Monday, May 10, 2010

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி

நீங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு முந்திய எந்த ஒரு பழைய )நூலை வேண்டுமானாலும்
 எடுத்துப்பாருங்கள். சிற்ப சாஸ்திரம்/வைத்தியம் /கொக்கோகம் என்ற் எது வேண்டுமானாலும் பாருங்கள்.

அந்த நூலாசிரியர் குறிப்பிட்ட அந்த சப்ஜெக்ட் சிவனாரால் பார்வதிக்கு கூறப்பட்டு அது ஒலிம்பிக் தீப்பந்தம் போல  பல கைமாறி தனக்கு இன்னாரால் கூறப்பட்டதாகவும் உலக நன்மை கருதி தான் இதை எழுதியதாகவும்  தான்  துவங்குவார். இது ஒரு ஃபார்ம் தான்.அல்லது சம்பிரதாயம் என்பதை எளிதாக அவதானிக்கலாம்.

(இங்கே சின்ன ஆன்டி சென்டிமெண்ட்- Aunty இல்லிங்கண்ணா Anty. பழைய நூல்கள்னு தட்டறப்ப விரல் தடுமாறி பழினு டைப் ஆயிருச்சு. இந்த பதிவை போடறாதால  .பழி வருமோ? வரட்டுமே நான் பழி சுமப்பதால் தான் என் நாட்டு இழி நிலை மாறும் என்றால் சுமந்தால் போச்சு. )

பகவத் கீதையும் இப்படித்தான் துவங்குது. கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்ல அதை வியாச மகரிஷி வரம் காரணமாக சஞ்சயன் கேட்டு திருதராஷ்டிரனுக்கு சொல்கிறாராம். இது ஒரு ரொட்டீன் எடுப்பு ,தொடுப்பு,தொகையறா மாதிரி.

இதை பிடிச்சுக்கிட்டு கீதைய கண்ணன் தான் சொன்னாருன்னு பிடிவாதம் பிடிச்சா அடுத்த பதிவுல சிவனார் பார்வதிக்கு சொல்லி வழி வழியா  நூல்களின் பட்டியல நான் வெளியிடுவேன்.

எனக்கு  ஏற்கெனவே  ஸ்பார்க் ஆகி நான் என் வரை ஃபாலோ பண்ணிக்கிட்டிருந்த , சமூகம் ஏத்துக்கவே ஏத்துக்காத பல சமாசாரங்களை சொன்ன ஓஷோ கூட இந்த டுபுக்கையெல்லாம்  ஏத்துக்கிட்டு  தன் அளவற்ற, ஞானம்,அறிவு, தர்கங்களின் உதவியுடன்  கீதைக்கு பின்னான /கீதையிலான ஃபேண்டசிக்கெல்லாம் தன் தர்க அறிவு & விஷய ஞானத்தை வைத்து முட்டும் கொடுத்திருக்கிறார்.

நான் எதை பத்தி பேசினாலும் என்ன பேசனும்னு நினைக்கிறேனே அதைத்தான் பேசுவேன் இதெல்லாம் (கீதை,உபனிஷத் எல்லாம்)  ஒரு சாக்குன்னு  ஓஷோவே ஒரு சந்தர்ப்பத்துல சொல்லியிருக்காரு. எனவே ஓஷோ எப்படி இந்த உடான்ஸை எல்லாம் ஒத்துக்கிட்டாருங்கற கேள்விக்கே இடமில்லை.

இந்த பதிவுல கீதையில இருக்கிற அன் சைன்டிஃபிக், இல்லாஜிக்கல் (தர்கத்துக்கு ஒவ்வாத) விஷயங்களையும் முரண்பாடுகளையும் துவைச்சு, அலசி காயப்போட போறேன். அவாள்ள யாராவது ஜூரிகள் இருந்தால் என் பதிவை கண்டிக்கலாம். விமர்சிக்கலாம். அவிக முன் வந்து சம்மதிச்சா  அவிக போடற எதிர்பதிவையும் நம்ம கவிதை07லயே பப்ளிஷ் பண்ணவும் நான் ரெடி.

பகவத்கீதை சமஸ்கிருதத்துல இருக்கு. அதை நீ எப்படி படிச்சே.. எப்படி விமர்சிக்க போறேன்னு சனம்  கேட்கும். என் பதில் சின்ன வயசுலருந்து கண்டசாலாவோட கீதைய கேட்டுக்கிட்டேதான் இருக்கேன். ஒரிஜினல்+ தெலுங்கு உரையோட காந்த குரல்ல அப்படியே கட்டிப்போட்டுருமில்லே. தெலுங்குல நாம எப்படிப்பட்ட புலின்னா அம்மனுக்காக ஆயிரத்துக்கு மேல  வசன கவிதைகள் எழுதி வச்சிருக்கேன். அதெல்லாம் எவ்ள டென்சா (Dense) இருக்கும்னா தெலுங்கை தாய்மொழியா கொண்டவர்களுக்கே  ஓரளவாவது ப்ராக்டிக்கல்  ஸ்பிரிச்சுவல்   எக்ஸ்பீரியன்ஸ் இருந்தாதான் ஒரு குன்ஸாவாச்சும்  புரியும்.

மேலும் கவிஞர் கண்ணதாசன் பாணில அவரோட மொழி பெயர்ப்பு+ விளக்க உரைய  முன்னாடி வச்சுக்கிட்டுத்தான் இந்த பதிவை அடிச்சிக்கிட்டிருக்கேன்.

 (அவரும் மொ.பெ ஐ வச்சுக்கிட்டுதான் கண்ணன் அருளிய பகவத்கீதை கண்ணதாசன் விளக்க உரைங்கற புஸ்தவத்தை எழுதியிருக்காரு. அதை வானதி பதிப்பகம் அருவறுப்பான அர்த்தமே மாறிவிடக்கூடிய அச்சுப்பிழைகளோட வெளியிட்டிருக்கு. உதாரணம்: உணவு/உணர்வு)

இதுக்கு கலவை புகழ், சங்கர் ராமன் கொலை வழக்க் புகழ், திருப்பதி மருத்துவக்கல்லூரி புகழ் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை வேறே வழங்கியிருக்கார்.இதுக்கு மிஞ்சின ஆத்தன்சிட்டி வேறேன்ன தேவை?

நான் பகவத்கீதையே குப்பை. அதுல சொல்லப்பட்டிருக்கிறதெல்லாம் சப்பைன்னு சொல்லல. அது கண்ணனால சொல்லப்பட்டதில்லே. அதனால அதுல இருக்கிறதெல்லாமே அட்சர சத்தியங்கற கியாரண்டி இல்லேன்னு நிரூபிக்கத்தான், கீதையோட உள்ளடக்கத்தின் மீது எவ்வித ஒப்பனையோ, காம்ப்ரமைஸோ இன்றி ஒரு ஆரோக்கியமான விவாதம் நடக்கனும்னு  நான் இந்த பதிவை போடறேன்.

எங்கண்ணன் ஃப்ரண்டும், யாதவ குல தோன்றலுமான ......கிட்டே இப்படி ஒரு பதிவு போடப்போறேன்னு சொன்னதுக்கு "யோவ் உனக்கு எவனோ உதை கொடுக்கப்போறான்யா. கிருஷ்ணன் கிட்டே மோதினே மாடு வுட்டுருவாருன்னாரு.(கிண்டலாத்தான்)

ஏற்கெனவே ஒரு பதிவுல நான் சொன்ன மாதிரி  எத்தனை எத்தனை ராமன்? எத்தனை எத்தனை இராம இராவண சங்கிராமம்?

அதே மாதிரி இந்த கால வெள்ளத்துல எத்தனை எத்தனை கிருஷ்ணர்களோ ?எத்தனை எத்தனை  கீதைகளோ?

வானவெளியில் மிதக்கு எண்ண அலைகள் எனும்  அகண்ட பாத்திரத்து அமுதின் துளிகளை சேகரித்தவன் எவனோ? , அதில் அவனது சுயம் கலந்த விஷம் எத்தனை எத்தனையோ? (ஆனால் இப்போ செலாவணில இருக்கிற கீதைய எழுதினது மாத்திரம் சர்வ நிச்சயமா ஒரு பிராமணோத்தமரா தான் இருக்கனும். வர்ணாசிரம தர்மத்தை குலத்தொழிலை ஆதரிக்கிறதுலருந்தே இதை கார்ட்டூன் சேனல் பார்க்கிற பாப்பா கூட சொல்லிரலாம்)

இருக்கிறதெல்லாம் இருக்கட்டும் கிழவியை தூக்கி மணைல வைங்கற மாதிரி பகவத்கீதை மேல ஏன் போச்சுன்னு கேட்பிங்க. இந்தியா ஒரு மதசார்ப்பற்ற அரசு. இங்கே இருக்கிற நீதிமன்றங்கள்ள சாட்சிகளை விசாரிக்கிறதுக்கு முந்தி பகவத்கீதை மேல சத்தியம் வாங்கறாய்ங்க. இது ஒரு மதம் தொடர்பான புஸ்தவம். இதுல ஆத்தர் யாருங்கறதுலயே  தகராறு இருக்கு.

சத்தியத்துக்கு புறம்பான ( ரொம்ப தொலைவு போயிராதிங்கண்ணா .. நிஜங்கற அர்த்தத்துல தான் எழுதறேன்)   இன்றைய சட்டத்துக்கு எதிரான, ஏன் மனிதத்துக்கே எதிரான எத்தனையோ தகவல்கள் இதுல இருக்கு.(எல்லாத்தயும் பட்டியலிட்டு காட்டறேன் வெயிட் அண்ட் சீ. )


இதை இந்துக்கள் மட்டுமல்ல உலக தத்துவ  ஆராய்ச்சியாளர்கள்  உட்பட  ஏதோ ஒரு புஸ்தவமா பார்க்கிறதில்லை. இந்துமதங்கற பழத்தோட்டத்துலருந்து எடுத்த ஃப்ரூட் கான்சன்ட்ரேட்டா தான் பார்க்கிறாய்ங்க. இந்துமதத்துல இருக்கிற 18 புராணம், வேதம், உபனிஷத்துனு கண்டதையும் எடுத்துக்கிட்டு கிழிக்கறதை விட கீதைய கிழிச்சாலே போதும் சனம் வேக் அப் ஆயிருவாய்ங்கனு ஒரு நப்பாசை.

ஏற்கெனவே சொன்னபடி என்னுது ரெண்டே பாயிண்ட். கீதைய கண்ணன் சொல்லலே. எனவே இதுல இருக்கிறதெல்லாம் (ஒவ்வொண்ணும் ) ரத்தினம் கிடையாது. (சில ரத்தினங்கள் இருக்கலாம்) .

ஓகே ஜெயேந்திர சரஸ்வதி கொடுத்திருக்கிற அருளுரைல ஒரு பத்திய பார்த்துட்டு (பேர்த்துட்டு) மேல போயிருவங்கண்ணா. ஸ்டே வித் மி.

//உலகம் முழுதும் நன்றாயிருக்க வேண்டுமென்று//
உலகம் முழுதும் நன்றாயிருக்க வேண்டுமென்று என்று தான் கீதை அருளப்பட்டதாம். கீதையோட உடனடி விளைவு குருக்ஷேத்திரம். பின் விளைவு பாண்டவர் வமிசம் கூட நாஸ்தி.
//பிரார்த்தித்து//
இன்னாங்கடா இது நாமெல்லாம் பகவானை பிரார்த்தனை பண்றோம்னா ஒரு லாஜிக் இருக்கு. பரமாத்மா என்னத்துக்கு பிரார்த்தனை பண்ணனு. அப்படி பண்ணா யாருக்கு பண்ணுவாரு
//கிருஷ்ண பரமாத்மா அருளிய//
தனக்கு உறுதிபட தெரியாத, தர்கத்துக்கே ஒவ்வாத மேட்டரை இன்னா அசால்ட்டா ஆத்தரைஸ் பண்றாரு பாருங்கோ

// கீதை பகவத் கீதை  என்றே பெயரிடப்பட்டுள்ளது//
அப்போ நம்ம வலைப்பூவுக்கு பகவத் நிர்வாண நிஜங்கள்னு பேரைவச்சுட்டா கிருஷ்ணர் தான் ப்ளாக் எழுதறாருன்னு ஆயிருமா என்ன?

//பகவான் எல்லோருக்கும் பொதுவானவரானதலால் எல்லோரு அதை ஏற்றுக்கொள்ளலாம்

பகவான் பொதுன்னு வெறும் வாய் வார்த்தையா சொல்லிட்டா போதுமா? இந்து மதத்துலயே நாலு கேட்டகிரி. அந்த நாலுக்குள்ள நானூறு சப் கேட்டகிரி. இதுல ஒரே ஒரு கேட்டகிரிதான் சோல் ஃப்ரான்சைஸ், சோல் ஏஜென்சி வச்சிருக்காய்ங்க. பி.ஏவும் அவிகளே அஃபிஷியல் ஸ்போக்ஸ் மென்னும் இவிகளே. மத்தவனெல்லாம் கல் சுமந்து மண் சுமந்து கோவிலை கட்டி பூட்டி சாவிய கொடுத்துட்டா எல்லாம் அவன் செயல் இல்லே. எல்லாம் அவாள் செயலாயிரும்.

ஒரு இந்து மதத்துலயே இத்தனை லிட்டிகேஷன்.   இதுல எல்லாருக்கும் பொதுவானவர்னு விடறார் பாருங்க. தி.தி.தேவஸ்தானத்துக்கு பூமன கருணாகர ரெட்டி சேர்மனானப்போ தலித்த கோவிந்தம்னு ஒரு ப்ரோக்ராம் பண்ணாரு, அதாவது உற்சவர் தலித்களை தேடி சேரிக்கே போய் அருள் பாலிப்பார். அடடே நல்ல ப்ரோக்ராம் தானேம்பிங்க. ஆனால் அவாள் இருக்காளே இப்படியெல்லாம் "தீட்டு"பட விட்டுருவாளா என்ன? அதுக்குன்னே தனி சிலைய செட்டப் பண்ணாங்க. சாமி(?) சேரில என்டர் ஆகி ரிட்டர்ன் வந்தா அவரும் தலித் கணக்குதான் போலும். அந்த ஸ்பெஷல் உற்சவரை ஸ்பெஷலா மடைப்பள்ளில வச்சுட்டாய்ங்க.

இந்த அழகுல சுவாமிகள் சொல்றார் "எல்லாருக்கும் பொதுவானவாராம்" அட டுபுக்கே நீங்க கடவுளுக்கு உருவம் கொடுத்திருக்கிங்க. கண்ணாலம் பண்றிங்க. தாலி கட்டறிங்க. முதலிரவு நடத்தறிங்க (எங்கயோ ஒரு ஊர்ல அம்மனுக்கு மாதவிலக்கு வந்ததா கூட அலப்பறை பண்ணானுங்கோ) இஸ்லாம் இறைவனை உருவமற்றவன்னு சொல்லுது அவிக எப்படி உங்க கிருஷ்ணனை ஏத்துப்பாங்க.

சரிங்கண்ணா அடுத்த பதிவுல  அசலான  மேட்டருக்கு வந்துருவம்.

3 comments:

  1. சித்தூர் உட்டாலக்கடி முருகேசன்May 11, 2010 at 3:52 PM

    நானே பெரிய உட்டாலக்கடி...என்னைவிட வேற ஏதாவது இருக்கா என்ன!!!!!!!!!!

    ReplyDelete
  2. கவுண்டமணிMay 11, 2010 at 4:25 PM

    உன்னோட மொக்கைக்கு அளவே இல்லையா ....யாராவது இந்த கொசுவ மருந்து அடித்து துரத்துங்கப்பா...இம்சை தாங்க முடியல ...புண்ணாக்கு திங்கறவன்..வால்போஸ்டர் ஒட்டுரவன் எல்லாம் எழுத்தாலன்னு வந்துர்ரான்கப்பா ...உன்னைய யாராவது கேட்டாங்களா...இல்லை உன்னோட கருத்தை ஆதரிச்சோ....எதிர்த்தோ விமர்சனம் தான் வருதா.........ஏப்பா.... இப்படி யாருமில்லாத கடையில் யாருக்கு டீ போடுறா...... .

    ReplyDelete
  3. அண்ணா.. நல்ல பதிவு.. பணி தொடரவும்.. யாரையும் கண்டு அஞ்ச வேண்டாம்..

    ReplyDelete