அண்ணே வணக்கம்னே,
இந்த வில்லங்க பதிவோட காரணமில்லாம நம்ம நெஞ்சை ரணமாக்க தினம் தினம் முளைக்கிற பார்ட்டிகளை வம்பிழுத்து "விளம்பர பித்தா?" ங்கற தலைப்புல ஒரு தனிப்பதிவு போட்டிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்கண்ணா.
கெட்ட வார்த்தைல மறுமொழி போடற பார்ட்டிங்களை வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புங்கற என் பதிவை படிக்கும்படி கேட்டுக்கறேன்.
மணி சீக்ரெட்ஸ் ஸ்பீச் டவுன் லோட் பண்ணிக்கிட்டிங்களாண்ணா. நாலு பேரோட ஷேர் பண்ணிக்கங்க. சனம் பணத்தோட விவரம் புரியாம அஞ்சு பத்துக்கு அல்லாடுது..
ஜூட்டுங்கண்ணா..
ஆனந்தம் ஆனந்தம் ஆயெனே பரமானந்தம் ஆனந்தம் ஆயெனே என்று பாடவேண்டும் போல் உள்ளது.
பாக் அரசின் ஆசி ஆதரவு கொண்ட தீவிர வாத குழுவை சேர்ந்த நாசகார கும்பலுடன் கடல் வழி எல்லை கடந்து , தாஜ் ஓட்டலை டார்கெட் பண்ணி, ரயில்வே ஸ்டேஷன், ஜி.ஹெச்சை கூட விடாம அதகளம் பண்ணின கசப் - க்கு (kasab) ஸ்பெஷல் கோர்ட் தூக்கு தண்டனை விதிச்சதுக்குத்தான் இப்படி ரெஸ்பாண்ட் ஆகறேனு நினைச்சா ஏமாந்தூருவிங்க.
ஆனந்தப்படனும்னா கூட அதுக்கும் கொஞ்சம் முட்டாள் தனம் தேவைப்படுது.
ஸ்பெஷல் கோர்ட் தீர்ப்பு கொடுத்துட்டா முடிஞ்சு போச்சா (இல்லு அலக்க கானே பண்டுகா) இன்னம் ஹை கோர்ட்,சுப்ரீம் கோர்ட்,ஜனாதிபதி கருணை மனு இப்படி அனேக சாங்கியங்கள் பாக்கியிருக்கே.
ஆட்டை கடிச்சு,மாட்டை கடிச்சு, மனுஷனை கடிச்ச கதையா பாராளுமன்றத்து மேலயே அட்டாக் நடந்தது. அப்சல் குருவை பிடிச்சாய்ங்க . தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டாச்சு. தூக்குல போட்டாங்களா? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
என்னடா இந்து முன்னணி மாதிரி எழுதறாருனு நினைச்சுராதிங்க.. செத்தவனை உயிர்ப்பிக்கிற சக்தி இல்லாத அரசாங்கத்துக்கு உயிரோட இருக்கிற மனிதனை கொல்ற அதிகாரம் கிடையாதுங்கறதுதான் என் கொள்கை.
தூக்கு தண்டனையை ஆதரிக்கிறவங்க வாதம் என்னன்னா.. தண்டனை கடுமையானா த்தான் குற்றம் குறையும்.
அடப்போங்கப்பா.. நம்ம மேல கேஸ் புக் ஆனா என்னங்கறத அப்புறம் பார்த்துக்கலாம். தாளி போலீஸ் ஸ்டேஷன் உள்ளாற காலெடுத்து வச்சாலே நாஸ்திதான். அந்த கட்டிடம்,பெயிண்ட், ஃபர்னிச்சர், இன்டிரியர், ரைட்டரு, ஏட்டு (ஹெட் கான்ஸ்டபிள் என்பதன் மரூஉ இது ) அவிகளுக்குள்ள இருக்கிற ஹிப்பாக்ரசி, அவிகளுக்குள்ள பேசிக்கிற பேச்சு, ரெட்டை வேடம், எஸ் ஐ இருந்தா ஒரு பிஹேவியர்,இல்லன்னா ஒரு பிஹேவியர் ,அவிக வாங்கற லஞ்சம், ஓசி , வசூல், விடற ஏப்பம், குசு உவ்வே..
இந்த இழவை எல்லாம் பார்த்து (10%) கேள்வி பட்டுத்தான் (90%) சனம் புகார் கொடுத்து அல்லாடறத விட கொடுக்காமயே கிடக்கலாம்னு முடிவு பண்ணிர்ராய்ங்க
இதான் யதார்த்தம்.
நம்ம மேல புகார் போனா என்ன கதி, நமக்கு கவுன்சிலர் ரேஞ்சுல கூட செல்வாக்கு இல்லன்னா என்ன கதி, எஃப்.ஐ.ஆர் போட்டுட்டா என்னாகும், பெயில் கிடைக்கலன்னா என்னாகும் இப்படி ரோசிச்சிக்கிட்டே போனா டர்ராயிருது.
இருந்தாலும் குற்றம் நடந்து கிட்டே தான் இருக்கு. ஏன்? மனுஷனோட மென்டாலிட்டி அது..
உருளை கிழங்கை ஒரு வெட்டு வெட்றப்போ எதிர்கால முட்டி வலி, டமால் டுமீல் எல்லாம் ஞா வராது
ஈவ் டீஸிங் பண்றச்ச லேடி எஸ்.ஐ "அப்படி எவ்ளோ பெரிசுதான் வச்சிருக்கேடா நீ எத்தனை பொம்பளய சமாளிப்படா நீ"ன்னிட்டு பேண்டை அவுக்கச்சொன்னா அது எங்கயோ போய் ஒளிஞ்சுக்குமேங்கற ஞா வராது
இந்த தீவிர வாதிங்க விஷயத்துல உபரியா ப்ரெயின் வாஷ் வேற நடக்கறது.
தினசரி நூறு அஃப்சல் குரு, நூறு கசப் ஐ தூக்குல போட்டாலும்வந்துக்கிட்டே தான் இருப்பாய்ங்க.
பெத்துக்கிட்டு அவஸ்தை படறவனை விட, அபார்ட் பண்ணிர்ரவன் பெட்டர். அபார்ட் பண்றவனை விட அவாய்ட் பண்றவன் பெட்டர்.
அந்த மாதிரி மொத வேலையா பாகிஸ்தானுக்கும் நமக்கும் உள்ள முதலும் முடிவுமான பிரச்சினையான காஷ்மீரை ஐ. நா.ஆக்டிவிட்டீஸுக்குனு ஒதுக்கி ஒப்படைச்சுரனும். அதனோட பாதுகாப்பை சர்வதேச ராணுவம் ஏத்துக்கிடறாப்ல செய்யனும்.
பாக் தரப்புல ஆஜாத் காஷ்மீர், நம்ம தரப்புல பாக் ஆக்குபைட் காஷ்மீர்னு சொல்ற பகுதியையும் ஐ. நா சபைக்கு ஒப்படைக்க சொல்லி பாக் மேல அழுத்தம் கொண்டுவரனும். (சீனா விஷயத்துலயும் இதே ஃபார்முலாவ ஃபாலோ பண்ணலாம்)
அதை விட்டுட்டு கடலோர பாதுகாப்புன்னு காமெடி கீமெடி பண்றது கிரிமினல் வேஸ்டு. சரிப்பா அமைதி ஏற்பட்டுட்டா ஆயுதம் வாங்க முடியாது, ஊழல் பண்ண முடியாது,ஓட்டு வாங்க முடியாது.
முந்தா நேத்து தாஜ் ஹோட்டலுக்கு நடந்தது நாளைக்கு ஜனாதிபதி மாளிகைக்கு நடக்காதுனு என்ன கியாரண்டி?
ஒரு நாட்டோட பாதுகாப்பு எல்லையோரமிருக்கிற படைபலத்தை வச்சு உறுதி செய்யப்படறதில்லை. நாட்டுக்குள்ள இருக்கிற குடிமக்களோட தேசபக்தி, தியாகத்தை வச்சுத்தான் உறுதி செய்யப்படும்.
நம்ம தெரு நாயோட ஒத்துழைப்பு இல்லாம பக்கத்து தெரு நாயி எப்படி நம்ம தெருவுக்குள்ள நுழையும்?
முதல்ல ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உணவு,உடை,இருப்பிடம், செக்ஸ் இதையெல்லாம் கவுரவமான, சட்டப்பூர்வமான வழில பெற வாய்ப்பை தரனும். அப்பத்தான் பாரத மாதா அவன் மனசுல உட்கார்ந்து மணியடிப்பாள்.
கசப் விஷயத்தில் அனுமார் வால் தனமான சாஸ்திர,சம்பிரதாயங்களை பின்பற்ற காரணம் என்ன? அரசாங்கத்துக்கு தன் மேல தனக்கே நம்பிக்கை இல்லே. தன் குடிமக்களை அதுவே நம்பலை. அவன் ஸோ அண்ட் ஸோ மதத்தை சேர்ந்தவன். நாம அதிரடியா போட்டு தள்ளிட்டா பிரச்சினையாயிருமோனு தயங்கியிருக்கனும்.
அட புண்ணாக்குகளா .. இதென்ன petty கேஸா ? இல்லே பெட்டி கேஸா? ஜாதி,மதத்தை எல்லாம் கொண்டுவந்து அலம்பல் பண்ண.. இப்போ லஞ்ச ஒழிப்பு ரெய்டு கேஸ்ல எல்லாம் அவர் தாழ்த்தப்பட்டவர் அதனால தான் ரெய்டு நடந்தது, அவர் பிற்படுத்தப்பட்டவர் அதனால தான் ரெய்டு நடந்ததுன்னு கூவ ஆரம்பிச்சிருக்காய்ங்க.
எங்கே போகுது பாருங்க நாடு. அட வெண்ணை வெட்டி சிப்பாய்களா ? தீவிர வாதின்னா அவன் தீவிர வாதிதான். தாளி ..இதுல இந்துவா, முஸ்லீமா, முதலியாரா, வன்னியரானு பார்க்க ஆரம்பிச்சா பாரத மாதா கதி திரவுபதி கதியாயிரும். ( வஸ்திராபரணத்தை வச்சு மட்டும் சொல்லலே)
சனம் என்னவோ தீவிரவாதிய தீவிரவாதியா மட்டும் தான் பார்க்குது. இந்துவா, முஸ்லீமா,பார்த்துருவாய்ங்களோங்கற சந்தேகத்துல அரசாங்கம் "பத்தினி" வேஷம் போடுது.
கசப் விஷயத்துக்கு வந்தா அவன் என்ன இந்திய குடிமகனா ? இல்லை ஏதோ பராக்கு பார்க்க வந்த உல்லாச பயணியா இல்லையே ஆயுதத்தோட ,திட்டத்தோட, தற்கொலை படை கணக்கா ,அன்னிய தேச ராணுவத்தோட கைக்கூலியா வந்தவன். அவனை பிடிச்சதுமே ராணுவ கோர்ட்ல விசாரிச்சு போட்டு தள்றத விட்டுட்டு மாய்மாலம் எல்லாம் பண்ணிக்கிட்டிருக்காய்ங்க.
தூக்குல போட தலையாரிகளே இல்லிங்களாண்ணா.. கருணைமனு ஸ்டேஜிக்கெல்லாம் போயி ரெஃப்யூஸ் ஆன கேஸெல்லாம் வெயிட்டிங்ல இருக்கு?
ஐ டோண்ட் லைக் இட். நான் தூக்கு தண்டனைய எதிர்க்கிறேன். மனுஷனுக்கு மாற, திருந்த ,(தப்பிக்க?) வாய்ப்பு கொடுத்துதான் ஆகனும். ஆனா கசப் மாதிரி கேஸை வச்சி காப்பாத்தறதெல்லாம் வெள்ளை யானைய வச்சு வளர்த்த மாதிரிதான்.
கசப் தொடுத்த போர் வெறுமனே ஒரு இந்தியா மேல மட்டும்னு சொல்ல முடியாது. இந்தியா உலக நாடுகளோட சேர்ந்து தீவிர வாதத்தை எதிர்த்தது. அதனாலதான் தீவிரவாதிகளோட ஹிட் லிஸ்ட்ல நம்ம நாட் டாப்புக்கு போச்சு கசப் நம்ம சொந்த எதிரியில்லே. அமைதியை விரும்பும், தீவிர வாதத்தை எதிர்க்கும் உலக நாடுகளோட எதிரி. அவனை ஏன் சர்வ தேச நீதிமன்றத்துக்கு ஒப்படைச்சுர கூடாது.
நம்ம மிலிட்டரி எல்லை கோட்ல தேவுடு காத்துக்கிட்டிருக்க இந்த கயவாளிப்பசங்க கடல் வழியே வந்திருக்கானுக. குதிரைக திருடு போன பிறகு லாயத்தை பூட்டின மாதிரி எல்லா நஷ்டமும் நடந்து போன பின் கடற்கரையோர கண்காணிப்பை (?) அதிகரிச்சிருக்கு அரசாங்கம். அது எப்படி எந்த் ரேஞ்சுல நடை முறைக்கு வந்திருக்குன்னா தொத்தலா ஒரு கட்டிடம், கிழவாடி கான்ஸ்டபிள், ஒரு போட் . போட்டிருந்தா ட்ரைவர் இருக்க மாட்டார். ட்ரைவர் இருந்தா போட் இருக்காது. ரெண்டும் இருந்தா டீசல் இருக்காதோ என்னமோ ? ஒரு எஃப்.ஐ.ஆர் போடக்கூட அதிகாரம் கிடையாது. உள்ளூர் போலீஸுக்கு தகவல் கொடுத்து ச்சூ காட்டிர வேண்டியதுதான் இவிக வேலை.
இந்த தொத்தல் பூட்டா நம்ம கடற்கரை எல்லயை பாதுகாக்க போவுது. தூத்தேறி
1) நம்ம தெரு நாயோட ஒத்துழைப்பு இல்லாம பக்கத்து தெரு நாயி எப்படி நம்ம தெருவுக்குள்ள நுழையும்?
ReplyDelete2) அவனை பிடிச்சதுமே ராணுவ கோர்ட்ல விசாரிச்சு போட்டு தள்றத விட்டுட்டு மாய்மாலம் எல்லாம் பண்ணிக்கிட்டிருக்காய்ங்க.
மிகச்சரியாக சொன்னீர்கள்... (உங்களுக்கு செவ்வாய் உச்சமா? நீசபங்கமா? கொஞ்சம் சொல்லுங்களேன்...)
சுகுமார் ஜி,
ReplyDeleteகடக லக்னத்தில் பிறந்த எனக்கு ஜீவனாதிபதி செவ்வாய். இவர் 4ல் உடகார்ந்து இவன் நின்ற இடத்ததிபதியான சுக்கிரன் ரெண்டில் உட்கார்ந்து நிட்சேப (புதையல்) யோகத்தைதருகிறார். அதாவது என் மூளையிலிருந்து புதையல் எடுத்து பகிர்ந்துக்கறேன்.