பதிவோட தலைப்ப பார்த்ததுமே " கிருஷ்ணர் மாடு விட்டுட்டார் போல"ன்னு குதிச்சுராதிங்க .
"கண்ணா நீ ஜெயிச்சுட்டே"ங்கற டயலாக் "கௌரவம்" படத்துலயா வருது? பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி என்ற பதிவை போட்டு , கெட்டு நொந்து இந்த டயாலகை சொல்லப்போறேன்னு அவாளோ, இல்லை எவாளோ சொல்ல நினைச்சாய்ங்களோ என்னமோ? பேச்சை விட எண்ணத்துக்கு வலிமை அதிகம். அவிகளோட இந்த எண்ணம் தான் "இந்த " சிச்சுவேஷனை உருவாக்குச்சா இல்லே பந்து என் கோர்ட்டுக்கு வந்திருக்கா தெரியலை.
நல்லது கெட்டதை பகிர்ந்துக்க உங்களை விட்டா எனக்கு வேற யார் இருக்கா.. நான் தினத்தந்தி நிருபரா இருந்த கதை தெரிஞ்சே இருக்கும். தினசரி ஒன்னு ரெண்டு ஃபோட்டோக்களுக்கு ஃபோட்டோகிராஃபர்களை தொங்க விருப்பமில்லாம நானே ஃபோட்டோகிராஃபர் அவதாரம் எடுத்தேன். சுமாரான ஐபாட் ஒன்னு வாங்கினேன். அதுல உள்ள படங்களை ப்ரிண்ட் போட என் மகளை (16) ஒரு ஸ்டுடியோவுக்கு அனுப்பறது வழக்கம்.
இவ இப்படி போக வர இருக்க அங்கன வேலை செய்ற சந்தீப்போட "காதல் வந்துருச்சு " ஒரு நாள் என் மகள் திருட்டுமுழியோட மேற்படி சந்தீபை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாள்.
நான் "என்னப்பா லவ்ஸா" ன்னேன். நொந்து நூடுல்ஸ் ஆயிட்டான். முதல்ல பொழப்புக்கு வழி தேடுப்பான்னிட்டு பழைய பஸ் ஸ்டாண்ட்ல தந்தி ஏஜெண்டோட கடைய வாடகைக்கு பேசிக்கொடுத்தேன். அட்வான்ஸ் இத்யாதி எல்லாம் பையனே தான். இதுல நாம கிழிச்சது என்னடான்னா லீஸ்ட் அட்வான்ஸ் + ரென்டுக்கு பேச்சு வார்த்தை பண்ணதும், பே.வா. முடிஞ்சதுமே படக்குனு ஒரு நூறு ரூபா டோக்கன் அட்வான்ஸ் கொடுத்ததும்தான்.
ஏதோ பையன் கஷ்டப்பட்டான். தொழில் டெவலப் ஆச்சு. பத்தாதுக்கு என் பெண்ணும் அவனுக்கு துணையா கஷ்டப்பட்டாள். கடை ஸ்டெடியாச்சு. சந்தீப் அப்பாவுக்கு ரெண்டு சம்சாரம். இவன் மொத சம்சாரத்து மகன். அப்பன் காரன் ப்ரைவேட் பஸ் ட்ரைவர். லாலா பார்ட்டி. ( ஆறு மாசத்துக்கு முந்தி கூட செமை போதைல நரஹரி பேட்டை கிட்டே தி.தி.தே கல்யாண மண்டபத்தண்டை எருமைமாட்டுக்கு மோதி விழுந்து விலா எலும்பெல்லாம் நொறுங்கி யாரோ கொண்டு வந்து சித்தூர் பழைய பஸ் ஸ்டாண்ட்ல குப்பையா போட்டுட்டு போயிட்டாய்ங்க நானும் அவனும் தான் முதல்ல ஜி.ஹெச் கொண்டு போய் தையல் போட்டு ஃபர்ஸ் எய்ட் கொடுத்து பணம் புரட்டி - வேற யாரு தந்தி ஏஜெண்டுக்கே போட்டேன் இண்டென்ட்- ஸ்விம்ஸுக்க் அனுப்பி வச்சோம் ) பையன் ஸ்டுடியோ வச்சு ஸ்டெடி ஆகிறவரைக்கும் அவன் இருக்கானா இல்லையானு கூட பார்க்காத மன்சன் பையன் தன் கால்ல நின்னுட்டான்.ஜெயிக்கிற குதிரையாயிட்டான். இவன் மேல காசுகட்டலாம்னு ப்ளாட் வித்த காசு ஒரு லட்ச ரூபாயை கொண்டுவந்து ஸ்டுடியோல போட்டு சந்தனம் அதிகமாயிருக்குதுன்னு எங்கயோ பூசிக்கிட்ட கதையா தேவையே இல்லாம அடிஷ்னல் செலவெல்லாம் இழுத்து விட்டு ஒட்டிக்கிட்டாரு.
ஒரே ஒரு ரூபாவ ஸ்டுடியோவுல போட்ட மன்சன் கல்லாவ பிடிச்சிட்டார். கணக்கு வழக்கில்லாம காசெடுத்து வேட்டு விட ஆரம்பிச்சுட்டார். பையன் தூக்கம் கெட்டு குக்கிராமமெல்லாம் போய் ப்ரோக்ராம் கவர் பண்ணி சம்பாதிச்ச பணம் குடி கூத்துல செலவழிஞ்சா கடுப்பாகாதா? அவன் கொஞ்சம் இறுக்கி பிடிக்க ஆரம்பிச்சாப்ல இருக்கு. அப்பன் காரனுக்கு ரேங்கிக்கிச்சு. நேத்து செல்ஃபோன்,வண்டி எல்லாத்தயும் பிடுங்கிக்கிட்டு அடிச்சு விரட்டிட்டான். பையன் நம்ம கஸ்டடில இருக்கான் (தற்சமயத்துக்கு. அப்புறம் கிளிக்கு றெக்கை முளைச்சுருத்து பறந்து போயிடுத்துன்னு சொல்ற ஸ்டேஜ் கூட வரலாம்)
இப்போ சொல்லுங்க "கண்ணா ! நீ ஜெயிச்சுட்டேனு புலம்பனுமா? இல்லே பந்து என் கோர்ட்டுக்கு வந்திருக்குன்னு சந்தோஷப்படனுமா?
உபரியா ஒரு தகவல்: இன்டர் நெட் சென்டர்ல மெம்பர்ஷிப் கார்டு ஆயிருச்சு. ( நூறு ரூபா கொடுத்துட்டா 11 ஹவர்ஸ் தருவாய்ங்க. மறுபடி வாங்கணுமேனு நினைச்சிட்டிருந்த சமயம் கண்ணன் பேர் கொண்டவரே அக்கவுண்ட்ல காசு போட்டாரு. இது கண்ணன் கொடுத்த க்ரீன் சிக்னலா இல்லையா? நான் கண்ணனை ஏத்துக்கறேன். கீதைலயே அய்யரோட ஈகோ வழிவிட்ட இடத்துல எல்லாம் அண்டைவெளியின் அகண்ட பாத்திரத்து அமுதம் , கண்ணன் குரல் சிந்தியிருக்கு சிதறியிருக்கு. அதையெல்லாம் கூட திரட்டி வச்சிருக்கேன். அதுவும் ஒரு தொடர்பதிவா வெளியாகும்.
ஓகே உடு ஜூட்.
No comments:
Post a Comment