கடந்த பதிவுல பெட் ரூம் எந்த திசைல அமையனும்னு பார்க்கலாம்னு சொல்லியிருந்தேன். பெட் ரூமுங்கறது வீட்டுக்குள்ள தானே அமையனும். அந்த வீட்டோட அமைப்பு கரெக்டா இருந்தாதான் மத்த எல்லா மேட்டரும் கரெக்டா நடக்கும். அந்த மேட்டரெல்லாம் கரெக்டா ஒர்க் அவுட் ஆகிட்டிருந்தாதான் பெட் ரூம் சமாசாரம் கூட கரெக்டா ஒர்க் அவுட் ஆகும். பெட் ரூம் சமாசாரம் கரெக்டா ஒர்க் அவுட் ஆனாதான் மத்த சமாசாரங்க ஒரு மாதிரியா ஓடும். இது ஒரு சர்க்கிள் . ஒரு வட்டம்.
இதனோட மையக்கரு ஆன்மீகம். இந்த வட்டத்தோட மையக்கருவான ஆன்மீகம் உங்களை தன்னை நோக்கி கவர்ந்திழுத்துக்கிட்டே இருக்கும். இதனோட ஆரம்ப புள்ளி வட்டத்தோட வெளிக்கோடுல உள்ள ஏதோ ஒரு புள்ளிதான். இல்லேங்கலே. வெளிக்கோட்டுல சுத்தி சுத்தி வராம ஒரே புள்ளில தமாச்சிக்கிட்டு மையத்தை நோக்கி ஆழமா இறங்கிட்டா ஆன்மீகத்தை வந்து அடைஞ்சுரலாம்.
அது எந்த புள்ளியாவேணம்னா இருக்கலாம். கல்வி, தொழில், சேரிட்டி, காதல், திருமணம், செக்ஸ் எந்த புள்ளியிலிருந்தாச்சும் சரசரனு சறுக்கியோ அ இல்லை சர சரனு ஏறியோ வாழ்க்கை வட்டத்தோட மையப்புள்ளியான ஆன்மீக புள்ளியை அடையலாம். வெறுமனே சுத்தி சுத்தி வந்துக்கிட்டிருந்தா எத்தனை சென்மம் எடுத்தாலும் கிரிமினல் வேஸ்ட்.
இந்த பதிவுல உள்ள வாஸ்து பாயிண்ட்ஸெல்லாம் கே.வி.சாரோட உபயம். ஆரம்பத்துல பயபக்தியோட கே.வி சாரோட பாயிண்ட்ஸோட ஆரம்பிச்சாலும் இடையில நம்ம சொந்த சரக்கு நிறைய கலந்துருச்சுங்கண்ணா அதனால தான் அய்யா பேரை ஏன் கெடுக்கனும்னு விட்டுட்டன். மறுபடி இந்த பதிவுல அடர்த்தியா சில பாயிண்ட்ஸெல்லாம் எடுத்து சொல்றேன். நோட் பண்ணிக்கங்க.
கட்டிலறையில காரியம் கரெக்டா முடியனும்னா காலைல காரியம் துவங்கற கழிவறையோட அமைப்பு கரெக்டா இருக்கனும். எப்டி? எப்டி?
வீட்டுக்குள்ளயோ வெளியவோ (காம்பவுண்டுக்குள்ள) ஆக்னேயம் அ வாயு மூலையில இருக்கனும். நீ உட்கார்ரது தெற்கு அ வடக்கை பார்த்து உட்கார்ர மாதிரி இருக்கனும். செப்டிக் டாங்க் நேர் கிழக்கு அ வடக்குல இருக்கனும்.
கழிவறையில காரியம் கரெக்டா முடியனும்னா சமையலறை ,டைனிங் அறை, வீட்டு பெண்களை காட்டற மேற்கு ,ஆக்னேயம் மற்றும் தெற்கு திசைகள் கரெக்டா இருக்கனும். எப்டி? எப்டி?
1.சமையலறை:
தென் கிழக்குல அமையனும். சமைக்கிறது கிழக்கை பார்த்து நின்னு/உட்கார்ந்து சமைக்கிறாப்ல இருக்கனும்.
2.டைனிங்:
தெற்குல அமைக்கலாம். நீங்க சாப்பிட உட்கார்ரது கிழக்கை பார்த்து இருந்தா நல்லது. (இது நம்மை மாதிரி சாமானியருக்கு) புகழ் ,பெரும்பணம் வேண்டுவோர் வடக்கு பார்த்து சாப்பிடுங்க.
3.மேற்கு , ஆக்னேயம், தெற்கு திசைகள்:
பல முறை சொல்லியாச்சு.
சமைக்கனும்னா அரிசி பருப்பு தேவை. இதை வாங்கனும்னா ரிசர்வ் பாங்கே தேவைப்படுது. நமக்கு பகவான் படியளந்ததை வச்சு அஜீஸ் பண்ணிக்கினு போவனும்னா உள்ளதை யாவது காப்பாத்திக்கனுமே ரூபா, நகை , இத்யாதியை வைக்கிற பீரோவை நைருதில உள்ள அறைல வைங்க. அந்த அறைக்கு நைருதி மூலையில ஒரு செங்கலை படுக்கையிலயோ நெட்டுக்குத்தாவோ அடுக்கின உயரத்துக்கு பீரோவோட நீள அகலத்துக்கு ஒரு மேடை அமைச்சாலும் நல்லதே. ( வீட்டம்மாவோட உசரத்தையும் பார்த்து முடிவு பண்ணுங்கண்ணா) அதாங்க பாடாவதி ஓட்டல்லல்லாம் கேஷ் கவுண்டருக்கு வச்சிருப்பாய்ங்களே அந்த மாதிரி. பீரோ கிழக்கு (சாமானியர்கள்) அ வடக்கை ( சவுண்ட் பார்ட்டிகள்) பார்த்தமாதிரி இருக்கட்டும்.
எல்லாம் சரிங்கண்ணா வீட்டு ஆம்பளை பத்து பேரோட கலந்து பழகி ஓடியாடி உழைச்சாதானே காசு வரும். அதுக்கு என்ன பண்ணலாம்?
கிழக்கு, வடக்கு திசைகள் நைருதி மூலை வாஸ்து நிபந்தனைகளுக்குட்பட்டு இருக்கிறாப்ல பாருங்க.
ரீடிங் ரூம் மற்றும் பூசையறை வட கிழக்குல இருக்கனும். வீட்டின் முன் பகுதி அ நடுவில் வரவேற்பறை இருக்கனும்.
வடக்கு அ கிழக்குல குளியலறை இருக்கனும். இதெல்லாம் முறைப்படி அமைஞ்சாதான் வாழ்க்கை வட்டத்தோட வெளிக்கோட்டு மேலயாவது பயணிக்கலாம். அடுத்து வருவது ..............டட்டடாஆஆஆஆஆஆஆய்ங் வேறென்ன பெட் ரூம்தான்.
வடமேற்கு அ மேற்கில் அமையனும்னு கே.வி சார் சொல்லியிருக்காரு. (அதாவது வாஸ்து குறித்த மூல கிரந்தங்கள்ள சொல்லப்பட்டிருக்கும். அதை கே.வி சார் கோட் பண்ணியிருக்காரு )
வடமேற்கு (வாயு மூலை) சஞ்சலம், நிலையற்ற தன்மை, கோர்ட்டு,வியாஜ்யம்,நோய், சண்டை ,சச்சரவு, குடும்ப நபர்கள் வெளி நடப்பு செய்யறது, இவ்ளோ ஏன் விபசாரத்துக்கு கூட காரகம் உள்ள திசை.
இந்த திசைல போய் பெட் ரூம் வைக்கறதானு .. பயந்துக்குவிங்க. உடலுறவு குறித்த எண்ணமே ஏதோ ஒரு சஞ்சலத்துல முளைக்கிறதுதான். நீங்க கான்ஃபிடன்டா இருக்கும்போதோ, சக்ஸஸ் ஃபுல்லா இருக்கும்போதோ உடலுறவு எண்ணம் வராது.
சஞ்சலம்னா என்ன? இதுவரை நீங்க எதையெல்லாம் கரெக்டுன்னு நினைச்சு வாழ்ந்துக்கிட்டிருந்திங்களோ அதெல்லாம் தப்போ என்னவோங்கற சந்தேகம் பிறக்கிறதுதான் சஞ்சலம்.
உண்மை வேறு (சத்தியம்) . நீங்க உண்மைனு நினைக்கிறது வேறு. (பிரமை). உண்மை வெளிப்படறச்ச பிரமைகள் வெடிச்சு சிதறுது. உள்ளுக்குள்ளாற கல்லுக்குள் தேரை கணக்கா ஒளிஞ்சிருந்த நிஜம் வெளி வருது. மேக்கப் இல்லாத நடிகைய பார்த்தமாதிரி பயந்துக்கறிங்க. பிரமை பிரமைதானோ. இதான் உண்மையோங்கற சம்சயம் வந்துருது.
நீங்க தோத்துப்போயிட்டப்பயோ, பவர் கட் ஆனப்பயோ, பணம் பதவி இழந்தப்பயோ, தனிமைப்பட்டு போனப்பயோ, ஒரு நட்பை,உறவை இழந்தப்பயோதான் உங்களோட உண்மையான ரெஸிஸ்டென்ஸ், தகுதி எல்லாம் வெளிப்படும். பிரமைல வாழ்ந்த மனசுக்கு சத்தியம் மரணம் மாதிரி. அதனால உடனே உடலுறவு எண்ணம் நிச்சயம் வரும்.
தத் என்னடா இது கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இந்த நேரத்துல பலான எண்ணமானு கூட நொந்துக்கிட்டிருப்பிங்க. ஆனால் இது இயற்கை. இதை பர்ஃபெக்டா புரிஞ்சிக்கனும்னா நம்ம ஆதி தத்துவத்தை நீங்க புரிஞ்சிக்கிடனும்
எல்லா உயிரும் ஆதி உயிரான அமீபால இருந்து செல்காப்பியிங், காப்பியிங் எர்ரர் மூலமா வந்த உயிர்தான். ஒரே உயிரா இருந்தப்ப காலம் ,தூரம், இன் செக்யூரிட்டி, கம்யூனிகேஷன் ட்ரபுள்,போட்டி,ஒப்பீடு எதுவுமில்லாம இருந்தாய்ங்க. பல்லுயிரா பெருகிப்போனபிறகு சகலமும் வந்துருச்சு. அதனால ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரோட இணைய துடிக்குது. அந்த இணைப்புக்கு இந்த உடல் தான் தடைனு நினைக்குது (சப் கான்ஷியஸ்) (உண்மயான தடை இவிக ஈகோதான். என்னதான் இவிக ஈகோ காரணமா இயற்கைலருந்து தங்களை வேறுபடுத்தி பார்த்துக்கிட்டாலும் இவிக எல்லாமே இணைக்கப்பட்டிருக்காய்ங்க) . அதனால இந்த உடலை உதிர்க்க கொலை/தற்கொலைகள பல்வேறு முகமூடிகள்ள, பல நேரம் தவணைல சில நேரம் ஒரே இன்ஸ்டால்மென்ட்ல செய்யறாய்ங்க. இந்த கொலை தற்கொலைல்லாம் செக்ஸுல ச்சோ ஈஸி.
ஆணப்பொருத்தவரை வீரியஸ்கலிதமாகிற வரை கொல்லும் இச்சை நிறைவேறுது. வீரிய ஸ்கலிதம் ஆன பிறகு கொல்லப்படற இச்சை நிறைவேறுது.
இது பெண்ணை பொருத்தவரை ஆணுக்கு எஜாகுலேஷன் நடக்கிற வரை கொல்லப்படும் இச்சை நிறைவேறுது. அவனுக்கு எஜாகுலேஷன் நடந்த பிறகு கொல்லும் இச்சை நிறைவேறுது.
இருட்டு,பிரிவு,ஏழ்மை, நிராகரிப்பு,தோல்வி,இழப்பு இதெல்லாம் மரணத்துக்கான உருவகங்களா இவன் மைண்ட்ல ரிக்கார்ட் ஆகியிருக்கு. மரணம் என்ன பண்ணுது? இவன் இத்தினி நாள் உசுரோட இருந்ததை இவனுக்கு உறைக்க வைக்குது. இத்தனை நாள் இவன் வாழ்வி இருந்த இயந்திரத்தனத்தை தலைல தட்டி சுட்டிக்காட்டிருது அதனாலதான் மரணம்னா அல்லாருக்கும் பயம். மரணம் செய்யற வேலையை இருட்டு,பிரிவு,ஏழ்மை, நிராகரிப்பு,தோல்வி,இழப்பு இதெல்லாம் ஸ்மால் ஸ்கேல் லெவல்ல செய்துருது. இவன் உசுரோட இருந்தது உறைச்சதும் இவன் செத்துப்போக ஆசைப்படறான். ஸ்தூலமா மொத்தமா செத்துப்போக தில் இல்லாதவன் உடலுறவுல இறங்கிர்ரான்.
சஞ்சலம்ங்கற வார்த்தை சமஸ்கிருத வார்த்தை. சமஸ்கிருதத்துக்கும் தெலுங்குக்கு ரெம்ப கனெக்சன் உண்டு.தெலுங்குல சஞ்சலனம்னு ஒரு வார்த்தை இருக்கு. இதுக்கு பரபரப்பு,புதுமை புரட்சினு பல அர்த்தங்கள் இருக்கு. சஞ்சலத்துலருந்து தப்பிக்க மனசு சஞ்சலனத்தை நோக்கி நகருது . ஜுஜுலிப்பாவை விட புதுமை என்ன இருக்கு?
வாயு மூலை நிலையற்ற தன்மை கொண்டதாச்சே இதுலயா பெட் ரூமுன்னு தயங்கறிங்க. உடலுறவுல கின்னஸ் ரிக்கார் எவ்ள நேரம்னு தெரியலை. தந்த்ரா டெக்னிக் தெரிஞ்சவுக வேணம்னா மணிக்கணக்கா ஒன்னு மன்னா கிடக்கலாமே தவிர சாமானியர்கள் பத்து ,பதினைஞ்சுனு நிமிஷ கணக்குதான். அதனால நோ ப்ராப்ளம்.
நிலையற்ற தன்மை கொண்ட திசைல அமையாம நிலையான திசைல பெட் ரூம் அமைஞ்சா எண்ணிக்கைகள் அதிகரிக்கலாம் ஒரே எண்ணமா இருந்தா பெண்டாட்டிகூட "தத் ..என்ன இது .. எப்பப்பாரு" ன்னிருவா
(இந்த எரிச்சலுக்கு பல காரணம் உண்டு. 7 : 23 விகிதத்தை சமப்படுத்த முயற்சி பண்ணாம போறதால இந்த மாதிரி ரெஸ்பாண்ட் ஆவறதும் உண்டு. உடலுறவுல அன்பு,காதல், அசைவுகளின் எண்ணிக்கைய அதிகரிக்கிறது, கால நீட்சி, ஆழம்,புதுமை இத்யாதி தான் முக்கியமே தவிர எண்ணிக்கைகள் கிடையாதுங்கோ.)
மேலும் உடல் தயாராறதுக்கு முந்தி (விந்து உற்பத்தி) உறவு கொள்றது இயற்கைக்கு விரோதம் மட்டுமில்லை. உயிரணுக்களோட எண்ணிக்கையும் குறைஞ்சுரும். அதனாலதான் ஃபெர்ட்டிலிட்டி சென்டர்ஸ்ல கூட ஸ்பெர்ம் டெஸ்டுக்கு வரச்ச உடலுறவுக்கு பத்து நாள் லீவ் விட்டுட்டு வரச்சொல்றாய்ங்க. அப்பத்தான் ஃபுல் கவுண்ட் தெரியும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவுக மனைவி மாதவிலக்கானதுமே பத்து நாள் பிரம்மச்சரியம் காத்து பதினோராவது நாள் கூடினா குழந்தை உருவாகற வாய்ப்பு அதிகம். இப்பப்புரியுதுங்களா படுக்கையறை ஏன் வாயு மூலைல இருக்கனும்னு.
கோர்ட்டு,வியாஜ்யம்,நோய், சண்டை ,சச்சரவு, குடும்ப நபர்கள் வெளி நடப்பு செய்யறது விபசாரம் இதுக்கெல்லாம் காரகம் கொண்டது வாயு மூலைனு சொன்னிங்களே இங்கனபோயி பெட் ரூமை எப்படி அமைக்கிறதுனு கேட்பிங்க. சொல்றேன். ஹி ஹி அடுத்த பதிவுல.
ஆமாங்கண்ணா சைட்ல மெம்பரா சேர இன்னம் அஞ்சு நாள் தான் நடுவுல இருக்கு .சேர்ந்துட்டிங்களா இல்லியா? ஃபார்ம் இல்லே. ஃபில் அப் பண்றதில்லை. இதே பேஜ்ல இடது கோடி டாப்ல ஃபாலோனு ஒரு பட்டன் இருக்கும். அதை க்ளிக் பண்ணுங்க. கூகுல் ஐடி இருந்தா போதும் மெம்பராயிரலாம்.
ஆகஸ்ட் 15 லருந்து கில்மா வாஸ்து, ஜுஜுலிப்பா,அஜால் குஜால் எல்லாம் ஒன்லி ஃபார் மெம்பர்ஸுங்கோ..
No comments:
Post a Comment