கள் எல்லாம் முடிஞ்ச பிறகு மதியம் வரை நான் அஜெண்டா பிரகாரம் ஸ்பீச் தரனும். என் பேச்சுல தங்கள் ஜாதகத்துக்கு பொருந்தி வர்ர ஐட்டங்களுக்கு  நான் பேசறச்ச சொன்ன பலன் கள் எந்த அளவுக்கு அவிக விஷயத்துல உண்மையாச்சுன்னு க்ளையண்ட்ஸ் க்ரேடிங் கொடுக்கனும். 

இதுக்கு கட்டணமா ரூ.500 ஃபிக்ஸ் பண்ணி காலை 6 மணிலருந்து  டீ , பிஸ்கட்,டிஃபன், லஞ்ச், ஸ்னாக்ஸ் எல்லாம் ஏற்பாடு பண்ணனும். நிகழ்ச்சி மொத்தத்தையும் வீடியோல கவர் பண்ணனும்.

இது எப்படியிருக்கு ? இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ண யாராவது ஸ்பான்சரர் முன் வந்தா  செலவு போக மிஞ்சினதுல 60% : 40% ஓகேவா.

அந்த 60% கூட எதுக்குன்னா நிகழ்ச்சில எடுத்த வீடியோவை பக்காவா எடிட் பண்ணி குறைஞ்ச விலை சனத்துக்கு தரத்தான். ( சி.டி ரூ 25 டிவிடி: ரூ.35)

1 comment:

  1. உசாரய்யா உசாருMay 16, 2010 at 6:53 PM

    பொருளாதார மேதை...ஜோசியர்...திட்டக்குழு தலைவர்....எழுத்தாளர் .....அறிவாளி...மேதாவி....பகுத்தறிவாதி.....விஞ்ஞானி... வெட்டி ஆபிசர் முருகேசா ....பணம் பற்றிய ரகசியங்கள் என்ற மயிரு நிகழ்ச்சிக்கு கிருஸ்ணா ஜூவல்லரி -கிட்ட ஆட்டைய போட்ட மாதிரி இந்த நிகழ்ச்சிக்கும் யாருகிட்டயாவது ஆட்டைய போடுலான்னு அலையிறத பாரு.....ஏன் கிருஸ்ணா ஜூவல்லரி கிட்டே கேட்க வேண்டியது தானே....உன்னோட முதல் நிகழ்ச்சி உண்மையில் வெற்றியாயிருந்தா ...அவங்களே அடுத்த நிகழ்ச்சி பண்ணலாமே.... உன்ன கண்டு தெறிச்சு ஓடுறதா கேள்வி..... positive thinkers club - உன்மேல மட்டும் negative thought இருக்கிறதாகவும் கேள்வி.... உன்மேல் நம்பிக்கை இருந்தா நீயே சொந்தகாசுல பண்ணறது....100 % நீயே வச்சுக்கலாமே...அத வச்சு CD ரூ. 5 க்கும் DVD ரூ.10 க்கும் தரலாமே.....ஏற்கனவே ஜோசியம்-ன்ற பேருல பொய்யா சொல்லி ஊரை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது போதாதா இப்படி லம்பா அடிக்கலாம்ன்னு வேறு திட்டமா........எப்படி எல்லாம் ஏமாத்த அலையரானுகயா....ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பனுகளோ....இது எப்படி இருக்கு தெரியுமா.."""நீ அரிசி கொண்டு வா...நான் உமி கொண்டு வரேன்...ரெண்டையும் ஒன்னா கலந்து ஊதி ஊதி திங்கலாம்"""""" என்பது போல இருக்கு...அட்டைய போடுரதுக்கேன்னே அலையிறத பாரு யாரும் சிக்க மாட்டாங்கடியோய்.........

    ReplyDelete