Wednesday, May 5, 2010

சாவின் நிழல்கள்

" வாழ்க்கை பற்றிய ஒரு தேடலை உருவாக்கனும்.."
"இந்தியா யுகம் யுகமா செய்துக்கிட்டு வந்தது இதைதானேப்பா?"

"அந்த தேடல்ல ஈடுபட்டது  லிமிட்டட் பாப்புலேஷன்.வர்ணாசிரம த்ர்மம், சாதீயம் காரணமா கல்வி மெஜாரிட்டி வர்கத்துக்கு மறுக்கப்பட்ருச்சு. கல்விய வச்சிருந்த வர்கத்துல கூட யாரோ விட்ட குறை தொட்ட குறையா இருந்தவுக தேடல்ல இறங்கினாங்களே தவிர மெஜாரிட்டி வர்கம் மட்டும் அந்த தேடல்ல இறங்கவே இல்லை.அங்கே ஒரு கண்ணப்பன், இங்கே ஒரு நந்தனார் இருக்கலாமே தவிர மத்தவுக பிரபஞ்ச வாழ்க்கைக்கான போராட்டம் அ காம்ப்ரமைஸ்ட் லைஃப்ல திருப்தியடைஞ்சுட்டாங்க"

" நீ சொல்ற  தேடலால மனித இனத்துக்கு என்ன கிடைச்சுருங்கற?"

"கிடைக்கிறது, கிடைக்காததை பத்தி அப்புறம் சொல்றேன். தேடல் ஆரம்பிச்சுட்டா மனித நிலைல இருந்து மிருக நிலைக்கு இறங்கி வரமாட்டான். அதுவே பெரிய நன்மைதான். இந்த  தேடல் ஆரம்பிக்கனும்னா வாழ்க்கையின் ஸ்தூல பிரச்சினைகள் தீர்ந்தாகனும். இல்லேன்னா  காலணா அரையணா ஸ்தூல பிரச்சினைகளோடவே, எந்த வித தேடலும் இல்லாம, படக்குனு மிருக நிலைக்கு தாழ்ந்து வெறுமனே  வாழ்ந்து செத்துப்போயிருவான் . அவனை வாழ்வாங்கு வாழவைக்கனும் அதான் என் சதிகளோட சாரம்"

"ஸ்தூல பிரச்சினைகள்னு எதை சொல்றே? அப்போ ஸ்தூலபிரச்சினைகளையெல்லாம் தீர்த்துரனுங்கறியா..

"உயிர் பாதுகாப்பு,செக்ஸ், ஃபுட்,க்ளாதிங், ஷெல்டர்,இதையெல்லாம் பெறமனுஷனுக்கு  செல்ஃப்  ரெஸ்பெக்டுக்கு பங்கம் வராத ஒரு தொழில்,வேலை வாய்ப்பு இதெல்லாம் தான் ஸ்தூல தேவைகள்.. இது தீர்ந்தாதான் லைஃப் போர்டம்மா மாறும் ..தேடல் துவங்கும். "

"என்னப்பா இது தேடல் அது இதுன்னு ஆன்மீகமா ஆரம்பிச்சே படக்குனு சோத்து பிரச்சினைக்குவந்துட்ட.."

"சோத்து பிரச்சினைன்னா உங்களுக்கு லேசான விஷயமா படறாப்ல இருக்கு மனுஷன் என்னைக்கு பிறந்தானோ அதே கணத்துல அவனோட இறப்பும் ஆரம்பமாயிருது, இறப்பு பத்தின பயம் அவன் மைண்ட்ல வேலை செய்ய ஆரம்பிச்சுருது. மனுஷன் 40 அ 50 நாள் சாப்பிடாம இருந்தா கூட சாகமாட்டான். ஆனால் ஒரு வேளை/ஒரு நாள் பட்டினிங்கறது அவனை டர்ராக்கிருது ஏன்?  செத்துப்போயிருவமோனு பயம். சாவு பத்தின நினைவுதான்  அவனை டர்ராக்குது. தன் மொத்த சக்தியையும் சாவு பத்தின நினைவுகளை துரத்தவும், சாவோட நிழல்களோட போராடவுமே மனுஷன் செலவழிச்சுர்ரான்"

"அதென்னப்பா சாவோட நிழல்கள்?"

"ம்.. தனிமை, நிராகரிப்பு, அன் ஐடென்டிஃபைட் கண்டிஷன்,இருட்டு,ஏழ்மை கம்யூனிகேஷன் கேப், அறியாமை, தூரம், இப்படி கண்டதையும் சாவா நினைச்சு டர்ராயிர்ரான். அதனால தான் இதுகளை சாவின் நிழல்கள்னு சொன்னேன்."

'சரி .. மனுஷனுடைய மனசுல இருந்துக்கிட்டு அவனை ஆட்டிவைக்கிற  சாவு பத்தின ஞாபகங்களை எப்படி துரத்தறது..?"

"உனக்கு சாவே இல்லைடான்னு ருஜு படுத்தனும். இல்லேன்னா ஏற்கெனவே நீ செத்துக்கிட்டுத்தான் இருக்கே தலைவான்னு ஞா படுத்தனும்"

" நீ தான் சொன்னியே அவன் தன் மொத்த சக்தியையும்  சாவின் நிழல்களை ஜெயிக்கிறதுலயே ஸ்பெண்ட் பண்றான்னு..அவன் எங்கே  சாவுகிட்டே மோதறது?"

"சரியான கேள்வி.. பேய் ,பிசாசை பார்த்து பயப்படறவன் கிட்டே போய் சைன்ஸ் பேசி  அதெல்லாம் ஒன்னுமில்லேடான்னா அவன்  நம்ப மாட்டான். அப்படியா.. இதுக்கு ஆஞ்சனேயர் டாலர் ஒன்னு போட்டுக்க அதெல்லாம் ஒன்னும் பண்ணாதுன்னுதான் வழிக்கு கொண்டுவரனும்.."

"அப்போ மனிதன் மேற்கொள்ற சாவின்  நிழல்களுடனான யுத்தத்துல அவனுக்கு உதவனுங்கறே"

"ய்யாஆஆஆஆ.. அதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000. எல்லாருக்கும் கல்வி மாதிரி எல்லாருக்கும் செல்வம். தகுதி படைத்தோருக்கெல்லாம் கலவி"

"சரிப்பா ..அவன் செய்ற நிழல் யுத்தத்துல அவனுக்கு உதவி பண்ணனுங்கறே.. வஸ்துவோட மோதினா ஜெயிக்கலாம். நிழலோட எப்படி மோதி எப்படி ஜெயிக்கறது?"

"அதை நாம அவனே அனுபவ பூர்வமா உணர்ர மாதிரி செய்யனும். அதுக்கு அவனோட ஸ்தூல தேவைகள் நிறைவேறியாகனும்"

No comments:

Post a Comment