Sunday, May 9, 2010

ஜோதிடப்படி பெண்கள் 9 வகை

அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு இந்த பளீர் பதிவோட 

மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி, 

மனதுக்கு பிடித்தவரோடு படுத்தபடி

என்ற இரண்டு தனிப்பதிவுகளையும் போட்டிருக்கேண்ணா. அந்தந்த தலைப்பு மேல க்ளிக்கி படிச்சுட்டு உங்க கருத்தை சொல்ல மறந்துராதிங்கண்ணா

வாத்சாயனர் பெண்களை நாலு வகையா பிரிச்சாரு. நானே ஒரு பதிவுல  மனிதர்களை 2 வகையா பிரிச்சிருந்தேன். சூரிய மனிதர்கள்,சந்திர மனிதர்கள். மனிதர்கள்னா அதுலபெண்கள் கூடத்தானே அடக்கம். ஆனா ஜோதிடப்படி பெண்களை 9 வகையா பிரிக்கலாம். (ஹி ஹி ஆண்களை கூட இப்படி பிரிக்கலாம்ங்கண்ணா.. ஆண்களை பத்தி எழுதினா பெண்களே படிக்க மாட்டாங்களே. இதே பெண்களை பத்தி எழுதினா பக்கத்து ஆத்து பத்மினியை பத்தி தெரிஞ்சுக்க இந்தாத்து பரிமளம் படிப்பாய்ங்க. அதான் இந்த பதிவு பெண்களை பத்தி மட்டும் பேசுது)

மொத்தம் 9 கிரகங்கள். இதுல குறிப்பிட்ட பெண் மேல எந்த கிரகத்தோட இம்பேக்ட் அதிகமா இருக்குதோ (லீடிங்க் ப்ளானட் அ லக்னத்தில், ஏழில் ஆட்சி,உச்சம் பெற்ற கிரகம்) அதைவச்சு அவிகள் அந்த கேட்டகிரில சேர்க்கலாம். ஜாதகம் பார்த்து அவிக கேரக்டரை சொல்ற மாதிரியே அவிக ஃபிசிக், பேச்சு, நடவடிக்கைய வச்சு அவிகளை லீட் பண்ற கிரகம் எதுன்னு கூட கண்டுக்கலாம்.


மேலும் ஆண்கள் ஜாதகத்துல பெண்களை காட்டற இடங்கள் சிலது உண்டு.  மூன்றாமிடம் இது சகோதிரிகளை காட்டுது. நான்காமிடம் தாயை, தாய் வழி உறவிலான பெண்களை  காட்டுது. ஐந்தாமிடம் மகளை காட்டுது,6 ஆமிடம் எதிரியாகிவிட்ட பெண்ணையும் ,கடன் கொடுத்த பெண்ணையும் , உங்க மேல வழக்கு தொடுத்த பெண்ணையும்  7 ஆமிடம் பார்ட்னராயிருக்க கூடிய பெண்ணையும் மனைவி காதலிகளையும்(?)  காட்டுது. எட்டாமிடம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய பெண்ணையும், 9 ஆமிடம் தந்தை வழியிலான உறவுகளில் உள்ள பெண்களையும், 10 ஆமிடம் கொலிக்சை, 11 ஆமிடம் ரெண்டாவது செட்டப்பை, 12 ஆவது இடம் சிறப்பு விருந்தினர்களை காட்டுது.

அந்தந்த இடத்துக்கு தொடர்புடைய கிரகங்களை வச்சு ஒரு ஆணோட தாய்,மகள் இத்யாதியெல்லாம் எந்த கேரக்டரோட இருப்பாய்ங்கனு கெஸ் பண்ணலாம். இதை வச்சு இன்னம் கொஞ்சம் உசாரா டேக்கிள் பண்ணலாம். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளவும் ஒரு தாய் இருக்காள். அந்த பெண் எவ்ள மோசமான கேரக்டரா இருந்தாலும் அவளுக்குள்ள இருக்கிற தாயை தட்டி எழுப்பிட்டா ஆதிபராசக்தி மாதிரி ஆகி நம்மை காத்து ரட்சிப்பாள். பல தடவை சொன்ன டயலாக் தான் பெண் இயற்கையின் பிரதி. நிதி. பிரதி நிதி. இயற்கை தாயின் வடிவம். தாய் இயற்கையின் வடிவம். அவளுக்குள்ள இருக்கிற தாயை கண்டறிஞ்சு அவளை சரணடைஞ்சவங்களுக்கு பூவுலகமே சொர்கம். அவளை அடக்கியாள நினைக்கிறவங்களுக்கு ..........அதை ஏன் சொல்வானேன். பல பேரு அனுபவிச்சிக்கிட்டுதானே இருக்கோம்.

ஒரு பெண்ணுக்குள்ள இரண்டு பெண்கள் இருக்காய்ங்க. ஒன்னு இந்த இயற்கையின் மறுவடிவமா தன்னை என்னதான் சுரண்டி பேயாக்க பார்த்தாலும் அதுக்கு மசியாம வெறுமனே இரக்கத்தால,கருணையால (ஒழியுது போ அவரும் தன் கோவத்தை வேற எங்க காட்டுவார்) அன்பே வடிவா இருக்கிற பெண்ணும் இருக்கா.

அடுத்தபடியா ஃபிசிக்கல் வீக்னெஸ் தந்த சைக்கலாஜிக்கல் ஸ்ட்ரெங்க்த்தை  வச்சுக்கிட்டு சதி பண்ணியே ஒரு கதியாக்கிர்ர பெண்ணும் இருக்கா.

இதுல யாரை கம் இன் சொல்றிங்களோ அதை பொருத்துதான் உங்க லைஃப். சரி மொக்கை ரொம்ப சாஸ்தியாயிருச்சு விஷயத்துக்கு வரேன்.

1.சூரிய பெண்கள்
2.சந்திர பெண்கள்

(இந்த ரெண்டு கேட்டகிரிய பத்தி - சைதாப்பேட்டை வடகறியில்லிங்கோவ்- ஏற்கெனவே ஒரு தனிப்பதிவே போட்டிருக்கேன் அதை படிக்க இங்கே அழுத்துங்க)

3.செவ்வாய் பெண்கள்:
ஜாதகத்துல செவ்வாய் நல்லபடி உட்கார்ந்திருந்தா சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர்  கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். செவ்வாய் தொடர்பான தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.

(மேலதிக விவரங்களுக்கு எனது அனுபவ ஜோதிடம் வலைப்பூவில்  செவ்வாய் ஸ்பீக்கிங் என்ற பதிவை படிக்க இங்கே அழுத்தவும்)

நல்ல  ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.

பலம் பெற்ற செவ்வாய் 3,6,10,11 இடங்களை தவிர வேறு இடங்கள்ள அமைஞ்சுட்டா அவசரம், முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால் இம்சை. காதல். கலாட்டா கல்யாணம். ரத்த சோகை. ஒழுங்கற்ற மாதவிலக்கு சக்கரம். பிரிவுகள். செவ்வாய் தொழில்களில் ஆர்வம் இன்மை. நஷ்டம். சகோதர வகையில் வீண் விரோதங்கள்.

4.ராகு பெண்கள்:
(Already I had described a log  in my posts related to sarpadosham

5.குரு தொடர்பான பெண்கள்:
குரு சுப பலமாய் இருந்தால் நடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை.  நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல  யோசனை சொல்லுதல்,  நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம்.  ஆனால் இவர்களில் பலருக்கு ஆண் குழந்தை பிறவாது போகலாம்.

குரு அசுப பலமாய் இருந்தால்:
அஜீரணம், வாய் கோளாறு, ஞா சக்தி குறைவு, பொருளாதார பற்றாக்குறை, பிராமணர்கள், முதியோருடன் சச்சரவுகள், பொருளாதார குற்றங்களில் ஈடுபடுதல், முறையற்ற அரசியல் செல்வாக்கு பெற துடித்தல், தூர திருஷ்டியின்மை. இவர் பிறந்த குடும்பம் குரு தொடர்பான தொழிலில் நஷ்டப்படும் கணவர் நிலையும் இதே போலிருக்கலாம்.   சிலருக்கு இதய படபடப்பு இதயம் தொடர்பான பிரச்சினைகளும் வரலாம். திருமணத்தில் தாமதம், சிக்கல், பெரியோரை வற்புறுத்தி தம் விருப்பப்படி திருமணம் செய்யலாம். குழந்தைகள் விஷயத்திலும் சிக்கல் ஏற்படலாம். நீதிமன்றப்படியேற வேண்டி வரலாம்.

சனி தொடர்பான பெண்கள்:
நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். சனி தொடர்பான ஆட்கள் ,தொழில்கள், சனித்தொழில் செய்வோர் அனுகூலம்.


சனி அசுபபலமானால்:
கருப்பாகவோ இருக்கலாம். சுத்தம் சுகாதாரத்தில் ஈடுபாடு இராது. ஆறிய உணவுகளையும் விருப்புடன் உண்பர்

(To be Cont.

1 comment: