Friday, May 7, 2010

கங்கையம்மனும் காயத்ரியும்

கங்கையம்மனும் காயத்ரியும்
அண்ணே வணக்கம்னே,
கங்கையம்மனும் காயத்ரியும்ங்கற தலைப்பு சிம்பாலிக் தேங். காயத்ரியும், கங்கையம்மனும் எப்பவுமே தோஸ்துங்கதான். அவாளுக்கு தான் கங்கையம்மன் மேல காண்டு.

முக்கியமான விஷயம் எப்பவும் போல இறையருள் பெற்ற சித்தர் பெரியார், உனக்கு 22 எனக்கு 32 கதையோட லேட்டஸ்ட் அத்யாயம்னு மேலும் 2 பதிவுகள் போட்டிருக்கேன். அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிங்க.

இப்போபதிவை தொடர்ந்து படிங்க‌




எனக்கு தெரிஞ்சு எல்லா ஊர்லயும்  கங்கையம்மன் திருவிழா நடக்குது. அதுவும் கோடை காலத்துல, அதுவும் சூரியன் தன் உச்ச ராசியான மேஷத்துல சொந்த நட்சத்திரமான கிருத்திகைல சஞ்சரிக்கிற கத்திரில நடக்குது. இதையும்  ஒரு அக்மார்க் மூட நம்பிக்கைனு விமர்சிக்க ஆட்கள் இருக்காங்க.

இவிக ரெண்டு விதம். ஒன்னு பெரியார் வழி வந்த பகுத்தறிவாளர்கள் . ரெண்டு  நம்ம பிழைப்பு கெடுதேங்கற ஒரே காரணத்தால  தம் எதிர்ப்பை புறக்கணிப்பு வடிவத்தில்  பதிவு செய்யும் பார்ப்பன கும்பல், மற்றும் அவர்களால் குளவி போன்று கொட்டப்பட்டு கொட்டப்பட்டு "சுயம்" இழந்த சூத்திர  நகல்கள்.

பகுத்தறிவாளர்கள் ஏன் எதிர்க்கிறாங்கன்னா அது அவிக கொள்கை.அய்யர் மாருங்க ஏன் பாய்க்காட் பண்றாய்ங்க ? இதுலதான் அந்த இனத்தோட பிறவிகுணமே அடங்கியிருக்கு.


எனக்கு தெரிஞ்சு எத்தனையோ முஸ்லீம் குடும்பங்கள், கிறிஸ்தவ குடும்பங்கள் கூழ் ஊத்தியிருக்கு. அப்படி என்ன இவிகளுக்கு கங்கையம்மன் மேல  காண்டு?

சாயந்திரம் கும்பம் போடறோமே அதுல சீச்சி, கெருவாடு போட்டு செய்யறமே அதனாலதான் அய்யருமாரு அந்த பக்கம் ஒதுங்கறதில்லயோ என்னமோனு  நெனச்சுராதிய. புத்தர்,மகாவீரர் வரதுக்கு மிந்தி இவிக தின்னாத பிணமே இல்லை. (செத்த மிருகத்தோட உடலை கூட பிணம்னு சொல்லலாமில்லிங்களா?)

புத்தர்,மகாவீரர் வந்த பிறகுதான் யாகத்துல ஆடு,மாடு,குதிரைகளை வெட்டிபோடறதையும், சீச்சி திங்கறதையும், செமை மப்பு ஏத்திக்கறதையும் (சோமரசம்)..  விட்டானுவ.

பின்னே என்னதான் காரணம்னு கேட்கிறிங்களா?

கங்கையம்மன் திருவிழாவுல அவிக கலந்துக்காததுக்கு காரணம் நம்மாளு பூசாரியா இருக்கிறதும், அவிகளுக்கு நம்மாளு ஒருத்தன் பொழச்சிருப்பானேங்கற ஆதங்கம் இருக்கிறதும்தான்..

108 சக்திஸ்தலம் அது இதுங்கறாய்ங்களே எல்லா ஸ்தலத்துலயும் ஆத்தாளுக்கு பலி கொடுக்கிற வழக்கம் இருந்ததுங்களாம். ஆனால் ஆதில இருந்த சங்கராச்சாரி தான் எல்லா கோயில்லயும் இருக்கிற மூலஸ்தான விக்கிரகத்தின் கீழே ஸ்ரீசக்ரத்தை ஸ்தாபிச்சு ( தகடு தகடுங்கண்ணா)  நான் வெஜ்ஜா இருந்த அந்த ஆத்தாளையெல்லாம் வெஜிட்டேரியனா மாத்திட்டாராம்.

ஏன்? ஆத்தாளுக்கு கொலஸ்ட் ரால் , ப்ளட் ப்ரஷர்லாம்  சாஸ்தியாயிருச்சாமா?  அதெல்லாம் ஒன்னுமில்லிங்கண்ணா சூத்திரனை கழட்டிவிடனும். அங்கன ஒரு அய்யரை அப்பாயிண்ட் பண்ணனும்ல தட்ஸால்

சரிங்கண்ணா உங்களுக்கு தெரிஞ்சு எந்த ஐயர் குடும்பமாவது கூழ் ஊத்தியிருக்குதா? ஊத்தியிருந்தா மெயில் மீ ப்ளீஸ் !

விஷயத்துக்கு வருவோம்.

கங்கையம்மன்னா யாரு ? எங்கயோ இமய மலை உச்சில இருந்து பிறந்துவருதே அந்த கங்கை நதியோட பெண் வடிவமா? இல்லேப்பா. அதான் உண்மைன்னா வட நாட்ல மட்டும் தானே இந்த திருவிழாவை கொண்டாடனும்.  ஏன் தென்னாட்டுல மட்டும் பிரபலமா  கொண்டாடறாய்ங்க? இவிங்களுக்குத்தான் கோடையோட கொடுமை என்னானு தெரியும். கோடையில வர்ர  டீ ஹைட் ரேஷன் , சன் ஸ்ட் ரோக், மாம்பழத்தால வர்ர ஈயால வர்ர காலராவோட பாதிப்பு இதெல்லாம்  இங்கனதான் அதிகம் .ஜீவ நதிகள் இல்லாததால இவிகளுக்குத்தான் தண்ணியோட அருமை தெரியும். அதனாலதான் அந்த காலத்துலயே கரிகாலன் கல்லணை கட்டினான்.

நீரின்றி அமையாது உலகுன்னாங்க அவ்வையார். மனித உடல்ல 70% வாட்டர் கன்டென்ட் தாங்குது பயாலஜி. பூமில  நாலில் 3 பாகம் தண்ணியாவே இருந்தாலும் அதுல ரொம்ப லீஸ்ட் பர்சண்டேஜ் தான் உடனடியா குடிக்க  தகுதி வாய்ந்த தண்ணி.
மத்ததெல்லாம் கடல் நீர் . இல்லைனா துருவ பகுதில பனியா இறுகிக்கிடக்கு.

ஏற்கெனவே சொன்னபடி வட நாட்ல  ஜீவ நதிகள் இருக்கு. தென்னாட்ல கிடயாது. இதனாலதான்  கங்கையம்மன் திருவிழாவெல்லாம் தென்னாட்ல பிரபலமாயிருக்கு.

தெலுங்குல நிலத்தடி நீரை பாதாள கங்கைம்பாங்க. பச்ச தண்ணி கூட குடிக்காம கிடக்காம்பாங்கறதுக்கு "பச்சி கங்க கூட முட்டலேது பாபம்"ம்பாங்க.இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் ? கங்கைங்கறது ஒரு நதியோட பேரா இருந்தாலும் பொதுவா தண்ணிங்கற அர்த்தத்துல தான் புழங்குது. (ப்ராப்பர் நவுன் காமன் நவுனாயிருச்சு) .

ஆக கங்கையம்மன் திருவிழாங்கறது தண்ணீரோட அருமையை, இன்றியமையாமையை  நினைவு படுத்திக்கவேண்டிய திருவிழா. ஆனால் இதை  நாம எப்படி கொண்டாடறோம்னு பார்த்தா சோகம் தான் மிஞ்சுது.

இந்த கங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு கங்கையம்மன் பேரால சில காரியங்களை செய்வோம்.

(இல்லாட்டி நம்ம காரியத்துக்கு வர்ர அய்யர் ஆசமனம் பண்றதுக்கு  கூட தண்ணீ கிடைக்காதுங்கோ)

1.பெண்கள் வயது எதுவானாலும் சரி வெளி,வாசலுக்கு ஷாபிங்க்  வர்ரச்ச புடவையை தவிர்த்து   சல்வார் கமீஸ் உபயோகிக்கலாம். வீட்ல இருக்கும்போது எப்படியும்  நைட்டி இருக்கவே இருக்கு.

2.ஆண்கள் ஷார்ட்ஸ் உபயோகிக்கலாம். (  நாய்கள் நிறைந்த புதிய ஏரியாவுக்கு போறச்ச ரிஸ்க் எடுக்காதிங்க. பிடுங்கி வச்சுரபோவுது) வீட்ல இருக்கிறச்ச பட்டாபட்டி அண்டர்வேர்.  இதனால துணியோட ஏரியா குறையும் துவைக்க,அலச தண்ணியோட தேவை குறையும்

3.தலைக்கு குளிக்க ஷாம்பூ உபயோகிக்காதிங்க. அந்த குழகுழப்பை கழுவவே முக்கால் பக்கெட் தண்ணி தீர்ந்து போயி கை,காலை சரியா கழுவாம  உடல் துவட்டினபிறகு வெள்ளை வெள்ளையா  தெரியுது.அதுக்கு பதில் சீயக்காய உபயோகிக்கலாம்.

4.பிளாஸ்டிக்கை அவாய்ட் பண்ணுங்க. இதெல்லாம் பூமிக்குள்ற போயி மழை தண்ணி பூமிக்குள்ள இறங்கறதை தடுக்குதாம்ல

5.சோறு வடிக்க குக்கர் உபயோகிங்க.சத்துக்கு சத்து. தண்ணியும் சிக்கனமா செலவழியும்.

6.கண்ட நேரத்துல, கண்டதை (முக்கியமா மட்டன்,சிக்கன்,மசாலா, எண்ணெய்ல பொறிச்சது,வதக்கினது , பேக்கரி ஐட்டம்,டின் ஃபுட், ஜங்க் ஃபுட்    திங்காதிங்க. தாகம் அதிகரிக்கும். மலச்சிக்கல் வந்துரும். திடீர்னு  கண்ட நேரத்துல வயிற்றை கலக்கும். தண்ணி வேஸ்ட்.வேலையறிந்து ,வேளையறிந்து சாப்பிடுங்க.

7. வீட்ல துணி துவைக்க,குளிக்க, பாத்திரம் கழுவ கண்ட பாடாவதி சோப்புகளை உபயோகிக்கிறதால ரீ சைக்கிளிங்க் கூட பண்ணமுடியாத நிலை. இந்த தண்ணிய செடிகளுக்கு பாச்சினா ஒன்னு கூட பொழைக்காது. பின்னே என்னதான் செய்றதுன்னா அந்த காலத்துல ஜெயலலிதாம்மா சொன்னாப்ல மழை நீர் தேக்க தொட்டி கட்டுங்க அதுல விடுங்க. இதை ஈசான்யத்துல அமைச்சிங்கன்னா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா . வாஸ்துவும் ஓகே ஆயிரும்.

8.வீட்டுக்குள்ளார நல்லா காத்து வராப்ல ஆல்ட்டர் பண்ணிருங்க. (திருடங்க வந்துராமே சன்னல்களுக்கு வலுவான கம்பிகள் போட மறந்திராதிங்கண்ணா) இந்த சன்னல்கள் வீட்டின்,  அறைகளின்  நைருதி/குபேர  மூலைகளில் அமையாது ப்ளான் பண்ணுங்க. அதே போல் மேற்கு,தெற்கு திசையிலான சுவர்களில் சன்னல்கள் வேண்டாம். தேவையான இடங்கள்ள (முக்கியமா வாயு மூலைகளில் ) எக்ஸாஸ்ட் ஃபேன் வைங்க. சமையலறைல மஸ்ட் அண்ட் ஷுட் வைங்க.இல்லைன்னா தாய்குலம் கசகசத்து போய் ஒரு நாளைக்கு ரெண்டு குளியல் போட ஆரம்பிச்சுருவாய்ங்க. காலைல குளிச்சுட்டு வெளிய போறதை விட வீட்டுக்கு வந்த பிறகு குளிக்கறது நல்லது. (புது கல்யாண சோடிக்கு இது ஸ்பெஷல் அட்வைஸ்)

9.உட்கார்ந்து யோசிங்கப்பா நிறைய தோணும். தண்ணீர் சிக்கனம் . தேவை இக்கணம்.

பை தி பை உங்க ஊர்ல திருவிழா நடக்கும்போது  வேப்பந்துளிரை மென்னு தின்னுருங்க. ஒரு பிடி வேப்பிலையையாவது  தண்ணில போட்டு கொதிக்க வச்சு வடி போட்டு ஒரு க்ளாஸாவது அடிச்சிருங்க. நான் 1999ல அடிச்சேன். 2009 வரை உடம்பி சொம்மா வில்லு மாதிரி இருக்கு. இந்த 2010லயும் ஒரு கிளாஸ் அடிச்சிரலாம்னு இருக்கேன். எலுமிச்சத்தை ?  ஜூஸா அடிங்க.  சர்க்கரை போட்டு குடிக்கிறதை விட உப்பு போட்டு அடிங்க. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல இததான் தரான். ஐஸ் போட்டு சாப்பிடறத விட அப்படியே சாப்பிடுங்க.

No comments:

Post a Comment