இன்று ஒரு மானங்கெட்ட செயலில் ஈடுபட்டேன். அதாவது மூன்று நாள் இடைவெளிக்கு பிறகு எங்கள் தெருவுக்கு தண்ணீர் டேங்க் வர க்யூவில் நின்று தண்ணீர் பிடித்தேன். இதில் என்ன மானக்கேடு? இது வரை நீ இந்த வேலையை செய்ததே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். (இறைவன் இன்னருளால் இல்லை)
நாம் ஏதேனும் அரபு நாடுகளில் பிறந்திருந்து தண்ணீருக்கு நாயடி பட்டால் அதில் ஒரு தர்க்கம் இருக்கிறது. கங்கா,சிந்து,பிரம்மபுத்திரானு ஜீவ நதிகளையும், அந்த நதிகளால் உருவான உப நதிகளையும் பெற்றிருந்தும் குடிக்க,கழுவ தண்ணீரை கூட ஒழுங்காக சப்ளை செய்ய துப்பில்லாத நகராட்சி அதிகாரிகளை ஒத்தை ஆளா போட்டு உலுக்கி எடுக்கற சக்தி இருந்தாலும் அதை செய்யாமல் இப்படி 3 நாள் கழித்து வரும் ட்ராக்டரில் வரும் தண்ணீரை க்யூவில் சாரி கும்பலில் நின்று முண்டியடித்து தண்ணீர் பிடிப்பது மானங்கெட்டத்தனம்தான். ஒரு சி.எம் ஐ உலுக்கின உன்னால ஏன் நகராட்சி அதிகாரிகளை உலுக்க முடியலைன்னா அதும் பின்னாடி ஹேம்லெட் மாதிரி ஒரு சின்ன ஃபேட்டல் வீக்னெஸ் இருக்கு.
சுதந்திரத்துக்கு முன்னாடியே ஆர்தர் காட்டன் மாதிரி ஆட்கள் நதிகளின் இணைப்புக்கு எத்தனையோ திட்டங்கள் தீட்டியும் அவை அமலாகாது இப்படி குண்டி கழுவ தண்ணீர் இல்லாது க்யூவில் நிற்பது மானங்கெட்ட தனம் தான்.
எனக்காவது நம்பிக்கை இருக்கிறது. இந்த தே.மகன்கள் இன்னும் எத்தனை நாள் இப்படி என்னை அவமானப்படுத்த முடியும் ஏதோ ஒரு நாள் என் முயற்சிகள் பலித்து என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் அமலாகி எல்லா நதிகளும் இணைக்கப்பட்டுரும் குறைஞ்ச பட்சம் ஒரு நாளில்லே ஒரு நாள் நகராட்சி சேர்மனாகி ஏதோ ஒரு தகிடுதத்தம் பண்ணி ஒட்டு மொத்த டவுனுக்கும் வீட்டுக்கு வீடு குழாய் இணைப்பு கொடுத்து ஒரே குழாய் மூலம் குடி நீர் கம் தண்ணீர் சப்ளை செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கொஞ்ச நாளைக்குத் தானே இந்த இம்சை என்று என்னை நான் கன்வின்ஸ் செய்துக்கறேன்.
இவிக எப்படி ஒரு குடம் தண்ணிக்காக உலக யுத்தம் ரேஞ்சுல மோதிக்கிறாங்கனு எனக்கு புரியலை. அதே நேரத்துல அண்டை மானிலங்கள் பல லட்சம் கோடி குடம் தண்ணீரை லவட்டிக்கிட்டிருக்க அந்த மேட்டர்ல ஏன் எவனும் / எவளும் ரெஸ்பாண்ட் ஆகமாட்டான்(ள்).
இப்படி மானங்கெட்டு பிடிச்ச தண்ணிய செட்டா சிக்கனமா உபயோகிக்கவாச்சும் துப்பிருக்கா? ஊஹூம். ஆய் போறதுக்கு முன்னாடி அரை மக் தண்ணி ஊத்திட்டு உட்கார்ந்தா ஒரு சின்ன பக்கெட் தண்ணி போதும் எல்லாம் சுத்தமாயிரும். ஆனால் இவிக ?
அட இலவச கலர் டிவி கொடுத்த அரசாங்கம் கார்ப்பரேஷன் மூலமா குக்கர் இல்லாத வீட்டுக்கெல்லாம் இலவச குக்கரை கொடுத்தா பல கோடி குடம் தண்ணி சேவ் ஆகும்.
அடுத்து எனக்கு தெரிஞ்சு ஷாம்பூவை தடை பண்ணனும். தாளி தலைய அலசி ஷாம்பூவோட , குழ குழப்பை போக்கறதுக்குள்ள முக்கா பயிட்டு தண்ணீ காலி. அப்படியும் குளிச்சு முடிச்சு வெளிய வந்து வெயில் பட்டா காலெல்லாம் உப்பு குறவன் மாதிரி வெள்ளையடிக்குது.
No comments:
Post a Comment