ஜாதகங்களை கணிக்க பிறந்த தேதி நேரம் ரொம்ப ரொம்ப முக்கியம்.அதிலும் ஒரு லக்னத்தின் அதி ஆரம்பத்திலோ கட்டக்கடைசியிலேயே பிறப்பவர்கள் நிலை திண்டாட்டம் தான்.
தேதி நிர்ணயம்:
தேதியை நிர்ணயிப்பதில் இரண்டு முறைகள் உள்ளன. ஜோதிட வியலின் படி ஒரு நாள் சூரியோதயம் முதல் அடுத்த நாள் சூரியோதயம் வரை உள்ள காலம் ஒரு நாள் ஆகும்.
ஆனால் யதார்த்தவாழ்வில் பார்க்கும்போது நள்ளிரவு 12 மணி தாண்டியதுமே கடிகாரத்தில் தேதி,கிழமை இரண்டுமே மாறிவிடும்.
எனவே ஜாதகம் கணிக்க ஜோதிடரிடம் பிறந்த தேதி விவரம் சொல்லும்போது அது சாஸ்திரப்படியா அ யதார்த்த வாழ்வின் அடிப்படியிலா என்பதை விளக்கமாக சொல்லவேண்டும்.
கீழ்காணும் குறிப்பை கவனியுங்கள்:
//பிங்கள வருடம் சித்திரை மாதம் 15 ஆம் தேதி புதன் கிழமை, வளர்பிறை நவமி 55.48 க்கு மேல் தசமி திதியும், ஆயில்யம் 46 க்கு மேல் மகம் மறுநாள் 46.22
பின் இரவு மணி 5.55 க்கு 3 நிமிடம் நீக்கி நாளிகை 59.40 அளவில் சுப
ஜெனனம் //
எனது விளக்கம்:
ஜோசியர் ( 99.9% அய்யர் தான் இருக்கும். அவாள் தான் இப்படி பிறருக்கு புரியாமல் எழுதுவார்கள் அ அவாள் வழியிலேயே பயணம் செல்லும் பிராமணரல்லாதவர் கூட எழுதியிருக்கலாம் )
நான் எல்லாம் ரஜினி கலைஞர் வழி சென்றாலும் அவர் சொன்ன "என் வழி தனி வழி " என்பதை பின்பற்றுவதால் இப்படியெல்லாம் லந்து பண்ணுவதில்லை.
ஜோசியர் // சித்திரை மாதம் 15 ஆம் தேதி// என்று குறிப்பிட்டுள்ளார். //புதன் கிழமை// என்றும் எழுதியுள்ளார். இதை அடிப்படையாக வைத்து பார்த்தால் சித்திரை 15 க்குரிய ஆங்கில தேதி ஏப்ரல் 27 வருகிறது .கிழமையும் டேலி ஆகிறது (புதன் கிழமை) .
ஆனால் ஜாதகர் சற்றே விவரமானவர் போலும் தன் பிறந்த தேதியை தரும்போது
//DATE - 28/29 -04 -77// என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்போது குழப்பம் ஏற்படுமா ஏற்படாதா? சாதாரணமாக ஜாதகர்களுக்கு இந்த அளவுக்கு தெளிவு இருக்கும் என்று முடிவு செய்யமுடியாதல்லவா?
ஆனால் ஜோசியர் எழுதியுள்ளதில் ஒரே ஒரு விஷயத்தில் தான் நமக்கு க்ளூ கிடைக்கிறது.அது என்னவென்றால் //பின் இரவு மணி 5.55 க்கு// என்ற வார்த்தையே.
சாதாரணமாக நாம் இந்த 5.55 நேரத்தை விடியல் என்று தான் குறிப்பிடுவோம்.ஆனால் ஜோசியர் இதை பின் இரவு என்று குறிப்பிடுகிறார். அது அவர் கணக்கு ( ஜோதிட வியல் பாணி) . நாம் என்ன செய்யவேண்டுமென்றால்
தேதி மாற்றி ,கிழமைமாற்றி , கம்ப்யூட்டருக்கு தரவேண்டும்.
மேலும் ஜாதகர் தம் நட்சத்திரமாக மகம், ராசியாக சிம்மத்தை குறிப்பிட்டுள்ளார். சித்திரை 15 என்ற வார்த்தையை குருட்டுத்தனமாக நம்பி அதற்கு சமமான ஆங்கில தேதியான ஏப்ரல் 27 ஐ அடிப்படையாய் கொண்டு பார்த்தால் அன்று ஆயில்ய நட்சத்திரம் தான் வருகிறது. மறு நாள் தான் மகம் வருகிறது. எனவே 1977 ,ஏப்ரல் 28 வியாழக்கிழமை என்று கொண்டே ஜாதகம் கணிக்கவேண்டியுள்ளது. என்றாலும் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஜாதகரையே மீண்டும் தொடர்பு கொண்டாக வேண்டி உள்ளது. இந்த விவரத்தை மெயிலில் அனுப்ப முடிவு செய்து பலருக்கு உபயோகமாக இருக்கட்டுமே என்று பதிவாக போடுகிறேன்.
வெப்சைட் குழப்பம்:
ஊருடன் ஒத்துவாழ் என்பது பழமொழி அல்ல . என்றைக்கும் பின்பற்ற வேண்டிய பழமொழி. இப்போ ஊர்ல மஸ்தா பேரு இங்கிலீஷ் டேட், மாசத்தைதான் உபயோகிக்கிறாய்ங்க. நாமும் (ஜோதிடர்கள் உட்பட) ஆனால் இந்த நாட்களிலும் தமிழ் மாதம், தேதி மட்டுமே தெரிந்தவர்கள் ஜாதகம் கணிக்க அதையே தருகிறார்கள். அப்படி ஒரு ஜாதகர் 1970,ஐப்பசி 15 ஐ கொடுத்தார்.
நான் 1989 முதல் தான் இந்த துறையில் உள்ளேன். நியாயப்படி பார்த்தால் 1989 முதல் 2010 வரையிலான பஞ்சாங்கங்கள் என்னிடம் இருக்கவேண்டும். நான் ஜோசியம் சொல்கிறேனே தவிர என்னை நான் ஒரு ஜோசியனாகவே உணர்ந்ததில்லை.அப்படிஉணர்ந்திருந்தால் பழைய பஞ்சாங்கங்களை பூட்டி வைத்திருப்பேன். நாம தான் தான கர்ணன், அப்டேட் அண்ணாமலை ஆச்சே கேட்டவுகளுக்கெல்லாம் தூக்கிக்கொடுத்தாச்சு. ஜாதகம்னு வந்தால் கம்ப்யூட்டர்லதான் கணிக்கிறது. ஆஸ்ட் ரோலோகாடாட்காமோட சாஃப்ட் வேரைதான் யூஸ் பண்றேன். கடவுள் தயவால எந்த பிரச்சினையுமில்லே.
இதுல ரெண்டு முறைப்படியும் தேதி, கிழமை தராங்க உதாரணமா
Vedic Day : Wednesday (இது ஜோசிய(ர்) கணக்கு
Gregorian Day : Thursday (இது மக்கள் கணக்கு)
என்னமோ போங்க மொத்தத்துல நம்ம நேரம் சரியில்லை வாக்குஸ்தானத்துல சனி நல்லாவே வேலை செய்யறார். இதுக்கு பரிகாரமா அவாள நன்னா திட்டி தீக்கலாம்னுதான் பகவத்கீதை உட்டாலக்கடி என்ற தொடர் பதிவை ஆரம்பிச்சிருக்கேன். நம்ம நேரம் பாருங்க திட்டறவா யாருமே திட்ட வரலே. ஒரு வேளை தனிப்பதிவாவே போடறாளோ என்னவோ?
என் வேண்டு கோள் :
1.அய்யா ! வெப்சைட் வச்சிருக்கிற பார்ட்டிகளா? எங்க ஹிட்ஸை வச்சு பைசா சம்பாதிக்கிறிங்க. கொஞ்சம் க்ராஸ் செக் பண்ணி சாஃப்ட் வேர்களை அப்டேட் பண்ணுங்க
2.அய்யா! ஜோதிட திலகங்களே காலம் மாறிப்போச்சு சங்கிலி சங்கிலியா எழுதி குழப்பாம அட்லீஸ்ட் எங்கனாச்சும் ப்ராக்கெட்லயாவது மக்கள் கணக்குப்படி நள்ளிரவு தாண்டினா தேதி ,கிழமை மாத்தி ஜனன நேரத்தை குறிங்க
3.அய்யா! ஜோதிட ஆர்வலர்களே ஜோசியர்களை அணுகும்போது முன் கூட்டியே உங்க ஜனன விவரங்களை ஆங்கிலப்படுத்தி வச்சிக்கங்க. எனக்கு தெரிஞ்சு 60 சதவீதம் ஜோசியருங்க கம்ப்யூட்டர் உபயோகிக்கிறாய்ங்க.அவிக இல்லன்னாலும் மகன், மச்சான், தம்பினு யாரையோ ஒருத்தரை வச்சு மெயிண்டெயின் பண்றாய்ங்க.
அதனால இங்கிலீஷ் இயர், மன்த் அண்ட் டேட் ப்ளீஸ்
இ தற்கீடான ஆங்கில தேதியை கண்டுபிடிக்க ஒரு பிரபல வலைதளத்தை அணுகினேன். அது நவம்பர் 2 என்று காட்டியது. அப்புறம் பார்த்தால் ஜாதகர் அலறுகிறார். அண்ணே நான் பார்த்தா நவம்பர் 3 வருது என் கிறார். பிறகு லோக்கல் கம்ப்யூட்டர் ஜாதக சென்டரில் க்ராஸ் செக் செய்தால் ஜாதகர் சொன்னதே கரெக்ட். வ்லைதளம் சொன்னது. தவறு. யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்று நொந்து நூடுல்ஸாகிவிட்டேன்.
விஜய் அவர்களே,
ReplyDeleteநன்றி . நான் ஆஸ்ட்ரோ டாட்காம் வழங்கும் இலவச சாஃப்ட் வேரைத்தான் உபயோகிக்கிறேன். நாளிது வரை பிரச்சினை இல்லை. பலன் சொல்வது என் அனுபவத்தை வைத்தே சொல்கிறேன். பலன் கு.பட்சம் 35 சதவீதம் முதல் 83 சதவீதம் வரை பொருந்துவதாய் கிளையண்ட்ஸ் கூறுகின்றனர்
தாங்கள் குறிப்பிட்டுள்ள சாஃப்ட்வேரையும் முயற்சிக்கிறேன். மறுமொழிக்கு நன்றி