Saturday, May 29, 2010

"சேர்ந்து" வாழறவுகளுக்கு

கண்ணாலம், கச்சேரி, தாலி,மோதிரம் இதெல்லாம் இல்லாமயே வாழலாம்னு சுப்ரீம் கோர்ட்டே சொல்லிருச்சு. அவிக எதிர்கால பாதுகாப்புக்கும் ஒரு வழி சொல்லனும்ல .. அதை  இந்த பதிவுல சொல்லியிருக்கம்ல.

நிதி ஆதாரம் நிதி ஆதாரம்னிகிட்டு டாஸ்மாக்ல கல்லா கட்டி, இருக்கிற ஆம்பள பொம்பளைக்கெல்லாம் பாடை கட்டாமயே அரசு காசு புரட்ட 51 ஐடியா கொடுத்திருக்கேண்ணா. படிச்சு , கண்ண கட்டினா முழிச்சிக்கிராதிங்க அப்படியே ஒரு சாங் போடுங்க

ஓளிமயமான எதிர்காலம் கண்ணுக்கு தெரியும்


நிபந்தனை:
இந்த யோசனைகள் எனக்கு மட்டுமே சொந்தம்.(Intellectual property)  எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட அமலுக்கு இந்திய அரசு மானில அரசு நிர்வாகங்கள் மூலம்  நிதி திரட்டவே தீட்டப்பட்ட திட்டம் இது . அதற்காக அல்லாது சுயேச்சையாக இந்த யோசனைகளை அமல்படுத்த விரும்பும் மாநில அரசு(கள்) என் அனுமதியை பெற்ற பிறகே அமல் படுத்த வேண்டும். (இந்த பதிவின் பிரிண்ட் அவுட்டை என் விலாசத்துக்கே சீல் வைத்து ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பிக்கொண்ட பிறகே இங்கு பதிகிறேன். டேக் கேர்.


1.அரசு ஊழியர்களின் பல்வேறு தகுதிகள் மறு சோதனைக்குள்ளாக்கப்பட  வேண்டும்.
உடல் சார்ந்த சோதனைகள் முழுக்க முழுக்க வேறு மானிலங்களில் மட்டுமே நடக்க வேண்டும்.  நமது  மானிலத்தில்  கிளைகள் இல்லாத  வேற்று மானிலத்து தனியார்  மருத்துவ மனைகளிலேயே  நடக்கவேண்டும்.

புத்தி சார்ந்த சோதனை கம்ப்யூட்டரைஸ்ட் ஆப்ஜெக்டிவ் டைப்பில் நடக்க வேண்டும், மதிப்பெண்களை கம்ப்யூட்டரே நிர்ணயிக்க வேண்டும். அது ஆட்டோ மெட்டிக்காக அரசு வலைதளத்தில் பதிப்பிக்கப்பட்டுவிட வேண்டும். மன நலம் தொடர்புள்ள சோதனைகளும் இவ்விதத்திலேயே நடை பெறலாம். இச்சோதனைகளில் தகுதிபெற்றவர்களுக்கு மட்டுமே பணியில் தொடர அனுமதி.

 தகுதியிழந்தவர்களுக்கு தகுதிகளை வளர்த்துக்கொள்ள/தேவையான சிகிச்சை பெற  லாஸ் ஆஃப் பேயில் 3 மாதம் லீவு கொடுத்து மறுபடி சோதனைக்குட்படுத்தி அதிலும் தோற்றால் கட்டாய ஓய்வில் அனுப்பவேண்டும்.

இந்த அறிவிப்பை வெளியிட்டதுமே அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதிக்க வாய்ப்பிருப்பதால் முன் கூட்டியே  எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் மூலம் மூப்பு அடிப்படையில் தற்போதுள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கைக்கு இரட்டிப்பு எண்ணிக்கையில்  டெண்டர் அடிப்படையில் ( ஒரே தகுதி, குறைந்த பட்ச சம்பளம்) இளைஞர்/இளைஞியரை முன் கூட்டியே அப்பாயிண்ட் செய்து ரிசர்வில் வைத்து கொள்ள வேண்டும்.

 ஏற்கெனவே உள்ள காலியிடங்களுக்கும், மேற்சொன்ன மறு தேர்வில் டப்பாஸான (பாஸுக்கு ஆப்போசிட் தலைவா!)  பார்ட்டிகளால் ஏற்படும் காலியிடங்களையும் டெண்டர் அடிப்படையில் அதாவது  தேவையான தகுதியிருக்க வேண்டும்/குறைந்த சம்பளத்துக்கு பணியாற்ற முன் வருபவர்களை கொண்டு வேலையிடங்களை  நிரப்ப வேண்டும்.

பி.கு: மிச்சம் , மீதி உள்ளவர்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. அதெல்லாம் இந்த பதிவில் அவ்வப்போது சொல்லப்படும்.

2. பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவியருக்கு ஓய்வு நேரத்தில்/ லீவு நாட்களில் (அரசு நிறுவனங்களுக்கல்ல)  அரசு அலுவலகங்கள்,மருத்துவ மனைகள்,காவல் நிலையங்களை பார்வையிட்டு அறிக்கை தர தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க வேண்டும். ஆய்வு நடத்தவேண்டிய அலுவலகத்தை நிர்ணயிக்க ஜம்ப்ளிங் முறையை பின்பற்ற வேண்டும்.(இப்பத்தான் செல் ஃபோன் இருக்கே சரியா அவிக பணியிடத்தை  போய் சேர பிடிக்கும்  நேரத்துக்கு 5 நிமிடம் முன்பு மட்டுமே  எஸ்.எம்.எஸ் மூலமா தெரிவிச்சா போதும். எஸ்.எம்.எஸ் ரிசீவ் ஆன 3 ஆவது நிமிடம் அந்த ஃபோன் ப்ளாக் செய்யப்படவேண்டும்.  இதை கூட அவிக பயோடேட்டாவ அனலைஸ் பண்ணி  அவிக சாதி,சனம் இல்லாத ஏரியாவா அவிகளுக்கு டச் / அறிமுகமிருக்கிற துறையை ஐடென்டிஃபை செய்து கம்ப்யூட்டரே பணியிடத்தை டிசைட் பண்ணி எஸ்.எம்.எஸ் அனுப்பறாப்ல ஏற்பாடு செய்யனும்.

3.மக்களில் 18 வ‌ய‌து நிறைந்த‌ ஆண்,பெண் அனைவ‌ருக்கும் குறுகிய கால /45  நாட்கள் போலீஸ் ப‌யிற்சி க‌ட்டாய‌மாக்க‌ ப‌ட‌வேண்டும். போலீஸ் பயிற்சி பள்ளியிலான அக்கிரமங்கள் குறையலாம்/வெளிச்சத்துக்கு வரலாம்/ போலீஸ் வேலையிலான ரிஸ்க்/ சீரியஸ் நெஸ் புரியலாம். எட்டணா போஸ்ட் கார்டிலோ /எஸ்.எம்.எஸ்ஸிலோ கபாலிக்கும், ஏட்டுவுக்கும் நடக்கும் சம்பாஷணையாக ஜோக் எழுதி அனுப்பாமல் இருப்பார்கள் அல்லவா. மேலும் இவர்களது பயோடேட்டாக்கள் டேட்டா பேசில் ஏறிவிடும். நாளை இவர்கள் க்ரைமில் இறங்கினால் ட்ரேஸ் செய்வது எளிது. போலீஸ் துறை முழு வீச்சில் பணி செய்ய வேண்டுமானால் இப்போதுள்ள ஸ்டாஃபை போல் இன்னும் 2 செட் ஆட்கள் தேவை. ஷிஃப்ட் சிஸ்டத்தில் வேலை செய்ய வேண்டும். சின்ன மூவ் மெண்ட் கூட கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட வேண்டும். அப்பத்தானே அடுத்த ஷிஃப்ட் ஆளு தொடர முடியும்.

4.வேலைய‌ற்றோர்/அர‌சு ஊழிய‌ர்க‌ளில் எவ‌ரை எந்த‌ ப‌ணிக்கு வேண்டுமானாலும் அர‌சு ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ வ‌ழி வ‌கை செய்ய‌ வேண்டும். ஒரு மேன் பவர் பூல் கிரியேட் பண்ணி அதை கம்ப்யூட்டரைஸ் பண்ண வேண்டும். அவன் /அவள் தகுதிகளை/விருப்பங்களை  வைத்து எவன் எங்கே வேலை செய்யவேண்டும் என்று கம்ப்யூட்டர் முடிவு செய்யவேண்டும்.

5.ம‌க்க‌ள் த‌ங்க‌ளை குறித்த‌ விவ‌ர‌ங்க‌ளை க‌ம்ப்யூட்ட‌ர் புரிந்து கொள்ளும் வ‌கையிலான‌ ,10 ரூ. முத்திரை தாளில் அச்சிட‌ப்ப‌ட்ட‌ ப‌டிவ‌த்தில் அர‌சுக்கு அளிக்க‌ ஏற்பாடு செய்ய‌ வேண்டும். இந்த‌ விவ‌ர‌ங்க‌ள் அட‌ங்கிய‌ டேட்டா பேஸ் அடிப்ப‌டையில் அர‌சு திட்ட‌ங்க‌ள் வ‌குக்க‌ப்ப‌ட‌ வேண்டும். அமல் செய்வது உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தேவையான தொழில் நுட்பம், மேன் பவரை தருவதும், சூப்பர் வைஸ் செய்வதும்  மட்டுமே மாவட்ட இயந்திரத்தின் வேலையா இருக்கனும்.

6.அரசு விளம்பரங்கள் எக்காரணம் கொண்டும் பத்திரிக்கை,ரேடியோ , டி.வி சேனல்களில் வெளியிடப்பட கூடாது.(காசு செலவழித்து) அரசு சார்பில் வெளிவரும் பத்திரிக்கையில் மட்டுமே வெளியிடப்படவேண்டும். மானில முழுவதிலுமான மக்களுக்கு  தேவைப்படும் விளம்பரங்கள் மெயினாகவும் , மாவட்ட அளவில் மட்டுமே தேவைப்படும் விளம்பரங்கள்  தனி இணைப்பாகவும் வெளியாக வேண்டும். தேவைப்பட்டவர்கள் வாங்கி படிக்கலாம் அ இணையத்தில் பார்த்துக்கொள்ளலாம்.  மேற்படி அரசிதழுக்கு ஜம்ப்ளிங் முறையில் தினம் ஒரு பிரபல பத்திரிக்காசிரியர் ஆசிரியத்வம் வகிக்கலாம்.

7.அரசு அலுவலகங்கள், பள்ளிகள்,கல்லூரிகள் அனைத்தும் டைம் ஷேர் முறையில் வேலை செய்யவேண்டும். அரசு  வேலை நேரமல்லாத  நேரத்தில் தனியார் அங்குள்ள இன்ஃப்ரா ஸ்ட் ரக்சரை வாடகை செலுத்தி பயன் படுத்திக்கொள்ள வழிவகை செய்யவேண்டும். (அதிக பட்ச காஷன் டெப்பாசிட்/ பேங்க் கியாரண்டி வசூலித்துக்கொண்டு)

8.அதற்கு முன்பாக மேற்சொன்ன ஸ்தலங்களின் அமைப்பை பொருத்து காலை 6.30 முதல் மதியம் 2.30 வரை போதிய சூரிய வெளிச்சம், காற்று வரும்படி ஆல்ட்டர் செய்யவேண்டும். ஷாபிங்க் காம்ப்ளெக்ஸ், மரம் நடுதல் , காற்றாலை அமைத்தல், சோலார் பவர் யூனிட் ஸ்தாபித்தல் இத்யாதி மார்கங்கள் மூலம் கூடுதல்  வருவாய்க்கு வழி செய்யவேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் கூடுதல் தளம் (ஸ்டேர்) அமைக்கலாம். அது ஆடும் பல்லாயிருந்தால் இடித்து தள்ளி புதிய கட்டிடமே கட்டலாம்.  BOT முறையில் ( Build-Operate-Transfer)  புதிய கட்டிடம் கட்டுவதாயின் அண்டர் கிரவுண்டில் பார்க்கிங் ஏற்பாடு செய்யலாம். இந்த ஒப்பந்தம் டைம் பவுண்டடாக இருக்கவேண்டும். காலம் தவறினால் (புயல் மழை தவிர்த்து இதர காரணங்களால் ஒப்பந்த காரரின் சொத்து ஜப்தி செய்யப்படவேண்டும்)

9.வாரத்துக்கு ஒரு தினத்தை சுற்று சூழல் தினமாக அறிவித்து அன்று அனைத்து தனியார் வாகனங்களையும் ( பஸ்ஸு, கூட்ஸ் கேரியர் லாரி வரை விட்டுடலாம் பாஸ். எஸ்காம்  தெரிஞ்ச கதைதானே) தடை செய்யலாம். மீறி போய் தான் ஆவேன்னா ஒரு மரம் நட்டு அதை பராமரிக்கிற செலவை அந்த பார்ட்டிக்கிட்டருந்து வசூலிக்கலாம்.

10.காவல் துறை உட்பட அரசு துறைகளுக்கு எழுத/அனுப்பப்படும் விண்ணப்பங்கள்/புகார்கள் அஃபிடவிட்டுடன் அனுப்ப வழி செய்யவேண்டும். பொய்/தவறான தகவல் என்று நிரூபணமானால் ரூ.500 வரை அபராதம் விதிக்கலாம்.

11. சாதா தந்தி,அவசர தந்தி போல  1 மணி முதல் 24 மணி  நேரத்தில் தீர்வு தேவைப்படும்/கோரப்படும் ரெப்ரசன்டேஷன்ஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ரூ.500 காஷன் டெப்பாசிட்டாக செலுத்தப்படவேண்டும். அதில் தவறு/பொய் இருந்தால் கா.டெப்பாசிட் ஸ்வாஹா

12.பஞ்சாயத்து மீட்டிங் ஹால் முதல் சட்டமன்றம் ஈறாக கூட்டம் நடக்காத காலங்களில் தனியாருக்கு வாடகைக்கு விட்டு பணம் பார்க்கலாம். என்னைக்கேட்டால் சட்டமன்ற கூட்டமே வீண் வேலை .வெறுமனே மேசையை தட்டிக்கொண்டு , கண்ணாடியை பறித்துக்கொண்டு, சேலையை உறித்துக்கொண்டு.. பேசாமல் வீடியோ கான்ஃப்ரன்ஸ் முறையில் கதையை முடிக்கலாம். (இது சட்டமன்ற உரிமைக்குழு நடவடிக்கைக்கு இலக்காகாதில்லிங்களா?)

13.காவல்,மருத்துவம், தீயணைப்பு தவிர மற்ற அனைத்து வாகனங்களையும் க்ளோபல் டெண்டர் அழைத்து விற்றுத்தொலைக்க வேண்டும் . பேசாமல் கி.மீ க்கு இவ்வளவு என்று காண்ட் ராக்டில் அமர்த்திக்கொள்வது பெஸ்ட் ஆஃபர்.

14. நாள் முழுக்க அலர்ட்டில் இருக்க வேண்டிய துறைகளை தவிர மற்ற துறைகள் அனைத்தும் தினம் காலை 6.30 முதல் மதியம் 2.30 வரை  உண்மையாக வேலை செய்தால் போதும். என்ன டேபிளுக்கே டீ, நிகோடின் சாக்லெட்,சிக்லெட்,டிஃபன், லஞ்ச், ஒழுங்கான கழிவறை வசதி ஏற்பாடு செய்யவேண்டும்.(இவிக 10 மணிக்கு வந்து 12 வரை டீ கடைல இருந்துட்டு மறுபடி டீ கடைக்கு போய் ராத்திரியெல்லாம் வேலை பார்க்கிறதா பம்மாத்து பண்ண அரசு செலவழிக்கிறதை விட இது ஒன்னும் வீணில்லா)
15.முதற்கண் எல்லா பேப்பர்ஸையும் டிஜிட்டலைஸ் பண்ணிரனும். அதை ஒட்டு மொத்த மானில அரசு இயந்திரத்துக்கு அவெய்லபிளா வைக்கலாம். 15 நாளைக்கு முந்தைய காகிதம் கேட்டு யாராச்சும் வந்தா சர்ச் ஃபீ ரூ 10 வசூலிச்சிக்கிட்டு சூடா ஒரு ப்ரிண்ட் அவுட் கொடுத்துரலாம். ( லெட்டர் காபி கேட்டு சென்னைக்கு எழுதியிருக்கோம்ங்கற பருப்பெல்லாம் வேகாதில்லை). இவிக ஆஃபீசுகளுக்கு திரிஞ்சு திரிஞ்சு தேஞ்சு போற 12 ஜோடி செருப்போட விலையோட ஒப்பிட்டா பத்து ரூபால்லாம் ஜுஜுபி.

16.அரசு பள்ளி, கல்லூரி,ஐ.டி.ஐ,பல்கலை இதெல்லாம் படிப்படியா சொந்த கால்ல நிக்க (அரசு க்ராண்ட் எதிர்பார்க்காம) வழிவகை செய்யனும். உ.ம் வாய்ப்புகளை பொருத்து ஷாப்பிங் காம்ப்ளெக்ஸுகள், டைம் ஷேர் சிஸ்டம், சோலார் பவர், பயோ கேஸ் யூனிட்ஸ்,காற்றாலைகள்.

17.அரசுத்துறையில் நட்டம் வந்தால் துறை அதிகாரி முதல் ஊழியர் வரை அனைவருக்கும் அவரவர் சம்பள விகிதப்படி ஷேர் பண்ணிரனும். அதே போல இதுவரை வந்த லாபத்தை விட கூடுதலா லாபம் வந்தாலும் கூடுதல் லாபத்தை  பிரிச்சு  (சம்பளங்களின் விகிதத்துல ) கொடுத்துரனும்.

18.ஆடி,மார்கழி மாதத்திலான சொத்து விற்றல்,வாங்கல் பதிவுகளுக்கு பத்திர செலவு, பதிவு கட்டணத்தில் 10% தள்ளுபடி.(இது ஏதுக்குனு கேட்டா பதில் அப்புறமா சொல்றேண்ணா)

19.மேற்படி பல வழிகள்ள செலவுகள் குறைஞ்சு, வருவாய் அதிகரிக்கும்போது ஏழை மக்களுக்கு கு.ப வாடகையில் வீடுகள், கடைகள் கட்டித்தரவேண்டும். எவரும் 2 1/2 வருடங்களுக்கு மிஞ்சி அதே வீட்டில் அ கடையில் இல்லாதவாறும் குலுக்கல் முறையில் பந்தாடிக்கொண்டே இருக்கவேண்டும். அலாட்மென்டும் இதே முறையில்  நடக்க வேண்டும். (இதனால அரசுக்கு மெடிக்கல் பில் குறையும், க்ரைம் ரேட் குறையும், வரி வசூல் அதிகமாகும்)

20.திருமலைல சிறப்பு தரிசனம் மாதிரி ஸ்பெஷல் பவர் கனெக்சன் கொடுக்கலாம். கொழுத்தவங்கள் வாங்கிக்குவாங்க. ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் குவாலிட்டி கரண்ட் வித்தவுட் இன்டரப்ஷன் கொடுக்கலாம்.  டபுள் சார்ஜ் போடலாம். அப்போ சாதா பவருக்கு தர்ர சப்சிடியும் ஓரளவு கவர் ஆகும். எதிர்கால முதலீட்டுக்கும் வழி ஏற்படும். இலவச மின்சாரம்னு வழங்கறோம் . கணக்கில்லை.வழக்கில்லை. ஜெயலலிதா அம்மையார் அடையாள சம்பளம் வாங்கிக்கிட்ட மாதிரி அடையாள கட்டணமா ஒரு ரூபாயாச்சும் வசூல் பண்ணனும். அப்போ எல்லா பயனாளியோட ஜாதகமும் டேட்டா பேஸுக்கு வந்துரும்.  லட்ச ரூபா பைக் வாங்கறவன் யாரு, ரஹ்மான் ஸ்டார் நைட்டுக்கு போறவன் யாருனு மொத்த டேட்டாவையும் கலெக்ட் பண்ணி பயனாளி பட்டியல்ல இருந்து தூக்கிக்கிட்டே வரவேண்டியதுதான்.

21.அரசு அதிகாரிகள் இன்ஸ்பெக்சனுக்கு போனா தங்க ஜனதா கெஸ்ட் ஹவுசஸ் கட்டனும்.  பராமரிப்பு பொறுப்பை ஆண்கள் சுய உதவி குழுக்களுக்கு தரலாம். பெண்கள் குழுவுக்கு தந்தா நித்யானந்தா சமாசாரம் எதுனா நடந்துரலாம்னு ஒரு முன்னெச்சரிக்கைதான்.

22.அரைப்பக்கத்துக்கு மிஞ்சி விளம்பரம் தர்ர எந்த நிறுவனமா இருந்தாலும் வரி வசூலிக்கனும். அன் ப்ரொடக்டிவ் விளம்பரங்கள் கட்சி, கருமாந்திரம், பிறந்த நாள் வாழ்த்து, விளம்ப்ரம் தரக்கூடாத விஷயங்களுக்கு விளம்பரம் தந்தாலும் டாக்ஸு
எதுவானாலும் இதான் ரூலு.

23.ஞாயிறு கடை திறந்துக்க. வேலையாட்கள் கிட்டேருந்து என்.ஓ.சி கொடு. டாக்ஸ் கட்டு.

24.ஒரு படம் 100 நாள் ஓடினா டாக்ஸ் ( மனித வேலை நாட்களை வீணாக்கினதுக்கு நஷ்ட ஈடு)

25.அன் ப்ரொடக்டிவ் ஃபங்க்சன் பண்ணா (மண்டபத்துல வச்சி) டாக்ஸு உ.ம்:. கண்ணாலம், சீமந்தம்,பாப்பாவுக்கு பிறந்த நாள்.

26.ஃப்ளெக்ஸ் வச்சா ஒரு நாளைக்கு இவ்ளோனு டாக்ஸு

27.ஊர்வலம், கூட்டம் ,தர்ணா,கடையடைப்பு  நடத்தினா டாக்ஸு.

28.அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கும் செல்ஃபோன். பரஸ்பர ஃப்ரீ கால் வசதியுடன். (டெலிஃபோன்ஸ் எல்லாம் வாபஸ்)

29.அரிசி அட்டை வச்சிருந்து தனியார் நர்சிங் ஹோம்ல குழந்தை பெத்தா டாக்ஸு.
(அதுக்கு மின்னாடி இன் குபேட்டர் ஷார்ட் ஆயிராம, ஆக்சிஜன் சிலிண்டருக்கு பத்தாக்குறை வராம பார்த்துக்கனும்ணா இல்லேன்னா ஆஸ்பத்திரியை பத்தவச்சுருவாய்ங்க)

30. ரெண்ட் அக்ரிமெண்ட் விஷ்யத்துல (ஷாப் /ஹவுஸ்) ரீஃபண்டபிள் அட்வான்ஸ்ல 40% அரசு சேமிப்பு பத்திரமா தான் வழங்கப்படனும். பெண்ணை பெத்தவங்க பெண்ணுக்கு பரிசா ( வரதட்சிணை?) தர்ர கோல்டை கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம் மூலமாவும், கேஷை அரசாங்க சிறு சேமிப்பு பத்திர மூலமாவும் தான் தரணும்)

31அரசாங்க வெப்சைட்டில் மேட் ரி மோனி, ஆன் லைன் ஜாப்ஸ், சாட் வித் இன்டெலெக்சுவல்ஸ்,ப்ரொஃபெஷ்னல்ஸ் எல்லாம் வைக்கலாம். அரசே ஒரு சர்ச் இஞ்சின் வைக்கலாம். ஒரு திரட்டி வைக்கலாம் . ப்ரவுசர்ஸ் கருத்துப்படி சிறந்த பதிவுகளுக்கு தினசரி 1000, 500, 250 ரூ பரிசு தரலாம்.

32.லைசென்ஸ் இத்யாதில கூட அர்ஜெண்ட் ஆர்டினரினு வச்சி டபுள் சார்ஜ் பண்ணலாம். அவசரத்துக்கு பிறந்த பயலுவ செலவழிக்கட்டுமே.

33. கொரியர் கம்பெனிகளோட ஒப்பந்தம் வச்சிக்கிட்டு கேஸ்ட்,இன் கம், சாதி சர்ட்டிஃபிகேட்டையெல்லாம் டோர் டெலிவரி தரலாம். அட் ரசும் ப்ரூவ் ஆகும்.பைசாவும் பெயரும்.

34.பொல்யூஷனை க்ரியேட் பண்ற தொழிலுக்கெல்லாம் அந்த பொல்யூஷனை ரெக்டிஃபை பண்ண எத்தனை மரம் நடனும், அதுக்கு என்ன செலவாகும்னு கணக்கு போட்டு வசூலிக்கலாம்.

35.கல்யாணமாகாத, வேலையில்லாத ஆண் பெண்களை கெஜட்டட் ஆஃபீசர் ஒருத்தர் ஐடென்டிஃபை பண்ற மாதிரி ஏற்பாடு பண்ணனும் .அவிகளுக்கு அரசே ஐ.டி வழங்கனும். விடோயர்ஸ், டைவோர்ஸீஸ், நோயாளி பெண்டாட்டி, நோயாளி கணவனுள்ளவங்களையும் இப்படி ஐடென்டிஃபை பண்ணி ஐ.டி கொடுக்கிறது நல்லது. இந்த விவரங்களை அந்தந்த ஏரியா ஸ்டேஷனுக்கு அவெய்லபிள்ள வைக்கனும். (செக்ஸ் க்ரைமுக்கு இதான் அடிப்படை ) இவிகளுக்கு கவுன்சலிங் தர ஏற்பாடு பண்ணனும் . இவிகளுக்கு சங்கம் வச்சு கூட்டி சாரி கூடி பழக வழி செய்தாலும் ஓகே. ஊத்தி கொடுக்கிறதை விட இது பெட்டர். ஏன்னா நிப்பிள் காம்ப்ளெக்ஸால தான் குடிக்கவே ஆரம்பிக்கிறாய்ங்களாம்.

36.ஊருக்கொரு ஜனதா மீட்டிங் ஹால். வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ 100+ பவர் சார்ஜ்

37.கல்யாணமாகாம சேர்ந்து வாழ விரும்பறவுகளுக்கு டெம்ப்ரரி ரெஜிஸ்ட் ரேஷன் செய்யலாம்.

38. ஐம்பது பேருக்கு மேல சாப்பிடற மெஸ்,ஹோட்டல், கல்யாண மண்டபம் எல்லா இடத்துலயும் பயோகேஸ் யூனிட் அமைக்கறத கட்டாயமாக்கனும்.

39.குக்கர் இல்லாத வீடுகளுக்கு குக்கரும், கேஸ் இல்லாத வீடுகளுக்கு கேஸும் கட்டாயமா கொடுத்தாகனும். இதனால தண்ணீர் வினியோகம், எரிபொருள் வினியோகம்,பொல்யூஷன் மானாவாரியா குறையும்.

40.லாரி மூலம் தண்ணி சப்ளை பண்றாய்ங்க. ஃபில்லிங்க் பாயிண்ட்லருந்து பைப் லைன் போட்டு அழனும்.

41.பஸ் ஸ்டாண்ட் , பொது இடங்கள் மேல மத்தில ஓப்பன் வராப்ல (வெண்டிலேஷன்/ ஏர் பர்ப்பஸ்) கான் க்ரீட் கூரை அமைச்சு நடை பாதை பார்ட்டிகளுக்கெல்லாம் கழிவறைல பாதி சைஸ்ல கடை போட்டு கொடுக்கனும்.

42. வருமான வரி வசூலை அந்தந்த வியாபரிகள் சங்கங்கள் கிட்டயே ஒப்படைச்சுரனும். என்ன ஒரு வருஷ வரி முன் பணமா கட்டனும். அரசு கொடுத்த டார்கெட்டை கவர் பண்ணனும் .ஆண்டுக்கு குறிப்பிட்ட சதவீதம் டார்கெட் உயர்ந்துகிட்டே போகுங்கற கண்டிஷனை ஏத்துக்கனும்.

43.அரசு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் பிள்ளைங்களை வச்சி நியூஸ் ரீல் மாதிரி இல்லாம ஸ்வாரஸ்யமா நோய் தடுப்பு, கருத்தடுப்பு, வன்முறை தடுப்பு,குற்றத்தடுப்பு மாதிரி சமாசாரங்களை படமா எடுக்க செய்து சி.டி.போட்டு வினியோகம் பண்ணனும். கலர் டிவியே  கொடுத்தாச்சு அடுத்த ஸ்டெப் குட்டியா (சி)மடி ப்ளேயர் தான் .

44.அரசு ஊழியர்களுக்கு (ஆண்- பேண்ட் சட்டை ,பெண்-சுடிதார் சீருடை) தொந்தி போட்டு,பின் பக்கம் பெருத்துப்போன பார்ட்டிகள் மட்டும் வேட்டி,புடவை கட்டிக்கிட்டு அழட்டும் அதை பார்த்து யார் அழறது. ஆஃபீசுக்குள்ளாற எந்த ரூமுக்கும் கதவே இருக்க கூடாது. இருந்தா கச முசா ஆரம்பிச்சுர்ராய்ங்க. கண்ணாடி கதவுதான் .சன் ஃபிலிமும் ஒட்டக்கூடாது. புதுசா கட்டற ஆஃபீசெல்லாம் நவகிரக சன்னிதி மாதிரி இருக்கனும். ஒருத்தன் மூதியை அடுத்தவன் பார்க்க கூடாது. மத்தில இருக்கிற அதிகாரி மட்டும் எல்லாத்தையும் பார்க்க சுழல் நாற்காலி. சவுண்ட் பொல்யூஷனுன்னா எஸ்.டி.டி பூத்மாதிரி கண்ணாடி,கொடுக்கல் வாங்கலுக்கு (பேப்பருங்கண்ணா) கவுண்டர். முக்கியமான சேதி ஆஃபீசுக்குள்ளாற வந்தபிறவு ஆண்களோட பாக்கெட் ட்ரான்ஸ்பரண்டா இருக்கனும். பெண்களோட  பர்ஸு, ஹேண்ட் பாகு எல்லாமே ட்ரான்ஸ்பரண்டா இருக்கனும். (மிஞ்சி போனா ரெண்டு பேட் இருக்கப்போவுது அவ்ளதானே. டிவில பார்த்து பார்த்து 3வயசு குழந்தைக்கு கூட என்ன சமாசாரம்னு தெரிஞ்சு போனபிறவு என்னத்த சீக்ரெட்டு.

45.துட்டு போனா ...ரே போச்சுன்னு எல்லா கம்ப்யூட்டருக்கும் இன்டர் நெட் கனெக்சன். அவன் ப்ரவுசிங் ஹிஸ்டரியை டெலிட் பண்ண முடியாம லாக்கு.

46. தேவையான எல்லா இடத்துலயும் ஆண் பெண்களுக்கு தனித்தனி கழிவறை. கழிவிலிருந்து பயோ கேஸ் தயாரிக்க யூனிட்.

47. என்னை மாதிரி ஐடியா ஐயா சாமிகளுக்கு கொஞ்சம் சில்லறை , வெத்திலை பாக்கு

48.இந்த மாதிரி அறுவையை தாங்கிக்கிட்டு தொடர்ந்து படிக்கிற உத்தமர்களுக்கு ஜண்டு பாம் தைலம் ஒரு டப்பா

49.இதை அமல் படுத்த ஆரம்பிக்கும்போது வாய் திறக்கற ஆசாமிகளோட வாயை மூட பவர்ஃபுல் சலஃபைன் டேப்

50.சகட்டு மேனிக்கு ஸ்டே கொடுத்து தள்ளி தீர்ப்பு எழுதிராம எல்லா  ஜட்ஜுகளுக்கும்  மூடியே  திறக்காத பேனா.

51.பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி என்று அடிமடியிலயே கை வச்சாலும் இத்தனை பாயிண்ட்ஸை ஞா வரவச்சு, புதுசாவும் எடுத்து கொடுத்த கிட்ணமூர்த்திக்கு அரட்டை அரங்கம் ஸ்டைல்ல  நன்றி நன்றி நன்றி

No comments:

Post a Comment