Tuesday, December 14, 2010

இறந்தவன் பேசுகிறேன்

மரணம்னா என்ன? நான் இல்லாத உலகம். இத்தனை நாள் மட்டும்  நான் இந்த உலகத்துல இருந்ததுக்கு என்ன ஆதாரம்? ஒரு ம..ரும் கிடையாது. உலகத்தோட பேச்சு எனக்கு மையமா ,கிசு கிசுன்னு தான்   கேட்குது. என் பேச்சு இந்த உலகத்துக்கு கேட்டதே இல்லை.

உலகம் பாட்டுக்குஅது ரூட்ல அது போய்க்கினு கீது. போற பாதைதான் அழிவுப்பாதைங்கறது என் தாழ்ந்த அபிப்ராயம். பாய்ண்ட் டு பாய்ண்ட் பஸ் மாதிரி வேகமா போகுது.

நான் பாட்டுக்கு என் உலகத்துல இருந்துக்கிட்டு புது உலகத்தை கற்பனை பண்ணிக்கிட்டிருக்கேன். என் கற்பனையால இந்த உலகத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

இந்த உலகத்தால எனக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. பாதிப்புன்னா .. ஒரு காலத்துல ரஜினி பட பாதிப்புல "பணம் பணம் பணம் .. பணம் என்னடா பணம் "னு வசனம் விட்டுக்கிட்டிருந்தன்.

இப்போ இந்த உலகம் நம்மை பாதிக்கக்கூடாதுன்னா.. நாம நம்ம ரூட்ல போகனும்னா கொஞ்சம் பணம் கூட தேவைப்பான்னு வர்ரதை வேணாம்னாம வாங்கிக்கிறேன். அதை மகள் கிட்டே கொடுத்துர்ரன். தினசரி ரூ.20 வாங்கிக்கிறேன். இதுக்கு மின்னாடியெல்லாம் 30 இப்போ வீட்டுக்கே ப்ராண் பாண்ட் வந்துட்டதால 20ரூ தேன்.

இந்த மரணத்தை பத்தி ரோசிக்க ஆரம்பிச்சது ஒரு வகையில நல்லதா போச்சுங்கண்னா. எது முக்கியம் எது முக்கியமில்லைங்கற சந்தேகம் வரப்பல்லாம் ஒரே கேள்வி தான் கேட்டுப்பன்.

இதுனால நாம செத்துப்போயிருவமா? இது நம்மை சாவை தள்ளிப்போடுமா? இது நம்ம சாவுக்கப்பாறமும் தொடருமா?

மரணத்தை பத்தின சிந்தனை இல்லாத வாழ்க்கை செத்துப்போகுதுங்கண்ணா. மரணத்தை பத்தின சிந்தனை செத்துப்போன  வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்குதுங்கண்ணா..

இதான் வாழ்க்கையின் முரண்பாடு. ஒய்.எஸ்.ஆர் செத்துப்போயிட்டாரு. என்னாட்டம் ஆளுங்க அவரை புகழோ புகழ்னு புகழறோம். காங்கிரஸ்லயே சில கருங்காலிங்க அவரை சாக்கடைத்தனமா விமர்சிக்கிறாய்ங்க. ஆனால் சோனியா மட்டும் உத்தமியாம்.

ஒரு வேளை ... ஒரு வாதத்துக்கு வச்சுக்குவம். ஒய்.எஸ். கொள்ளையடிச்சிருந்தா சோனியா பார்த்துக்கிட்டா இருந்தாய்ங்க.. அப்ப அவிகளுக்கும் ஷேர் போச்சானு கேட்டா இவிக முகத்தை எங்கன கொண்டு போய் வச்சுக்குவாய்ங்க.

பாய்ண்டுக்கு வரேன். ஒய்.எஸ் இறந்துட்டாரு. அவரை புகழ்ந்தாலோ ..இகழ்ந்தாலோ அவர் ரெஸ்பாண்ட் ஆகப்போறதில்லை.  அப்படியே வேறு ஒரு தளத்துல ரெஸ்பாண்ட் ஆனாலும் நமக்கு தெரிய போறதில்லை.

என் நிலையும் 99.99 சதவீத அதானே. பதிவுலகத்துல என்னோட ரெண்டாவது இன்னிங்ஸ்ல விமர்சனங்கள் மேலே  ரெம்ப காட்டமா ரெஸ்பாண்ட் ஆகிக்கிட்டிருந்தேன். ஆனால் இப்போ .. அதையும் விட்டாச்சு.

மரணம்னா இதானே. நான் இல்லாத உலகம். நான் இருந்தும் இந்த உலகத்தை அழிவுப்பாதையில இருந்து இம்மி கூட திருப்ப முடியலை. அப்போ நான் இறந்தவன் தானே. இது நான் இல்லாத உலகம் தானே.


இந்த பதிவுலகத்தையே எடுத்துக்குவம். ரெண்டாவது இன்னிங்சை துவக்கி மாஞ்சு மாஞ்சு எழுத ஆரம்பிச்சு 3 வருஷம் ஆகப்போகுது. ஒரே ஒரு கடுகளவும் மாற்றத்தையாவது ஏற்படுத்த முடிஞ்சதா? இல்லை.

பாடாவதி சினிமாவுக்கு பக்கம் பக்கமா விமர்சனம், சூப்பற ஸ்டாருக்கு பிறந்த தினம்னா பதிவு.. கோலம், விரதம் எதுலயும் மாற்றமில்லை. அப்போ நான் இறந்தவன் தானே.

ஆனால் ஒன்னுங்கண்ணா நான் இறந்தவனோனு மதிமயங்கற அளவுக்காச்சும் கொஞ்சம் போல சொரணையிருக்குதுன்னா. மஸ்தா பேருக்கு அவிக செத்துக்கிட்டிருக்காய்ங்கங்கற சொரணை கூட இல்லிங்கண்ணா..

1 comment:

  1. நான் நினைத்திருந்ததை சொல்லிவிட்டீங்க...

    நம்ம சனங்கள்... பிறப்புக்கு வாங்கன்னாலும் வரமாட்டாய்ங்க, சாவுக்கு வாங்கங்ன்னாலும் வரமாட்டாய்ங்க, அட கருமாதிக்கு கூட வரமாட்டாய்ங்க... என்ன செய்யமுடியும்?

    அருட்பிரகாச வள்ளலாரே “போங்கடா கொய்யாலே” னு போய்ட்டாரு. சாக்ரடீஸும் உங்களுக்காக ”நான் விஷம் குடிச்சி சாகரேண்டா” னு போய்ட்டாரு...

    நாம இப்படியெல்லாம் நம்ம மூளையை கசக்கி பிழியறதுக்கு செத்தவனா இருக்கிறது மிக நல்லது...

    அய்யா... நாம வாங்கி வந்த வரம் அப்படி... பேசாம முட்டாளா இருந்த்திருக்கலாம்... (ஆனா..இப்ப கூட அப்படித்தானு நக்கலடிப்பாய்ங்க... :)

    ReplyDelete