Friday, November 19, 2010

இந்திரா & ஃபேமிலி காந்தி பேரை துறக்கனும்

ஆமாங்கண்ணா. காந்திக்கும் நேரு குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்திரா ஃபெரோஸ் லவ்ஸ் மேட்டர்ல பிரச்சினை வந்தப்போ காந்தி ஃபெரோசை தத்து எடுத்துக்கிட்டாரு. அதனால ஃபெரோஸ் பேரோட காந்தி பேர் ஒட்டிக்கிச்சு. இந்திரா ஃபெரோஸ் காந்தியோட மனைவிங்கற ஹோதால காந்தி பேரை சேர்த்துக்கிட்டாய்ங்க. ஆனால் கொஞ்ச காலத்துலயே ஃபெரோஸுக்கு, இந்திராவுக்கு ஒத்துவரலை. கழண்டு கிட்டாய்ங்க. இந்திரா அப்பாவோடதான் வாழ்ந்தார்.

என்னதான்  சட்டப்படி விவாகரத்து வாங்கலைன்னாலும் இந்திரா தன் கணவரோட வாழலைங்கறது மறைக்க முடியாத அக்மார்க் சரித்திர உண்மை. தாளி புருசன் மட்டும் வேணா புருசனோட சர் நேம் மட்டும் வேணுமா?

வாணி  கமலை மணந்தா "வாணி கமல்" கமலை  பிரிஞ்ச்சுட்டா .. வெறும் வாணிதேன்.இந்த விதிப்படி பார்த்தா காந்தி பேரை சேர்த்துக்க  இந்திராவே  அன்ஃபிட். இதுல ராஜீவ்,சஞ்சய், சோனியா,மேனகாவுக்கெல்லாம் காந்தி பேரை சேர்த்துக்க என்ன தகுதி இருக்கு?

சரி இன்ஸ்பிரேஷன்ங்கற கோணத்துல பார்த்தாலும் கனக சுப்புரத்தினம் பாரதி தாசனா மாறினார் .. பாரதிக்கு தாசனாவே வாழ்ந்தார்.

இந்த கூட்டத்துக்கு காந்தி பேரை சேர்த்துக்க  என்ன தகுதியிருக்கு?

3 comments:

  1. ரொம்ப சிம்பிள்.
    இந்த விசயம் தெரிய.. கொஞ்சமாவது..சரித்திரம், நான் சொல்லுர சரித்திரம் பாட புத்தக சரித்திரம் இல்ல . சமகால வரலாறு தெரியனும்... ஆன நிறைய சாமானியர்களுக்கு சமகால வரலாறு தெரியாது.

    ஆன சாமானியர்களுக்கு சமகால வரலாறு தெரியாதுங்கிறது. இந்திரா & கோ வுக்கும் அவங்களுக்கு ஐடியா கொடுக்குறவங்களுக்கும் தெரியும் .

    அதனால நேரு குடும்பத்துக்கும் , காந்தி தாத்தாவுக்கும் எதே சம்பந்தம் இருக்கும் போலனு சாமனியர்கள் நினைக்கனும். அது நமக்கு ஓட்டு பொட்டியில கிடைக்கனுமினு காந்தி பேர பிடிச்சு தொங்கிட்டு இருக்கங்க. அவங்களுக்கு நம்ம் மக்கள் மேல அவ்வளவு நம்பிக்கை.

    ReplyDelete
  2. Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


    www.ellameytamil.com

    ReplyDelete
  3. மிக மிக அருமையான கேள்வியை முன் வைத்திருக்கிறீர்கள்......, இந்த தேசத்தில் எந்த காங்கிரஸ் வாதியாவது இதற்கு பதில் சொல்லட்டும். ஆரம்பத்தில் இருந்தே அவங்க அப்படித்தான். சுயநலம் மட்டுமே முக்கியம். அடாவடிகளில் வளர்ந்தவர்களால், ஆளுமை மட்டுமே பழக்கப் பட்டவர்களால், அதை விட்டு இறங்க முடியாது.

    ReplyDelete