Friday, May 7, 2010

உனக்கு 22 எனக்கு 32

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கப்புறம்  இன்டென்சிவ் கேருக்கு கொண்டு போகப்பட்ட ஜகன் என்னென்னவோ உளர்ரதா சூப்பிரண்டு ஃபோன் பண்ணதுமே எனக்கு கலங்கி போச்சு.

 நான் என்னவோ இப்பத்தான்  நாடு மெடிக்கலா ரொம்ப முன்னேறியிருக்கே கால்ல தைச்ச முள்ள எடுத்து போட்ட மாதிரி புல்லெட்டே பாய்ஞ்சிருந்தாலும் தூக்கி போட்டுரப்போறாங்க. மிஞ்சிப்போனா ப்ளட் லாஸ் ஆகியிருக்கும். ஏத்திவிட்டா போவுதுனு தான் நினைச்சிருந்தேன்.

ஆனால் ஜகன்  என்னென்னவோ உளர்ரதா ஃபோன் பண்ணதுமே ஐ.சி இருக்கிற மாடிக்கு ஓட்டமும் நடையுமா போனேன் .போறச்சே என்னென்னமோ  யோசனைகள். ஜன்னி ஏறிடுச்சு அது இதும்பாங்களே அந்த மாதிரி எதுனாவா? இது டெம்ப்ரவரியா? இல்லே மூளைக்கும் தண்டு வடத்துக்கும் லிங்க் இருக்குங்கறாய்ங்களே அது எதுனா டிஸ்டர்ப் ஆயிருச்சா..

ஐ.சி க்கு போய் தயங்கி நிற்க டோர் ஓப்பனாச்சு. சூப்பிரணன்டு மாஸ்கை இறக்கி விட்டபடியே "முகேஷ்..! ஆக்சுவலா குண்டு உள்ளாற போகவே இல்லை. பலமா உரசிட்டு போன மாதிரிதான் இருக்கு. காயம் கூட பெரிசா இல்லே. ஸ்வீச்சர் போட்டு ட்ரசிங்க் எல்லாம் முடிச்சாச்சு.     ஆனால் திடீர்னு ஜகனுக்கு கான்ஷியஸ் வந்தது . சம்பந்தா சம்பந்தமில்லாம ஏதேதோ பினாத்த ஆரம்பிச்சுட்டாரு

"குறிப்பா என்னனு சொல்லமுடியுமா?"
" நீங்க தப்பா நினைக்க கூடாது"
"தப்பா நினைக்க என்ன இருக்கு டாக்டர் .. சொல்லுங்க"
"சி.எம். ஏதோ ஹெலிகாப்டர் ஆக்சிடெண்ட்ல செத்து போன மாதிரி பேசறாரு"
"அப்படியா ..இப்ப எப்படி இருக்காரு?"
" ட்ராங்க்விலைஸர் கொடுத்து தூங்க வச்சிருக்கேன்"
"ஐ சீ .. இந்த மேட்டர் கான்ஃபிடென்ஷியலாவே இருக்கட்டும்.  அவருக்கு விழிப்பு வந்த உடனே எனக்கு தகவல் சொல்ல ஏற்பாடு பண்ணுங்க"
" ஷ்யூர்."
"பை தி பை ஜகனுக்கு டைட் செக்யூரிட்டி ஏற்பாடு பண்ணியிருக்கோம். கன் மென்னுக்கு தேவையான ஏற்பாடு.."
"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.."
"சென்ட் மி தி பில் .. "
"அய்யே என்னங்க நீங்க.. இதெல்லாம் கூட பார்க்கலைன்னா எப்படி?"
"புத்திய காட்டறிங்க பார்த்திங்களா பில்லை அனுப்புங்க சார்"
"சரி"

வெளிய வரேன். என்னை பார்த்துட்டு ட்ரைவர் காரை கொண்டு வந்து பக்கத்துல நிறுத்தினான்.
"மணி  நாலாகுது சாப்பிட போவலியா?"
"இல்லிங்கய்யா உங்களை விட்டுட்டு"
"ட்ரைவர் நான் நகராட்சி சேர்மன். நீங்க ஆஃப்டர் ஆல் ட்ரைவர் தான் . நான் பட்டினி கிடக்கிறேன்னா அது என் பதவிக்கு கொடுக்கிற விலை. நீங்க சாப்பிடுங்க. கிடைக்கிறத சாப்பிடுங்க .. நான் காலாற நடக்கறேன்"

ஆஸ்பத்திரி காம்பவுண்டுக்குள்ள சிகரட் பிடிக்க கூடாதுனு தெரியும் . இருந்தாலும் கண்ட் ரோல் பண்ண முடியலை. சிகரட்டை எடுத்து பத்த வச்சிக்கிட்டு நடந்தேன். செல் சிணுங்குச்சு. எடுத்தேன். ஸ்ரீராம்.

"டாடி.. உங்க சந்தேகம் நிஜமாயிருச்சு. ஏரிக்கரையோரமா ஒரு கார் கேட்பாரில்லாம நிக்குது. ஊருக்கு வெளிய ஒரு கோழிப்பண்ணை ஷெட்டுக்குள்ள நார்த் இண்டியன் ஃபேஸெல்லாம் இருக்கிறதா தகவல்."

"த பாரு நீ எங்கே இருக்க ..உன்னோட யார் இருக்கிறது அதை சொல்லு. "
"டாடி நான் ஏரிக்கரையோரமா இருக்கேன்.. கோழிப்பண்ணை மேல என் ஃப்ரெண்ட் கேஷவும் , மாலிக்கும்  ஜகன் அங்கிளோட ஃப்ரெண்ட்ஸும் கண் வச்சிருக்காய்ங்க"

"சரி வண்டு பறந்தா கூட கண்ணை சிமிட்ட கூடாது. பத்தே  நிமிஷத்துல போலீஸ் அங்கே வரும். அதுக்குள்ள எதுனா சில்மிஷம் நடந்தா"
"போட்டு தள்ளிர்ரம்"
"மேட்டர் இருக்கா"
"இருக்கு டாடி"
"வெரி குட். பீ கேர்ஃபுல்"

எஸ்.பிக்கு ஃபோன் போட்டு விஷயத்தை சொன்னேன். ஜகனோட மனைவி ஏன் இன்னும் ஆஸ்பத்திரிக்கு வரலைன்னு உறுத்தவே மாயாவுக்கு ஃபோன் பண்ணேன்.
"என்னாச்சு"
"விஷயத்தை சொன்னதுமே மயக்கமாயிட்டாங்க.. பல்ஸ் எல்லாம் டவுனாயிருச்சு. இங்கேயே ப்ரைவேட் நர்சிங் ஹோம்ல அட்மிட் பண்ணியிருக்கோம்"

"ஐ சீ.. நீ அவங்களோடவே இரு .. முகம் தெரியாத ஆள் யார் வந்தாலும் அலௌ பண்ணாதீங்க"

இன்னொரு சிகரட்டை எடுத்து பத்தவச்சேன். எஸ்.பி அனுப்பினதா  கன் மேன்ஸ் வந்திருக்கிறதா சூப்ப்ரனன்ட் ஃபோன் பண்ணார். " ஓகே ரெண்டு பேரை ... நர்சிங் ஹோமுக்கு அனுப்பி வைங்க. அங்கே ஜகன் மிஸஸ் அட்மிட் ஆகியிருக்காங்க.

ஸ்ரீராம் கொடுத்த தகவலை எஸ்.பிக்கு பாஸ் பண்ணேன். செக் போஸ்ட்ல ஜாயிண் பண்ணிக்கிறதா சொன்னேன்.  ட்ரைவர் சாப்பிட்டுட்டு வந்ததும் செக் போஸ்டுக்கு விடச்சொன்னேன்.

போலீஸ் படை பறந்து வந்தது. ஏரிக்கரையோரம் புதர்கள் மறைவுல  அனாதையா நின்னுட்டிருந்த காரை  போதிய பாதுகாப்போட ஃபோரன்சிக் ஆட்கள்கிட்டே ஒப்படைச்சுட்டு பலமனேர் பை பாசில் பறந்தோம். ஸ்ரீராம் சொன்ன ஊர் என்ட் ரன்ஸ் வந்ததும்  ஊருக்கு வெளியவே வெயிக்கிள்ஸ் எல்லாம் நிறுத்திட்டு கால் நடையா போனோம். வீட்டுக்கு ஒரு கான்ஸ்டபிளை காவலுக்கு நிறுத்த சொன்னேன். போலீஸ் வருகையை பாஸ் பண்ணாம இருக்க. எவனாச்சும் செல் ஃபோனை தொட்டா சுட்டுத்தள்ள சொன்னார் எஸ்.பி. மெதுவா குறிப்பிட்ட கோழிப்பண்ணையை
நெருங்கினோம்.

கம்ப்ளீட்டா ரவுண்டப் பண்ணப்பட்டதை உணர்ந்ததும் உள்ளே இருந்த மூணு பேரும் சரண்டர் ஆயிட்டாய்ங்க. மறு  நாள் அவிகளை கோர்ட்ல ஆஜர் படுத்தி போலீஸ்கஸ்டடில எடுத்து விசாரிக்க ஆரம்பிச்சாய்ங்க.

எஸ்.பி.என்னை  நேர்ல் கூப்பிட்டு  சீரியசா  சொல்ட்டாரு.  "ஜகன் இங்கே இருக்கிறது ரிஸ்க் பேசாம ஹைதராபாத் போயிர சொல்லுங்க. அவர் நினைச்சா சி.எம்.கேம்ப் ஆஃபீஸ்லயே கூட இருக்கலாம். செக்யூரிட்டி பிராப்ளம் இருக்காது.  நாம அரெஸ்ட் பண்ணியிருக்கிறவன் எல்லாம் ஜஸ்ட் டூல்ஸ் தான் .ஏவி விட்டவுக யாருனு நமக்கு தெரியும் .ஆனால் எப்படி ப்ரூஃப் பண்றது அரெஸ்ட் பண்றதே முடியாத விஷயம். தப்பி தவறி அரெஸ்ட் பண்ணாலும் பெயில்ல வர எவ்ள காலம் பிடிக்கும்.

 ஜகனை எப்படி ஹைதராபாத் கிளப்பறதுனு மண்டைய உடைச்சுக்கிட்டேன். ஜகனோட மனைவி ஓரளவு தேறினதுமே ஜி.ஹெச் வந்துட்டாக. ஜகனை நான் தான் பார்த்துப்பேனு ஒரே அடம்.  இருந்தாலும் மாயா  தினசரி மூணு  வேளை போய் பார்த்துக்கிட்டுத்தான் இருந்தாள்.  ஜகனை எப்படி ஹைதராபாத் கிளப்பறது அதுவும்  ஜகன் சி.எம் கஸ்டடிலயே இருக்கனும்.. என்ன பண்ணலாம்னு யோசிச்சி யோசிச்சு கடுப்பாகி போச்சு.

அப்போ ஸ்ரீராம் தான் ஐடியா கொடுத்தான். ஜகனை சித்தூர் டைகர்ங்கறிங்க. ஜகனை கொல்ல ஏற்பாடு செய்தவுங்க அது அடிப்பட்ட புலினு அரண்டு கிடப்பாய்ங்க.  ஜகன் நல்ல படியா ரிக்கவர் ஆயிட்டாருனு தெரிஞ்சா எப்படியாவது போட்டுத்தள்ளத்தான் பார்ப்பாங்க.அதனால ஜகனுக்கு பேச்சு விழுந்து போச்சு, ஒரு கை,ஒரு கால் வேலை செய்யலேனு நம்ப வச்சா?னு பீலா விட்டா எதிரிங்க கேர்லெஸ்ஸாயிருவாங்கல்லியா..

ஜகன் கிட்டே பேசினேன். அவர் கண்கள் திடீர் திடீர்னு மேலுக்கு செருகிக்கறதும். எதிர்கால சம்பவங்களை பத்தி உளர்ரதுமா இருந்தாரே தவிர என் பேச்சுல ஆர்வமே இல்லை. எப்படியோ பேசி அவர் சம்மதம் வாங்கிக்கிட்டேன். உபரியா ஒரு ஹார்ட் அட்டாக் வந்த மாதிரியும் சீன்  கிரியேட் பண்ணியாச்சு.

போலீஸ் கஸ்டடில இருந்த மூணு பேரையும் போய் பார்த்தேன். பார்க்கவே பாவமா இருந்தது. ஜகனை பத்தியும், அவரோட கடந்த காலத்தை பத்தியும் சொன்னேன். அப்ரூவரா மாற ஒத்துக்கிட்டாய்ங்க.  அவிக ஸ்டேட்மெண்ட் மொத்தத்தையும்  வீடியோல ரிக்கார்ட்  பண்ணாங்க. செஷன்ஸ் கோர்ட்ல குற்றம் ருசுவாகி தண்டனை கொடுத்தாச்சு.

நீதிபதி தீர்ப்பை படிக்க படிக்க அந்த வார்த்தைகளை எங்கயோ கேட்டாப்ல இருந்தது. எங்கே எங்கேனு மண்டைய போட்டு உடைச்சிக்கிறேன். மை காட் இந்த வார்த்தைகளை ஜகன் வாயால கேட்டிருக்கேன். அப்போ அப்போ ஜகனுக்குஎதிர்காலத்தை  முன் கூட்டியே உணர்ர சக்தி   (ESP) வந்திருச்சா?

No comments:

Post a Comment