ஜகனை அவிக வீடு இருக்கிற கட்டமஞ்சி ஏரியாலயே ஒரு தனியார் நர்ஸிங் ஹோம்ல அட்மிட் பண்ணி ,கம்ப்யூட்டர் புலி ஒருத்தரை ஜகனுக்கு பி.ஏவா போட்டு வச்சேன். ஜகன் என்ன உளறினாலும் மொபைல் ஃபோன்ல ரிக்கார்ட் பண்ணி எனக்கு வாய்ஸ் மெயில்ல அனுப்பச்சொல்லி ஏற்பாடு. அப்படியே ஜகனுக்கு கம்ப்யூட்டர், இன்டர் நெட் ப்ரவுசிங்ல கொஞ்சம் ட்ரெயின் பண்ணச்சொல்லியும் அரேஞ்ச் பண்ணேன்.
கொலை முயற்சி எல்லாம் ஜகனுக்கு பழசுதான். இருந்தாலும் நாலு ப்ரொஃபெஷ்னல் கில்லர்ஸை ஏற்பாடு பண்ணி, ட்ரெய்ன் பண்ணி, இன்ஃபர்மேஷன் கேதர் பண்ணி, மெஷின் கன் கொடுத்து அனுப்பற அளவுக்கு சென்ன கேசவன் போக காரணம் என்ன? ஜஸ்ட் ஈகோ தானா? வேறு ஏதாவது பலமான காரணம் இருக்கான்னு புரியலை. இந்த விஷயத்துல ரெண்டு விஷயத்தை சேகரிக்க வேண்டி இருந்தது. ஒன்னு ஜகனோட மூவ் மெண்ட்ஸ் சென்ன கேசவன் அண்ட் கோவுக்கு போனது எப்படி? இங்கே அவிக ஆளுகளை ப்ளாண்ட் பண்ண மாதிரி அங்கே நம்மாளுங்கள ப்ளாண்ட் பண்ண முடியாதா?
குற்றவாளிங்க ஹை கோர்ட்டுக்கு அப்பீல் போயிட்டதாலயும், பெயில்ல வெளிய வந்துட்டதாலயும் மேச் ட்ரால முடிஞ்சுட்டாப்ல தான். இருந்தாலும் இந்த மாதிரி அனாலிசிஸை நம்பி எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்.. ஜகனுக்கு பேச்சு விழுந்துட்டாப்லயும், ஸ்ட்ரோக் வந்துட்டாப்லயும் எஸ்டாப்ளிஷ் பண்ணதால சி.எம் ஆஃபீஸ்லருந்து ரெகுலர் என்கொய்ரி வேற வந்துக்கிட்டிருந்தது. ஒரே பொய்யை எவ்ள காலம் சொல்ல, இது லீக்கான நிலைமை என்னாகும்? குழப்பம்.. குழப்பம்.
இத்தனை அல்லாட்டத்துலயும் நகராட்சி நிர்வாகம் ஓட காரணம் ஸ்ரீராமோட ஃப்ரெண்ட்ஸ்தான். தேர்தல் சமயத்துல கேதர் பண்ண இஃபர்மெஷனை பேஸ் பண்ணிக்கிட்டு ப்ராப்பர் ப்ரியாரிட்டியோட ப்ரபோசல்ஸை கொடுத்துக்கிட்டே இருக்க..ஒன்னொன்னா கம்ப்ளீட் ஆகிட்டே வந்தது. சேர்மன் குடும்பம் தலையீடுனு புகார் வந்துராம இருக்க அவிகளுக்கு ஒரு போஸ்டிங் போட்டு நகராட்சிலருந்து கொஞ்சம் , பர்சனலா கொஞ்சம் மாசத்துக்கு இவ்ளனு தந்துகிட்டிருந்தோம்.
போன வருஷம் கோடை காலத்துல அதிரடியா மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏராளம்.அதனோட பலனை இந்த வருஷம் கண் கூடா பார்க்க முடிஞ்சது. மாற்றம் அதை உபதேசிக்கிறவன் கிட்டே இருந்தே ஆரம்பிக்கனும்னிட்டு நகராட்சி அலுவலக வளாகத்துல, ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸுகள்ள வாட்டர் ரீசைக்கிளிங், மழை நீர் சேகரிப்பு தொட்டி, சோலார் பவர் யூனிட் ஆரம்பிச்சோம். அப்படியே என் வீடு, கவுன்சிலர்ஸ் வீடு கமிஷ்னர் வீடு, நகராட்சி ஊழியர்கள் வீடுன்னு ஸ்ப்ரெட் பண்ணோம். அடுத்து நகராட்சிஆடிட்டோரியம், பஸ் ஸ்டாண்டு, வாலண்டரி ஆர்கனைசேஷன்ஸோட ஆஃபீஸஸ், ஸ்டெப் பை ஸ்டெப்பா சினிமா தியேட்டர்ஸ், வெஜிட்டபிள் மார்க்கெட், மட்டன் மார்க்கெட், சிக்கன் மார்க்கெட்டுன்னு விஸ்தரிச்சோம்.
மக்களும் மாற்றங்களை முதல்ல எதிர்க்கிறதும் அப்புறம் ந்யூட்ரலாகிறதுமா இருந்தாங்க. குப்பை விவகாரத்துல ஒரு சோதனை முயற்சியா ஒவ்வொரு பாய்ண்டுக்கும் ஆளுயரத்துக்கு 1+1 ப்ளாஸ்டிக் டஸ்ட் பின்ஸ் வச்சோம். ஒன்னு அழுகும் குப்பைக்கு, அடுத்தது அழுகாத குப்பைக்கு . இதை பரீட்சார்த்தமா புதுசா டெவலப் ஆன காலனீஸ்ல அமலாக்கினோம். உடனே சனம் பணக்காரனுக்கு ஒரு நீதி ஏழைக்கு ஒரு நீதியானு போர்குரல் கொடுத்தாய்ங்க. ஒரு வாரத்துல ஓவர் ஆல் டவுன் இதை அமலாக்கினோம்.
கவுன்சிலர்ஸ், எம்ப்ளாயிஸுக்கு கொடுத்த பயிற்சிகள் வீண் போகலை . நல்ல மாற்றம் தெரிஞ்சது. வருஷத்துக்கு ரெண்டுதரம் அந்த பயிற்சியை தொடர தீர்மானம் போட்டோம். இப்படி ஒரு பக்கம் நிர்வாகம் சீர்பட்டாலும் செலவு அதிகரிச்சுக்கிட்டே போனாலும் நகராட்சிக்கு வர்ர வருமானம் மட்டும் ஒசர்ர மாதிரி இல்லே. மேலும் வசூலும் ரொம்பவே மந்தமா இருந்தது.
நகர தூதன்ல எத்தனை விளம்பரம் வெளியிட்டும் வேண்டு கோள் விட்டும் பலனில்லை. இதுக்கு முந்தி டாங்கர்ஸ் மூலமா வாட்டர் சப்ளை பண்ணிக்கிட்டிருந்தா பாயிண்ட்ஸ்லருந்து பைப் லைனெல்லாம் போட்டு தினசரி வாட்டர் சப்ளை தரோம், சுத்தம்,சுகாதரம்லாம் பெட்டராக்கியிருக்கோம். ஆனாலும் ஏன் வரி வசூலாகமாட்டேங்குதுன்னு பீதியாயிருச்சு.
அப்பத்தான் மாயா ஒரு ஐடியா கொடுத்தா "சனம் வரி கட்டலை வரிகட்டலைனு ஏன் குழப்பிக்கிறிங்க.அவங்கவங்க வேலை வெட்டி பார்த்தாதான் அவிகளுக்கு காசு வரும். வந்த காசை கொண்டு வந்து கட்டணும்னா ஒரு நாள் பொழப்பு கெட்டுப்போகுதுன்னா டபுள் லாஸில்லையா தனாலதான் தாத்சாரமா இருக்காங்களோ என்னமோ? இப்ப வாடகை வீட்ல குடியிருக்கிறவன் மாசம் தவறாம ஹவுஸ் ஓனருக்கு வாடகை தர்ரான். வாடகை மட்டுமா தர்ரான் அதுல நகராட்சிக்கு சேர வேண்டிய வரியும் அடங்கியிருக்கு."
"அப்ப வாடகையை நகராட்சியே வசூல் பண்ணனுங்கறியா?"
" என்ன நக்கலா? .. நான் என்ன சொல்றேன்னா ஏன் நகராட்சி ஊழியர்களே வீடு வீடா போய் வரி வசூல் பண்ண கூடாது?"
"இதெல்லாம் ஏற்கெனவே நடைமுறைல இருந்ததுதாம்மா. இவனும்,அவனும் அண்டர்ஸ்டாண்டிங் வச்சுக்கிட்டு நகராட்சிக்கு நாமத்தை போட்டுட்டிருந்தாய்ங்க .."
"சரிப்பா சனம் வேலை வெட்டினு போற நேரத்துல நீங்க கவுண்டரை திறந்து வச்சுக்கிட்டு உட்கார்ரதை விட மார்னிங் 7 டு 9 , லஞ்ச் ஹவர்ஸ், சாயந்திரம் 6 டு 9 கவுண்டரை திறந்துவச்சு உட்காரலாம்லியா? சனி,ஞாயிறுல உட்காரலாம்லியா?"
"மாயாவை கட்டிப்பிடிச்சு ஒரு முத்தம் கொடுத்துட்டு உடனே கமிஷ்னருக்கு ஃபோன் போட்டேன். அறிவிப்பு வெளிவந்த பிறகு நல்ல ரெஸ்பான்ஸ்"
செக்ஸ் ஒர்க்கர்ஸுக்காக துவங்கின அப்பார்ட்மெண்ட்ஸ் ஃபினிஷ் ஆனது. ஜகன் கட்ட ஆரம்பிச்ச ஷிர்டி சாயி கோவிலும் கம்ப்ளீட் ஆச்சு. சி.எம். திறந்துவச்சா நல்லாருக்கும்னு எல்லாரும் அபிப்ராயப்பட்டாங்க.
ஜகனுக்கு விஷயத்தை சொல்ல எனக்கு தான் ஸ்ட் ரோக், பேச்சு வராதே நான் எப்படி சி.எம்மை பார்க்கிறதுன்னாரு நக்கலா.
நானே போனேன். சி.எம்மை பார்த்தேன். ஜகனை பத்தி ரொம்பவே விசாரிச்சாரு. அவரோட ஃபீலிங்ஸை பார்த்துட்டு பொய்யை தொடர முடியாம போட்டு உடைச்சேன். ஒரு செகண்ட் முறைச்சு பார்த்துட்டு என் தோள்ள தட்டி
"வெரி குட். நல்ல காரியம் பண்ணே. எதிரியை இப்படித்தான் தூங்க வைக்கணும். ஆனால் இப்போ இன்னொரு வில்லங்கம் வரப்போகுது. சென்ன கேசவன் மறுபடி காங்கிரஸ் பார்ட்டிக்குள்ள வர ட்ரை பண்ணிக்கிட்டிருக்கான்"னாரு
"சார் இது அநியாயம்.. நம்ம கட்சி ஆளை இந்தி சினிமா கணக்கா ப்ரொஃபெஷ்னல்ஸை வச்சு சுட்டுக்கொல்ல பார்த்த ஆசாமி நம்ம கட்சிக்கு வர்ரதா?"
" என் மூலமா ட்ரை பண்ணான். நான் கெட் அவுட் னிட்டேன். இப்ப தில்லி அளவுல முயற்சி நடக்குது. அவன் பார்ட்டிக்குள்ள வர்ரது முன்னாடி ஜகனுக்கு என்ன செய்யனுமோ அதை செய்துர்ரன். ராயலசீமா அபிவிருத்தி மண்டலினு ஒரு போர்டிருக்கு.அதுக்கு சேர்மனா போட்டுட்டா ஜகனுக்கு கேபினெட் மந்திரி ஹோதா வந்துரும். இதேதோ கோன் கிஸ்கா வாரியம்னு நினைச்சுரப்போறிங்க. ப்ளெண்டி ஆஃப் ஃபண்ட்ஸ் வில் பி ரிலீஸ்ட். ஜகன் தொகுதியை பார்த்துக்க நீ இருக்கே. என்னோட ராயலசீமா ஜோனை ஜகன் பார்த்துக்கட்டும். கரெக்டா ஒர்க் அவுட் பண்ணா ராயலசீமா அளவுல முத்திரை பதிக்கலாம்."
" நான் என்ன சொல்றது சார்.. கேசவன் பார்ட்டிக்குள்ள.."
" இதெல்லாம் அரசியல்ல சகஜம். இதையெல்லாம் சகிச்சுக்கிட்டதாலதான் 55 வயசுல சி.எம் ஆகியிருக்கேன். யு கோ அண்ட் கன்வின்ஸ் ஜகன். காச் மூஸ்னு கத்தினா என் செல் நெம்பருக்கு பேசச்சொல்லு போர்ட் சேர்மன் போஸ்ட் விஷயம் கான்ஃபிடன்ஷியலா இருக்கட்டும். சித்தூர் வர்ரப்ப நானே அனவுன்ஸ் பண்றேன். சாப்ட்டுட்டு தான் போகனும். ப்ளீஸ் வெயிட் ஃபர் மீ அட் கேம்ப் ஆஃபீஸ்"
"சார் .. நான் என் லிமிட்ஸ் தாண்டி பேசறேனானு ஒரு சந்தேகம் .. ஆக்சுவலா நான் என்.டி.ஆர் ஃபேன்.."
"ஐ சீ .. நானும் தான் என்.டி.ஆர் ஃபேன். குல்பர்கால மெடிசின் படிக்கிறப்ப புல்லெட்ல ஹைதராபாத் போய் என்.டி.ஆர் படம் பார்த்திருக்கேன்."
" சார் நிஜமாவே இது எனக்கு ஹெட் லைன் நியூஸ் மாதிரி. நீங்க ஜஸ்ட் ஃபேன் தானு நினைக்கிறேன். ஆனா அவரை நான் என்னோட ஐடியல் ஹியா வரிச்சுக்கிட்டேன். ஹி ஹேட் இன்ஃப்ளுயன்ஸ்ட் மீ லைக் எனிதிங்"
"வாட் எ ஜைகாண்டிக் கேரக்டர் ஹி வாஸ்.. யார் தான் அவரால இன்ஃப்ளுயன்ஸ் ஆகாம இருக்க முடியும். எனக்கே பல விஷயங்கள்ள அவர்தான்யா இன்ஸ்பிரேஷன்"
" சார் இது கனவா நனவா ஒன்னுமே புரியலை..தேர்தல் நேரத்துல நீங்க விவசாயிகளுக்கு மின் கட்டண பாக்கியை ரத்து பண்ணபோறேன். இலவச மின்சாரம் தரப்போறேன், ஒரு லட்சம் கோடிகள் பட்ஜெட்ல அணைகள் கட்டப்போறேனு அனவுன்ஸ் பண்ணப்பவே எனக்கு உங்களுக்குள்ள என் டி ஆர் காட்சி கொடுத்தார் . இப்போ என்னோட ஊகம் நிஜமாயிருச்சுனு தெரிஞ்சதுல எனக்கு பயங்கர சந்தோஷம் சார்.."
" இதெல்லாம் ஒரு கட்டம். அடுத்த கட்டத்துல பார் என்.டி.ஆர் க்ளோசப்ல தெரிவார். உச்ச கட்டத்துல பார் என்.டி.ஆரை மறந்துருவ"
"சார் அப்படி என்னதான் பண்ணப்போறிங்க சார்."
"ஏன்யா நீ மட்டும் நகராட்சில என்ன செய்யப்போறேன்னு சொல்லிட்டா செய்யறே. அதே மாதிரி இதுவும் சஸ்பென்ஸ் "
வெளிய வந்து ஒரு சிகரட்டை பத்தவச்சுக்கிட்டு ஜகனுக்கு எல்லா விஷயத்தையும் சுருக்கமா சொன்னேன். வாய்ஸ் மெயில்ஸை செக் பண்ண ஆரம்பிச்சேன். எல்லாமே ஜகனோட உளறல்கள். செஷன்ஸ் கோர்ட் ஜட்ஜ்மெண்ட்டை ஜகன் முன் கூட்டியே உளறலா சொன்னது எக்ஸ்பீரியன்ஸ் ஆனதிலருந்து ஜகனோட உளறல்களை அலட்சியம் பண்றதா இல்லே. எல்லாத்தயும் என்னோட லாப் டாப்ல டவுன்லோட் பண்ணிக்கிட்டேன். மதியம் ஒன்னரை மணிக்கு ஒய்.எஸ்.கேம்ப் ஆஃபிஸ் வந்தாரு. வெயிட்டிங்ல இருந்த விசிட்டர்ஸை பார்த்து பேசி டைனிங் டேபிளுக்கு வரப்ப மணி ரெண்டரை. சாப்டுட்டு வெளிய வந்தேன்.
ஃப்ளைட்டுக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் இருந்தது. என்னடா பண்றதுனு யோசிச்சிட்டிருந்தப்ப ஃபோன் ரிங்காச்சு. புது நெம்பர் . எடுத்தா சென்ன கேசவன். " என்னா தைரியம் பாருங்க. ஜகனை போட்டுத்தள்ள ப்ளான் பண்ணி ஜகனோட ஆளான எனக்கு ஃபோன்.
"சொல்லு" ன்னேன் சுருக்கமா.
"உன் கிட்டே பேசனும்பா"
"பேசு"
"ஃபோன்ல இல்லே.. நேர்ல"
" நான் ரெடி. நீ வரயா .. என்னை வரச்சொல்றியா?"
" நீயே வா.. உன் பக்கத்துல வண்டி நிக்குதுபாரு. ஸ்கார்ப்பியோ. மிர்ரர்ல புட்டபர்த்தி சாயிபாபா ஸ்டிக்கரிருக்கும்"
"ஓகே"
அடுத்த நொடி ஸ்கார்ப்பியோ வந்து பக்கத்துல நின்னது. ட்ரைவர் இறங்கி கதவை திறந்துவிட்டான். ஏறிக்கிட்டேன். ராமோஜி ஃபிலிம் சிட்டி. காம்பவுண்டுக்குள்ள ஒரு கஸ்ட் ஹவுஸ். 60 வயசு, வழுக்கை தலை, கவிஞர்கள் பெண்களின் கூந்தலுக்கு சொல்ற உவமையையெல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி கலர், நெஞ்சுல இருந்தே துவங்கி கம்கட்டு வரை சரிந்த தொப்பை. இதுல லுங்கி திறந்த மார்போட சர்க்கஸ்ல வர்ர நீர்யானை மாதிரி இருந்தான். டீப்பாய்ல ஹைவாட்ஸ் விஸ்கி. வறுத்த முந்திரி.
என்னைப்பார்த்து "வாப்பா.. ஹேவ் எ ட்ரிங்க்?"ன்னான். சிகரட் போதும்னிட்டு ஒரு சிகரட்டை எடுத்து பத்தவச்சுக்கிட்டேன்.
"ஒனக்கு அரேட்டரி இருக்கு, அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஸ்கில்ஸ் இருக்கு, நல்ல எதிர்காலம் இருக்கு.. ஜகன் இல்லேன்னா நீ தான் எம்.எல்.ஏ தெரியுமில்லே"
" ஜகன் இருந்தாலும் நான் தான் எம்.எல்.ஏ"
சென்ன கேசவன் முகத்துல அதிர்ச்சி.. " என்ன ஜகனுக்கு மினிஸ்ட்ரி தராங்களா. எம்.எல்.ஏவா தோத்துட்டானே ..ஒரு வேளை எம்.எல்.சி கொடுத்து மினிஸ்டரி தருவாங்களா?"
"அதுக்கு தாத்தாவே தரப்போறாங்க"
"தா பாருப்பா முக்கேஸு சொம்மா என்னை டென்சனாக்காதே.. உன்னை சேர்மனாக்கினதே ஜகன் எம்.எல்.ஏவா தோத்து போயிட்டதால தான் . ஆக்சுவலா அவன் வைஃபை ப்ரப்போஸ் பண்ண திட்டம் வச்சிருந்தான்.ஜகனுக்கு டவுன்ல பயங்கர அடி.. அவனே நின்னா கூட தோத்து போயிர்ர நிலைமை "
"அதெல்லாம் பழைய கதை. என்னை ப்ரப்போஸ் பண்ணியாச்சு. நான் ஜெயிச்சாச்சு. ஜகன் மினிஸ்டருங்களுக்கே தாத்தா ஆகப்போறது கியாரண்டி . ஜகன் இருந்தாலும் நான் தான் எம்.எல்.ஏ. நெக்ஸ்ட் டென்யூர்ல ஜகன் எம்பியா கண்டெஸ்ட் பண்ண போறாரு"
"அந்த பப்பெல்லாம் வேகாது தம்பி. சித்தூர் எம்பி கான்ஸ்டியுவன்சிலதான் குப்பம் அசெம்ப்ளி செக்மெண்ட் வரப்போவுது. சந்திரபாபு மெஜாரிட்டி சித்தூர் மெஜாரிட்டியை அப்பளமாக்கிரும்"
"சந்திரபாபுவையே தோறகடிப்போம் அதுக்கும் ஸ்கெச் தயாரா இருக்கு. என்னை எதுக்கு கூப்டே உன் ப்ரப்போசல் என்ன ? சுத்தி வளைக்காம பேசு"
"தபாரு.. இந்த ஜகன் வைக்கோல் போர் மேல படுத்த நாய் மாதிரி. அவனும் திங்க மாட்டான்.அடுத்தவனையும் திங்க விடமாட்டான். நான் காங்கிரசுக்குள்ள வரப்போறேன். அவன் மட்டுமில்லேன்னா சித்தூர் கோஆபரேடிவ் ஷுகர் ஃபேக்டரி என்னுது, டைரி என்னுது, அட வெத்தா என்ன பேச்சு சித்தூரே என்னுதாயிரும். தி.தி.தேவஸ்தான சேர்மன் போஸ்டுக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன்.. தேவஸ்தான பட்ஜெட் வருஷத்துக்கு எவ்ள தெரியுமா? மயக்கம் போட்டு விழுந்துருவ.."
" ஏன் சுத்தி வளைக்கறே... விஷயத்துக்கு வா"
" ஜகனை போட்டுத்தள்ளிரனும்.."
"அதான் ஒரு தடவை முயற்சி பண்ணியாச்சே.."
" ஒன்ன மாதிரி ஆள் அப்ப இல்லே அதான் ஃபெயிலியராயிருச்சு"
"என்னை உன்னோட சேர்ந்துக்க சொல்றியா?"
"சேராட்டி போவுதுப்பா.. நீ கொஞ்ச நாள் மாலத்தீவு,கீலத்தீவுனு போயிரு காரியத்தை முடிச்சுர்ரம்"
"அப்படி போறதால எனக்கென்ன லாபம்?"
" என்ன கிடைச்சாலும் ஃபிஃப்டி ஃபிஃபிடி"
"சி.எம் சும்மா விடுவாரா?"
"அவன் கிடக்கான் .. நான் தில்லி லெவல்ல வச்சிருக்கேன்"
"சரி டீல் ஓகே"
" நெஜம்மாவா?"
"நெஜம்மாதான்... நான் என்ன கண்ணி வெடியா வைக்க போறேன்.. நாட்லயே இருக்க மாட்டேனே"
"இந்த ஒரு உதவி செய்ப்பா .. போதும். வெளி நாடு போற மாதிரி போய் அங்கேருந்துக்கிட்டு ஜகனை சேவ் பண்ண ப்ளான் பண்ண கூடாது"
"பண்ண மாட்டேன். நான் அரசியலுக்கு புதுசு கேசவா அவ்ள சீக்கிரம் பேச்சு மாறமாட்டேன்"
" நீ இவ்ள ஈசியா ஒத்துவருவேனு நினைக்கவே இல்லை. இது தெரிஞ்சிருந்தா அந்த பி.கே, விஷ்ணுரெட்டியையெல்லாம் கட்டி மாரடிக்கவேண்டியிருந்திருக்காது"
"ஐ சீ..மத்ததையெல்லாம் நீ ப்ளான் பண்ணிக்க. நீ எப்போ ஃப்ளைட் ஏறச்சொன்னா அந்த நிமிஷமே ஃப்ளைட் ஏறிர்ரன்"
சித்தூர் வந்தேன். ஜகனை பார்த்தேன். விஷயம் மொத்தத்தையும் சொன்னேன். ஜகன் ரொம்பவே ஷாக் ஆயிட்டாரு "என்ன பி,கே, விஷ்ணுரெட்டி கூட கேசவனுக்கு ஈல்ட் ஆயிட்டாங்களாமா? இதுக்கெல்லாம் முடிவே இல்லையா?"
"இருக்கு . சென்ன கேசவனுக்கு ஒரு ஆக்சிடெண்டை ஏற்பாடு பண்ணனும்"
"மை காட் கொலையா?"
"கொலை பண்றது ரொட்டீன். ஜஸ்ட் சின்னஆக்சிடெண்ட் ஏற்பாடு பண்ணா போதும்"
"அது எப்படி?"
(தொடரும்
No comments:
Post a Comment